Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Sunday, July 10, 2016

வகுப்பு - 5 நினைவாற்றல் என்றால் என்ன?

சரி இப்பொழுது நாம் இந்த நினைவாற்றல் பயிற்சியின் முக்கியமான பகுதியை கவனிப்போம்..
நினைவாற்றல் என்றால் என்ன?
ஞாபகப்படுத்தி சொல்லுகிற ஒரு திறமை….அதாவது ஏற்கனவே நாம் சேர்த்து வைத்திருக்கிற தகவல் (தக்கவைத்துக்கொள்ளல்) மற்றும் அதனை நாம் தக்க சமயத்தில் அதனை வெளிக்கொணர்தல் சொல்லலாம்.
·          ஞாபகபடுத்துதல் ஒரு நினைவாற்றல்
·          ஞாபகபடுத்துதல் என்பது சுறுசுறுப்பான மூளையின் அதீத தேடல்.
·          ஞாபகபடுத்துதல் என்பது எதனை குறிக்கின்றது என்றால் “ஏற்கனவே கற்றுக் கொண்டதை தக்கவைத்தல்” மற்றும் ”தேவையான இடத்தில அதனை சரியான சமயத்தில் வெளிக்கொணர்தல்”
ஞாபகபடுத்துதல் என்பதில் உள்ள மூன்று வித கட்டமைப்புகள்:-
  • v  இதுவாக இருக்குமோ என்ற எண்ணம்.
  • v  இது தானோ என்ற சந்தேகம்(தெளிவின்மை)
  • v  ஆமாம் இது தான் என்கிற தெளிவு


இது வரை நாம் பார்த்த வகுப்பு 5 என்னுடைய சொந்த மொழிப்பெயர்ப்பு என்று தான் சொல்ல வேண்டும்.. சேகர் ஐயா..தமிழில தான் இருக்க வேண்டும் என கூறியதால் ஆங்கிலத்தில் உள்ளதை மொழிப்பெயர்ப்பு செய்து தான் இங்கு தட்டச்சு செய்துள்ளேன்…சேகர் ஐயாவிற்கு நன்றி…
மொழி மாற்றம் செய்தது இதுவே முதல் முறை….
சுப தினம்….




Wednesday, July 6, 2016

கவிச்சமர்....

உதித்த சில கவிதைகள்...வெற்றியும் பெறுவோம்
வாழ்ந்து காட்டுவோம்
அகந்தை தவிர்ப்போம்
சாதனைகள் புரிவோம்
அமைதியுடன் இருப்போம்
என்றும் வெற்றி நமதே...
நமக்கு மட்டும் என்றானால்...
சுயநலம்
நம் அனைவருக்கும் என்றால்
பொதுநலம்
முதலில் இருப்பது மறைந்து
இரண்டாம் இருப்பது வளர்ந்தால்
நாடு முன்னேற்றம் அடையுமா?!
விலை?!
எல்லாவற்றிருக்கும்
விலையா?!
அன்பு
பாசம்
நட்பு
இவையெல்லாம்
விலைமதிப்பற்றவையே!
என் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள....!!!
அயராது பாடுப்பட
மேலும் உயர்ந்திட
முயற்சி செய்திட
முன்னேறி வாழ்ந்திட
இறைவன் இருந்திட
வெற்றியோடு தோல்வியும் சந்தித்திட
மனம் பக்குவமடைய
மீண்டும் நிரந்தரமாய் வெற்றியே....நிலைத்திட
கர்வம் அடையாமல் வாழ்வு இங்கு தொடரட்டும்.

வகுப்பு-3 நினைவாற்றல் வளர்த்து கொள்வது எப்படி?

மூளை சோர்வை தடுக்கும்:-
அன்றாடம் சமையலில் சீரகம்,மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்கின்றன.பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட கொடுக்க வேண்டும்.
ஊற வைத்த பாதாம் பருப்பு:-
பாதாம் பருப்பில் பாஸ்பரஸ்,தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது.
அக்ரூட்,திராட்சை:-
அக்ரூட் பருப்புகளுடன் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும்.அது போல வேர்க்கடலை சாப்பிட்டாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.
மூளைக்கு சுறுசுறுப்பு:- 
நினைவாற்றல் அதிகரிக்க வாரம் ஒரு முறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது.இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு,தினமும் அரை தேக்கரண்டியை பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் குழந்த்தைகளும், பெரியவர்களும் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள்.
திப்பிலியை வல்லாரை சாற்றில் ஊற வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அள்வில் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.பப்பாளிப்பழம் தினமும் சாப்பிட்டால் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம்.
பசலைக்கீரை:-
பசலைக்கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்.
நெல்லிக்காய்:-
மாணவர்கள் நெல்லிக்காய் தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும்.
சுப தினம் 
ரமலான் தின அன்பு நல்வாழ்த்துக்கள் 

வகுப்பு-2 நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?

வகுப்பு-2
நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
“நினைவாற்றல் என்பது ஒரு திறமை.சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை.தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்.”
நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன.
அவை:-
 தன்னம்பிக்கை
 ஆர்வம்
 செயல் ஊக்கம்
 விழிப்புணர்வு
 புரிந்துகொள்ளல்
 உடல் நலம்.
இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.
1. தன்னம்பிக்கை:-
”என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது.எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை முதலில் வேண்டும்.
“ நான் எப்படி தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ,எனக்கு ஞாபக சக்தியே சற்று
குறைவாகத்தான் இருக்கிறது.அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது” என்று தங்களைக் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.
“நினைவாற்றல்” என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த,பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும்.
இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு,நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!2-ஆர்வம்:-
ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால்,பதிய வைத்தால் நினைவில் நிற்கும்.
3-செயல் ஊக்கம்:-
இந்த செயதிகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.
உதாரணத்திற்கு “ஹோட்டல் ராயலுக்கு நாளை காலை 4 மணிக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு 5 லட்சம் தரப்படும்” என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் நீங்கள் மறந்து விடுவீர்களா?
தேவையை , அவசியத்தை நன்றாக உணர்ந்த விசயங்கள் நன்றாகப் பதிகின்றன.
4 – விழிப்புணர்வு:-
மனம் விழிப்பு நிலையில் இருக்கும்போது கவனமும், ஒருமைப்பாடும் மிகச் சிறந்து இருக்கும். விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைப்புரியும்.
என்னை பொறுத்த வரையில் முத்திரைகளை நன்றாக கற்றுக் கொண்டு நம் உடல்நிலைக்கு ஏற்றவாறு அதனை தொடர்ந்து செய்து வந்தால் மனம் குறுகிய காலத்தில் சொல்லப் போனால் ஒரு சில நிமிடங்களில் பயன் அடையலாம்.
ஆரொக்கியமாய் வாழ அறுசுவை உணவு சாப்பிடுவது மிக அவசியம்.அதனை பற்றி பின்பு பார்ப்போம்.
5 – புரிந்துகொள்ளல்:-
புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன்.புரியாவிட்டால் அல்லது தெரியாவிட்டால் கூச்சம்,அச்சம்,தயக்கம் இல்லாமல் 
ஏன்? எதற்கு?எப்படி? எவ்வாறு? எங்கே? யார்? போன்ற கேள்விகளை கேட்டு தெளிவு பெற்று புரிந்து கொள்ளல் வேண்டும். 
6 – உடல் ஆரோக்கியம்:-
உடல் ஆரொக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்து இருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும்.
ஆரொக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.
• தக்க உணவு
• சரியான உறக்கம்
• முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
சத்தான உணவுகளை கொடுப்பதன் மூலம்
அனைவருக்கும் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
அதனை பற்றி அடுத்த வகுப்பில் பார்க்கலாம்.
நன்றி….சுபதினம்.