Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Thursday, March 24, 2016

நினைவாற்றல் மேம்பட...ஓர் அரிய வாய்ப்பு.

( அறிமுகம்)INTRODUCTION ABOUT CLASS
இறை வணக்கம்….

ஒரு நிமிடம் அமைதியாய் சின் முத்ராவில் அதாவது…
படத்தில உள்ளதுபோல விரலகளை பிடித்து கொள்ளவும்..
இப்படி பிடிப்பதால் நினைவு சக்தியை அதிகரிக்க உதவும் , கவனக்குறைவைக் குறைக்கவும்,மன அமைதியை அதிகரிக்க உதவும்..
உங்களுக்கு பிடிச்ச சாமியை நினைச்சு உங்கள் மூச்சை மட்டும் கவனிங்க……
பிடிச்சிங்களா….சரி இப்போ நாம இந்த வகுப்பில என்ன கற்று கொள்ள போகிறோம் என்பதை பார்ப்போம்.


Wake Up! Wiithin.
Eradicates Viles…Enhances Values..
இது தான் நாம படிக்க போற இந்த கிளாசின் தலைப்பு அதாவது Wake Up! Wiithin.என்பது நம்முள்ளே உள்ளதை தட்டி எழுப்பிக்கொள்ளதான் நாம் இப்போ கற்றுக் கொள்ளப் போகிறோம்.எல்லாமே நமக்கு தெரியும் இருந்தாலும் நாம் எங்க எந்த இடத்தில நம்ம நினைவாற்றல இழக்கிறோம்..அதை எப்படி சரி செய்வது என்பது தான் முக்கியம். அதற்கு தகுந்த பயிற்சியும் முயற்சியும் இருந்தால் அதனை கண்டிப்பாக சரி செய்யலாம்……
இந்த வகுப்பில நாம் 12 தலைப்பில் கற்று கொள்ள் போகிறோம்….



TECHNIQUES
SPEED READING TECHNIQUES
SPEED WRITING TECHNIQUES
MEMORY TECHNIQUES
CONCENTRATION TECHNIQUES
HEALTH TIPS
EATING HABITS

THIRUKKURAL STORIES
DICTIONARY LEARNING
STORY TELLING OR SHARING OUR EXPERIENCES
MUDRAS
CHARACTER DEVELOPMENT
ACTIVITY GAMES

மேலே இருக்கும் டெக்னிக்ஸில் முதல் ஆறு டெக்னிக்ஸ் நான் என் அண்ணி Mrs.Sujatha Balasubramanian அவர்களிடம் ஒரலாக கற்றுக்கொண்டேன்..பின்பு அதனை எழுத்து வடிவமாக்கினேன் பின்பு மேலும் நான் கற்று கொண்ட சிலவற்றை சேர்த்தேன்….அடுத்துள்ள ஆறு தலைப்புகளும் முழுமையாக நான் உருவாக்கியது குழந்தைகள் ரிலாக்ஸா பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாகியது…
நான் கற்றது கற்றுக்கொண்டே இருப்பது எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இதில் பகிர்ந்து கொள்கிறேன் …
பயிற்சியில் நீங்கள் பார்க்கும் தவறுகள் சுட்டி காட்டலாம…. மேலும் சந்தேககள் உடனடியாக கேட்கலாம்
சந்தேகம் வந்தாலே நம்ம மனசு அதுலே நின்னுடும் என்பது என் கருத்து… மற்ற கிளாஸ் போல சந்தேகத்தை கேட்க பயம் வேண்டாம்
ஏனென்றால் எப்பொழுதும் நாம் சொல்லிக்கொள்ள வேண்டிய
 “ALWAYS HAVE NO FEAR”
FEAR IS SIN (பயம் ஒரு பாவச்செயல்)
FEAR IS HELL( பயம் நரகம்)
FEAR IS UNRIGHTEOUSNESS(தவறான செயல்)
FEAR IS WRONG LIFE(தவறான வாழ்க்கை)
FEAR IS DEATH(இறப்பிற்கு சமமானது)
TELL THIS TO EVERYBODY “HAVE NO FEAR”
எதற்கு பயப்பட வேண்டுமோ அதற்கு தான் பயப்படணும்….
அடுத்த ரூம் போக….ஒரு பொருளை உடைச்சா அம்மாட்ட திட்டுவாங்கன்னு பயந்து சொல்லாமல் மறைப்பது….சந்தேகம் கேட்ட மிஸ் திட்டுவாங்கன்னு போன்ற பயத்திலிருந்து வெளியே வாங்க….
எதை வேண்டாம் சொல்லுறோம அதை வேணும் வேணும் நினைக்க தூண்டும் நம் மனம் அதனால தக்க முயற்சி செய்து மனதையும் வெல்வோம்.மனிதமாய் வாழ்வோம்
என்னிடம் இந்த வகுப்பில நடத்துவதில் சந்தேகம் ஏற்ப்பட்டால் நிச்சயம் கேட்கலாம் அப்பறமா சொல்றேன் இல நடுவில் கேட்காதேன்னு சொல்ல மாட்டேன்…
முன்னேற்றம் அடைய விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்...

No comments:

Post a Comment