Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Wednesday, April 7, 2010

குட்டீஸ்(15)



குட்டீஸ்(15)


பாட்டி எங்கே என உள்ளே பாட்டி....பா...ட்ட்...டிடி....
என சொல்லிக் கொண்டே போகிறாள்.
பாட்டி அங்கே குட்டிமாவிற்கு பருப்பு சாதம் பிசைந்து கொண்டிருந்தாள்..
என்னடா..செல்லம்..
அவள் பேச வாய் எடுப்பதற்குள் அம்மா லதா அவளை கை கால்களை அலம்பி விடுகிறாள்..சட்டையை மாற்றிவிட்டு பாட்டி ...பாட்டி எனத் திரும்ப ஓடுகிறாள்.
அதற்குள் அப்பா அருண் உள்ளே வருவதை அம்மா பார்க்கிறாள்.
குட்டிமா பாட்டி ஸ்கூல இன்னைக்கு அந்த முயல் படத்தை பாட்டி காமிச்சாங்க மிஸ்.
பாட்டி முயல் நல்லா வேகமா ஓடுமா..
இங்க பாரு பாட்டி என அழைக்கிறாள்..
பாட்டி நாற்காலியில் அமர்ந்து இருக்காங்க..
அம்மாவும் அப்பாவும் பின்னாடி நிற்பதை அவள் கவனிக்கவில்லை.
தாத்தா நேர் எதிராக அங்கே அமர்ந்திருந்தாங்க...


குட்டிமா அழகா..

குட்டி முயலைப் பாருங்கள்...என்று கைகளை ஒன்றன் கீழ் ஒன்றாக வைத்து குட்டி என காண்பித்து பின் பாருங்கள் என கையை கண்கள் கிட்ட இருந்து நீட்டுகிறாள்...

சு..சுப்பாய் ஓடுது! என நின்ற இடத்தில் ஓடுகிறாள்.

குதி..த் குதி..த்து ஓடுது...என் சொல்லி கொண்டே குதிக்கிறாள்...
கூண்டுக்குள்ளே பதுங்குது.. என இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து பதுங்குவதை போல செய்கிறாள்..
குட்டி குட்டி பற்களால் என கையின் நுனி பகுதியில் ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் தொட்டு தொட்டு எடுக்கிறாள்...
புல்லைக் கொரித்து திண்ணுது என சொல்லிக் கொண்டே சாப்பிடுவது போல செய்கிறாள்..
பசுமை படர்ந்த தரையிலே..அழகாக இருகைகளையும் நீட்டி தரையை பார்க்கிறாள்...
பாய் ...ந் பாய்....ந்து ஓடுது..என பாட்டியிடம் வருகிறாள்...
ஒ..முயல் எல்லாம் அழகாய் செய்யுதே...
கை தட்டினாங்க பாட்டி கூடவே அம்மா அப்பா தாத்தா எல்லாரும் கைத்தட்டினவுடன் குட்டிமா வெட்கபட பாட்டியின் முந்தானையில் ஒளிகிறாள்.

குட்டிமாவும் இப்ப அழகா சாப்பிடணும் சரியா..
ம்..தலையாட்டுகிறாள்.
லதா அருணுக்கும் தாத்தாவிற்கு சாப்பாடு பரிமாறுகிறாள்.பாட்டி குட்டிமாவிற்கு ஊட்டி விடுகிறாள்.
அப்போ குட்டிமா கனவில பார்த்த எல்லா விலங்குகள்...அந்த யானை பெரிசா வருது...இப்படி என செய்கிறாள்..
பள்ளியில் சேர்ந்த சில நாளில் குட்டிமா நல்லா பாட்டு பாடுவதை எண்ணி
அருணுக்கு மிகுந்த மகிழ்ச்சி..
தாத்தாவும் அதையே அருணிடம் சொல்ல..அங்க நல்லா பார்த்து கொள்கிறார்கள்.பசங்க வருவதை பார்த்தாலே அழகாக இருக்கிறது.
குட்டிமா சாப்பிட்டு தூங்கிவிடுகிறாள்.
பாட்டியும் லதாவும் சாப்பிட்டு குட்டிமாவிற்கு சின்ன கவுண் தைக்கலாம் என சீக்கரம் வேலையை முடிக்கிறாங்க.
கோடை வெயில் அதிகமாக இருக்கிறது..சின்ன சின்ன கையில்லாத கவுண்
தைத்து அதிலே குட்டிமாவிற்கு பிடிச்ச முயல் படத்தை வரைந்து எம்ராய்டரி செய்திடலாம் என நினைச்சாங்க.
ஐடியாவோட நிக்காம...
பாட்டி துணியை வெட்டி தந்தாங்க..அதனை லதா தைக்க ஆரம்பிக்கிறாள்.
சின்ன சின்ன சுருங்கங்கள் வைக்க திரும்ப பாட்டி சொல்லித்தர லதா அதனை செய்கிறாள்...
அழகாய் ஒரு சின்ன கவுண் ரெடியாயிட்டு இருந்துச்சு...
மேல் பகுதியில் நடுவில ஒரு முயல் படத்தை லதா வரைந்தாள்..பின் அதன் கலர் நூலினால் எம்ராய்டரி போட உட்காருகிறாள்.
பால் வந்துவிடுகிறது...லதா அடுப்படியில் வேலை பார்க்கிறாள்.
குட்டிமா ......தூங்கி எழுந்து வந்து.....
(தொடரும்)

1 comment: