Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Wednesday, September 30, 2009

சில நிமிடங்களில் உதித்த கவிதைகள்(2)......

கவிதை எழுத ஆரம்பித்து சில நாட்களில் தமிழ் மன்றத்தில்
கவிதை விளையாட்டில் கொடுத்த தலைப்பில்
சில நிமிடத்தில் உதித்ததை
இங்கே படத்துடன் பகிர்ந்துள்ளேன்.

பிரவத்தில்......
அவளோ குழந்தையை ஈன்ற
தருணத்தில்.......
தன் தாயின் வலிகள் உணர்ந்தவளாய்....
வலிகள் இல்லா பிரசவம் இருந்தால்
தாய்மையில் தாய்க்கும் கூட
ஓர் சுமை இல்லாத காலம்
அன்னையின் அன்னைக்கும் கூட
ஓர் சஞ்சலம் இல்லாத காலம்

துன்பங்கள் மறைத்தவளாய்
துவளாமல் என்றென்றும்
தன்னுள்ளே ரகசியமாய்
தன்னம்பிக்கையான தாயாம்

கனவுகள் மங்கவில்லை
தோல்வி அடைந்தாலும்
உழைப்பு குறையவில்லை
வெற்றி கிடைக்காதபோதும்
ஆர்வம் தளரவில்லை
குறிக்கோளை எண்ணியே....

நம்பிக்கையை கைவிடவில்லை
போட்டியில் பங்கு கொண்ட போது
தன்னம்பிக்கையை கைவிடவில்லை
கலந்து கொண்டு வெற்றி அடைந்த போது...விதையாய் மண்ணுள் புகுந்து
செடியாய் வளர்ந்து
மரமாய் எழுந்து
காற்றாய் புகுந்தாய்
இதமாய் இருந்தது
ஆனால் புயலாய்
மாறியது ஏனோ!

Sunday, September 20, 2009

மழலையாய் நீ....

அழுது கொண்டே பிறந்த நீ
அழா
மல் இருந்தது அரவணைப்பில்..


அழுது கொண்டே பசியில் நீ
அழாமல் இருந்தது பாசத்தில்....

அழுது கொண்டே பள்ளி சென்ற நீ
அழால் இருந்தது (புத்தகப்பையை
கீழே வைத்த போது)விளையாட்டில்....
தோல்வி அடைந்து அழுது கொண்டே நீ
அழாமல் இருந்தது வெற்றியில்....அழுது கொண்டே வளர்ந்தபோது நீ

அழாமல் இருந்தது தனித்திறமையில்....அழுது கொண்டே படித்த நீ அழாமல் இருந்தது (அதிக மதிப்பெண் பெற்றதில்) பாராட்டியதில்......அழுது கொண்டே மேற்படிப்பு தொடர பிரிந்த நீ
அழாமல் இருந்தது சந்தித்து கொள்வதில்...
அழுது கொண்டே வேலையில் சேர்ந்த நீ
அழாமல் இருந்தது ஊதியத்தை பெற்ற போது....

அழுது கொண்டே நீ அழாமல் இருந்தது
வளர்ந்தும் உன்னை தங்கள் மனதில்
இன்றும் என்றென்றும்
மாறாத மனதோடு
மழலையாய் நீ....குடியிருக்கின்றாய்
பெற்றொர் மனதிலும்,வீட்டிலும்.......


இதை உணர்ந்த நீ மழலையாய் மாறி
அன்பாக அழாமல் பார்த்து கொள்வாயா?.......
[இன்றும் என்றென்றும்
மாறாத மனதோடு
மழலையாய் நீ....குடியிருப்பாய்
பெற்றோரின் மனதிலும்,முதியோர் இல்லத்திலா?......]

கண்டு கொண்டது.....

அம்மாவினுள் ஆசிரியரை
ஆசிரியரிடம் விளக்கத்தை
இளையவரிடம் அறிவுக்கூர்மையை
ஈதல் செய்பவரிடம் ஈடுபாட்டை

உயரியச் செயலை உயர்ந்தவரிடம்
ஊக்கத்தை விளையாட்டுவீரரிடம்
எண்ணங்களை தியானிப்பவரிடம்
ஏற்றத்தை ஏறிச்சென்றவரிடம்

ஐயத்தை ஆர்வமிக்கவரின் கேள்வியில்
ஒன்றாய் ஒற்றுமையான வாழ்வில்
ஓவியத்தை வரைந்தவர் நுணுக்கத்தில்
ஔதாரியத்தை வாழும் முன்னோரிடத்தில்

அஃதே நாம் கண்டு கொண்டது......வாழ்வில்

Saturday, September 19, 2009

சில நிமிடங்களில் உதித்த கவிதைகள்(1)......

கவிதை எழுத ஆரம்பித்து இரு நாட்களில் தமிழ் மன்றத்தில்
கவிதை விளையாட்டில் கொடுத்த தலைப்பில்
சில நிமிடத்தில் உதித்ததை
இங்கே படத்துடன் பகிர்ந்துள்ளேன்.


இருக்கும்வரை.....
எல்லாம்இருக்கும்வரை தான்
எது இருக்கும்வரை....
பந்தமா..
பாசமா..
பணமா....
புகழா...
ஜிவனுள் வாழும்
ஆனால் சப்தமின்றி உலவும்
மூச்சு இருக்கும்வரை தானே!


காணக்கிடைக்காது காற்று
தன்னை உணர மட்டுமே
செய்யும்...
ஆனால் சில நேரத்தில்
நம்மையும் தள்ளிவிடும்
சக்தி இருந்தால் எதிர்த்து
நின்று கூட பார்க்கலாம்
அதுவோ பீறிட்டு எழுந்து
புயலாய் மாறுவதேனோ?


தொ
லைக்காட்சியில்
நிகழ்ச்சியை உற்று மட்டுமே
பார்தத சிறுமி
கண்களில் பார்வை மங்கியதோடு
கண்ணாடி போட்டு கொண்டு
தவிப்பதை பார்த்து
மனம் வாடுகிறதே...
பள்ளியில் நீ புதிதாய்
தோன்றியவள் போல
தோழிகள் உன்னை
பார்தத விதம்.நினைவுகளின் ரகசியங்கள்

நம்மை வேறொரு உலகத்தில்
தள்ளிச் செல்லும் கனாக்கள்....
கனவை நினைவில் கொண்டு
சில நேரங்களில் இன்னல்கள்...


அவலநிலை
ஆம் வறுமை ஒழிய
ஒர் வழி இல்லாமல்
தவிக்கும் மக்கள்....
கண்டும் காணாமல்
ஒர் பக்கம்...
கண்டும் உதவாததால்
ஒர் தாக்கம்..

Sunday, September 13, 2009

தன்னை தானே சுற்றியும் ஆனந்தமா?

எப்பொழுது? என்று
யோசித்ததில்.......

ஆம்!
ஆனந்தம்
அது
பேரானந்தம் தான்

சுற்றும் போது சில நொடிகள்
மனதில் ஒரு நிசப்தம்
அது தான்
பேரானந்தமோ?

சுற்றிய பின்பு சில நொடிகள்
சுற்றம் தன்னை
சுற்றுவது போல...

மழலையின் முகத்தில்
சிரிப்பை காணுவதும்
பேரானந்தம் தானோ?

இல்லையென்றால் தியானம்
செய்து தான்
கிடைக்குமோ அந்த
பேரானந்தம்!

ஏனென்றால் மழலையில்
வீற்றிருப்பது அந்த
இறைமை தானே!

படிக்கும் போதே மழலையின் ஆசிரியையாக பணியாற்றினேன்
மிஸ் என்னை தூக்குங்க....மிஸ் என்னை...என அவர்கள் கேட்டது
என் நினைவில் வரும்போது.....
அவர்களோடு இருந்து கிடைத்த அந்த ஆனந்ததை எண்ணி
எழுதியதை பகிர்ந்துள்ளேன்.

ஆங்கிலத்தில் பாடியவை

ஆங்கிலப் பக்தி பாடலில் பிடித்தவை சிலவற்றை பகிர்ந்துள்ளேன்

*Pause at the lotus feet for a free prayer
Love and praise him everyday...
There is Joy....
There is Bliss...
If you spend the little time with him everyday
Krishna ...
Jesus...
Allah...
Pause at the lotus feet for a free prayer
Love and praise him everyday..


* Why fear when I am here
so says all the gods...
all the gods..
all.. the... gods........

All I want is your love my child
All I want is your faith
All I want is loving heart
No matter what your fate.(so)
Why fear when I am here

Krishna ,Jesus,Allah all came through this land
All of them brought the message of love
Love your fellowman.(so)
Why fear when I am here

The light you see in the dark of night is that of God in man..
Find the light that is in your heart
And reach the Promised land.(so)
Why fear when I am here

Thursday, September 10, 2009

கும்பாபிஷேகம்


சமீபத்தில் ஒரு பிள்ளையார் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது
ஏன்? எதற்கு?செய்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் கிடைத்து.

*கும்பாபிஷேகம் செய்யும் முன்பே யாகம் வளர்த்து அங்கு நிறைய கும்பத்தில் இருக்கும் நீரை கும்பாபிஷேகம் நாளன்று
கோபுரகலசத்திலும் மூலவருக்கும் (சாமிச்சிலை) அபிஷேகம் செய்வார்கள்.
*கோபுரத்தில் இருக்கும் கலச வடிவம் குறைந்தது மூன்று முதல் எட்டு பாகமாக இருக்கும் . அதில் வரகு அரிசியை போட்டு மூடிவைப்பார்களாம் அந்த காலத்தில் வெள்ளம் சூழ்ந்திடும் போது கோவிலில் தான் பாதுகாப்பிற்காக வைப்பார்களாம்.
*வரகு அரிசி வெள்ளை நிறத்தில் சிறியதாக இருக்குமாம்.எளிதில் பயிரிடகூடியதும் மற்றும் இடி மின்னல் கூட தாக்க முடியாதாம்.


அது ஏன் பன்னிரண்டு வருடத்திற்கு ஒரு முறை என்ற சந்தேகம் வந்தது அதற்கும் விடை கிடைத்த்து.
சாமிச்சிலைக்கும் பூமிக்கும் நடுவே ஒரு சிவப்புசாந்து போல இருக்கும்.அதன் பெயர் அஷ்டபந்தகம் என்பதாம்.
அதற்கான காலளவு தான் பன்னிரண்டு வருடமாம்.

கோபுரத்தரிசனம் செய்தால் கோடி பாவங்கள் நீங்குமாம்.
கோபுரத்தரிசனம் ...
கோடிபாபவிமோசனம்...
அதனால் இப்படி ஒரு பழக்கம் இருந்திருக்கலாம்.
நல்ல விளக்கம் அளித்த திருகே.தங்கநடராஜ தீக்ஷிதர் என்கிற குமார் ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டு அனைவரும் தெரிந்து கொள்ள இங்கு பகிர்ந்துள்ளேன்.

Wednesday, September 9, 2009

ஏனோ கோபம் வரவில்லை

தோழி வருவதில்லையே... ஏன்? என்று அம்மா கேட்கும் போது எழுத தோன்றி எழுதிய என் இரண்டாவது (கவிதை) எண்ணத்தின் எதார்த்தம் எழுத்து வடிவில்...
அம்மாவின் பாசம்
அப்பாவின் அக்கறை
ஒர் ஆசானாய்...
வழிகாட்டியாய்...
"உன்னால் முடியும்" என்று
தோழமையோடு
உதவியும் செய்வாய்...
ஊக்குவிப்பாய்...
நிதானம் காக்க சொல்வாய்
சிரிக்க வைப்பாய்...
எவ்வளவோ சின்ன சின்ன செல்ல சண்டைகள்..
எவ்வளவோ சமாதானங்கள்..
அனைவரிடம் பேச முடியாமல்
நின்றாலும்...
அனைத்தும் நட்பிடம் பகிந்தது
ஏராளம்........
கொஞ்சம் கொஞ்சமாக
பேசி பேசியே மலர்ந்த
நட்பு தான்...நன்றாக கடந்தது நாட்கள்....
என்னவோ பேச மறுக்கிறாய்(மறந்துவிடுகிறாய்)
நேரமின்மையோ
இல்லையென்றால்
ஒருவேளை வாழ்க்கைத்துணை
என்னும் தீராநட்பு வந்ததாலோ.........
ஏனோ கோபம் வரவில்லை
நட்பின் நிமித்தம்.

Tuesday, September 8, 2009

மேல் அதிகாரி

சிறுவயது முதல் படித்து
வளர்ந்து
பட்டம் வாங்கி...

வேலை கிடைத்து
உழைத்து
சம்பளம் வாங்கி...

மேலும் மேலும் முன்னெறி
உயர்ந்து
"மேல் அதிகாரியாக"
ஆனவுடன்...

தன்னை போல ஒருவனை ....
தனக்கு கீழ் வேலைக்கு
அமர்த்தும் போது மட்டும்....

தன்னிடம் வேலை தேடி வரும்
இளைஞனி்டம் திறமைகள் இருந்தும்.....

ஏனோ.....எது ..எது.....
உன் கண்களை
மறைத்தது எது?
பணமா.....
பதவியா.....
இல்லையென்றால்
நீ "மேல் அதிகாரியாக"
உயர உதவிய....
ஊடுருவியாய் இருந்த
அந்த சிபாரிசு தானோ.....அது...

ஏனோ...
மறந்து விடுகிறாய்.....
(தானும் இப்படி
வேலைதேடி அலைந்ததை...
வாய்ப்பு கிடைக்காமல் தவித்ததை...)

அவன் கண்களில்
தெரியும் அந்த ஆவலும்....
வாய்ப்புக்காக தான் என்பதை மட்டும்....