Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Saturday, June 26, 2010

குட்டீஸ்(16)

குட்டிமா ......தூங்கி எழுந்து வந்து.....ஒன்றும் புரியாமல் பார்க்கிறாள்.
பாட்டி என்ன செய்றாங்க என கவனித்து கொண்டிருந்தாள். தூக்கம் கலைவதற்குள் அழகான முயலை கவுணில் பார்த்த சந்தோஷினிக்கு ஆச்சிர்யமாக இருக்கிறது..
அம்மா முயல் வரைச்சாங்கடா..என பாட்டி சொல்லுறாங்க.
அம்மாவை பார்க்கிறாள்...உள்ளிருந்து கையில குட்டிமாவிற்கு பாலை ஆத்தி எடுத்துக் கொண்டு வந்தாள்..அ..ம்மா..என குரல் கொடுக்கிறாள்...
இதுவா ஸ்கூல் விட்டு வந்து போட்டுக்கடா...நல்லா இருக்கா..முயலை பாரு நூலினால் பாட்டி தைச்சாங்க..என்றாள்.சரியா இருக்கா பார்ப்போமா டா..செல்லத்துக்கு.. என அவள் அணிந்திருந்த ஆடையை கழற்றிவிட்டு இந்த கவுணை மாட்டிவிட்டாள்..முயலை தடவி பார்த்த குட்டிமா நிமரவில்லை..இங்க பாருங்கடா..என லதா அழைக்கிறாள்..
சரி டா இன்னும் பின்னாடி சரி செய்திட்டு நாளைக்கு போட்டுக்கொள்ளலாம் என கழற்றிவிட..குட்டிமாவின் முகம் சிறயதாய் போகிறது.
உடனே பாட்டி இதுமட்டுமில்லடா..நளைக்கு கடைக்கு போய் பட்டுபாவடை வாங்குவோமா...
என்றதும் குட்டிமா பாட்டியிடம் வந்து நிற்கிறாள்.என்ன பாட்டி...நிஜமாவா..
ஆமாம் டா...உங்க சித்தப்பா உனக்கு ஒரு டிரஸ் வாங்க சொல்லி இருக்கிறான்..நாளைக்கு கடைக்கு போகி வாங்குவோமா என குட்டிமாவிடம் சொல்கிறாள் பாட்டி.
சித்தப்பா அப்பாவும் இருக்கிறது போல ஒரு படம் முன் முகப்பு அறையில் இருப்பதை அறிந்த அவள் அங்கு சென்று நிற்கிறாள்.
அவன் எங்கடா..வரவில்ல என ஏக்கமாக சொல்கிறாள் பாட்டி.
இம்முறையும் விடுமுறை இருந்தும் வேலை அதிகமாக இருக்கிறது என சொல்லுகிறான் என்றாள்.
அப்பாவும் வந்துவிட ஏன் என்னவாம் அவனுக்கு என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைகிறார்.சரி போன் பண்ணிப் பார்க்கிறேன் என அழைப்பு விடுக்க மறுப்புறம் ஒன்றும் பதில் இல்லை.
இவன் ஏன் போன் எடுக்க மாட்டிகிறான் என திரும்பவும் அழைப்பு விடுக்க...ம் என எதாவது டிராபிக்ல மாட்டி இருப்பானோ..அப்பறம் செய்யலாம் என உள்ளே சென்றுவிட..
பாட்டியின் எதிர்ப்பார்ப்பு இளைய மகனும் அங்கு இல்லையே என்பது தான்.
கொஞ்சம் நேரம் கழித்து தாத்தா அருணிடம் தம்பியிடம் பேசினாயா என கேட்க...இல்லபா அவன் போன் எடுக்கல.இப்ப முயற்சித்து பார்க்கிறேன் என்றார்.
பின் அண்ணனிடம் பவ்யமாக வெளியில் இருப்பதாக தெரிவித்தான்.சரி நீ எப்போ வருகிறாய் என கேட்கிறார்...
இல நான் வரல..என்றவுடன் ஏன் டா நாங்க எல்லாம் இருக்கிறத மறந்திட்டியா என கேட்கிறார்...
எப்பவும் வேலை வேலை எதாவது சொல்லிட்டே இருக்கிற..
அப்பா அம்மா இங்க இருக்கிறாங்கடா..நீயும் வாடா..என அழைக்கிறார்.
மறுப்பு தெரிவிக்க முடியாமல் மௌனமாக இருந்தான் அண்ணனிடம்..
குட்டிமா இங்க வாடா..சித்தப்பாட்ட பேசுடா என அழைக்கிறார்.
குட்டிமா தன்னோட பாணியில சித்...தப்பா..என்றவுடன்..ஹொய் என்ன பண்ணுற கேட்கிறார்..



சரி நான் அங்க வரவா கேட்டார்...ம்...என்னவோ புரிந்தது போல தலையை ஆட்டி ஆட்டி பேசினாள் குட்டிமா...
பாட்டி கேட்டாங்க..சித்தப்பா என்னமா சொன்னான் என்று..
குட்டிமா கிட்டே வந்து......
(தொடரும்)

Tuesday, June 15, 2010

உன்னதமான நட்பு

உன்னதமான நட்பு
சூரியன் வெளிர் மஞ்சள் நிறத்தில் அழகாய் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.சின்ன சிட்டுகள் ஆங்கே மணல் வீடு கட்டி விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.ஒரு பக்கம் பட்டத்தை வானில் பறக்கவிட்டு விண்ணை எட்டும் என நூலினை தளர்த்தி காற்றாடியினை பார்த்து ரசித்திருந்தனர்..
கோடை வெய்யிலின் தாகம் தணிக்க ஐஸ்கீரிம் தள்ளுவண்டிகள் வந்த வண்ணம் இருந்தன...



அங்கே இருந்த சூழலில் மிக அமைதியாக கடல் அலைகளை பார்த்துக் கொண்டே அஸ்வின் தான் வாழ்க்கையில போராடி அலுவலகத்தில உள்ள தான் நினைத்த லாபம் கிடைக்காமலும் ப்ராஜக்ட் செய்ய முடியாம போனதில் மனம் வருந்தி என்ன இது வாழ்க்கை என இருந்தவன் தன்னை மறந்து கடற்கரையில் அமர்ந்திருந்தான்.
இங்க உள்ள எல்லாவற்றையும் ரசித்த கொண்டிருந்த அவன் தான் பள்ளியில் படித்த காலத்தையும் நினைத்துப் பார்க்கிறான்.

அது ஆங்கில வழிக்கல்விமுறையை கற்று தரும் பள்ளி..அந்த ஊரில அந்த பள்ளி தான் மிகவும் பெரிய பள்ளிக்கூடம்.விசாலமான வகுப்பு அறைகள்.





ஆனாலும் கடைசி இருக்கையில் தான் அஸ்வின் மற்றும் அவன் தோழர்கள் அமர்திருப்பார்கள்..

சின்ன சின்ன குறும்பு செய்யும் அசோக், அவனோட விளையாட்டுத் தனம், இப்படி இவனை எல்லாருக்கும் பிடிக்கும்.எதையாவது செய்வான்.எல்லாரையும் சிரிக்க வைப்பான்.சிரிப்பு வந்திடும்..ஆனா வசமா வகுப்புக்கு வந்த ஆசிரியரிடம் மாட்டிகிட்டு முழிப்பான்.அவங்க அம்மா இவனை நினைத்து ரொம்ப கவலை படுவாங்க..அவனோட அப்பா ஆட்டோ ஓட்டி இவனை படிக்க வைச்சாங்க.ரொம்ப அன்பா இருப்பாங்க.... தன்னோட பிள்ளையாவது பின்னாடி கஷ்டப்படக் கூடாது என்பதில உறுதியா இருந்தாங்க.

அப்பறம் சுதாகர் ரொம்ப அமைதியா இருப்பான் நல்லா படிப்பான்..எல்லாருக்கும் சொல்லி தருவான்.இவனுக்கு ஒரே ஒரு அக்கா.அவுங்க வீட்டில எல்லாரும் ..நல்லா பாசமா இருப்பாங்க குறிப்பா அவன் பாட்டி இவன் மேல அவ்வளவு ப்ரியமா இருப்பாங்க..இவனை விளையாட அழைத்த போது ஒரு முறை பார்த்திட்டாங்க பிள்ளை விழுந்துடுவான் வேண்டாம் வேண்டாம் என மறுத்து இவன் வீட்டிற்கு பின்னாடி பெரிய இடத்தையே கொடுத்து இவனோட விளையாட சொல்லுவாங்க...

அதே பென்ச்சில அடுத்து இருந்தது முகமது இவன் படிப்பான், சில நேரத்தில இவன் செய்கிற மிமிக்கிரில எல்லாரும் ஆச்சிர்யப் படுவோம்.நல்லா விளையாடுவான்.இவனுக்கு இரண்டு அக்கா அப்பா வெளிநாட்டில வேலை பார்க்கிறாங்க..ஒரே பையன் தான் அதனால இவனை செல்லமா..வைச்சுப்பாங்க.....எப்ப எது கேட்டாலும் வாங்கி தந்திடுவாங்க இவனோட அம்மா.அதனால இவன் லூட்டி தாங்காது.

எங்க வீட்டில அம்மா அண்ணா எல்லாரும் இவுங்க வந்தாலே நான் எப்படி படிப்பேன் என்ன செய்வேன் என்று எல்லாவற்றையும் கேட்டு தெரிச்சுப்பாங்க.அப்பா எதையும் கண்டுக்க மாட்டாங்க.கணினியே கதி என்று தன் வேலையில் மும்மரமாக இருப்பாங்க.ஆனால் எனக்கும் கணினி வாங்கி கொடுத்து எல்லா கோர்சும் படிக்க வைச்சது எல்லாம் அப்பா தான்.
அஸ்வின் கண்கள் திறந்திருந்தாலும் அவன் எண்ண அலைகள் அவன் பள்ளிப்படிப்பில தொடங்கி வேலை என இத்தனை தூரம் இந்த நிமிடம் வரை காட்சிகளில் தன்னோட இன்பதுன்பங்களை சமாளித்ததை எண்ணி கொண்டிருந்தபோது அவன் தோளில் யாரோ கை வைக்க....... திரும்பிப் பார்த்தான்.பார்த்தவன்..சட்டென்று எழுந்தான்.அவன் நினைத்து கொண்டிருந்த தோழனில் ஒருவனான் அசோக் தான் அது.
ஹே என்னடா.... எப்படி இருக்கிற...கட்டித் தழுவிக்கொண்டான்.இப்பாசப்பிணைபிற்கு விவரிப்பதற்குக் கூட வார்த்தைகள் இல்லை ...
அச்சந்திப்பில் அவ்வளவு அன்பு நிறைந்திருந்தது.







மற்ற இருவரையும் சந்தித்தையும் சொன்னான் அசோக்...பின் அவர்களையும் வரவழைத்து ஆனந்தமாய் நால்வரும் சந்தித்து கொண்டனர்
ஊர் மாறி மாறி இப்படி இங்கே சந்திப்போம் என எவருமே நினைத்துக்கூட பார்க்கவில்லை...
அந்த மகிழ்ச்சி கொஞ்ச நேரம் கூட இல்லை என்றே சொல்லணும்..சோகம் நிறைந்த அவரவர் வாழ்வியல் பற்றி பகிர்ந்துகிட்டாங்க.எல்லார் வாழ்வியலிலும் இருந்தது "பணத்தட்டுபாடு" என்பதே ப்ரச்சினையாக இருந்தது தெரிய வந்தது.

இணைப்பிரியாமல் இருந்தவர்கள்
இணையாமல் போனது விதியால்
இனியாவது என்றும் பிரியாமல்
இணைந்திருக்க எண்ணினார்கள்

நாம எல்லாரும் ஒன்றா இருக்கலாமா கேட்டான் அசோக்...பதில் சொல்ல முடியல எனினும் அவர்கள் மனதில எங்கயோ தனியா இருப்பதற்க்கு பதிலா நாம ஒன்றாகவே இருந்திடலாம் என யோசித்தார்கள்..படிக்கும் போது அவர்கள் ஒன்றாக கலகலப்பாக இருந்ததை வாழ்வில் எந்நாளும் மறக்க இயலாது.வேலையின் நிமித்தம் இங்கு வந்ததில் இருந்து அவர்கள் தனிமையில் வாழ்ந்ததால் மீண்டும் அந்த பழைய சந்தோஷத்தில் பாதியாவது திரும்ப பெறலாம் என்ற எண்ணத்தில் ஆலோசித்தனர்.
அஸ்வின் இப்பொழுது தான் தெளிவு பெற்றது போல முகம் மலர்ந்தான்.

சுதாகர் சொன்னான் வெளியில ஒரு நகரில உள்ள வீடை ஒரு வாரம் முன்பு தான் வாங்கி இருந்தேன் டா...நீங்க எல்லாரும் அந்த வீட்டிற்கு வந்திடுங்கள்..







ஒரே வீட்டில நிறைய அறைகள் இருக்கிறது டா...என்ன சொல்லுறீங்க...மறுநாள் அவனோட வீடு ரொம்ப ஜகஜோதியாக நட்பாலும் அன்பாலும் நிறைந்து இருந்தது...

அசோக அவன் மனைவி அக்க்ஷயா மற்றும் அவனோட மகள் அஸ்வினியோட வந்தான்..சுதாகர் அவனை தன் மனைவி நிர்மலாவிடம் அறிமுகம் செய்தான்..அழகாய் ஓடி வந்தான் அஜய் அவனோட பையன்... அஸ்வின் தன் மனைவி விசாலியை அறிமுகப்படுத்தினான்...இப்ப தான் 6 மாததிற்கு முன்னாடி இவர்களுக்கு கல்யாணமாயிற்று...

முகமது அவன் அம்மாவோட வந்து இருந்தான்..அம்மா எல்லாரையும் பார்த்தவுடனே மகிழ்ச்சியாய் இருந்தாங்க...பிள்ளைகள் பார்த்து ரொம்ப சந்தோஷப் பட்டாங்க..ஏன் பா இவனையும் கல்யாணம் பண்ணிக்க சொல்ல வேண்டியது தானே...என்னவோ வெளிநாட்டில போய் சம்பாதிச்சுட்டு வந்து தான் சொல்லுறானே...கேட்க மாட்டிங்களா என சொன்னவுடன் ஒருவரை ஒருவர் பார்த்துகிட்டாங்க...
ஏன் டா என்ன சொல்லுற இப்போ தான ஒன்றாக இருக்கலாம் வந்தோம் ..ஏன் டா எங்க டா போக போற என எல்லாரும் முகமது கிட்ட சின்ன சினுங்கலோட கேட்டாங்க...
எங்கயும் போல டா..தோ இங்க கிட்ட இருக்கிற குவைத் தான்....தினமும் உங்களோட பேசுறேன்..அம்மாவை உங்களவிட யாருடா நல்லா பார்த்திக்க முடியும் என்றான்..நீங்க கோசிப்பீங்கன்னு தான் நேற்று நான் சொல்லல...சேர்ந்து இருக்க நினைத்த போது வெளிநாட்டிற்கு போவதை நானும் நினைக்கவில்லை.

எனினும் நம்ம எல்லாருக்கும் இருப்பது பணம் என்ற ஒரே ப்ரச்சினை தான்...
பசங்க பெரிசா ஆனா நாம கஷ்டப் படுறதை அவங்களும் கஷ்டபடக்கூடாது டா..
அதான் டா.அப்பா ரொம்ப நாளா வேலை பார்க்கிறார்.பாவம் நான் அங்க சென்று அப்பாவை அனுப்பி வைக்கிறேன்...நான் இங்கில்லை என்றாலும் என்னொட மனசு இங்க தான் டா இருக்கும். அக்கா இரண்டு பேரும் சௌதியில இருக்காங்க.அம்மா இங்க தான் இந்தியாவில தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாங்க....

சரி வாங்க எல்லாரும் ஒன்றா சாப்பிடலாம் என சொல்லி அழைக்கிறான்.
நான் சொல்லுவது கேளுங்க..ஒரு இரண்டு வருஷம் தான் அப்பறம் நான் இங்க வந்திடுவேன்.
உங்க எல்லாருக்கும் என்ன வேண்டுமோ அதை செய்ய நான் தயாரா இருக்கேன்..ரொம்ப பொறுப்பா பேசினான்.
அவன் சொல்லுவது உண்மை தான என எண்ணி எல்லாரும் சமாதானம் ஆகி விடுகிறார்கள்.

பின் அவனோட அம்மா பிள்ளைகளோட மகிழ்வதை பார்த்து ரசிக்கிறான் முகமது.தன் அக்காவின் குழந்தைகளை காணமுடியாத அம்மா இவர்களை பார்த்து சந்தோஷபடுவதை மனத்ருப்தி அடைகிறான்.
வெளிநாட்டில அவன் சம்பாதிச்சு சுதாகருக்கு வீடு வாங்கிய கடனை அடைக்க, அசோகோட பிஸினஸுக்கு,அஸ்வினுக்கு தன்னம்பிக்கை கொடுத்து அவனாலயும் சாதிக்க முடியும் என நம்பிக்கை கொடுத்து ,தனியா ஒரு நிறுவனம் அமைக்க பணம் கொடுத்து உதவுகிறான்.
இவர்கள் யாரும் அவனை கேட்கவில்லை என்றாலும் தன்னால் ஆன உதவியை முகமது நட்பால் அறிந்து செய்து கொண்டிருந்தான்.
அஸ்வினி,அஜய் முதல் எல்லாரும் முகமதுவிடம் வாரம் ஒரு முறை பேசி மகிழ்வர்.

எல்லாம் ரொம்ப அழகாய் யோசித்து செய்தான் முகமது. அவனுக்கு ஒரு வாழ்க்கை அமைய வேண்டுமென நண்பர்கள் மூவரும் சேர்ந்து
முகமதுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்து பெண் பாருங்க மா..அவன வரவழைச்சிடலாம் என்றவுடன் அவனோட அம்மா பழையவீட்டில இருந்தபோது உதவியா இருந்த ஆப்ரின்..ரொம்ப அழகாய் இருப்பாள்.அமைதியான பெண்..அவுங்க வீட்டில அவ்வளவு வசதி இல்லை தான் இருந்தாலும் முகமதுக்கு ஏற்ற பெண் என சொல்ல முடிவு செய்தனர்...

முகமதுவை வரவழைக்க நல்ல நேரம் வந்தது...ரொம்ப அருமையாக கோலாகலமாக திருமணம் நடந்தது...
முகமதுவின் அம்மாவும் அப்பாவும் தன்னொட மகனுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது என அவ்வளவு சந்தோஷ பட்டாங்க...
நிறைவான வாழ்க்கை அவர்கள் அனைவருக்குமே அமைந்திருந்தது.கை தூக்கி விட வந்த நட்பு அவர்கள் வாழ்வில் ஓர் மாற்றம் ஏற்ப்படுத்தியது தான் உண்மை.மனம் தளராமல் தங்களின் திறமையால் வென்றிடும் நண்பர்கள்.வாழ்க்கையில் தன்னம்பிக்கையான தோழமை ஆங்கே குடிக்கொண்டிருந்தது அவர்களின் நட்பில்.தன்னலமற்ற நட்பு தோள் கொடுத்தது.
எல்லாரையும் சேர்த்து வைத்த அந்த கடற்கரையில் சென்று ஆடி மகிழ்ந்து நட்பால் உறவான பந்தங்கள் இங்கே தனிமையை தள்ளிவிட்டு ஒன்றாய் சிரித்து மகிழ்ந்தனர்.எல்லாரும் அவர்கள் வாழ்வியலில் முன்னேற்றிய முகமதுவை அஸ்வின்,அசோக் மற்றும் சுதாகர் நன்றியோட இன்றும் என்றும் இணைந்து இருப்போம்...இன்பமாக.. என அவர்கள் பார்வையில் பேசினர்..என்றேன்றும் நாம் நட்போடு இணைந்திருப்போம்.நாமும் முன்னேறிடுவோம்,முன்னேற முயற்சி செய்வோருக்கும் உதவியாக இருப்போம்




சந்தோஷம் நிறைந்திருந்த ஓர் நட்பு..
சாதனைகள் பல நிகழ்த்திய ஓர் பாசம்...
பிரிந்த சில நாளில் பாசாத்தால் ஓர் புரிதல்
புரிந்து நடந்தததில் வாழ்க்கையில் ஓர் பிடிப்பு
எதற்கும் ஈடில்லாத தூய்மையான ஓர் பந்தம்...

என்றென்றும் இவர்கள் வாழ்வில் ஓர் வசந்தம்.

Friday, June 4, 2010

ஆதியந்தக் கவிதை - சவாலுக்குத் தயாரா?- தாய்

தாயை விட உயர்ந்தவள் யார்?

தாயை விட உயர்ந்தவள் யார்?

என்று அறியவில்லை இதுவரை

ஆனால் தாய் காட்டிய தந்தை

தந்தை காட்டிய குருவும்

குரு காட்டிய கடவுளும்

அந்த கடவுளின் உருவமே

தாயாக நடமாடுகிறாள்

கண்முன்னே!

Thursday, June 3, 2010

டிசைன்கள் நான் செய்தவை

நான் படங்களை இணைத்து செய்தது..இன்று தேர்வாகி http://tamil.darkbb.com/ இணைக்கப்பட்டுள்ளது...உங்களோட பகிர்ந்து கொள்கிறேன்...இது தான் முதல் முறை..

நன்றி...