முயல் நரியிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே நேரத்தை வளத்தியது.பின் ஒர் இடத்தில் அமர்ந்து கொண்டது முயல்.அதனை பார்த்த நரி வா..வா..உனக்காக சிங்க ராஜா காத்துக் கொண்டிருக்கிறார் என்றது. ஆமாம் எப்படியும் சிங்கம் என்னை தின்றுவிட போகிறது..போலாம் இரு நரியே எனக் கூறியது. இப்படியே எவ்வளவு நேரம் உடகார்த்திருப்ப முயலே அப்பறம் அந்த சிங்கம் வெளியே வந்திடும் என பயத்தை ஏற்படுத்தியது நரி என்று சொல்லி நிறுத்தினாள் பாட்டி. பாட்டி அந்த முயல் போச்சா..சிங்கத்துகிட்ட...சொல்லுங்க... ஒ..ஆமா ஆமா சரி வா போகலாம் சொல்லி கிளம்பிடுச்சு முயல். அங்கே குகைக்குள் ரொம்ப கோபமா...முழங்கியது சிங்கம்..நேரம் ஆயிடுச்சு அதுக்கு ரொம்ப பசி எடுத்துச்சு.. ஏ முயலேன்னு கூப்பிடுது.முயலெ ஏன் இவ்வளவு நேரம் கேட்கிறது சிங்கம். நரி அப்படியே பார்க்கிறது. முயல் என்ன சொல்லுச்சு தெரியுமா.. உ ராஜா..அங்க இன்னொரு ராஜா என்னோட வந்த எல்லா முயலையும் சாப்பிட்டுடுச்சு.நான் மட்டும் தான் இங்க என் ராஜாட்ட போவேன் வந்திட்டுடேன் தலை ஆட்டி ஆட்டி முயல் இங்கையும் அங்கையும் கைக்காட்டி பேசுது. சிங்கம் நம்புச்சா பாட்டி.. சிங்கம் கேட்டுச்சு..இன்னொரு ராஜாவா..அது எங்க..நான் தானே இந்த காட்டிற்கு ராஜா என சத்தமா கத்தியது,பயந்து போன முயல் மெதுவா..எட்டி நின்று அங்க இருக்கிறது சிங்க ராஜா என்று சொன்னது. சரி வா முதல பார்க்கலாம் என்று கிளம்பியது. நரியும் சிங்கமும் இந்த முயல் பின்னாடி சென்றனர்.முயல் அந்த கிணற்றுக்கே அழைச்சிட்டு போகி..உள்ளே பாருங்க ராஜா..என்றது முயல். உள்ளே பெரும் முழக்கத்தோட எட்டி பார்த்தது சிங்கம்.அதோட சத்தமும் அதனையே தான் தண்ணீரில் பார்ப்பது தெரியாம ஆர்வத்தில உள்ளே குதிச்சுடுது சிங்கம்.. குட்டிமாவின் கண்கள் பளிச்சிடுகிறது. சிங்கத்தை தைரியமாக பேசி அழைத்து வந்த முயலை அந்த காட்டில உள்ள எல்லா விலங்கும் கொண்டாடி மகிழ்ந்தாங்க.. எல்லாரும் சந்தோஷமாக வாழலாம் இனிமே எந்த தொந்தரவு இல்லை என்ற மகிழ்ச்சியில் எல்லா மிருகங்களும்
கத்தின. என்று பாட்டி முடிக்க..இந்த கதையில் சிங்கம் எல்லாரையும்அடிச்சு சாப்பிட்டதால் அதுவும் ஒரு நாள் இறந்துடுச்சு குட்டிமா என்றாள். குட்டிகளில் தூக்கம் வருவதால் படுக்க வைத்தாள் பாட்டி.தாத்தாவும் கதை தாழிட்டு வந்து பேத்தி தூங்கியாச்சா என்று பார்க்கிறாள். குட்டிமாவின் உறக்கத்தில் எல்லா விலங்குகளுடன் ஆடி பாடி மகிழ்வது போல காட்சி தெரிகிறது,குட்டிமாவிற்கு கனவு என்று தெரியவில்லை. மறுநாள் காலை அம்மா பள்ளி செல்ல வேண்டும் என எழுப்பி விடுகிறாள்.அப்பொழுது தான் குட்டிமா கண்ணை கை வைத்து பார்க்கிறாள். அப்பாவோட பள்ளி செல்கிறாள். அங்கே தமிழ் பாடல் சொல்லி தருகிறார் ஆசிரியை.
குட்டி முயலைப் பாருங்கள்
சுறுசுறுப்பாய் ஓடுது!
குதித்து குதித்து ஓடுது
கூண்டுக்குள்ளே பதுங்குது
குட்டி குட்டி பற்களால்
புல்லைக் கொரித்து திண்ணுது
பசுமை படர்ந்த தரையிலே
பாய்ந்து பாய்ந்து ஓடுது..
ஆசிரியை செய்யும் செயல்களை அப்படியே பார்த்து செய்கிறாள் சந்தோஷினி.நேற்று அவள் கேட்ட கதை அவளுக்கு நினைவுக்கு வருகிறது. மீண்டும் மீண்டும் ஆசிரியை சொல்ல சொல்ல மாணவர்கள் சொல்லுகிறாகள்..சிலருக்கு சுறுசுறுப்பாய் என்ற வார்த்தை வரவில்லை. சு.சுப்பாய் என்றார்கள்.சொல்லி சொல்லி பார்க்கிறாள். பின்பு தாத்தா பள்ளி வாசலில் வந்து நிற்கிறார்.அவள் கண்கள் தேடுவது பாட்டியை...தா..த்..தா... என்று ஆவலாய் வருகிறாள்.தாத்தா குட்டிமாவை தூக்கி கொள்கிறார். குட்டிமா...நல்லா படிச்சிங்களா.. ம்..படிச்சேன் தாத்தா.. பாட்டி எங்க தாத்தா.. வீட்டில இருக்காங்க..சரி மிஸ்க்கு Thank youசொல்லிட்டியா.. போலாமா..என்றார். தாத்தாவோட பேசிக் கொண்டே வருகிறாள்.வீடு வந்ததும்...துள்ளிக் குதித்து பாட்டி...என அம்மாவை விட பாட்டியைத் தான் தேடுகிறாள்.
(தொடரும்)
No comments:
Post a Comment