Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Monday, August 24, 2020

பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 4- மனச்சுமையை இறக்கி வைப்பது...


நான்காவது பகுதியில் என்ன  கொடுத்திருக்காங்க பார்ப்போம்!🙂😊

அருமையாக உணர முடிகிறது... எல்லாராலும் அவ்வளவு சீக்கரமாக மனச்சுமையை இறக்கி வைக்க இயலாது  ... அப்பறம் எப்படி என்பதை தான் இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம்...

மனமும் புத்தியும் சரியாக Balance செய்தால்  நாம் எதற்காகவும் கலங்க வேண்டாம்...ஆகையால் மனம் கலங்கும் போது,சமாளித்து விடலாம் என புத்திக்கூர்மையை பயன்படுத்தி வெல்ல்லாம்.அதுவே புத்தி தடுமாறும் நிலை வந்தால் அனுபவத்தை வைத்து விழிப்புநிலையில் நாம் சரியாக கையாள உதவும்.

எல்லாவற்றையும் ஒரு குப்பை போல ஒழுங்கின்மை இல்லாமல் இருந்தால் எப்படி நம்மால் சகிக்க இயலாதோ.அதேப்போல் நாம் ஒவ்வொன்றையும் தனித்தனியே Maintenance like creating folders for file...சரியான நேரத்தை வகுத்து அதனை  நாம் ஏன் செய்யக்கூடாது...எல்லாவற்றையும் செய்ய தெரிந்தாலும்  தெரியாதது போல இருக்கும் போது மனச்சுமை தான்... Time Management அதாவது பிரித்து நேரம் ஒதுக்கி செய்ய பழகி கொண்டால் நிச்சயம் நமக்கு மனச்சுமை குறையலாம்...well planning and preparation leads to scheduled and give success to us...


Best Example in Life ..One of my friend informed to swallow the words Because which should not to come out in stress or in anger...
நாம் கையாள்வது தான் முக்கியம்...மற்றவரிடம் அதனை இறக்கி வைத்து பின் அதனை சரி செய்ய முடியாமல் தவிப்பதை விட  முழுங்குவது (இப்படி பழகிவிட்டால் )கூட மிக சுலபம்...ஆனால் அதனையும் சரியாக செய்ய வேண்டும் இல்லையென்றால் மனச்சுமை அதிகமாகும்...

 ஆக இந்த chapter ல் நாம் கற்று கொள்வது...                                                                👑முள் கிரிடம் அணிய  தயாராக இருக்க வேண்டும்...
          🙂மனதில் ஆயிரம் வருத்தம் இருந்தாலும் முகத்தில் 
                    புன்னகை என்பதை மறைக்காமல் இருப்போம்!                                      👍தேவையின் மிகுதி அதிகமாகும் போது மனம் 
                     அதனை செய்து முடிக்கும்...

ஆக நம் மனமே அனைத்திற்கும் காரணம் அதனை 
சரியாக tune📻 பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.🤝

மனநிறைவும் சுயநலமின்மையும் எப்போதும் இணைப்பிரியா நண்பர்கள்...

அன்பிற்கு கடினமான செயல் என்று எதுவும் கிடையாது. 

அன்பால் வெல்வோம்!..மிக்க நன்றி🙏😊👍



                              - தொடர்ந்து படிப்போம்....உணர்ந்து செய்லபடுவோம்!





 

பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 3 ப்ரச்சனைகளையும்,குழப்பங்களையும் சந்தித்து மீள்வது

 

இந்த அருமையான புத்தகம் தான் படித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.. வாங்க மூன்றாவது பகுதியை பார்போம்...

தலைப்பே புரிந்து கொண்டிருப்போம்...
ஆம் நாம் சொல்லக்கூடாததை சொல்லி மாட்டிப்போம்,
சொல்ல வேண்டியதை சொல்ல மறந்திருப்போம்.. 
மற்றவர்களின் செயலில் குற்றம் சொல்வது,
தீர்ப்பு கூறுவது,இப்படி ப்ரச்சனைக்கு 
மூலக் காரணம் வேறு யாருமில்லை ...
நாம் தான் காரணம் என புரிய வரும்...
வருவதை ஏற்றுக்கொண்டு பக்குவ நிலையில் கையாள்வது..
அதை எதிர்கொள்வது தீர்ப்பது என  இப்படி நாம்  மீள்வது பற்றி குறிப்பிட பட்டிருக்கிறது....

இது தான் தோன்றியது..நாம் மீண்டு வந்தால் அனுபவம்...மீள முடியாவிட்டால் முயற்சி செய்ய வேண்டும்..ப்ரச்சனையிலிருந்து தப்பிக்க அல்ல..அதனின் தீர்வை காண்பதற்கு முயல்வது நம் கடமை..ப்ரசனையை பார்க்கும் விதத்தில் attitude வளர்த்து கொண்டால் சரி ஆகி விடும்...😊👍

புலம்புதை நிறுத்தி கொள்வது உத்தமம்..நீ வைத்து இருக்கிற ப்ர்ச்சனையை விட என்னுடையது பெரியது....நான் எவ்வளவு கஷ்ட படுகிறேன் என்பது எனக்கு தான் தெரியும் என்பது போல கூறி மனதை காயப்படுத்துவது தவறு...அவரவர் ப்ரச்சனை அவரவர்களுக்கு ஆனால் அதனை சமாளிக்கும் விதம் மாறுபடும்...
அம்மா அனைவர் வீட்டிலும் சுமுகமாக தீர்க்கக்கூடியவர்... 
இருப்பதை வைத்து அடுப்படியில் சமாளிக்கும் ஆற்றல்  
அம்மாவால் மட்டுமே முடியும்...👏👏👍

 நம் பயணத்தில் நாம் சாதரணமாக இருக்க நினைப்பது அல்ல....அப்படி தானே..அப்பொழுது நாம் வளர்த்து கொள்ள வேண்டிய விசயமாக கடவுள் நமக்கு அளிக்கும் சவாலாகவே நினைப்போம்...இன்னும் அசாதரண வளர்ச்சி அடைவோம்...
மிக்க நன்றி...அன்பு நல்வாழ்த்துக்கள்... சுபதினம்🙏😊👍.


                                                - தொடர்ந்து வாசிப்போம்






பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 2 சிறிய கடமைகளும் செயல்களும்..

 


இந்த புத்தகம் தான் இப்பொழுது படித்து கொண்டிருக்கிறோம்...😊👍வாங்க இரண்டாவது பகுதியில் என்ன 
சொல்லி இருக்காங்க பார்ப்போம்!



சின்ன சின்ன விசயங்களிலும் நாம் கவனம் செலுத்துவதால் 
நாம் இன்னும் மென்மேலும் வளர்ந்து நன்மதிப்பு பெற உதவும்... ஊருக்கெல்லாம் உதவி செய்வோம் நாம் நமக்கு செய்ய அப்பறம் என்போம்...சில சின்ன விசயம் என்று நாம் நினைப்பதும் பலருக்கு அதுவே பெரிய விஷயமாக தோன்றலாம்...நாம் செய்யும் செயலை செவ்வனே செய்வது சாலச் சிறந்தது எனலாம்...

கொஞ்சம் சிரிப்பது( சிரித்தால் சிரிப்போமே),              
புதிய நபரிடம் அறிமுகம் செய்து கொள்வது 
(முதலில் நாம் ஏன் பேச வேண்டும்),        
 ஒவ்வொரு நாளும் முனைப்போடு கவனிப்பது 
(நான் ஏன் செய்ய வேண்டும்...வேறு யாராவது செய்யட்டும்),    மற்றவர்கள் பேசும் போது கவனிப்பது
(அலட்சியாமாக phone பார்ப்பது).. 
இது எல்லாமே சின்ன சின்ன செயல் ஆனால் அது எல்லாம் தொடர்ந்து செய்கிறோமா... 
இல்லை என்றே சொல்லலாம்... ஏனென்றால் நமக்கு இரண்டாவதாக சட்டென்று எண்ணம் வந்து நம்மை ஆட்படுத்தும் போது 
நாம் அதற்க்கான சரியான பக்குவமாக பதில் அளிக்க 
தயாராக இருந்து  செயல் பட முனைவோம்...

எல்லாவற்றிலும் இப்படி Smart ஆக இருக்க தான் முற்ப்படுவோம்...சிலரிடம் நாம் நடந்து கொள்ளும் விதம் நாம் நம்மை இன்னும் சரி செய்ய வேண்டும் என்பதை உணரும் போது மாற்றிக் கொள்ள வேண்டும்..😊👍

ஒரு முனைப்போடு செயலில் கவனம் செலுத்தினால் நாம் நிச்சயம் வெற்றி அடைந்தே தீர்வோம்...சும்மா பேசுவது, பிளாண் பண்ணுவது போன்ற செயல்களை துரிதப் படுத்தி அடுத்து அடுத்தற்கு நகர்ந்து நாம் வெற்றியில் கவனம் செலுத்த இது மாதிரி ஒவ்வொரு சிறிய செயலலிலும் நாம் கவனமாக கையாள வேண்டும்...😊👍

நம்முடைய business க்கு முன்னேற்றத்திற்கு என நாம் செய்வது போல நாம் நடந்து கொள்ளும் விதத்திலும் செய்யலாம்..
இந்த பகுதியில் நான் சரியாக செய்ய முடியவில்லை அதில் 
நான் சரி செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும்..
இதனை எப்படி சரி செய்வது என தன் முனைப்போடு 
நம்மில் நிறைய நல்ல விசயங்களை வளர்த்து கொள்ளவும் 
focus பண்ணலாம்.
முதலில் சின்ன சின்ன விசயத்திற்கு இந்த TENSION வந்து நம்மை ஆட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளலாம்..மிக்க நன்றி🙏 👍
                 
                                                                 - தொடர்ந்து வாசிப்போம்...








பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 1 சரியான தொடங்கங்கள்

இந்த புத்தகம் தான் படிக்க ஆரம்புக்கிறோம்...இந்த தலைப்பு தான் இந்த புத்தகத்தை படிக்க தூண்டியது என சொல்லலாம்...Byways of Blessedness என்கிற ஆங்கில புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு என்பதை அறிய முடிகிறது...யதார்த்த வாழ்வில் சில மாற்றம் ஏற்பட உதவலாம்...வாங்க பார்ப்போம்!

 இது தான் அந்த முதல் தலைப்பு....ஒரு இனிய நாளாக ஒரு தொடங்கவும்,அந்த நாளை இனியதாக மாற்றவும் உதவுவது எது?



ஆம் வேறு வேறு என நகர்ந்து கொண்டே செல்லும் அந்த எண்ணங்கள்....அதனை நல்வழி படுத்துவது யார்..
நாம் தான்....எல்லாவற்றிருக்கும் காரணமாவது யார்? 
அதுவும் நாம் தான்..நம் எண்ணம் தான்...


அதற்கு தான் சிறுவயதில் இருந்தே இந்த விதைப்பை நம்மில் புகுத்த முற்ப்படுகிறார்கள் நம் பெற்றோர்கள்..நாமும் அவ்வழியில் நல்ல எண்ணங்களை விதைப்போம்...

சரியாக தொடங்கினாலே பாதி செய்த மாதிரி என்பார்கள்...
தொடங்கியது சரியில்லை என்றால் "முதலும் கோணல் முற்றிலும் கோணல்" என்பர்...
சரியாக தொடங்கி இன்னும் பல நல்ல விஷயங்களை நாம் செய்ய காலைப்பொழுது அவ்வளவு சரியான பொழுது...
ஆகையால் தூக்கத்திற்கு இடம் கொடுக்காமல் இன்னும் அதிகாலை எழுந்து நாம் ஒரு சரியான தொடக்கத்தை தொடங்கி வாழ்வில் முன்னேற பெரும் பங்கு உள்ளது என்பதனை தெரிந்து கொள்ள முடிந்தது... சினிமாவில் வடி வேல் Sir சொல்வதை போல எதை செய்தாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்...மிக்க நன்றி...🙏😊👍
  
 
                                                               -தொடர்ந்து வாசிப்போம்







 

புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 21)


வாங்க படிப்போம்!20 ஆவது பகுதி யோசிக்க வைத்தது போலவே..மேலும் யோசிக்க வைக்கிறது 21 ஆவது தலைப்பும்...வாங்க படிப்போம்!😊👍

ஆம் தேவை என்பதில் கவனம் செலுத்த தவறுகிறோம்...முடிந்த வரை நம் தேவைகளையும் Consider செய்வோம்...ஒரு சில துளிகள் யோசித்தால் இவ்வளவு நாள் நாம் ஏன் இப்படி யோசிக்கல என்றும் கூட தோன்றலாம்😊👍


அப்படியே எழுதுவோம் அல்லது யோசிக்கலாமே!மிகவும் முக்கியமில்லை அப்பறம் யோசிக்கலாம் என்பதெல்லாம் நினைக்க வேண்டாம்...யோசிக்கும் போது மனதில் ஒரு வித மகிழ்ச்சி குடிக்கொள்ளும்..மிக்க நன்றி🙏😊👍




 

புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 20)

 

இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்...வாங்க 20 ஆவது தலைப்பில் என்ன கொடுத்திருக்காங்க பார்ப்போம்😊👍


யோசிக்க வைக்கிற  கேள்வி...பதில் ஆம் என்று வந்தாலும் சில நேரங்களில் தயக்கத்தோடு தான் வரலாம்..ஏன் என்றால் முழுமையாக நமக்கு பிடிப்பதை செய்வதற்கு 

வாய்ப்பு அமைந்தால் சந்தர்ப்பம் சூழ்நிலை சரியாக அமையாது..

சூழ்நிலை சரியாகும் போது பொருளாதாரம் இருக்காது...

பொருளாதாரம் ,சூழ்நிலை சரியாக இருந்தால் மனம் வராது..

இப்படி இருப்பதாக இருந்தாலும் நாம் நமக்காக சிலவற்றை செய்ய முனைப்பு இருந்தால் நிச்சயம் நாம் முயற்சி செய்வோம்...😊👍


சரியான படம் கிடைத்துள்ளது...பிடித்ததை செய்வதில் வரும் மகிழ்ச்சி தனி தான்...சிறு சிறு செயல்கள் செய்ய ஆரம்பிக்கலாம்... மெதுவாக  நாம் மகிழ்ச்சியோடு பயணிக்க ஏதுவாக இருக்கலாம்...மிக்க நன்றி...🙏😊👍

புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 19)

 


இந்த புத்தகம் தான் நான் படித்துக் கொண்டிருக்கிறோம்.... 19 ஆவது தலைப்பை பற்றி பார்ப்போம்! வாங்க...
நாம் மற்றவரின் குறைகளை சொல்லி வீண் மனஸ்தாபம் வருவதை விட நம்முடைய குறை நிறை என்ன என நாம் நம்மை மேம்படுத்த நேரத்தை செலவு செய்வது உத்தமம்...நாம் முன்னேறும் போது நம் வாழ்வும் செம்மையடையும்....
நம் மீது கவனத்தை செலுத்த வேண்டும் என்பதை அருமையாக திருக்குறளை மேற்க்கோள் காட்டியுள்ளார் எழுத்தாளர்...
மிக்க நன்றி...தொடர்ந்து படிப்போம் வாங்க!

புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 18)

 


இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருந்தோம்...வாங்க 18 ஆவது தலைப்பு என்ன என்பதை பார்ப்போம்!😊👍
தன்னை ஆள்பவன் தவறு செய்யாமல் 
தற்காத்து கொள்ளும் அளவுக்கு 
சிந்தனை உதவி செய்கிறது....
நற்சிந்தனை நல்வழியையே வகுக்கும்...
தவறை தவிர்ப்பது மிகவும் நல்லது தானே!
சிறிய விஷயத்திற்கு சண்டையிடாமல்
 பொறுமை,தூய்மை,மென்மை,அன்பு ,உறுதி என்பதை சரியாக ஆள்கிறவன் தான் தலைமை ( தன்னை ஆள்பவன்) எனலாம்.

 மேலும் ஐம்புலன்களை அடக்கி ஆள்வதோடு 
ஆறாவது அறிவை சரியாக பயன்படுத்துவதால்
 நடைப்பெறும் தன்மை நமக்கு நாமே தலைமை என்பதாகுமா?!உண்மையில் அருமை அல்லவா....👆👍
 நன்றி! தொடர்ந்து படிப்போம்....


யதார்த்தமாக படிக்கலாம் வாங்க!சிறகை விரி!பற...என்ற புத்தகம் ( பகுதி 10)

இந்த புத்தகமும் படித்து கொண்டிருக்கிறோம்...அருமையான தலைப்பு இன்று வாங்க! பார்க்கலாம்...

தாய் என்றால் தூய்மையான, உன்னதமான, அருமையான, பாசமான,தன்னலமற்ற என இன்னும் எவ்வளவோ சொல்லலாம்....1 ஆசிரியரின் அறிவே அலாதியானது....இங்கே எழுத்தாளர் அவர்கள் மிகவும் மேன்மையாக 100 ஆசிரியர்களுக்கு சமமானவர் ஒரு ஞானாசிரியர்... 100 ஞானாசிரியருக்கு சமமானவர் ஒரு தகப்பனார் ஆனால் நூறு நூறு தகப்பானார் என்றாலும் ஒரு தாய்க்கு ஈடாகாது என ரொம்ப அருமையாக சொல்லியுள்ளார்..ஆம் உண்மை தானே!அம்மா நிகர் எவருமில்லை....😊👍


இந்த தாய் பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி....இரண்டு குழந்தைகள் நன்றாக பிறப்பதற்காக  ஒரு நாள் இரண்டு நாள் அல்ல...75 நாட்கள் தலைக்கீழ் இருந்தார்களாம்..உன்னத தாய்மைக்கு எதுவுமே ஈடில்லாதவை...தேடலில் கிடைத்த படம்...😊👍

http://heritagetamilnadu.com/temples-of-five-elements/thiruvanaika-jambhukeswarar-temple/

http://heritagetamilnadu.com/temples-of-five-elements/thiruvanaika-jambhukeswarar-temple/


இந்த கோவிலை கட்டிய கோச்செங்கணான் பிறக்க அவருடைய அம்மாவும் நேரம் தள்ளி பிறந்தால் குழந்தை கோவில் கட்டுவான் என்று சொன்னதும் தள்ளி போட கால்களை மேலே கட்ட சொன்னார்களாம்...உயிரையும் துறந்து குழந்தை நல்லா இருக்க வேண்டும் என மாண்டாளாம் அந்த அரசி....அந்த காலத்திலும் சரி...இந்த காலத்திலும் சரி தாய்மையின் உன்னதம் வார்த்தைகளில் அடக்க இயலாது!

அவ்வளவு சிறப்பிலும் மீனாட்சியம்மை கல்லாங்காய் விளையாடுவதை ஒரு தாய் போல மகளை கண்டு பூரித்து நிற்கிறாராம் குமரகுருபரர் அதுபோல பெரியாழ்வாரின் பிள்ளைதமிழில் ஆழ்வார் கண்ணனை மகனாக தாய் குளிக்க அழைப்பது போல பாடலை பாடி இருப்பார்....இதனையே பக்தரானவர்கள் தாயாக ஆசைப்படுவதாக தெரிகிறது... அவ்வாழ்வியலை நம் கண் முன்னே காட்டியதும் அருமை....👌😊🙏

யதார்த்தமாக நிறைய சொல்லியுள்ளார்கள்....இதில் பலூன் காரன் வந்தால் அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும்! இப்பொழுது செய்யும் online shoppingயை விட அப்போது வந்த பலூன்காரர் சிறப்பு தான்! உள்ளே கடுகு போட்டு குலுக்கி அதன் சத்தத்தில் டமார் என வெடித்து விட்டால் அடுத்து எப்போ வருவார் பலூன்காரர் என காத்திருப்பது என அது ஒரு காலம்!...😊👍


ஜவ்வுமிட்டாய் காரர் காசு எடுத்து வருவதற்குள் தெரு முனைக்கு போய்விடுவார்! குரல் கொடுத்து ஓடி போய் கையில் வாங்கிய மகிழ்ச்சி அலாதியானது! Fridge ல நிறைய மிட்டாய்கள் இருந்தாலும் இந்த ஜவ்வு மிட்டாய் ஜவ்வு மிட்டாய் தானே!


இந்த வாட்சு⌚ தான் முதல் கை கடிகாரம் , மோதிரம் ...என பல வடிவங்களில் அவர் செய்வது அதனை பார்ப்பது நண்பர்கள் என்ன வடிவம் என பார்த்து பார்த்து மகிழ்ச்சியடந்த நாட்களும் உண்டு... அடுத்த முறை நானும் வாங்குவேன் என மகிழ்ச்சியாய் சொல்லுவதும்...இக்காலக் குழந்தைகளுக்கு கிடைக்க பெறாத அரியதாகிவிட்டது!⌚


விடுமுறை நாட்களில் மதியம்  12 மணி ஆனால் பல வண்ணங்களில் வரும் ஐஸ் வண்டி....சொல்லவே வேண்டியதில்லை...ஆயிரம் கலப்படங்கள்...குண்டாகிவிடுவோம் அல்லது உடம்பிற்கு கெடுதி என பயப்படாமல் நிம்மதியாக அம்மாவிடம் கேட்டு கேட்டு வாங்கிய ஞாபகம்...ஐஸ் வண்டி வரவில்லை என்றால் பின் தெருவில் சென்று ஐஸ் தயாரிக்கும் இடத்தில் வாங்கிய ஞாபகம்....😊😀🤪


சேமிப்பு அவசியம் என்ற விதமாக இந்த பாத்திரகாரரிடம்...பழைய துணிமணியும் பேப்பரும் போட்டு வாங்குவர்! 

சிறு சிறு வியாபாரிகள் வாழ்வு இப்பொழுது எல்லாம் இல்லை என்றே கூறும் அளவிற்கு சென்றது...நம்மால் முடிந்த வரை வீட்டின் முகப்பில் வரும் கீரைக்காரம்மா...காய்கறி என இவர்களின் வாழ்வியலுக்கு உதவுவோம்!நன்றி🙏👍

யதார்த்தமாக படிக்கலாம் வாங்க!சிறகை விரி!பற...என்ற புத்தகம் ( பகுதி 9)

 இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம் தற்போது ஒன்பதாவது பகுதியில் என்ன சொல்கிறார் என பார்க்கலாம் வாங்க!😊🙏


இறைவனிடம் பூர்ண சரணாகதி அடைந்தவன் மனதில் தைரியம் வரும் என புரிய வைக்க சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவிலில் திருமழிசை ஆழ்வாருக்காக பெருமாள் வெளியேறியதும் அனைத்து தேவதைகளும் வெளியேறியதும்,பின்பு அரசன் மன்னிப்பு கேட்டவுடன் பெருமாள் திரும்ப வந்ததை பற்றியும்....காஷ்மீரில் வசித்து வந்த மக்களை மதம் மாற சொல்லி துன்புறுத்திய போது சீக்கியர்களின் ஒன்பதாவது குரு தேஜ் பகதூர் "அவரவர் நம்பிக்கை அவரவர் களுக்கு" என இந்துக்களுக்காக ஒரு சீக்கிய குரு கொடுமை அனுபவித்ததும்,சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறிய திருநாவுக்கரசரின் வாழ்வியலும்,மேலும் மகாத்மா காந்திஜி யின் உண்ணாவிரத போராட்டத்தால் நடந்த மனமாற்றம் பற்றி அறியும் போது மகிழ்ச்சி!இத்துணையும் இந்த ஒரு பகுதியில் அறிய முடிந்தது....எழுத்தாளரின் பெயருக்கு உரித்தாகும் தலைப்பு....எதற்கு அச்சம் கொள்ள வேண்டும் என பாரதி பாடிய அச்சமில்லை …

திருமழிசை ஆழ்வார் வரலாறு

சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில்

பெரியாரை வியத்தலும் இலமே! சிறியோரை யிகழ்தனினு மிலமே!

குரு தேக் பகதூர்

மேலும் அதிகம் தகவல் அறிய👆




யதார்த்த எடுத்துக்காட்டாக எதற்கெடுத்தாலும் பயமே நம் ஆசாரமாகிறது...தெனாலி ஸ்டைலில் எதற்கெடுத்தாலும் பயம்  என்பது நம்முள் ஊடுருவி உள்ளது.தேடலில் பார்த்த போது திருக்குறளில்....     குறள் 1075:

 அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது.


தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள் மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.


இவ்வளவும் நோயின் அறிகுறிகள்....எல்லாம் பயத்தால் மட்டுமே....


இறைவனிடம் சரணாகதி அடைந்தால் அந்த பயம் என்பதே இருக்காது...நமக்கு மேல் ஓர் சக்தி இருக்கிறது அது நம்மை காக்கும் என்ற அடிப்படை எண்ணம் இருந்தாலே போதுமானது பயத்தை வென்று மனதில் தைரியம் வரும்...மிக்க நன்றி 🙏👍😊