Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Saturday, August 7, 2010

இனி ஒரு பிறவி வேண்டாம்...!

கவிதைப் போட்டிக்கான தலைப்புகள்...!
1. ஈழம் என்று மலரும்?

2. சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்!

3. பிரியாத வரமொன்று வேண்டும்...!

4. தொலைதூரக் காதல்!

5. ஈகரைத் தாய்...!

6. பெண்ணுக்குள் பூகம்பம்...!

7. அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!

8. தமிழுக்கு அமுதென்று பேர்...!

9. இனி ஒரு பிறவி வேண்டாம்...!

நான் எழுதியது இந்த கவிதை இதோ

இனி ஒரு பிறவி வேண்டாம்...!

பிறப்பிலும் அழுகை
இறப்பிலும் அழுகை
வாழ்விலும் இன்பம்
துன்பம் என சுழற்சி
ஆகையால்
இனி ஒரு பிறவி வேண்டாம்...!

எங்கும் சூழ்ச்சி
எதிலும் வீழ்ச்சி
வந்ததும் இனிப்பு
வருவதும் கசப்பு
எனினும் பின்னர்
கசப்பாய் வந்தது
இனிப்பாய் மாறாது
நினைத்தாலே மனது
தானாய் அழுகிறது
ஆகையால்
இனி ஒரு பிறவி வேண்டாம்...!

கண்களால் பார்ப்பது மெய்
காதுகளால் கேட்பது மெய்
வாயால் பேசுவது மெய்
கையால் செய்வது மெய்
சிந்தனையும் மெய்யென
வாழ இயலாது வாழ்வு
ஆகையால்
இனி ஒரு பிறவி வேண்டாம்...!

காணும் காட்சிகள் யாவும்
மனித சுயநலம் தாம்
ஒரு முறை இப்பிறவியும்
இங்கு காண்பதே போதும்
ஆகையால்
இனி ஒரு பிறவி வேண்டாம்...!