14]ஐம்பூதங்கள் பற்றி இந்துகள் தான் அதிக மதிப்பு வைத்திருக்கிறார்களா..?
சூரியன்(ஆகாயத்தை)(வெப்பம்_நெருப்பு) ->பொங்கல் அன்று வழிபடிகிறோம்
தண்ணீர் _ஆடிப்பெருக்கு அன்று நன்றி செலுத்துகிறோம்...
நிலம் _தொட்டு கும்பிடும்போது
காற்றும் சுற்றத்தில் என்று நினைக்கிறேன்
பஞ்ச பூதங்கள் என்பதே இந்துக்கள் சொன்னதுதானே.. மற்றவ்ர்களுக்கு, நிலம், நீர், காற்று, தீ ஆகிய நான்கை போற்றும் சில மதங்கள் உண்டு..
மதங்களை இரு வகையாகப் பிரிக்கலாம், ஒன்றே கடவுள், அவர் தனித்துவமானவர் என்ற கிறித்துவம், இஸ்லாம் போன்றவை..
இன்னொன்று பல கடவுள்களைக் கொண்டவை.. இவற்றில் நீர், நெருப்பு, காற்று போன்றவைகளுக்கு அதிதேவதைகள் உண்டு.. இந்த ஒற்றுமையைக் கண்டதால்தானே ஆரியர்கள் மத்தியக் கிழக்கிலிருந்து இந்தியாவிற்கு வந்ததாக சொல்லப்படும் தேற்றங்கள் உண்டாகின.
ஆகாயம் அதாவது- வெட்டவெளியை சக்தி கொண்டாதாகச் சொன்னவர்கள் இந்துக்கள் மட்டுமே...
15]வாழ்க்கையின் முழுமை என்பது
பிறருக்கு வாழ் என கை கொடுப்பது வாழ்க்கையின் முழுமை ஆகும்.
16]சகோதரத்துவம் என்பது,,,,எது வரை
இன்றைய காலக்கட்டத்தில் அது நடைமுறையில்....எவ்வாறு உள்ளது
சக உதிரம் - அதாவது ஒரே இரத்தம் - அழகான வார்த்தை,.. சகோதரத்துவம் என்பது மன வாசல் முழுதாக திறந்திருக்கும் வரையில்தான். அது பிறப்பினால் வந்தாலும் சரி, இல்லை சூழ்நிலையால் உண்டானாலும் சரி..
இன்றைய காலத்தில் அது கவலைக்குரிய நிலையில் இருக்கிறது. ஏனென்றால் மனக் கதவுகளை மூடிக் கொண்டு அதனால் உண்டாகும் புழுக்கத்திற்கு புகழ்ச்சி, தற்பெருமை போன்ற குளிர்பதன இயந்திரங்களை உபயோகித்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக பலர் எண்ணிக் கொண்டு இருக்கின்றனர்.
அடி உதவுவது மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என அந்தக் காலத்திலேயே சொல்லியாச்சி..
அதாவது தனக்கு உபயோகமா இருக்கணும் அப்பதான் சொந்தம் பந்தம் நட்பு எல்லாமே என்கிற எண்ணம். இந்த எண்ணம் வலுவான பிறகு உறவுமுறைகளுக்கே அர்த்தம் கிடையாது, வியாபாரம் மட்டும்தான்.
No comments:
Post a Comment