Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Monday, December 28, 2009

பதில் கிடைத்த சில கேள்விகள்...(4)

5]பாரபட்சம் பார்ப்பது எதனால்?

இதுக்கெல்லாம் காரணம் சொல்வதே பாரபட்சமானதுதான்...
ஏன்னா எனக்குப் பிடிக்காத காரணங்களைத் தானே இங்கே சொல்லுவேன்...

பாரம் - வெயிட்டேஜ்..
பட்சம் - பக்கம்

பாரபட்சம்.. வெயிட் உள்ள பக்கம் சார்ந்து நிற்பது..

எப்பவுமே அதைத்தான் செய்கிறோம். எதை நாம் பாரம் என்று எண்ணுகிறோமோ அந்தப் பக்கம் சாய்கிறோம்.

பாரபட்சம் பார்க்காம முடிவு எடுப்பது என்பது இயலாத காரியம்
6]குடுப்பத்திலும் பாரபட்சம் உண்டா என்பது பற்றி சொல்லுங்கள்.....
அதிகபட்ச பாரபட்சமே குடும்பத்தில்தானே இருக்கு...

ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்கிறோம் பேர்வழி என்று எல்லா விசயத்திலும் தன்னை தாழ்த்திக் கொண்டு அடுத்தவருக்குக் கொடுப்பது நல்ல குடும்பம்.

என் வேலை நடந்தால் சரி என விட்டேத்தியாக இருப்பது இன்னொரு வகைக் குடும்பம்.

மூடுக்கு ஏற்ப கொஞ்சுவதும் மிஞ்சுவதும் இன்னொரு வகைக் குடும்பம்..

நான் தான் முக்கியமான ஆள், நான் சொல்றதுதான் சரி என ஒவ்வொருவரும் வீம்பு பிடிப்பது இன்னொரு வகைக் குடும்பம்.

எப்படிப் பார்த்தாலும் குடும்பத்தில் நடுநிலைமை என்பதே மிகக் கடினமான ஒன்று.

Sunday, December 27, 2009

குட்டீஸ்...(10)


குட்டிமா உள்ளே சென்றவுடம் பள்ளியின் வளாகத்தை பார்க்கிறார் அருண்...
பின் விடை பெற்றுக் கொண்டு அலுவலகத்திற்கு செல்கிறார்...
அம்மா அங்கே இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து கொள்கிறாள்...குட்டிமா சென்ற பாதையை பார்த்து கொண்டே இருக்கிறாள் லதா.....

குட்டிமா உள்ளே சென்றவுடன் வண்ணமயமான இருக்கைகள் அழகாக வரிசையாக இருந்தது..ஒரு பக்கம் கரும்பலகையில் மிக்கி மவுஸ் படம்...
இன்னொரு பக்கம் உள்ள கரும்பலகையில் அழகான பூங்கொத்து ஏந்திய இரண்டு மாணவர்கள்...என வரைந்து வைத்திருந்தார்கள்...வண்ண மயமான தோரணங்கள்....ஆங்காங்கே ஒட்டி வைக்க பட்டிருந்த வண்ணத்தாள்கள்.....என வகுப்பு அறை அலங்கரிக்க பட்டிருந்தது...

இவை எல்லாவற்றையும் பார்த்த சந்தோஷினிக்கு மற்ற மாணவர்களின்
அழுகைக்குரலும் கேட்கிறது...அப்படியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.
பின் அங்கே உள்ளே செல்லும் வழியில் தோழியைப் பார்த்து செல்ல வந்த இன்னொரு ஆசிரியை நோட்டு புத்தகங்கள் ஏந்திக் கொண்டு வந்திருந்தார்கள்...

சந்தோஷினி தன் இருக்கையில் இருந்து ஓடி வந்து அந்த ஆசிரியையின் கால்களை பற்றி கொள்கிறாள்....சற்றும் எதிர்ப்பார்க்காத ஆசிரியை சந்தோஷினியிடம்
என்னம்மா.... என்ற குரல் கொடுக்கிறாங்க...கேட்டவுடன் குட்டிமா கொஞ்சம் கொஞ்சமாக தன் கையை எடுக்கிறாள்...ஆசிரியை அந்த நோட்டு புத்தகங்களை மேஜையில் வைத்துவிட்டு....சந்தோஷினியிடம்....பேசுறாங்க..அங்க உள்ள பொம்மைகளை காட்டி விளையாடலாமா..என்று கேட்கிறாங்க....
லதாம்மா கட்டி இருந்த அதே மாதிரி புடவையை அணிந்திருந்ததால் அவள் வேகமாக வந்தது....என்பதை தெரியாது அந்த ஆசிரியைக்கு....குட்டிமா அப்படியே ஒன்றும் பேசாமல் நிற்க்கிறாள்.

பின் மணி அடித்தவுடன்....அழுகின்றவர்களை ஒரு வகுப்பு அறையிலும் அழாதவர்களை அடுத்த ஒரு அறையில் உட்கார வைத்தனர்..
சந்தோஷினியிடம் லதாம்மா..அழாமல் இருக்கனும் அம்மா இங்கேயே உட்கார்ந்திருப்பேன் என்று சொன்னது புரிந்தது...

முதலில் ஆசிரியை மட்டும் கடவுள் வணக்கத்தை பாடுறாங்க....
எல்லா குழந்தைகளுக்கும் கைக்குப்பி வணங்க சொல்லுறாங்க...அப்போ வீட்டில அப்பா அம்மாவும் சாமி கும்பிடும் போது சொல்லி தந்தது போல சரியாக வைத்து கொள்கிறாள்...ஆசிரியை ஒவ்வொரு குழந்தையாக பார்க்கிறாங்க....
"வெரிகுட்" என்று சொல்லுறாங்க...சரியாக கைக்குப்பி வணங்குபவர்களை...
அப்போ சந்தோஷினியையும் "வெரிகுட்" என்று சொல்லுறாங்க...
கடவுள் வாழ்த்துப் பாடலை சொல்லுறாங்க...கண்களை மூடிக்கொண்டு...
பின்பு ஆசிரியை சொல்லுறாங்க.....
எல்லாரும் கைத்தட்டுங்க....இன்னிக்கு நம்ம கிளாஸ் பிரியாவிற்கு பிறந்தநாள்...எல்லாரும் கைத்தட்டுங்க....என்று சொல்லிக் கொண்டே ஆசிரியை
Happy birthday to you...
Happy birthday to you...
Happy birthday to you...... priyaa...என்று பாடிக்கொண்டே நகர்ந்து எல்லோரிடமும் போகிறாங்க..கையை தட்ட சொல்லி செய்கை காமிக்கிறாங்க.....
வெரிகுட்....என்று சொல்லிவிட்டு...
பின்பு எல்லாரையும் அமர சொல்லுறாங்க...
ஆசிரியை அந்த சட்டை பைக்கு மேல் குத்தி இருக்கும் ஐ.டி.கார்டை பார்த்து பார்த்து வருகை பதிவேடை குறிக்கிறாங்க...
அதற்க்குள் அங்கே நிவாஸ் எந்திருக்கிறான்...நிவாஸ் சிட் டவுண் என்று குரல் கொடுக்கிறாங்க...
அப்பறம் நீங்க எல்லாரும் அழகாக பாடினா....எல்லாருக்கும் பிரியாவோட சாக்லேட் தருவேன்...
பாடிருங்களா...என்று ஆசிரியை சொல்லுறாங்க...
நிலா நிலா ஓடி வா...
நில்லாமல் ஓடி வா...
மலை மேல ஏறி வா....
மல்லிகைப்பூக் கொண்டு வா...என்று செய்கை செய்து கொண்டே பாடுறாங்க...
எல்லாருமே சொல்வோமா....
சொல்லுங்க..நிலா.... நிலா...அங்க பாருங்க....மேல...இருட்டானதும் வீட்டல போய் பாருங்க...இது மாதிரி வானத்தில தெரியும்....என்று புத்தகத்தை காட்டுகிறாங்க...
மேல இருக்கும் நிலாவை கூப்படலாமா..கையை எல்லாரும் தூக்கி கோங்க..ம்...மேல பார்த்து சொல்லுங்க...நிலா....நிலா...
அப்போ...மெலிதான குரலில் நில் நில்தலையை ஆட்டிக்கொண்டு நிலா சொல்லி பார்க்கிறான் கௌதம்...
கார்த்திகா கத்துகிறாள்..நிலா..நிலா...என்று எல்லாரும் அவளையே வேடிக்கை பார்க்கிறாங்க....
சந்தோஷினி ஆசிரியை பார்க்கிறாள்....அவுங்க செய்வது புதிதாக இருப்பதை உணர்கிறாள்...தானும் அப்படி செய்து பார்க்கிறாள்...

அதற்குள் லதா அம்மா..குட்டிமா அழுகிறாளா...பாருங்க என்று மீனியலிடம் கேட்கிறாள்...இல்லங்க..நான் அங்கிருந்து தான் வரேன்... சமத்தா உட்கார்ந்திருக்கிறாள் என அந்த மீனியல் வழக்கம் போல எல்லா மாண்வர்களின் பெற்றோரிடம் சொல்லுவது போல சொல்கிறாள்....

உள்ளே அழகாக பாடி முடித்த சிறார்களுக்கு சொன்ன படியே..சாக்லேட் கொடுக்கிறாங்க ஆசிரியை...

பின் எல்லார் பைக்குள் இருக்கும் ஸ்னாக்ஸ் பாக்ஸை திறந்து சாப்பிட சொல்லுறாங்க...
தண்ணீர் குப்பியை திறந்து கொடுத்து கொண்டே..ஒவ்வொருவரிடமும் வருகிறாங்க...அப்போ அதற்குள்..அங்க.....
(தொடரும்)

Saturday, December 19, 2009

பதில் கிடைத்த சில கேள்விகள்...(3)

3]உனக்கு வந்தால் தெரியும் என்று சொல்லுவது கோபத்திலா?
இல்லையென்றால் தன்னைப்போல் கஷ்ட படட்டும் என்பதாலா?
உனக்கு வரட்டும் நான் அப்போ பார்க்கிறேன் என்று சொல்லுவது நடக்க நடைமுறையில் சாத்தியமா

நம் உணர்ச்சிகளை இன்னொருவருக்கு சொல்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. இலக்கியங்களில் இதற்காகத்தான், உவமை, உருவகம் எனப் பல முறைகள் உள்ளன. நம் உணர்வுகளை மற்றவர் புரிந்து கொள்ளவில்லை என்னும் பொழுது அதை அனுபவித்தால்தான் உனக்குப் புரியும் என்று சொல்கிறோம். அது கோபம், விரக்தி, சோகம் மற்றுமல்ல காதல், மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளின் போதும் கூடத்தான் இதையெல்லாம் அனுபவிச்சுப் பார்த்தால்தான் புரியும் என்று சொல்கிறோம். ஆக என் உணர்வைப் புரிந்து கொள் என்பதன் மறுவடிவமே உனக்கு வந்தால்தான் தெரியும் என்பதும். அதன் பொருள் வார்த்தைகளால் உனக்கு இதைப் புரிய வைக்க என்னால் முடியாது என்பதாகும்.

அது நடக்கவும் வாய்ப்புகள் உண்டு.. நாம் கோபத்தில் மட்டுமே இதை நினைவில் பதித்துக் கொண்டு சொல்கிறோம். மற்றபடி சொன்னதை மறந்துவிடுகிறோம்.

உனக்கும் இதே போல் சூழ்நிலை வரும் என்று சொல்வது நடக்கவும் செய்யலாம். நடக்காமலும் போகலாம். அது நடக்க வேண்டும் என எண்ணுவது கோபத்தில் மட்டுமே! அதனால்தான் இந்தக் கேள்வி உங்களுக்கு முளை விட்டிருக்கிறது.
4]அன்பளிப்பகள் வாங்கி கொண்டால் கொடுத்தவர் நம்மை மறக்க வாய்ப்புள்ளதா....
வாங்கி கொண்டவருக்கு ஞாபகம் அந்த அன்பளிப்பை பார்க்கும் போது இருக்கும் தானே...
ஆனால் கொடுத்தவர்.....
அன்பளிப்பகள் சமாதானம் செய்வதற்கும் ஒரு யுக்தியா?
உண்மையான அன்பினால் தருவதா?பின்பு திரும்பி ஒரு நாள் வேற
வழியில் வரும் அதனாலா?கடமைக்கு தருவதா? எப்படி புரிந்து கொள்வது.....

அன்பளிப்புகள்.. அன்பு பழிப்புகள், அன்பழிப்புகள்.. இப்படி நிறைய வகை இருக்கே சரண்யா!!!

எல்லோரையும் அளக்க ஒரே அளவுகோல் இல்லை.. அன்பளிப்புகள் என்பவை ஒரு அடையாளம் அவ்வளவே! கொடுக்கிறவரை நினைவு வச்சுக்கணும் என்பதும், வாங்கினவர் கடன்பட்டவர் என்பதும், மரியாதை நிமித்தம் என்பதும், சமாதானத் தூது என்பதும், சும்மா கடமைக்கு என்பதுவும் அவரவர் கண்ணோட்டம் அவ்வளவுதான்.

ஏன் கோடுத்தோம் என்ற உண்மையான காரணத்தை ஒரு சிலர் தவிர யாரும் அவர்களாக சொல்லப் போவதில்லை.
அன்பளிப்புகள் நினைவுச் சின்னங்கள் என்ற மட்டில் இருந்து விட்டுப் போகட்டும்.

கொடுத்தவர் மறந்த அன்பளிப்பே சிறந்த அன்பளிப்பு ஆகும்.
அன்பளிப்புகளை புரிந்து கொள்ளாமல் இருப்பதே மிகவும் நல்லது. பல சிக்கல்களில் சிக்காமல் இருக்க அது உதவும்.

Saturday, December 12, 2009

பதில் கிடைத்த சில கேள்விகள்...(2)

2]பணத்திற்கும் மதிப்பிற்கும் சம்மதம் உண்டா
மதிப்பு யாருக்கு அளிக்கப்படுகிறது?
மதிப்பும் மரியாதையும் பிண்ணப்பட்டுள்ளதா?

பணம் உருவாக்கப்பட்டதே மதிப்பை அளவிடத்தானே சரண்யா!!!

ஒரு பொருள் எவ்வளவு எளிதில் கிடைக்கிறது? அது நமக்கு எவ்வளவு முக்கியமாய் தேவைப்படுகிறது? இவை இரண்டும் ஒரு பொருளின் மதிப்பிற்கான அளவுகோல்கள். இவை பணம் என்ற அலகினால் அளக்கப் படுகிறது.

பொருளின் மதிப்பை அளக்க உண்டாக்கப்பட்ட பணம், அதை வைத்திருப்பவனின் மதிப்பையும் அளக்க உபயோகப்பட ஆரம்பித்தது.. ஆனால் அதை எப்படி அளந்தார்கள் என்பதை புறநானூற்றில் அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். ஒருவரிடம் உள்ள பணம் மற்றவர்களுக்கு எந்த அளவு பயன்படுகிறதோ அந்த அளவிற்கு அவருக்கு மதிப்பு உண்டாகிறது.

மதிப்பு என்பது பணத்தைப் போல மனிதருக்கும் உபயோகம் உள்ள அளவிற்கே அளிக்கப்படுகிறது.

தெண்ணீர் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;

ஆவும் மாவும் சென்றுணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும்,

மதிப்பு என்பது உள்ளூர உள்ளது, மரியாதை என்பது அதைச் செயலில் வெளிப்படுத்தல் ஆகும். மதிப்பை கொண்டிருக்கிறோம். மரியாதை செய்கிறோம்..

பணத்திற்கும் மதிப்பு மரியாதைக்கும் சம்பந்தம் உண்டு, ஆனால் பணம் மட்டுமே மதிப்பு மரியாதைக்குக் காரணம் அல்ல. உபயோகமாக இருக்க இன்னும் பல வழிகள் இருக்கின்றன.

Friday, December 11, 2009

குட்டீஸ்...(9)


இப்போ அழைத்தது......அப்பாவின்......அப்பாவே தான்.."என்ன பத்து நிமிடமாக கைப்பேசியில் அழைத்தும் பதில் இல்லையே...மருமகளும் கைப்பேசி எடுக்காமல் இருப்பதால்... தொடர்ந்து அழைத்திருக்கிறார்" சந்தோஷினியின் தாத்தா...

"அப்பா...சொல்லுங்க பா"...என்றார் அருண்...
"என்ன பா எப்படி இருக்கிற"...என்று கேட்கிறார்...மகன் நலமாக இருக்க வேண்டும் என மந்தில் நினைத்துக் கொண்டே....

"நலமாக இருக்கிறேன் அப்பா..சந்தோஷினியிடம் விளையாடிக் கொண்டு..."
"ஒ அப்படியா...பேத்தி என்ன சொல்லுகிறாள்"....
"ஸ்கூல் சேர்த்தாச்சு பா..இன்றைக்கு தான் முதல் நாள் போக போகிறாள்..."
லதா எப்படி இருக்கிறாள் என நலம் விசாரிக்கிறார்..
பின் அம்மாவிடம் பேசுகிறார் அருண்....
அப்பா கேட்க்காமல் விட்டதை அம்மா கேட்கிறார்..
"ஏன் பா இவ்வளவு நேரம் போன் எடுக்க..."
"அதுவா..ஒன்றுமில்ல அம்மா...."
"சொல்லுப் பா..."என்று கேட்கிறாங்க...
அம்மாவிடம் சகஜமாக எல்லாவற்றையும் சொல்லும் அருண் சந்தோஷினியை காணாமல் தவித்ததை சொல்கிறார் அருண்...பின் அம்மா ஆறுதலாக நீயும் தான் இப்படி பலமுறை காணாமல் போகிவிடுவ....சாப்பிடும் போது உன்னை தேடி தேடி தான் கண்டுபிடிக்கணும்....சொல்லுறாங்க..
அருண் கொஞ்சம் கொஞ்சமாக புன்னகைத்து லதாவிடம் கொடுக்கிறார்..
லதா..கவலைப்படாத ம்மா என்று சொல்லி கைப்பேசியை வைத்து விடுகிறாள் பாட்டி..
என்னங்க நாம அங்க போயி பார்த்துவிட்டு வந்திடுவோம்...என்கிறாள் பாட்டி தாத்தாவிடம்...
மறுப்பேச்சு பேசாத தாத்தா சந்தோஷினியை பார்க்கும் ஆவலில் இருவரும் கிளம்புகிறார்கள்...

இங்கே சந்தோஷ்னியை ஸ்கூல் கிளம்ப தயார் செய்கிறாள் அம்மா லதா..
அருண் ரெடியானவுடன் மூன்று பேரும் சந்தோஷினியின் பள்ளிக்கு போகிறார்கள்..
முதல் முறை அல்லவா...சந்தோஷினி கிட்ட அம்மா இங்கே உட்கார்ந்திருக்கேன் குட்டிமா..நீங்க உள்ள போயி படிச்சுட்டு வா ம்மா என்றாள்...
ஒன்று அறியாதவளாய்..தலையாட்டினாள்...
உள்ளே செல்லும் அழகை இருவரும் பார்த்து ரசிக்கின்றனர்...

சின்ன சிட்டு ஒன்று
செல்ல சிட்டு தான்
பள்ளி செல்லும் அழகு
பார்த்து கொண்டே கண்கள்

ஆவலாய் உள்ளே செல்லும்
ஆனந்தத்தில்...குட்டிமாக்கூடவே
செல்கிறது அவர்களின் மனமும்....

(தொடரும்)

Monday, December 7, 2009

பதில் கிடைத்த சில கேள்விகள்...(1)

நம் எல்லாருக்குமே ஒரு சில கேள்விகள் மனதில் தோன்றும் அதை நாம் கேட்டு தெளிவு பெற்றிருப்போம்...அப்படி நான் தமிழ்மன்றத்தில்
கேட்டதில் திரு தாமரை செல்வன் அண்ணா அவர்கள் சிறப்பாக ரொம்ப பொறுமையோட அதே சம்யம் தேவைப்படும் இடத்தில் விளக்கமாகவும் பதில் அளித்தார்கள்...அதை நான் இங்கு உங்களோட பகிர்ந்து கொள்கிறேன்...
தமிழ் மன்றம் நம்மை மேலும் வளர்க்க செய்கிறது...இங்கு நம் பதிவை நாம் எழுதியதாக இருப்பதால் நம்முடைய திறமை மேலும் வளர்க்க படுகிறது...இங்கு அனைத்தும் கதை,கவிதை,கணினி பற்றிய தகவல் எனக் கற்றுக் கொண்டவை ஏராளம்..மன்றத்தில் நானும் சேர்ந்ததில் ஒரு வாய்ப்பு எனக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி...
1]ஆத்திரம் அடையும் போது தவிர்க்க என்ன செய்வது?
ஏன் நம்மையே கட்டுபடுத்த முடியாமல் போகிறது.....
அதீத கோபத்தால் வருவது தான் ஆத்திரமா?
எடுத்தெரிந்து பேசுவது தான் ஆத்திரமா?
தனக்கு ஏதும் நடக்கவில்லை என்பதால் வருவது பொறாமையா? ஆத்திரமா?

அ) கோபத்தின் அடிப்படைக் காரணம் இயலாமை. இதை மனதிற்குள் அடிக்கடிச் சொல்லிப் பதிய வைத்துக் கொள்ளுங்கள். கோபம் வருவது குறையும்.

கோபம் வரும்பொழுது இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. பயம் அளவு மீறிப்போய் அட்ரினலும் எக்கச்சக்கமாய் சுரக்கிறது. இதனால் ஒரு போதை கூடிய நிலைக்குப் போய் விடுகிறோம். மூளைக்கு இரத்தம் செல்வது குறைந்து போகிறது. இதனால் சிந்தனை மழுங்கி விடுகிறது. நமது கட்டுப்பாட்டை இழந்து விடுகிறோம். அனிச்சை செயல்களே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

இதனால் உண்டாகும் பின்விளைவு தான் ஆத்திரம். திட்டுதல், அடித்தல் இன்னபிற கோபத்தின் வெளிப்பாடாகிய ஆத்திரம்.. எல்லாவற்றிற்கும் அடிப்படை இயலாமை என்ற தாழ்வு மனப்பான்மைதான்.

ஆளுமை மனப்பான்மை கொண்டவருக்கும் தாழ்வு மனப்பான்மை உண்டு.. அதைத்தான் அவர்களின் கோபமும் காட்டுகிறது. எப்போதெல்லாம் நான் என்ற அகந்தைக்குச் சவால் வருகிறதோ அதை எதிர்கொள்ள இயலாத போது அவர்களுக்குக் கோபம் வரும்.

ஆ)சில நேரங்களில் எதைப்பற்றியுமே சிந்திக்க முடியாமல், மூளை ஸ்தம்பித்துவிடுகிறதே....இந்த வெறுமையை எப்படி சமாளிப்பது....


சிந்திக்க முடியலையே என்பதே ஒரு சிந்தனைதான்.

உங்களுக்கு கொஞ்சமும் நம்பிக்கை ஏற்படுத்தாத, சிறிதும் ஆறுதலைத் தருவதான எந்தச் சிந்தனையும் வரவில்லை என்பதுதான் நிஜம்.

காரணம் படபடப்பு, கோபம், பயம் இதைப் போல பல உணர்வுகள்...

முதலில் வெளியே வாருங்கள்.. (ஓடும் டிரெய்னில் இருந்தால் என்ன செய்யறது.. சரி இருக்கும் இடத்தை விட்டு சற்று வசதியாக மாறிக் கொள்ளுங்கள்). கண்ணில் தென்படும் 5 விஷயங்களின் நல்லது என்ன கெட்டது என்ன என்று யோசியுங்கள்..

இப்படி ஒரு ஐந்து நிமிஷம் பத்து நிமிஷம் செலவிட்டு விட்டு அப்புறம் சிந்தியுங்கள் போதும்.

இ)கோபத்தை உடனடியாகக் குறைக்க என்ன செய்யலாம் ......


கோபத்தின் அடிப்படைக் காரணம் இயலாமை. இதை மனதிற்குள் அடிக்கடிச் சொல்லிப் பதிய வைத்துக் கொள்ளுங்கள். கோபம் வருவது குறையும்

நம்மைப் போன்ற மக்களுக்கு உடனடியாகக் கோபத்தைக் குறைக்க ஒரு வழி.. எதாவது ஒரு தாளை எடுத்துக் கொண்டு மனம் போனபடி கிறுக்கி விட்டு.. சிறிது நேரம் கழித்து சிறிது தண்ணீர் அருந்துவது.

முயற்சித்துப் பாருங்கள்.. கோபம் சடாரெனக் குறைவதைக் காண்பீர்கள்..கொஞ்சம் கோபம் தணிந்த உடன் ராஜாவின் ரவுசு பக்கம் ப்டித்தால் கோபம் சுத்தமாப் போயே போச்சு.

இங்கே கோபத்தை கட்டுப்படுத்த வழி சொல்லி இருக்கிறேன்..

தனக்கு எதுவுமே நடக்கவில்லை என்பதால் முதலில் எழுவது ஏமாற்றம். ஏமாற்றங்கள் அதிகரிக்கும் போது இயலாமை மேலோங்கி கோபமாகிறது.

Saturday, December 5, 2009

ஆதியந்தக் கவிதை - சவாலுக்குத் தயாரா?[6]

வாசி நீ
நல்லதை
மட்டுமே...
புரிந்து வாசி
மதிபெண்ணல்ல
வாசித்தால்...
வாழ்வின்
நிதர்சனம்...

ஆம் என்று சொல்வது
உண்மையை ஏற்பது
இல்லை என்று சொல்வது
உண்மை அல்லாதது என
எடுத்து கொள்வதே இல்லை
மறுப்பதும்,மீறுவதும்
என்பது உரைப்பது
ஏற்கக்கூடிய ஞாயமோ?

என்றும் தரிசனம்
கிடைக்க காத்து
வாழ்வின் இன்பம்
துன்பம் எல்லாம்
இறைவன் அளிக்கும்
நிதர்சனம் என்றே...

இன்று... என்பது
தான் நம்பிக்கை
என்று...என்பது
நம்பிக்கையின்மை
வாழ்க்கை என்ற
கையை நம்பிக்கை
என்ற கையில்....

அறிவேன் என்பது
நம்பிக்கையில் வருவது
அறிந்தவுடன் மறப்பது
அறியாமையா..
இயலாமையா...
அறிவில்லாததா...
இயல்பானதா...

முடிவதில்லை என்ற
எண்ணமில்லை என்பதே
வாழ்வின் சாதனைகளை
பல சாதிக்க இயலுமோ

Thursday, December 3, 2009

ஆதியந்தக் கவிதை - சவாலுக்குத் தயாரா?[5]

இந்த போட்டியில் உதித்த சில எண்ணங்களின் யதார்த்தம்....இங்கு பகிர்ந்து கொள்கிறேன்....

நானிலத்தில் போற்றி கொண்டு
வாழ்ந்தாலும் உன்னை வந்து
அடைவதே சொர்க்கம் என்றும்
பேரானந்தம் என்றும் முழுமை
பெறுகிறது இந்த ஜீவனா...

நீ இருப்பதால் தானே
நான் உயிருடன் உள்ளேன்
நீ சென்று விட்டால் நானோ
ஓன்றுமில்லை மூச்சே!
என்னுள் இருந்து திணற
வைக்காதே என்னையே...

ஈசனே நீ இங்கு பிறவி
எடுத்தாலும் இன்பமும்
துன்பமும் மாறி மாறி
வருமா உமக்கும் அந்த
சுழற்சியில் வேதனை
தெரியுமா என்றுமே
சுயநலத்தோடு வாழும்
வாழ்வு என்ன வாழ்வோ...
என்று முடியும் இந்த
வினை விதி தலையெழுத்து....

அவர் வருவார்
நல்வரம் தருவார்
மனதை மாற்றுவார்
நம்பிக்கைத் தருவார்
ஏற்றத்தில் புகழாரம்
பாடுவோர் பெறுவார்
என்றே எண்ணுகிறேன்

கால்களைப் பற்றிட
மன்னிப்பு கிடைத்திட
நன்மை நடந்திட
ஒழுக்கமாய் மாறிட
வியப்பை அளித்திட
மனம் மாறும் மனிதம்

உயிர் வாழ மட்டுமே
இத்தனை செய்கை
சரியா?தவறா?
என்ற எந்த சலனம்
இல்லையே....
பணம் வந்தால்
மாறிடும் மனம்
இந்த குணத்தை
சேர்த்து இழுத்து
சென்று விடுகிறது

பூமி என்ன செய்தது
மனிதனால்...
உருவாக்க முடியாத
இயற்கையை..
ஏன் ?அழிய வேண்டும்
நல்லது அல்லாதது
அழியட்டுமே...

Wednesday, December 2, 2009

சில நிமிடங்களில் உதித்த கவிதைகள்(7)......


தெளிவாக்க இயலுமோ
பெண் என்பவள்
புகுந்த வீட்டிற்கு

சென்றவுடன் பெரியதாய்
மாற்றம் அடைவது
பொறுப்பில் வந்ததா...
மனமாற்றத்தால் வருவதா...
இயல்பானதது தானோ...
சமுகத்தின் நியதியோ...



உள்மனதின் உயர்ந்தே
உறவுகள் இருக்கிறதே
உள்ளமதை புரிந்தே
உண்மைதனை உரைத்தே
உரிமையால் பெற வைத்தே
உங்கள் மனம் என்றுமே...
உள்மனம் இறைவனுக்கும்
நன்றி சொல்லுமே!

Monday, November 30, 2009

குட்டீஸ்...(8)

குட்டீஸ்...(8)





குட்டிமா... அங்க..கட்டிலின் அடியில்....தன்னுடைய வண்ணமயமான பந்து உருண்டோடுயது..... அங்க லதாம்மா காலி அட்டைப் பெட்டிகளை வைத்திருந்தார்கள்...
அதில பந்து உள்ளே சிக்கி கொண்டது...குட்டிமா கட்டில் அடியில் செல்லும் போது வேற ஒரு பெட்டியில் குட்டிமாவோட கால் பட்டதில் பின் பக்கமாக அந்த பெட்டி குட்டிமாவை மறைத்ததால் அப்பா அருண் தேடும் போதும் அவள் அப்பாவின் கண்ணில் படவில்லை....அவள் இவர்களின் குரல்களை கேட்டும் பந்து எடுக்கும் ஆவலில் உள்ளே கையை நீட்டிக் கொண்டு எடுக்க முயற்சிக்கிறாள்...வண்ணங்களில் மனம் சென்றது குட்டிமாவிற்கு....

அப்பா...."எங்க போகி இருப்பா?"...என்ற யோசனையில் இருக்கிறார்...
அம்மா..."பெற்றவளாச்சே....அப்படியே காணாத சந்தோஷினியை நினைத்து அறையின் வெளிச்சுவரில் சாய்ந்து உட்கார்கிறாள்".
பந்தை முயற்சித்து எடுக்க முடியாத குட்டிமா..இப்போ உள்ளே சிக்கியவுடன் அம்மா....என்று குரல் கொடுக்கிறாள்....

அவ்வளவே...லதாவின் கண்கள் பளிச்சிட்டது...
ஓடோடிதேடுகிறாள்..என்னங்க...பாருங்க..எங்க.... "குட்டிமா.... எங்கடா இருக்க..."என்று ஆவலாய் கேட்கிறாள்.
என்ன பார்த்தாய்..நீ என கேட்கிறார் அருண்....
நீங்களும் தானே பார்த்தீங்க...என சொல்ல முடியுமா...அமைதியாய் இருந்தாள்..குட்டிமா என்பது மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது....
பின் அவளை அட்டை பெட்டிகளில் இருந்து விடுவித்த அப்பா அம்மா இருவரும் குட்டிமாவை அணைத்து கொஞ்சுகின்றனர்...தேடி அலைந்த சில நிமிடங்கள் எனினும் குட்டிமா...கிடைத்த சந்தோஷத்தில் பஞ்சாய் பறந்தது...

லதாம்மா....."உன்னை யாரு இங்கெல்லாம் போக சொன்னா.."எனக் கத்த தொடங்குகிறாள்..குட்டிமாவிடம்...
அதற்கு... "சரி விடு" என்று அப்பா சொல்கிறார்...

அப்பா..அப்ப அப்ப..இப்படி சந்தோஷினிக்கு சப்போர்ட் பண்ணுவதால் அவளின் மனதில் பெரிதும் இடம் பிடித்து விடுகிறார் அருண்.

இவளை தேடியதால் நேரம் சென்றது..என புலம்பிக்கொண்டே தன் வேலையை தொடங்குகிறாள்....எனினும் மனதில் எல்லா இறைவனுக்கும் நன்றி சொல்லுகிறாள்....

லதா தன் கண்வரிடம் என்னங்க....நாம இன்றைக்கு கோவில் சென்றுவிட்டு வந்திடலாம் என்கிறாள்...
ம் ..ம்...என்று சொல்லிக்கொண்டே குட்டிமாவை தூக்கி விளையாடுகிறார்...
சரி போங்க...கிளம்புங்க....மணி ஆயிடுச்சு...வா குட்டிமா....கிளம்புவோம் என்று
அழைக்கும் போது...அப்பாவின் கைப்பேசி அழைக்கிறது...

நடந்த இந்த அமளியில் கைப்பேசியை கவனிக்காத அப்பா...அதில் பார்த்தால் அத்தனை கால்கள் குவிந்துள்ளது.... இப்போ அழைத்தது......அப்பாவின்......

(தொடரும்)

Wednesday, November 25, 2009

சில நிமிடங்களில் உதித்த கவிதைகள்(6)......

எல்லாரும் உலக மக்கள்!
எல்லாரும் அன்பின் மக்களாய்
எம் பாரதத்தின் மக்களாய்
என்றுமே உயர்ந்து வாழ்க!



முயற்சி செய்! ழை!
சேமித்து வை!உதவு!
உயர்வு பெற!உன்னாலே!
வாழ்த்துகள்!சிறக்க..



உழைப்பும் ஈடுபாடும்
ருந்தும் வாய்ப்பும்
சிபா
ரிசும் அவசியம்
என்றே தோன்றுகிறது

திறமையால் வெற்றி
வருவ
து உறுதியே
ஆனால் வாய்ப்பு

கொடுப்பது எங்கே?



மின்னல் கீற்று
ஓவியத்தில் தீட்டு
மின்னி மின்னி
கண்களை கூச
வைக்கும் அது
கருப்பில் வெள்ளை

தோன்றுவதிலும் அழகு!



நினைவுக்கு வந்துவிட்டால்
பரிட்சையில் மதிப்பெண்
பார்த்தவருக்கு மதிப்பு

பழகியவரிடம் சிறப்பு

நன்றியில் உயர்ந்து
தவற்றை மறந்து

நினைவலைகளில்

புகைப்படமும் பேசுமோ?

Sunday, November 22, 2009

சில நிமிடங்களில் உதித்த கவிதைகள்(5)......

என்றும் அருகிருந்து
எதுவுமே பேசாமல்
அதுவும் வெளிச்சத்தில்
கூடவே வருகிறாய்
சில நேரம் பெரியதாய்
பல நேரம் சிறியதாய்
உன்னிடம் பிடித்தது
என்னிடம் மட்டுமல்ல
அனைவரிடமும் நீ
கருப்பாய் தெரிவது
நிறம் மாறாமல்
இருப்பது நிழலே...

என் மௌனத்தை
பல அர்த்தங்கள்
பொதிந்துள்ளதை
உண்ர்ந்து கொள்ள
மட்டுமே இயலும்..
வார்த்தையால் அல்ல..

உன் புன்னகையில்..
யதார்த்தம் இருந்தாலும்
என் புன்னகையை
வெளிக்காட்டியது
மழலையின் அன்பால்..

விலகி சென்றது
சூழ்நிலையால்
நட்பு என்றதும்
மாற வாய்ப்பு
இல்லையே...

நல்லாரைப் போற்ற
நல்ல மனசு வேண்டும்
நல்லெண்ணம் வேண்டும்
நல்ல நட்புவட்டம் வேண்டும்
நல்ல சுற்றமும் பெற வேண்டும்
நல்லது அல்லாதவை விலக வேண்டும்

Saturday, November 21, 2009

குட்டீஸ்...(7)






குட்டீஸ்...(7)
மறுநாள் காலை...
குட்டிமா ஸ்கூலில் ஒரு வாரத்திற்கு ஒரு 11:00 மணிக்கு வந்து அழைத்துக் கொள்ள சொல்லி இருந்தார்கள். அதனால் அங்கே இருந்து குட்டிமாவை அழைத்து வந்திடலாம் என்பதே லதாவின் எண்ணம்.ஆகையால் வீட்டு வேலைகளை அவசரமாக செய்து கொண்டிருந்தாள்.

அப்பா அருண் எப்பொழுதும் போல தூங்கும் குட்டிமாவை கொஞ்சிவிட்டு......நாளிதழ் படிக்க உட்கார்ந்திருந்தார்....
லதா காபியை கொடுத்துவிட்டு குட்டிமாவை எழுபினிங்களா...என்று கேட்டுக் கொண்டே.....சமையல் அறைக்கு சென்றாள்...

ம்..நல்லா தூங்கிறா..கொஞ்சம் நேரம் தூங்கட்டும்...குரல் கொடுத்தார்...
இல்லங்க எழுப்புங்க சரியா இருக்கும் என்று சொல்லிக்கொண்டே வேலையைப் பார்த்து கொண்டிருந்தாள்.
வேலையை பார்த்துக் கொண்டே...சற்று..குட்டிமாவிற்கு டிரஸ் எடுக்க உள்ளே சென்றாள்.அங்கு குட்டிமா இல்லை....அப்பாவிடம் உட்கார்ந்திருப்பாள் என எண்ணிக் கொண்டிருக்கும் போதே குக்கர் சத்தம் போட ..கிட்சன் சென்று அடுத்து செய்ய வேண்டியதை செய்தாள்.....
அப்பா அருண் பால்கனியில் கைப்பேசியில் பேசிவிட்டு....குட்டிமா அம்மாவிடம் இருப்பதாக நினைத்துக் கொண்டு அலுவலகத்திற்கு ரெடி ஆகிறார்...

குட்டிமா.... என்று அழைக்கிறாள் அம்மா லதா..
வா மா...குளிக்கலாம்...ஸ்கூல் போனும் ல....

சந்தோஷினி உள்ளே இல்லை..
அருணிடம் கேட்கிறாள்..எங்க குட்டிமா...
இல்ல அங்க தூங்கலயா....இல்லயே அப்பவே..இல்ல..நான் உங்களிடம் இருப்பதாக நினைத்தேன்.....முதல இந்த செல்போன பேசுவது நிறுத்துங்க...
பொன்னு எங்கன்னு தெரியாம அப்படி என்ன பண்ணிங்க...என்று கேட்கிறாள் லதா...

சரி சரி உடனே என்கிட்ட வந்திடு,,,,அவ எங்க அத பாரு...என்றார் அருண்...
இருவரும் தேடினர்..லதா....அங்க... இங்க சென்று பார்க்கிறாள்...
உள் அறையில்....வெளியில்...கிட்சனில்...என பரபரப்பாக இருந்தது நொடிகள் கூட அங்கே....
என்ன ஆச்சு ங்க எங்கே குட்டிமா...என்று லதா....அம்மாவிற்கே உரியதாய்..சற்று கலங்குகிறாள்....
அப்பா தேடிகிறார்..இன்னொரு முறை....குட்டிமா....என்றே.....
மாடிப்படியில் மேலே..கீழே என எல்லா இடமும் தேடினர்.....
ஆனால் குட்டிமா கிடைக்கல...

அப்பாவிற்கு ஒன்றுமே புரியுல....அம்மா லதாவோ....அழத்தொடங்குகிறாள்.....
ஓடி ஓடி தேடினாலும் யாரிடமும் சொல்லவில்லை....
குட்டிமா......அங்க...
(தொடரும்)

Tuesday, November 17, 2009

கவிச்சமர்....(2)

மூட நம்பிக்கைகள்..
சில நேரத்தில்
வேற்றுமை எண்ணத்தை
வலுவடைய செய்யும்
சில நேரத்தில்
அனுபவத்தால் மட்டுமே
உணர்ந்து கொள்ள
வாய்ப்பாக அமையும்
வலிமையோ
வாய்ப்போ
நம்பிக்கையை கைவிடாதே

கைவிடாதே.....

தன்னை நம்பி வேலைத்தேடி
வந்தவரை...
உதவி செய்யாவிட்டாலும்
அலட்சிய படுத்தாதே...
கைக்கொடுத்து தூக்கி விட
வழி செய்வாய்..
வாழ்வில் உன்னால் ஒரு
ஜீவன் வாழட்டும்...

அன்பு
என்பது
பணம் என்ற
மூன்று எழுத்தில்
சென்று விட்டது
அதனை மீட்க
மனம் என்ற
வாயில் திறக்கும்
என்ற நம்பிக்கை

குட்டீஸ்..(6)






குட்டீஸ்...(6)
அங்கே....பார்த்தால்...

சந்தோஷினியை நோக்கி ஒரு பார்பிஃ (barbie) பொம்மை பாட்டு பாடிக்கொண்டே நகர்ந்து வந்தது...
அங்கே... பொம்மைகள் பல விதத்தில் தொடர்வண்டியில் நகர்வதை பார்த்தாள்....



மிஸ் சந்தோஷினியின் கையில் ஒரு கயிறு இழுக்கும் பொம்மையை உள்ள கயிற்றை கொடுத்து இழு என்றாங்க...சந்தோஷினிக்கு அங்கு உள்ள அனைத்துமே புதுசாக இருந்தது...அம்மாவை பார்த்தாள்...லதாம்மா...இழு குட்டிமா..என்றாள்.

சட்டத்தில் மணிகள் வரிசையாக உள்ளதை வண்ணமயமாக இருக்கவும்..குட்டிமா..அதை தொட்டு பார்த்தாள்..பின்பு...லதாம்மா நாளைக்கு வருவோமா...என்று குட்டிமாட்ட கேட்டாள்..
ம்..ம்ம்... என்று மழலைக்கே உரித்தான அழகாக தலையை ஆட்டினாள்...
அவளுக்கு தெரியாது நாளை அம்மா வரமாட்டாங்க என்பது.

மிஸ்...இதுவெல்லாம் உள்ளே விளையாட வைப்பது(indoor games)...அங்க வெளியில விளையாட வைப்பாங்க (outdoor games) ground இருக்கு..பாருங்க...
.
அங்க பார்த்தால் ஊஞ்சல்;ராட்டினம்;சறுக்குமரம்(see-saw;slide; swing; merrygo round;) எல்லாம் இருந்தது...
அப்பா அங்கே இருந்தாங்க..அம்மாவும் அப்பாவுக்கும் ஒரு த்ருப்தி குட்டிமாவை ஸ்கூல் சேர்த்து விட்டதால்...
அவர்கள் அறியவில்லை இவையெல்லாம் சில நேரம் மட்டுமே உபயோகிக்கப்படும்...வரிசையாக வகுப்பறையில் உட்கார வைத்து மனப்பாடம் என்கிற பாடம் என்பதே இப்போது உள்ள கல்வி முறை ஆகிவிட்டது...

மிஸ்..வேற ஒரு மிஸ் சொல்லி தருவாங்க..உங்க பாப்பாவுக்கு..சாப்பிட snacks மற்றும் தண்ணீர் மட்டும் கொடுங்க...அப்பறம் சொல்லுவாங்க...என்று அந்த பள்ளியின் வழக்கத்தை கூறினாங்க...
சிரித்து கொண்டே..விடைபெற்றாள்..சந்தோஷினி....மிஸ்...பார்த்து கொண்டே அடுத்த பெற்றோரிடம் சென்று விட்டாங்க...
இப்போ சந்தோஷினி தன் வசமில்லை வேடிக்கை பார்த்து கொண்டே...அம்மாவின் சேலையை பிடித்து கொண்டு நடந்தாள்.

அருண் மற்றும் லதா அப்படியே விடைபெற்றுக்கொண்டு வெளியில் வந்தனர்.
அப்பாவிற்கு அலுவலகத்து போகும் நேரம் என்பதால்..அவசரமாக விடைபெற்று சென்றார்..
பின் சந்தோஷினியை தூக்கிக்கொண்டு லதாவும் பக்கத்தில் இருந்ததால் நடந்தே சென்றாள்.

வீட்டிற்கு வந்ததும் பாட்டி தாத்தாவிடம் தொலைப்பேசியில் பேசினாங்க...
ஸ்கூல் சேர்ந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டாள்..லதா..குடும்பத்தாரிடம்..
குட்டிமா... அப்பா வந்தவுடன் புது டிரஸ் பஃக் வாட்டர் பாட்டில் எல்லாம் வாங்க போலாமா...என்றே சந்தோஷினியிடம் பேசிக்கொண்டே வேலையை பார்த்தாள்.

அப்பா அருண் அங்கே ஸ்கூல் சென்றதால் தாமதம் ஆனதை மேல் அதிகாரியிடம் விளக்கி விட்டு தன் சீட்டில் நிம்மதி பெருமூச்சு விட்டு அமர்ந்தார்..

மறுநாள் காலை...
(தொடரும்...)

Monday, November 16, 2009

குட்டீஸ்...(5)

குட்டீஸ்...(5)

அந்த பள்ளியில்...சேர்ந்தவுடன்...சிலர்...
பழங்கால முறைப்படி....பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் தட்டில் பழங்களை வைத்துக் கொடுத்து...முறைப்படி சேர்ப்பவரும் உண்டு...

பள்ளியில் சேர்ந்தவுடன்...ஒரு சில இடங்களை அன்று மட்டும் பார்க்க அனுமதி அளிக்கும் பள்ளியின் நிர்வாகம்...

அப்படி உள்ளே செல்ல ஆவலுடன் காத்திருந்தனர்....சந்தோஷினியின் குடும்பம்..
அப்பா அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தவுடன்...கொஞ்சம் நேரம் அவகாசம் கேட்டார்...பின் லதா..நான் ஆபிஸ் போகிறேன் நீயும் குட்டிமாவும் ஆட்டோல வீட்டுக்கு போங்க..என்றார்...
சரிங்க...ஒரு ஐந்து நிமிடம் பார்த்துவிட்டு போங்க...என்றாள்...
காத்திருந்தனர்...மூன்று நிமிட இடைவேளைக்குள் உள்ளே அழைத்தனர்...

அங்கு அரிசியை ஒரு தட்டில் வைத்திருந்தனர்...கடவுளின் படம் அலங்கறிக்கப்பட்டு இருந்தது..முதன் முதலில் பள்ளி துவங்கிய இடம் என்று..அந்த இடத்தில் தான்.... உயர்வு பெற்றதால் ராசி என்றும் அங்கு தான் அழைத்து சென்றனர்...

சந்தோஷினிஅப்படியே பார்த்து கொண்டே இருந்தாள் ...இங்க வா மா...என்று ஒரு
மிஸ் அவளை அழைக்க....சந்தோஷினி மடியில் அமர்த்தி கொண்டு...எழுதுவோமா...என்று சொன்னாங்க...
சந்தோஷினி சிணுங்கி கொண்டே....
அம்மா... அப்பாவை பார்க்கிறாள்...
அப்பா..அங்க பாருமா..என்றாள்...
அம்மா..குட்டிமா..எழுதிருங்கிளா...ம்..ம்...

என்னவென்றே தெரியாமல் பார்த்து கொண்டிருக்க.... மிஸ்.. குட்டிமாவோட... விரலை பிடித்து...அ போடுவோமா.....என்று அரிசியில் போட்டாங்க...
அவளின் பெயரையும் எழுதுங்க...என்று லதாம்மா கேட்டு கொண்டதையும் எழுதினாங்க.....

அந்த காலத்தில பண்ணுவாங்க...அதுனால ஒரு சாஸ்திரத்துக்காக தான்....என்று சொன்னாங்க....சரி வாங்க.... அங்க.....என்று உள்ளே கைக்காட்டி....அங்க போயி விளையாடுலாமா...என்று கேட்டாங்க....
குட்டிமா சந்தோஷினிக்கிட்ட ....குட்டிமாவும் தலையாட்ட.....

உள்ளே சென்றார்கள் மிஸ்,குட்டிமா, லதா...எல்லாரும்...
அப்பாவிற்கு அழைப்பு வந்தது...கைப்பேசியில் பேசி கொண்டிருக்க...

அங்கே....பார்த்தால்...

(தொடரும்)

Sunday, November 15, 2009

சும்மா...



சும்மா...
இந்த சும்மா என்ற வார்த்தை நம்மிடம் பழகும் பல நபர்களும் நாமும் உபயோகிக்கப்படும் வார்த்தை தான்..
சும்மா ஒரு முறைப் பார்ப்போம் எங்கெல்லாம் இந்த சும்மா வருகிறது என்று...

இல்ல இந்த வழியா வந்தேன்... அப்படியே சும்மா உன்னை பார்த்திட்டு போலாம் என்று தான்...
ஆமா..இப்போ நீ என்ன பண்ணுற...சும்மா தான் இருக்கேன்...
எல்லாம் தெரிந்தும் தெரியாததைப்போல கேட்க்கும் சிலர்...

காலையில அப்படியே சும்மா வாக்கீங் போவேன்...
அங்க நடந்து செல்லும் சிலரிடம் சும்மா பேசிட்டு வருவேன்..

திடீரென்று விருந்தாளி வந்து என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க...தொல்லை பண்ணிட்டேனோ...கேட்கிறார்...
இல்ல சும்மா...பேப்பர் படிச்சுட்டு இருந்தேன்..
சும்மா தொலைக்காட்சி தான் பார்த்திட்டு இருந்தேன்...

சரி வாங்க போவோம் சும்மா...என்ற இவைகள் ஒன்றும் பாதிக்காதவைகளாக இருக்கலாம்...
நம்மை பொறுத்த வரையில்....

சில கேள்விகளை திரும்ப திரும்ப கேட்கப்பட்டால்....வருத்தமே...

சும்மா தான் வந்தேன் என்றவரிடம்...ஏன்....எதற்கு.....என்ற கேள்விகள்...

ஏன் சும்மா இருகிறாய்... வேலைக்கு எங்கயும் போலயா...
காரணம் அறிந்தும் கேட்கப்படும் இந்த கேள்வி....

சும்மா தானே இருக்கிறாய்... செய்தால் என்ன...என்ற கேள்வி...

ஏதோ ஒன்று கேட்க வந்துவிட்டு சும்மா வந்தேன்.... நீ எப்படி இருக்கிறாய்....என்ற கேள்வியுடன் ஆரம்பித்து நீ சும்மா தான் இருக்கிறதா...கேள்விப்பட்டேன்..ஏன் என்னாச்சு...என்று பதில் அறிந்தும் கேட்கப்படும் கேள்வி...

எல்லோரும் ஏதோ ஒரு காரணமில்லாமல் இருக்க போவதில்லை..
நம்முடைய ஒவ்வொரு செயல்களிலும் ஏதோ ஒரு காரணம்....
சுயநலம்...பொதுநலம்...நிறைய....நம்மை அறியாமல் நாம் கேட்கப்படும் இவை மனதை பாதிக்கும் என்று அறியாமல் சொல்வதே...ஆகையால் தவிர்ப்போம்....இவைகளை...

சும்மா இருக்கிறாயா...என்று கேட்பது சுலபம்...ஆம் சும்மா தான் இருக்கிறேன் என்று சொல்வது வலி.
உணர்ந்து செயல்படுவோம்...உயர்விற்கு வழிக்காட்டுவோம்..
நன்றிகள்...

Friday, November 13, 2009

குட்டீஸ்(4)...

அங்கே இவர்கள் செல்லுவதற்கு முன்பே மூன்று பெற்றோர்கள் தலைமை ஆசிரியரை சந்திக்க காத்திருந்தனர்..
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ரொம்ப கண்டிப்பானவர் எனக் கேள்விப் பட்டிருப்பதை நேரில் பார்த்தனர்....அவரின் நடவடிக்கையில்....பள்ளி ஆசிரியர்கள் அவரிடம் பேசும் விதம்...அனைத்தையும் பார்த்துக் கொண்டு காத்திருந்தனர்.

இவையெல்லாம் பார்க்கும்படி செய்வதே அந்த பள்ளிக்கு பேரு கிடைக்கத் தான் என்பதை அறியாமல் காத்திருந்தனர்...

பின்பு தலைமை ஆசிரியர் பள்ளியின் வழிபாடு முடிந்தவுடன் வந்தார்....
சந்தோஷினியின் அப்பா கைக்கடிகாரத்தை பார்த்தார்....
அம்மா சொல்லி கொண்டிருந்தார்...குட்டிமா...உன்னோட பெயர் கேட்டா...அழகாக சொல்லணும் என்று......பேசி கொண்டிருந்தாள்...சந்தோஷினியிடம்....

சந்தோஷினியோ முதல் முறை என்பதால் சுற்றி பார்த்து கொண்டிருந்தாள்....தலையை ஆட்டிக்கொண்டே...
மற்ற குட்டீஸ் வந்ததையும் பார்க்கிறாள்...

முதலில் வந்த இருவரை உள்ளே அழைத்தனர்....
பின்பு இவர்களுக்கு முன்பு வந்த பெற்றோரையும் அருண் தம்பதியினரையும் உள்ளே அழைத்தனர்...

உள்ளே..இவர்களுக்கு முன் இருந்தவரிடம் பேசுவதை பார்த்து கொண்டிருந்தார்..
சந்தோஷினியின் அப்பா...அம்மா குட்டிமாவை பேசாமல் அமைதியாக பார்த்து கொண்டிருந்தாள்...
சந்தோஷினிக்கு இடம் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில்....காத்திருந்தனர்....

தலைமை ஆசிரியரிடம் குழந்தையின் சான்றிதழ் கொடுத்தவர் மேஜையின் மேலே கையை வைத்துவிட்டார்....அந்த அப்பா....தலைமை ஆசிரியர் அதை பார்த்தார் சான்றிதழை படித்து கொண்டே...அப்பா அந்த மகளை பார்த்து கொண்டிருந்தார் தலைமை ஆசிரியரை கவனிக்காமல்....

இதை சந்தோஷினியின் அப்பா கவனித்து விட்டார்....ஒன்றும் சொல்லமுடியவில்லை....மேஜை மேல் கை வைப்பது இங்கிதமில்லை என்று அவர் அறிந்திருந்தார்....

ஏதோ ஒரு காரணத்தை சொல்லி சற்று காத்திருக்க சொன்னார் அவர்களை....
பின் அருண் அவர்கள்... சந்தோஷினியை அறிமுக படுத்திவிட்டு தான் இந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும் தன் மகளை பள்ளியில் சேர்த்து கொள்ளுமாறு ரொம்ப தெளிவாக பேசினார் அப்பா அருண்....
கணவர் இப்படி சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதை முதல் முறையாக பார்த்து கொண்டுருக்கிறாள் அம்மா லதா...
தலைமை ஆசிரியர் சற்றும் தயங்காமல் சான்றிதழை பார்த்துவிட்டு...
ஹலோ....வாட் ஸ் யுவர் நேம் என்கிறார்....சந்தோஷினியை பார்த்து...
சந்தோஷினி தனக்கே உரிய பாணியில் மழலையோடு...சந்..தோ.ஷி..னி..என்றாள்..

குட்.....என்று சொல்லிக்கொண்டே....கைகொடுத்தார்...சாக்லேட் வழங்கினார்...
பின் அட்மிஷன் போட்டு கொள்ளலாம் என்று அப்பா அருணுக்கும் கைகொடுத்தார்...
"தஃங்கியு"..என்றார் அப்பா..."வெல்கம்" என்றார் தலைமை ஆசிரியர்...
பின் அப்பா அருணுக்கு அம்மா லதாவிற்கும் ரொம்ப சந்தோஷம்....நேற்று சென்ற அந்த கிளர்கிடம் அட்மிஷன் படிவத்தில் எல்லாவற்றையும் எழுதி கொடுத்துவிட்டு சேர்த்துவிட்டனர்...சந்தோஷினியை....

அந்த பள்ளியில்...சேர்ந்தவுடன்...சிலர்...

(தொடரும்...)

Tuesday, November 10, 2009

கவிச்சமர்....

உதித்த சில கவிதைகள்...
வெற்றியும் பெறுவோம்
வாழ்ந்து காட்டுவோம்
அகந்தை தவிர்ப்போம்
சாதனைகள் புரிவோம்
அமைதியுடன் இருப்போம்
என்றும் வெற்றி நமதே...
நமக்கு மட்டும் என்றானால்...
சுயநலம்
நம் அனைவருக்கும் என்றால்
பொதுநலம்
முதலில் இருப்பது மறைந்து
இரண்டாம் இருப்பது வளர்ந்தால்
நாடு முன்னேற்றம் அடையுமா?!
விலை?!
எல்லாவற்றிருக்கும்
விலையா?!
அன்பு
பாசம்
நட்பு
இவையெல்லாம்
விலைமதிப்பற்றவையே!
என் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள....!!!
அயராது பாடுப்பட
மேலும் உயர்ந்திட
முயற்சி செய்திட
முன்னேறி வாழ்ந்திட
இறைவன் இருந்திட
வெற்றியோடு தோல்வியும் சந்தித்திட
மனம் பக்குவமடைய
மீண்டும் நிரந்தரமாய் வெற்றியே....நிலைத்திட
கர்வம் அடையாமல் வாழ்வு இங்கு தொடரட்டும்.

Monday, November 9, 2009

குட்டீஸ்(3)...


மறுநாள் காலை...
அம்மா பரபரப்பாக தன் வேலையை செய்கிறாள்..தன் குழந்தை ஸ்கூல் செல்லுவது அம்மாவுக்கு பெரிய ஆவலாகவே உள்ளது....

அப்பா குட்டிமா தூங்குவதை பார்த்து மனசுக்குள்ளே.... இப்படி தூங்குபவளை பள்ளியில் சேர்க்க போகிறோமே..என்று எண்ணிக்கொண்டே வெளியில் வந்து எப்பொழுதும் போல நாளிதழ் படிக்க உட்காருகிறார்...
அப்பொழுது அவருடைய கைப்பேசி அழைக்கிறது...லதா எடுத்துட்டு வா மா.. என்றார்...
என்ன ங்க ஸ்கூல் போணும் உங்கள் அலுவலகத்திலையும் ஒரு மணி நேரம் அனுமதி வாங்குங்க...என்று கிட்சனில் இருந்து சொல்கிறாங்க அம்மா...

ம்..சரி ..சரி...என்று பிடிக்காத போல சொல்கிறார்..
என்றுமே வெகு நேரம் தூங்கும் சந்தோஷினியை பார்க்கிறாள் அம்மா...
கிட்ட சென்று....செல்..ல...ம்... செல்..லம்...இங்க பாருங்க.....என்றாள்...இன்னைக்கு ஸ்கூல் போகலாமா குட்டிமா.....
சந்தோஷினி ......ஒன்று அறியாமல்..மெதுவாக தன் வலது கைகளால் கண்களை துடைத்து கொண்டு...(அ)...ம்மா.....என்கிறாள்....
அதற்குள் அம்மா அலமாறியில் தீபாவளிக்கு எடுத்த சட்டைகளில் எந்த சட்டை போடலாம் என்று யோசிக்கிறாள்....ம்...குட்டிமா...புது சட்டை போட்டுகிட்டு போவோமா...என்கிறாள்...

அப்பொழுது கிட்சனிலிருந்து குக்கர் சத்தம் கேட்டு அம்மா...செல்கிறாள் அங்கே..குட்டிமா. அப்பாகிட்ட போங்க...என்று சொல்கிறாள் அம்மா...

மெதுவாக மெல்ல நடந்து அ...ப்...பா.. என்று சொல்லுகிட்டே வருகிறாள்...
வா....மா... என்று மடியில் அமர்த்தி கொண்டு...மெதுவாக நெற்றியில் உள்ள தலைமுடியை
விளக்கிவிட்டு...என்ன குட்டிமா..ஸ்கூல் போணுமா...தூக்கம் வருகிறதா..என்றார்..
அ.ப்..பா...
அவள் அதை கேட்காமல்... நாளிதழில் உள்ள படங்களை பார்க்கிறாள்....தட்டுகிறாள் அந்த படத்தின் மேலே....அதுவா...கம்பியூடர் குட்டிமா....என்றார்....சந்தோஷினி புரியவில்லை என்றாலும் தலை ஆட்டுகிறாள்....

பின்பு அம்மா கொடுக்கும் சத்ததில் அப்பா கிளம்புகிறார்...குட்டிமா...ஆசையாக அழைத்து கொண்டு...அம்மா ஒரு தேவதை போல அலங்காரம் செய்கிறாள்....

முடியே இல்லை தான் இருந்தும் டிரஸ் உள்ள கலரிலே அழகான பூக்கள் போல கிளிப் மாட்டி..கழுத்தில கைகளில்.. என சந்தோஷினி ரெடி ஆகிறாள்...

அம்மாவும் ஏதோ குழந்தை சேர்க்கும் ஆர்வத்தில் தானும் கிளம்பி.... செல்லுகிறார்கள்...ஸ்கூலுக்கு...

அங்கே....

தொடரும்...

Saturday, November 7, 2009

குட்டீஸ்(2)


ஒன்றுமே தெரியாதவர் போல ....அங்கே....அப்பா...என் மகளுக்கு 2 1/2 வயது தான் ஆகிறது.....சேர்க்கலாமா...என்றார்....

அம்மா....ஒரமாக ஒரு பார்வை பார்த்து விட்டு.....இல்ல... அவள்..நல்ல படிப்பாளா..தெரியுல...அதான்..இப்படி கேட்கிறாங்க...தயங்கி தயங்கி...சொல்லுகிறாள்... அம்மா..

ஒ..தாராளமாக..இப்ப எல்லாம் எவ்வளவோ முன்னேறிக் கொண்டு இருக்காங்க பசங்க....
2 1/2 வயதிலேயே ...படிக்கிற பசங்க எங்க பள்ளிக்கூடத்தில இரண்டு பிரிவு இருக்காங்க...

பொன்னு நல்ல பேச ஆரம்பித்துவிட்டாளா...பிறப்பு சான்றிதழ் நகலைக் (birth certificate -xexox copy)
கொண்டு வாங்க...
தலைமையாசிரியரை நாளை வந்து சந்தித்து அட்மிஷன் போட்டு கொள்ளலாம்...

இன்று நீங்கள் பார்க்க இயலாது....சார் மீட்டீங் ல இருக்காங்க...அதனால நாளை வாங்க...

நிச்சயம் அட்மிஷன் உண்டா...சந்தேகத்துடன் அப்பா கேட்கிறார்...

ம்... தலைமை ஆசிரியர் உங்களிடம் பேசுவார்...வரும் போது மகளையும் கூட்டிட்டு வாங்க...

கட்டணம் எவ்வளவு மேடம்...
அம்மா..தனக்கே உரிய பாணியில் எவ்வளவு இருந்தா என்ன ங்க..சேர்க்க தான போறோம் என்று
முணுமுனுக்கிறாள்...கணவனிடம்....வாங்க நாளை வருவோம் என்கிறாள்...

கிளர்க்...இந்தாங்க சார் உங்க மகளை சேர்க்க நீங்கள் எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை எழுதியிருக்கேன்....நன்றி மேடம்..நாளைக்கு வந்து பார்க்கிறோம்...என்றார்...

வெளியே வருகிறார்கள்...அங்கே மைதானத்தில் சின்ன சிறார்கள் விளையாடுவதை பார்க்கிறார்கள்...
மீனியல் அங்கு ஒரு சின்ன குட்டீஸுக்கு பால் ஆத்தி கொடுத்து கொண்டிருந்தாள்.
கேட்டுகிட்டிங்களா...
நாளை வர சொல்லி இருக்காங்க...தலைமை ஆசிரியர் சந்திக்க....
என்ன ..பால ஆத்திகொண்டிருக்கீங்க போல...ஆமாம் மா...இந்த குழந்தை காலையில சாப்பிடல அவுங்க அம்மா கொடுக்க சொல்லியிருந்தாங்க...பாவம்.மா..பிள்ளைக்கு பசி...துவண்டு போயிடுச்சு...அதான்....

சந்தோஷினியின் அம்மாவின் கண்களில் ஒரு மலர்ச்சி....ம்..இந்த மீனியல் தன் குழந்தையும் பார்த்து கொள்வாள் என்ற நம்பிக்கையில் மிளிர்ந்த பார்வை....

அங்கேயிருந்த குழந்தைகள் அழகாக வரிசையில் செல்வதை பார்த்தார்கள்...இது தான் இந்த பள்ளியின்
சீருடை போல...அழ்காக தான் இருக்கிறது...

நகர்ந்தார்கள்...ஏன் ங்க...நம்ம குட்டிமா..க்கு..இந்த ஸ்கூல் பிடிக்கும் ல...
ம்..ம்.வா..நல்லாத்தான் இருக்கிறது...இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் சொன்னா கேட்க மாட்ட...
அப்பறம் ..என்னையே கேளு...பிடிக்காததை போல அலுத்து கொள்கிறார் அப்பா..

ரொம்ப கனவுகளுடன் அப்பாவும் அம்மாவும் மெல்ல மெல்ல நகர்ந்து செல்கிறார்கள்..

ஸ்கூல் போனோம் குட்டிமா....பெரிசா...சூப்பரா..குட்டிமா..விளையாட நிறைய இருக்கு அங்க...
நாளைக்கு போவோம்....சரி குட்டிமா..அங்க உன்னோட பேரு கேட்பாங்கலே...
என்ன சொல்லுவிங்க....சந்தோசின்னி....இல்ல குட்டிமா...சின்னி இல்ல ஷினி மா...
சொல்லுங்க...சந்தோ....சினி...
இல்ல குட்டிமா... இங்க பாருமா...சந்தோஷினி.....
அம்மா ஆவலுடன் அவள் முகத்தை பார்த்து கொண்டிருக்க...அப்பா அவளை ஏன் இப்பவே படுத்தி எடுக்கிற...வரலன்னா விடு...அவளே பெரிசானா சொல்லிப்பா...
நீங்க வாங்க செல்லம்...குட்டிமா....அம்மு....
இருங்க ங்க சொல்லுவா...நாளைக்கு அட்மிஷன் கிடைக்க வேண்டுமே...
சந்தோ..ஷினி...சொல்லிவிடும் அந்த குட்டீஸ்....
அம்மாவின் முகம் மலரும்....அப்பா அங்கே எங்கையோ பார்த்து கொண்டு...சொல்லிவிட்டாள் என மனதிலே நினைக்கிறார்....பள்ளி செல்ல தயார் படுத்துகிறாள் தாய்.

மறுநாள் காலை.....

தொடரும்.....

Friday, November 6, 2009

குட்டீஸ்

தங்கள் திருமணத்திற்கு பின்பு பல நாட்கள் கழித்து.....தவமிருந்து பெற்ற குழந்தை தான் சந்தோஷினி..தங்களை மகிழ்விக்க பிறந்தவள்...தங்களுக்கு ஓர் அடையாளமாக..தங்களுக்கென உரிமை கொண்டாட...தாங்களும் பெற்றோர் ஆனதில் மகிழ்ச்சி அடைந்த தம்பதியனருக்கு தங்களை அங்கிகரிக்க
இந்த சுற்றத்தில்.....சந்தோஷினி அம்மா லதா வீட்டிலிருக்கிறார் தற்காலிகமாக ... அப்பா அருண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்...

சந்தோஷினி அம்மா....மகளுக்கு 2 1/2 வயது வரபோகிறது.பள்ளியில் சேர்க்க வேண்டுமே...என்ற எண்ணம் வந்தது.இத்தனை நாட்களாக வெளியில் என்ன நடக்கிறது எனத் தெரிந்திராத அம்மா.....

விசாரிக்க தொடங்குகிறார்....

எந்த பள்ளி நல்ல பள்ளி..
எதில் என் குழந்தை பாதுகாப்பாக இருப்பான்...
ஆங்கிலத்தில் சொல்லி கொடுப்பார்களா...
விளையாட விடுவார்களா...

இப்படி தெரிந்தவர் தெரியாதவர் எனக் காய்கறி விற்பவரில் தொடங்கி கணினி மையத்தை நடத்துபவர் வரை கேட்டு தெளிவு பெற்றாள்....

சரிங்க...நாம் இந்த பள்ளியிலே சேர்க்கலாம் என கணவரிடம் சொல்லுகிறாள்...

அப்பாவும் தன் பங்கிற்கு தன்னுடன் வேலைப் பார்ப்பவர் முதல் நட்பு வட்டம் வரை விசாரித்திருந்ததும் அதே பள்ளிக்கூடத்தின் பெயரைத் தான்.....

அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அப்பா....சிறது நேரம் கழித்து சரி என்றார்.
கட்டணத்திலும்...தரத்திலும்....சிறப்பாக சொல்லுவது இந்த பள்ளியைத் தாங்க...

குட்டிமா...அப்பாகிட்ட சொல்லுடா...ஸ்கூல் போறேன்னு....
புது டிரஸ் ......
புது ப்பஃக்.....
வேற என்ன வேணும்... செல்லத்துக்கு...போவோமா...என்று பிள்ளையின் மனதில் ஏற்றுகிறாள் தாய்.

இருவரும் சேர்ந்து முதல் முறையாக பள்ளிகூடத்தை நோக்கி...செல்லுகிறார்கள்...


மீனியல்(பள்ளிக்கூட ஆயா): என்ன வேணும் சார்
பிள்ளையை சேர்க்கனும்...
அப்படியா....வாங்க..உள்ள கிளர்க் இருப்பாங்க...வலது பக்கமாக இருக்கிற அறையில் சென்று பாருங்கள்..என்கிறாள் மீனியல்..


மெதுவாக உள்ளே சுற்றி சுற்றி பார்த்தவர்கள்...இந்த பள்ளிக்கூடத்தில தன் குழந்தை படிக்க போவதை தன் கண்களால் படம் பிடித்தார்கள்...மைதானம் உள்ளது தான் போல...அங்கே...சரி வா..என்று சொல்லி அப்பா உள்ளே செல்கிறார் முதலில்...பின் தொடருகிறாள் அம்மா...

ஒன்றுமே தெரியாதவர் போல ....அங்கே....அப்பா...

தொடரும்....

ஆகாயம்


ஆகாயமே உன்னை
அன்னார்ந்து பார்க்காதவர்
இலர் என்றே எண்ணுகிறேன்

ஆகாயம் நீ
வானம் என்றும்
வெட்டவெளி என்றும்
அழைக்கப் படுகிறாய்

எங்களை பார்க்கத்தூண்டும்
சூரியனும் சந்திரனும்
நட்சத்திரங்களும்
உன்னில் அருமை

உன்னை காணும்போது
எட்டாத தூரத்தில்
இருந்தாலும் பறவைகள்
எட்டித் தொட வரும் காட்சி
அருமையே என்பேன்.

மேகம் உன்னை
மறைத்தே சில
ஓவியமாய் திகழ்வதும்
உன்னில் அருமை

பரந்த வானில்
உன்னை ரசித்தது
ஏராளம்...
என்றாலும் மழையாய்
எங்களை வந்தடைவாய்
இடியும் மின்னலாய்
சப்தம் எழுப்பினாய்
என்றால் உன்னை
பார்க்க மனம்
ஒப்பவில்லையே...

அன்பினை உன்னை
போல் பரந்து விரிந்து
விடியும்போது எல்லாம்
நல்லதே நினைத்து
முற்பகல் பிற்பகல்
மாலை இரவு என
காலம் காட்டும்
உன்னால் தானே
எதற்க்கும் ஒரு
"காலமும் நேரமும்
உண்டு" என்பதே
சொன்னார்களோ...

Thursday, November 5, 2009

கண்ணீரும் மழைநீரும்


பாரபட்சத்தை முதல்
முறையாக உணர்ந்தவள்
பாரினில் இப்படியும்
நடப்பதை அறியாதவள்
மனவலிமை இன்றி
அழுது கொண்டிருந்தாள்
அன்னாந்து இறைவனை
கேட்டு கொண்டிருந்தாள்
மனம் மாறும் மனிதர்களை
படைத்தது நீயே தானா
கண்ணீரால் கண்கள்
நனைந்து கொண்டிருந்தன
மழைத்துளி அவள்
கண்ணீர்துளி மேல்
விழுந்தது ஆறுதலாக
இறைவன் அவளை
தேற்றுவதாக உணர்ந்தாள்
கண்ணீரின் நீருற்று
அந்த மழையின்
நீருடன் கலந்து
மண்ணில் சேர்ந்தது
தெளிவடைந்தது போல
யதார்த்தமாக எல்லாவற்றையும்
ஏற்று தானே ஆகவேண்டும்....
என மனதிலே நினைத்து
கொண்டே சென்றாள்......

Saturday, October 31, 2009

விடைத்தாளின் வெளிப்பாடு..


விடைத்தாள் திருத்துவது/விடைத்தாள் மதிப்பிடுவது
Paper Correct
ion/Paper Valuation

விடைத்தாள் திருத்திட்டு இருந்தேன்... அதனால உன்னும் செய்யல...
ஒ....அங்க 10வது valuation போயிருந்தேன்...அப்ப பார்த்திருப்பீங்க...

இப்படி பேசுவது அறிந்திருப்பீர்கள்..
இது என்ன இரண்டிற்கும் வேறுபாடு...
விடைத்தாள் திருத்துவது என்பது ஆண்டின் நடுவில் திருத்தப்படும் விடைத்தாளில் மாணவர்கள் எழுதியதில் இதை நீ விட்டுவிட்டாய்..இந்த விடையின் எண் என்ன.. நீ சிலவற்றை எழுதவில்லை என கேள்விக்குறியிட்டு சுட்டி காட்டுவதோடு மதிப்பெண்களை போடுவதே விடைத்தாள் திருத்துவது Paper Correction எனச் சொல்லப்படுகிறது.

விடைத்தாள் மதிப்பிடுவது என்பது ஆண்டின் இறுதியில் அடுத்த வகுப்பிற்கு செல்லும் தேர்வின் விடைத்தாளில் எதுவுமே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை..ஏனென்றால் மாணவர்கள் இதை பார்க்க வாய்ப்பு இல்லை...ஆகையால் என்ன எழுதப்பட்டு இருக்கிறதோ அதன் மதிப்பெண்களை மட்டுமே சுட்டிகாட்டபடுவதே விடைத்தாள் மதிப்பிடுவது Paper Valuation என சொல்லப்படுகிறது.

தவறுகளை திருத்த ஒரு வாய்ப்பாகவே இடையில் நடத்தப்படும் தேர்வுகள்...மதிப்பெண்கள் வந்தவுடன் ..மதிப்பெண்களை பார்த்து ஏன் டா/மா இப்படி வாங்கி இருக்கிற...இது எல்லாம் ஒரு மதிப்பெண்களா..என்று சொல்லுவது..நிறைய வாங்கிட்டா ..ம்ம்..இன்னும் வாங்கி இருந்திருக்கலாம்..
ரொம்ப அலட்சியமா இருக்கு போல உனக்கு ...ஏன் இப்படி கவனம் இல்லாம இருக்கிறாய்..என நாம் கேட்பதுண்டு.
இப்பொழுது கல்வித்திட்டத்தில் ஒன்றை ஒன்று மிஞ்சவே...போட்டி போட்டுக்கொண்டு....
அரசு பள்ளிகளோடு தனியார் பள்ளிகள்...
தனியார் பள்ளிகளோடு சிறப்பு தனியார் பள்ளிகள்...
சிறப்பு தனியார் பள்ளிகளோடு விளையாட்டின் வழியே கற்கப்படும் கல்வி...

இப்படி ஏட்டு கல்வியில் பல போட்டியின் இடையே ..இந்த பள்ளியில் நல்லா சொல்லித்தருவாங்க போல... அந்த பள்ளி.... இதை விட அந்த பள்ளி....எந்த பள்ளியாய் இருந்தாலும்..பாடத்திட்டம் ஒன்றாக தான் உள்ளது என்பதே உண்மை.அதனை சொல்லித்தரும் வகையில் தான் வேறுப்படுகிறது
இந்த பள்ளிகள்..இருந்தும் அம்மாவும் அப்பாவும் சொல்லி கொடுத்தால் தான் உயர வழி இருக்கிறது.

எந்த பாடமாக இருந்தாலும் அவர்கள் புரிந்து படிக்கிறார்களா..எனக் கேட்டு பாருங்கள்..எல்லா நாட்களும் செலவழிக்க முடியாவிட்டாலும்..விடுமுறை நாட்களிலாவது கேட்டு பாருங்கள்...
நிச்சயம் தெரிந்து இருக்கும் வாய்ப்பு 40% தான் உள்ளது..ஏட்டுக்கல்வி மதிப்பெண்கள் பெறவே வேகவேகமாக சொல்லித்தரப்படுகிறது.மிஸ்/சார் எழுதி போட்டாங்க..எழுதினேன்..சொல்லவில்லையே...
பள்ளி சென்று கேட்டால் உங்கள் மகன்/மகள் மெதுவாக இருப்பதற்கு நாங்கள் பொறுப்பல்ல..என்பதே..

புரிந்து படிக்க வைத்தால் பின்னாளில் அவர்கள் வாழ்வில் உதவியாக இருக்கும்..மதிப்பெண்கள் வந்தவுடன் ..என்ன தப்பு பண்ணியிருக்கி
றாய்... ஏன் புரியுல...அடுத்த முறை இப்படி எழுது சரியா..என்று சொல்லுங்கள்...வேறு ஒரு மதிப்பெண்களோடு ஒப்பிடுவதை தவிர்த்து நீ முதல எடுத்த மதிப்பெண்களோடு இதை பாரு...குறைந்து இருக்கிறாய் ...அடுத்த முறை நன்றாக எடுக்க வேண்டும் ...கூடி இருக்கிறாய்..வாழ்த்துகள்..என அவர்களோடு சில நேரம் செலவழித்து உயர்வடைய செய்வோம்.
ஏதோ தெரியாத ஒருவரிடம் பேசுவதற்கு முன்பும் பின்பும் கைக்கொடுத்து கொண்டு வாழ்த்துகிறோம்..ஆனால் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் கைகொடுப்பது என்பது ரொம்ப குறைந்த சிலரே...உனக்கு என்ன வேணும் என்றே முதலில் கேட்க தான் செய்கிறார்கள்..

ஒரு முறை சின்ன குட்டீஸ் மிஸ் (நான் ஏதோ எழுதிக்கொண்டோ புத்தகங்களை அடுக்கி கொண்டோ இருந்தேன்...)மிஸ் எனக்கு அம்மா கைகொடுத்தாங்களே...என்றான்.. என்ன டா சொல்லுற...புரியல என்றேன்...நீங்க good போட்டதை நான் சாப்பிட போனபோது அம்மா என் நோட்டு பார்த்து அழகாய் எழுதியிருக்கிறாய் good வாங்கியிருக்கிறாயே என்று சொல்லிக் கைக்கொடுத்தாங்களே...என்றான்...அவ்வளவு ஒரு சந்தோஷம்..அவன் முகத்தில்..அன்றிலிருந்து நன்று என போடுவதை அதிகமாக போடத் தொடங்கினேன்...

எதுவுமே வாங்கித் தரவில்லை என்றாலும் கைகொடுத்து உற்சாக படுத்துவோம்...பிள்ளைகளின் சந்தோஷத்தில் பங்கு கொள்வோம்.தவறை திருத்த வழிக்காட்டுவோம்..மதிப்பெண்களின் அவசியத்தை புரிய வைப்போம்..மதிப்பெண்கள் வந்தால் அம்மா அப்பா திட்டுவாங்க..என்ற மனநிலையை மாற்றிடுவோம்..பயத்தை அகற்றுவோம்....என்று சொல்லி இப்பதிவை முடித்து கொள்கிறேன்..நன்றிகள்






Tuesday, October 27, 2009

வாகனங்களில் சுற்றத்திலே ஒரு பயணம்

அடுத்த வீட்டிற்கு நடந்தே
உடற் பயிற்ச்சிக்கு மிதிவண்டி
அடுத்த தெருவென்றால் விசையுந்து
பள்ளி மாணவர்கள் தானியிலே
சொகுசாய் செல்ல மகிழ்வுந்து
அனைவருடன் செல்ல தானூந்து
விழா என்றால் கூடு உந்துலே
சிறிய சுமை சிறியகூடு உந்துலே
பெரிய சுமை சுமையுந்துவிலே
நிறைய மக்கள் பேருந்திலே
வாய்ப்பு கிடைத்தால் தொடர்வண்டியிலே
அன்னார்ந்து பார்த்தால் வானூர்தி
இப்படி எங்கு சென்றாலும்
எதிலும் கவனம் முக்கியம்
பொறுமையாய் பயணித்து
விபத்தை தவிர்க்க
கைபேசியில் பேசியே
வாகனங்களை ஓட்டாமல்
பாதுகாப்பான பயணம் செய்து
நம் ஜீவனோடு இனிய
வாழ்வு வாழ்வோமே.....

Monday, October 26, 2009

சில நிமிடங்களில் உதித்த கவிதைகள்(4)......

கவிதை எழுத ஆரம்பித்து சில நாட்களில் தமிழ் மன்றத்தில்
கவிதை விளையாட்டில் கொடுத்த தலைப்பில்
சில நிமிடத்தில் உதித்ததை
இங்கே பகிர்ந்துள்ளேன்.

சமத்துவமும் சமாதானமும்
சாலையோர சண்டையை
சமாளிக்கும் வரைத்தான்
வெறும் பேச்சில் மட்டுமே
வெள்ளை புறா வருகி்றதே
தண்ணீர் தாகத்தை என்று
தான் தீர்ப்பாயோ இறைவா...

வியர்வையால் மட்டும்
உணரக்கூடிய உழைப்பு
ஊரிலே மின்சாரத்துண்டிப்பு
என்பதாலும் என்று உணர்வாயா?
சுதந்ததிரம் கிடைத்தது ஆனா
சுகமாக வாழ்வது எப்பொழுது?
சீரமைப்பு பணி என்று சொல்லி
சொல்லியே ஏமாற்றுவது ஏனோ....
.

என் மனதில் என்றென்றும் நீ!!!
வாழ்வாய் ஆபத்தில் உதவினாய்
வாழ்வு தனை மீட்டு கொடுத்தாய்
என்னவென்று சொல்லுவது உமக்கு
"நன்றி" என்ற மூன்றெழுத்தை மட்டுமா?

Friday, October 23, 2009

சில நிமிடங்களில் உதித்த கவிதைகள்(3)......

கவிதை எழுத ஆரம்பித்து சில நாட்களில் தமிழ் மன்றத்தில்
கவிதை விளையாட்டில் கொடுத்த தலைப்பில்
சில நிமிடத்தில் உதித்ததை
இங்கே பகிர்ந்துள்ளேன்.

என்றும் நீ எனக்கு
குழந்தை தான்...
என்னை அம்மா என்று
உயர்ந்த தாய்மைக்கு
எட்டி செல்ல வைத்தாயே!
நீ அம்மாவானாலும்
எனக்கு நீ குழந்தை தானே
என்னை வந்து பாராயோ?
ஏக்கத்துடன் ஓரு தாய்......

தன் நலன் காக்க தவறினாள்
தாயாக அவள் துடித்தாள்
திசைகளெல்லாம் நோக்கி கதறினாள்
தீமை ஒன்றும் நினைகாதவள்
துச்சம் என மதித்தால் தாங்கமாட்டாள்
தூக்கத்தையும் மறந்து விழித்திருப்பாள்
தென்னம்பிள்ளை நட்டு வைத்தவள்
தேரோடுவதை பார்க்காமல் இருந்தாள்
தைத்த சட்டை அணிந்து பார்த்தவள்
தொட்டில் கட்டி பெயர் சூடியவள்
தோடு போட்டு அழகு பார்த்தவள்
தௌகித்திரன் வரவை எதிர்பார்கிறாள்

Monday, October 19, 2009

ஆதியந்தக் கவிதை - சவாலுக்குத் தயாரா?[4]

இந்த போட்டியில் உதித்த சில எண்ணங்களின் யதார்த்தம்

ஒளியும் தருவார்...ஆசிரியர்
அறிவொளியும் தருவார்
அதை ஓலியிலும் கேட்பார்
இதை தெரிவிக்கவும் செய்வார்
இணையதளத்தில் அவர்
இடுக்கைகள் பல தொடர்வார்
இணையாக மறுமொழியிடவே

நல்லொழக்கத்தால் உம்மை
நாடெங்கும் பாராட்டுவதை
பார்த்து ரசிக்கும் மனமே
பரவசத்துடன் உயர்வதை
பண்படுவதை வேண்டுதே

மறைக்கிறாள்...கஷ்டத்தில்
தவிப்பதை...வாழ்கிறாள்
மறைத்தே...உள்ளத்தில்
என்றுமே...உயர்ந்தாள்

மீண்டும் இவ்வுலகில்
பிறக்க வேண்டாமென
ஆண்டவனை கேட்டு
கொண்டிருக்கும் ஞானி
உணர்ந்தார் பிறவாமை
நிலையை சமாதியில்
அமர்ந்தார் உயிரோடு
அது தான் ஜீவசமாதியோ...

Saturday, October 17, 2009

"ங்க"

"ங்க".....குழந்தை கத்தும் போது...தோன்றியது..பின்னாளில் இந்த"ங்க" எங்கே போகிவிடுகிறது...என்ற எண்ணத்தில் எழுதியது..
"ங்க"...
பிறந்த குழந்தை
அழகாய் "ங்க"
கேட்கவே அழகாய்
ஒரு மொழி
வளர்ந்தவுடன்
ஏன் வா,போ
என்றே வரும்
வார்த்தைகள்
எங்கே போயிற்று
வா"ங்க",போ"ங்க"
யாரின் குற்றம்
பாசத்தால்
சொல்லிக் கொடுக்க
மறுத்ததா மனம்...
எதனால்...
என்றுமே "ங்க"
ஓர் தனி தான்
மரியாதையில்...
"ங்க"மறக்காமல்
மீண்டும்..
கொடுப்போம்
"ங்க"வளர்ந்தும்
வாழ்விலும்
மனதிலும்...
நிலைத்திருகட்டும்
நாம் சென்றாலும்...

Thursday, October 15, 2009

தீபஒளியில் இறைவன்


இல்லத்தின் இருளை அகற்ற
ஒளியாய் நின்றாய் நீ

உலகத்தின் இருளை அகற்ற
சூரியனாய் திகழ்கிறாய் நீ

மனதின் இருளை அகற்ற
அறிவொளியாய் நுழைந்தாய் நீ

இறைவா.....
தீபஒளியாய் பிரகாசிக்க
பயமுறுத்தும் பட்டாசுகளா
சில மணித்துளிகள் தானே
துடிப்புடன் விளங்குவாயே
பின்பு மறைந்து விடுவாயே
மறைந்து விளையாடுவதே
உன்னுடைய லீலையாகுமே

பட்டாசுகள் பளிச்சிடும்
ஆனால் சத்தம் பயமுறுத்துமே
காதுகள் அடைக்குமே
கம்பி மத்தாப்பு தெரிக்குமே
சாட்டை கீழ் நோக்கி இருக்குமே
சங்கு சக்கரம் சுழன்று கொண்டே
புஸ்வோணம் வானம் நோக்கியே
கலர் தீப்பெட்டி வண்ணமயமாய்
பாம்பு மாத்திரை நெளிந்து வளைந்தே
இப்படியே சென்றால்....
சரி இனிப்பாய் வந்தால்
சர்க்கரை நோய் உள்ளவர்
சீண்ட மனமில்லையே
ஆகையால் இறைவா
எல்லாரும் மகிழ்வாய்
ஒளி மயமாய் நீ
தீபஒளி திருநாளிலும்
ஜோதினுள் புகுந்து
வழியாய் வந்து
வாழ்வில் சிறக்க
வைப்பாய் என்றும்......

அனைவருக்கும் தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்

Wednesday, October 14, 2009

ஆதியந்தக் கவிதை - சவாலுக்குத் தயாரா?[3]

இந்த போட்டியில் உதித்த சில எண்ணங்களின் யதார்த்தம்

துன்பம் வரும் போது துவளாமலும்
இன்பத்தில் இன்புற்று துள்ளாமலும்
சமமாக எண்ணி வாழும் மனிதத்திலும்
இறைமை துணை புரிவதாக
இச்சுழற்சி வைத்தானோ...

தேவ தூதர்களாய்....நாம் மாறினால்
மனிதனிடம் எத்துணை ஆசைகள்
மலைத்தே நிற்போம் சற்று
நேரத்திற்கு ஓர் ஆசை
நிமிடத்திற்கு ஓர் ஆசை
நொடிக்கு ஓர் ஆசை என
அள்ள அள்ள குறையாத
அட்சய பாத்திரமோ மனம்
விருப்பியதை தகுதி மீறி
அடைவதற்குள் அடுத்த ஆசை....
என்று தான் இதற்கு எல்லையுண்டோ
அன்று தான் நமக்கு ஓய்வுண்டு....

புரியல்லையோ....கணக்கு
புரிந்தாலும் அறிவதென்பது
கடினம் தான் ஏனென்றால்
கடவுள் போட்டு வைத்தது

இனிமையாக மாறிடுமே
இன்னல்கள் தீர்ந்திடுமே
இகழ்ச்சிகளை தவிர்திடனுமே
இன்பமாக வாழ்திடலாமே

குற்றமும் சொல்வாரே காண்...!
ஆற்றலும் வேண்டுமே அதை ஏற்க
ஏற்றமும் பெற வழியும் சொல்லுவார்
மற்றவரும் வஞ்சபுகழ்ச்சியில் வென்றிடுவார்
குற்றமற்றவரும் தன் நிலையை காட்டிடுவார்
வாழ்திடுவார் உலகம் போற்றும் மனிதராவார்