Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Sunday, March 19, 2017

A a To Z z Amazing Words of Success

நான் எனக்கு தோன்றிய வார்த்தைகளை இங்கு பகிர்ந்துள்ளேன்...

Aa - Awareness always ( எப்பவும் எதை செய்தாலும் விழிப்புண்ர்வோடு  செய்தல்)
Bb - Bold between( அப்பப்போ தைரித்தை இழக்காமல் துணிவுடன் செயல் படணும்)

Cc- Courage converts( மாற்றிடும் தைரியம்)

Dd- Discrimination declares(சரியா…. தவறா… நல்லதா..கெட்டதா…யோசித்து செயல்படுவது)

Ee - Education enhances( நல்ல கல்வி அறிவு மேம்பட உதவும்)

Ff-  Faith felicitates( நம்பிக்கை உதயமாகும் நல்வாழ்த்துக்கள்)

Gg- Good generates(நல்லது நடந்து கொண்டிருக்கும்)

Hh- Hold healthy(ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம்)

Ii - Initiative implies( முதலில் எதையும் செய்ய பழக வேண்டும்)

Jj - Job joys( வேலையை மகிழ்ச்சியோடு செய்யலாம்)

Kk- Kindness knowledgable(பண்பு அறிவின் வெளிப்பாடு)

Ll - Laugh lightens(சிரிப்பின் ஒளி)

Mm -Move magnificiantly(உன்னதமாக நகர்ந்து முன்னேறுங்கள்)

Nn - Next notable(அடுத்து குறிப்பிடதக்க நோக்கி செல்ல தயாராகுதல்)

Oo – Oath obvious (தெளிவான முடிவுகளை தேர்தெடுத்தல்)

Pp – Positive pursue(நேர்மறை சிந்தனைகளை தொடர வேண்டும்)

Q q – Qualify quietly( அமைதியாக தகுதி அடைதல்)

R r - React rationally( அறிவுபூர்வமாக செயலாற்றுதல்)

S s – Success sustains( வெற்றியை நிறுத்தி கொள்ளுதல்)

T t - Thankful towards( நன்றியோடு இருத்தல்)

U u – Useful unites(உபயோகமானதோடு இணைத்து கொள்ளுதல்)

V v – Victory values(ஜெயித்தவுடன் மதிப்பு கூடுதல்)

W w – Watch witness(கவனிப்பதும் சாட்சியுடன் சொல்ல வேண்டும்)

X x – Xenix xystus(மற்றவரோடு இணைந்து உடற்பயிற்சி செய்தல்)

Y y – Yeild you( உங்களை நீங்கள் பயன்படுத்துதல்)

Z z – Zoom zealous(வைராக்கியத்தோடு மேன்மை அடைதல்)
இதனை வீடியோ பதிவை கேட்டு மகிழுங்கள்..


அன்பு நல்வாழ்த்துக்கள் ...
சுபதினம்.

Monday, February 13, 2017

நம்மில் மூன்று விதமான மனிதர்களா?

நம்மில் மூன்று விதமான மனிதர்களா?ஆம்.
 நம்மை சுற்றி மூன்று விதமான மனிதர்கள் உள்ளனர்...
நமக்குள் தோன்றும் பல விதமான மனிதர்கள் இருக்கிறார்கள் ..அது என்ன மூன்று விதம் என்பதை நாம் இப்பொழுது பார்ப்போம்....
சமீபமாக நான் இதனை தெரிந்து கொண்டேன்.இந்த செய்தி மிக அற்புதமாக உள்ளதால் உங்களோடு பகிர்ந்து கொள்ள நான் தெரிந்து கொண்டதை ஒரு பதிவாக மாற்றியுள்ளேன்...
இதனை ஒரு சிறிய உதாரணத்தோடு நாம் பார்ப்போம்...
மூன்று வாளி தண்ணீர் எடுத்துக் கொள்வோம்...

                                                   
மூன்று பொருள்கள்....களிமண் பொம்மை,ஸ்பான்ச்,சர்க்கரை பொம்மை.






  • முதலில் நாம் களிமண் பொம்மையை தண்ணீரில் போடுவோம்...என்ன ஆகும்...


களிமண் கரையும்...இது என்ன புதுசா கேட்கிறீங்க,,என நினைக்கலாம்..
தண்ணீர் என்ன ஆகும்?

இப்பொழுது அந்த தண்ணீர் அழுக்காக மாறி இருக்கும்...
மேலும் இதனை மீண்டும் உபயோகமும் செய்ய முடியாது..
 அது போலவே சிலர் அவர்கள் பாழாவதோடு  நம்முடன் சேர்ந்து நம்மையும் பாழ்படுத்தி விடுகிறார்கள்...
தீய பழக்கம் அவர்களிடம் உள்ளதென்றால் அதனை மற்றவர்களையும் செய்ய வைத்து தீய பழக்கம் என தெரிந்தே அதற்கு அடிமையாக ஆக்கி விடுவார்கள்...

  • இரண்டாவது  வாளியில் ஸ்பான்ச் எடுத்து போட்ட என்ன ஆகும்?
இதுவும் நமக்கு தெரிந்தது தான்...தண்ணீரைமுழுவதுமாக இழுத்துக்கொள்ளும்..அதுபோல தாங்க...சில பேர்...நம்மை அவுங்க பக்கம் இழுத்து இல்லையென்றால் அவர்கள் நம்மிடம் எல்லா வேலைகளையும் வாங்கிக்கொள்கிறார்கள்...நம்மிடம் உள்ளதை உறிஞ்சி விடுகிறார்கள்...ஆகையால் நாம் இப்படிப்பட்டவரிடம் பார்த்து கவனமாக  இருக்கலாம்.
        
  • இப்பொழுது மூன்றாவது வாளியில் சர்க்கரை பொம்மையை போடுங்க....என்ன ஆகும்...                                                                                                                                      
சர்க்கரை கரைஞ்சுடும்..ஆமாம்..தன்னை கரைத்துக் கொண்டு தண்ணீரையும்  இனிப்பாக மாற்றிவிடும்...அது போல தான் சில பேர்.நம்மிடம் பழகி நமக்காக  உயிரே விடுவாங்க...அவர்களும் கஷ்டபட நேரிடும்,,அதற்காகவும் தயங்காமல் நம் வெற்றிக்கு வித்திடும் உண்மையான மனிதர்களோடு பழகி நம் வாழ்வையும் மேம்படுத்தி அவர்களையும் மேம்படுத்தி இனிமையாக சந்தோஷமாய் வாழ்வோம்.
                        நன்றி,,,அன்பு நல்வாழ்த்துகள்...சுபதினம்