Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Friday, August 5, 2016

ஞாபகமறதியின் வகைகள்:-

குறுக்கீடு:-
இந்த வார்த்தையே நமக்கு புரிந்திருக்கும்….பெரியவர்கள் பேசும் போதும் அடிக்கடி கூறுவார்கள்..குறுக்க பேசாதே….அது இந்த வகை மறதியை சார்ந்தது தான்……
இதில இரண்டு வகை சொல்லப்படுகிறது…
·         உயிப்பான தடைப்படுதல்,
·         போனவற்றை தடைபடுதல் ஆகும்.
உயிர்ப்பான தடைபடுதல்:-
புதுமையான விஷயம் ஆனால் பழைய ஞாபகம் என்று சொல்லலாம்….
உதாரணமாக நம் பழைய வீடை புதுசா மாற்றி அமைத்தாலும் அங்கு நடந்த பழைய விஷயங்கள் ஞாபகத்திற்கு வரும்…..
புது சிந்தனையில் பழையது குறுக்கீடு ஆவது தான் இந்த வகை மறதி…
போனவற்றை தடைபடுதல்:-
பழைய விஷயம் ஆனால் புது விஷயத்தோடு குறுக்கிடுவதை சொல்லலாம்…
இதற்கு உதாரணமாக கணினியில் உள்ள சாப்ட்வர் அப்டேட் பண்ணுவது இல்லையென்றால் அதீத அட்வான்ஸ் வெர்சனை பயன்படுத்தும் போது ஏற்படும் குறுக்கீடு தான் இந்த வகை மறதி…
இதனை தவர்க்க ஒப்பிட்டு பார்த்தலை தவிர்க்க வேண்டும்…
ஒப்பிடுவதால் எந்த பலனும் இல்லை குழப்பமும் ஆற்றாமையும் தான் மிஞ்சும் ஆகையால் நம் வளர்ச்சிக்கு ஒப்பிடுதல் தேவை ஆனால் அதே வளர்ச்சிக்கு குறுக்கீடாமல் தவிர்ப்பது நம் கையில் தான் உள்ளது…
குறுக்கீடே குற்றம்…. என உணர்வோம்
வாழ்வில் முன்னேறுவோம்…


சார்ந்து கோல்:-
எதையாவது நாம் சார்ந்து இருப்பது தான் இந்த சார்ந்து கோல்…
அதாவது நாம் பலமுறை பார்த்திருக்கலாம் மேடை பேச்சாளர் பலர் ….
ஒரு தாளில் எழுதி வைத்துக்கொண்டு பேசுவது…எவ்வளவு பெரிய பேச்சாளர் வெகுசிலர் கூட அந்த தாளை சார்ந்து இருப்பது….
இப்படி தாளோ…மின் சாதனங்களோ……என எதையாவது சார்ந்து இருப்பது பலரின் இயல்பு…..
இது ஏனென்றால் தான் சொல்ல வரும் கருத்தோ, பாடல் வரியோ மறந்துவிடுமோ என்ற எண்ணம் தான்..
கோடிக்கணக்கான விஷயங்களை நாம் தக்க வைத்து கொள்ளமுடியும் என நாம் முதலில் நமது மூளை,புத்தி,அறிவு,மனதால் நம்ப வேண்டும்.என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என தன்னம்பிக்கையாக பேச இயலும்…
ஆனால் ஞாபகமாக எல்லாவற்றையும் பேச உதவுவது சார்ந்து கோல்.
சின்ன சின்ன குழந்தைகள் ஞாபகமாக எல்லா வரிகளையும் மனதில் நிறுத்தி பாட இயலும்போது நம்மால் ஏன் முடியாது..மேலும் இந்த விஷயத்தில் நாம் யோசிக்க வேண்டியது என்னவென்றால் குழந்தை பாடலை கற்றுக்கொள்ளும் போது திரும்ப திரும்ப பாடி பழக பழக துல்லியமாக பாட வருகிறது என்பது தான்….
அதுபோல இந்த சார்ந்து கோலில் இருந்து விடுபட நாம் திரும்ப திரும்ப  ஞாபகபடுத்தி பார்த்து எதையுமே சார்ந்து இல்லாமல் இந்த வகைமறதியில் இருந்து வெளிவருவோம்.




நன்றி…சபதினம்……அன்பு நல்வாழ்த்துக்கள்………………………….

ஞாபகமறதியின் வகைகள்:-

அடக்குமுறை:-
பொதுவாக இந்த அடக்குமுறை என்பது நாம் துன்பப்பட்டவைகளுக்கு மட்டுமே என எடுத்துக் கொள்ளலாம்..
ஏதோ ஒரு விஷயத்தில் நாம் அவமானப்படுத்தப்படும்போதோ அல்லது அசிங்கபடுத்தும்போதோ அந்த விஷயம் நம் நினைவில் இருக்காது…அது மறைந்து விடும். இந்த மறதி மிகவும் நல்ல மறதின்னு சொல்லலாம்…
இதுவும் ஒரு மறதியின் வகை என நாம் தெரிந்து கொள்வதற்க்காக இந்த வகையை பற்றி சொல்கிறேன்..
ஏன் நல்ல மறதி என்று சொல்லுகிறேன் என நினைக்கலாம்…
ஆமாம் நாம் அசிங்கபட்டதோ அவமானபட்டதோ நமக்கே வெறுப்பை அளிக்ககூடியது ஆகையால மறந்துவிடுதல் நல்லது தானே…
ஆனால் அப்படி நாம் சும்மா விடுவது இல்லை என்பதே உண்மை.
அதனை திரும்ப திரும்ப நினைவுக்கு கொண்டுவந்து…மேலும் மேலும் சிந்தித்து பழிவாங்கும் உணர்ச்சியோ அல்லது திரும்ப நாம் பட்ட ஓர் விஷயம் நமக்கு ஆறாத ரணமாக மாறி திரும்ப ஒரு கை பார்க்காம நாம விடுவதில்லை….இதனால் இழப்பு நமக்கும் நம்மை சேர்ந்தவர்க்கும் தான் என உணர்ந்து இந்த மறதியை தானே இயங்க வைப்பது தான் சரின்னு நாம் விலகி கொள்வது நம் வாழ்க்கைக்கு நல்லது..மேலும் முன்னேறி செல்லலாம்..
அவமானப்பட்டதால் முன்னேற்றம் அடைந்திருப்போம்..முன்னேற்றம் அடைந்த பின்னர் ஒர் உத்வேகத்தில நாம் முன்னேறி செல்ல இந்த அவமானம் தான் காரணமாகலாம்…யதார்த்திற்கு மாறாக நன்றி சொல்வோம் அன்று…
அடக்குமுறை என்பதும் ஓர் வகை அதனை அப்படியே இயங்க வைப்போம்..முன்னேறி செல்வோம்…உணர்ச்சியை அடக்கும் அடக்குமுறை…..:)

விலகல்:-
    திடீரென ஒரு சத்தமோ அல்லது யாராவது நம்மை கேள்வி கேட்டாலோ சட்டுன்னு ஞாபகமில்லாமல் மறந்து போய்விடுவது தான் விலகல் என்பது….
ஞாபகத்தை விட்டு விலகி எதுவுமே மனதில் இல்லாத ஓர் உணர்வு…பரிட்சை எழுதும் அறைக்குள் சென்றவுடன் ஒன்றுமே ஞாபகமில்லாத ஓர் உணர்வு வருமில்ல .. அது தான்….
இந்த உணர்வு ஓர் பதட்டம் அல்லது பயத்தினால் வருகிறது….இதிலிருந்து நாம் விலக விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்..
எது சரியாக ஞாபகம் இருக்க வேண்டுமோ அது விலகிவிடுவதால் மறதி..மேலும் மீண்டும் மீண்டும் கேள்வி கேடபதாலும் மறந்துவிடுதல்..இவையெல்லாம் விலகல் வகையை சேர்ந்தது..
இதற்கு அடுத்து நடக்க இருப்பது பற்றிய ஒரு வகையில் நம்மை நாம் தயார் நிலையில் வைதிருப்பது முக்கியம்…
இதற்கு ஓர் கதையின் மூலம் புரிய வைக்க விரும்புகிறேன்….
சென்மாஸ்டர்ன்னு ஒருத்தர் இருந்தார்….அவர் கிட்ட நிறைய மாணவர்கள் பயின்று வந்தாங்க…அந்த நேரத்தில ஒரு ராஜா தன் மகனிடம் “நீ எல்லா வித்தையையும் கற்றுக்கொண்டாய் ஒரு முறை சென்மாஸ்டரிடம் போய் பயிற்சி எடுத்துவிட்டு வா” என்றார்……
அந்த மகனும் சென்மாஸ்டரிடம்…..வருகிறான்…
ராஜாவின் மகனல்லவா…தனக்கு அதீத மரியாதை கிடைக்கும் என எண்ணிக் கொண்டே அந்த பாட சாலைக்கு போகிறான்..
அக்காலத்தில் எல்லாம் குரு சீடன் என்று தான் சொல்லுவார்கள்..
வீட்டிற்கு வர இயலாது சீடன் பாடம் முடித்த பின்னர் குருவே சீடனை சென்று வா என்று கூறினால் தான் வீட்டிற்கு போகலாம்……
ராஜாவின் மகன் பெரிய எதிர்ப்பார்ப்போடுஅந்த சென்மாஸ்டர் ஆஸ்ரமத்திற்கு போகிறான்..அங்கு சென்று பார்த்தால் எல்லா சீடர்களும் உள்ளனர்..குருவை மட்டும் காணவில்லை…இவன் காத்திருந்தான்…திடீரென அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி விழுந்தது…யாரென திரும்பி பார்த்தான்…குரு……வாயடைத்து நின்றான்..அக்காலத்தில் மிகுந்த மரியாதையோடு தான் இருப்பர்..எதிர்த்து பேச தயக்கம் இருக்கும்….
“என்ன பார்க்கிறாய்? இப்படி தான் அடிப்பேன்…அடி வாங்காமல் தப்பித்துக்கொள்வது உன்னுடைய சாமர்த்தியம்” என்றார் குரு
தன் அப்பா ராஜாவிடமும் சொல்ல இயலாது….தவித்து கொண்டு இருந்தான்
இருந்தான் மகன்..எங்கே வந்து அடித்து விட போகிறார் என பயந்தே ஓரிரு நாட்கள் கழித்தான்……
இப்படியே மூன்று நாட்கள் ஆகிவிட்டது….ராஜாவின் மகன் அல்லவா..சொகுசாய் வாழ்ந்துவிட்டு இப்பொழுது தூக்கமில்லாமல் எங்கிருந்து அடிவிழுமோ என  பயந்து பயந்து சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே இருக்கிறான்…..
சென்மாஸ்டர் சீடர்களுக்கு சொல்லி கொடுக்க வரும் பொழுது நாம் ஓய்வு எடுத்து கொள்ளலாம் என எண்ணினான்…அவரோ வரவில்லை….எந்த பக்கம் வருவார் என தயங்கி சுற்றி சற்றி தன்முதுகு பக்கம் முன் பக்கமும் ஒரு கையால் அடித்தால் எவ்வளவு தூரமோ அந்த தூரம் வரை விழிப்பாய் இருந்தான்…….தூக்கத்தை மறந்து தன்னை நிரூபிக்க அவன் உத்வேகத்தோடு அசராமல் காத்து கொண்டிருந்த்தான்….
இப்படியே ஏழு நாட்கள் ஆகிவிட்டது…
திடீரென மேலிருந்து ஒரு குச்சியால் உச்சந்தலையில் ஓங்கி அடித்து விட்டார் சென்மாஸ்டர்….இதனை எதிர்பாராத அவன் மிகுந்த கோபத்தோடு மேலே பார்த்தான்…அங்கே குருசென்மாஸ்டர்….கோபத்தை அடக்கினான்…
”நான் தான் என்னிடம் அடி வாங்காமல் தப்பித்துக்கொள் என முன்பே கூறினேன் அல்லவா?” என்றார் குருசென்மாஸ்டர்…
ஒரு வழியாக ஒப்புக்கொண்டு மீண்டும் தயார் ஆனான்..இப்பொழுது அவனுடைய பார்வை அகலாக்கினான்….ஒரு குச்சி அளவு நீண்ட  பாதுகாப்போடு விழித்து காத்திருந்தான்….பத்து நாட்களாயிற்று….
அவனால் முடியவில்லை..வெளியில் சொல்லவுமில்லை மென்று முழுங்கினான்…..
ஒரு கத்தி எடுத்தான் இந்த குருவை போட்டு தள்ளிவிடலாம் என முடிவெடுத்தான்….கையில் அரிவாளோடு கிளம்பினான்….
குரு சென்மாஸ்டரோ ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார்…..
கழுத்திடம் கத்தியை நீட்டினான்………..
சென்மாஸ்டர் கண் விழித்தார்…..படாரென கத்தியை கீழே போட்டான்….
அவனால் பேசவே இயலவில்லை…. தவித்தான்…..
ஆனாலும் எப்படி சரியாக கண்விழித்தார் என அவன் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டான்….
எப்படி என கேடகவும் செய்தான்…அவரோ விழிப்புணர்வே காரணம்…
நீ என்னை கொள்வதற்கு வருவாய் என நான் முதல் நாளே எதிர்ப்பார்த்தேன்….நீ கொஞ்சம் தாமதம் எனினும் தகுதி அடைந்துவிட்டாய்…
எப்ப எந்த நாட்டு எதிரியும் தாக்குவதற்கு வரலாம் அப்போது விழிப்போடு இருக்க வேண்டியது நாட்டின் அரசனே….ஆகையால் தான் உனக்கு இந்த பயிற்சி அளித்தேன்…நீ சென்று வா என கூறினார்..

இந்த கதையின் மூலம் நாம் அறிந்து கொண்டதும் இவ்விழிப்புணர்ச்சியே….
அடுத்து என்ன நிகழலாம்…அப்படி நிகழ்ந்தால் என்ன நடக்கும்..என ஒவ்வொருவரும் தங்களை பற்றி மட்டும் சிந்திக்காமல் எதிரில் உள்ளவர் இடத்திலும் சிந்தித்து இந்த விலகலை தவிர்த்து சிற்ப்போடு வாழ்வோம்….

சுபதினம் …அன்பு நல்வாழ்த்துக்கள்….





வகுப்பு -6 ஞாபகமறதி என்பது என்ன?

ஞாபகம் என்பதோட நாம அடிக்கடி உபயோகப்படுத்துகிற ஒரு வார்த்தை ஞாபகமறதி என்பது தான்….. அதனால நாம் இப்பொழுது மறதி என்பதில் எத்தைனையோ வகை இருக்கிறது…….
அதில நாம முக்கியமாக, அடிப்படையாக சொல்லக்கூடிய ஒரு ஐந்து வகைகள் மட்டுமே நாம பார்க்க போகிறோம்…
சிதைவு
அடக்குமுறை
விலகல்
சார்ந்து கோல்
உயிர்ப்பான தடைபடுதல்àகுறுக்கீடு
போனவற்றை தடைபடுதல்à
இந்த மறதியின் வகைகளை நாம்
கற்பதன் மூலம் நாம் எந்த வகையை சேர்ந்து
இருக்கிறோம்,அதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை
அறிந்து வாழ்வின் மேன்மையோடு விழிப்புண்ர்வோடு
சிந்தித்து வாழ்வோம்
நன்றிசுபதினம் நல்வாழ்த்துக்கள்

சிறந்ததில் நம்பிக்கை வைத்து 
சிறப்புடன் வாழ வாழ்த்துகள்








சிதைவு:-
நமக்கு தேவையில்லை நாம் தூக்கி எரியக்கூடிய ஒரு சிதைவு  என்று சொல்லலாம்.நாம பயன்படுத்தாத பாதை என்று அர்த்தம் கொள்ளலாம்….
எப்பவுமே எந்த ஒரு விஷயமும் நம்முடைய பயன்பாட்டில் இருந்தால் அது நம் நினைவில் நிரந்தரமாக தங்கி விடுகிறது.அதனை பற்றி யாராவது நம்மை கேட்டால் உடனே நாம் வெகுசுலபமாக சொல்லி விடுகிறோம்.அதே விஷயம்
நம் பயன்பாட்டில் இருந்தாலும் ஒரு சில நாட்கள் கடந்ததால் அதனை தாண்டி நாம் வேறு ஒரு விஷயத்தில் பயணித்திருப்போம்..ஆகையால் அந்த விஷ்யம் இப்பொழுது பழைய விஷயம் ஆகிவிடுகிறது..எனினும் நமக்கு தேவை என்ற எண்ணம் மட்டுமுள்ளது..நம்ம ஸ்டோர் ரூம் போல…
நாம் துணிகளை அடுக்கி வைப்பது போல ஒன்று மேல் இன்னொன்று என விஷயத்தை அடுக்கி வைக்கிறோம்…அடியில் உள்ள ஒரு விஷயம் தேவைப்படும் போது நாம் திணறுகிறோம்.நம்மீதே நமக்கு ஒரு சில நேரங்களில் கோபம் வரதொடங்குகிறது…
இதனை தவிர்க்க நாம் அந்த துணியை எடுப்பது போல அடியில் இருப்பதை உருவினால் சிதைவு தானே ஒவ்வொன்றையும் எடுத்து வைத்துவிட்டு பின் அடியில் உள்ளதை எடுத்தால் நமக்கு சிதைவில்லாமல் கிடைக்கும்,இருந்தும் நேரவிரயம் ஆகலாம்..ஆகையால் எந்த விஷயமும் நாம் அப்ப அப்ப பயன்பாட்டில் வைத்திருந்தோம் என்றால் இச்சிதைவு ஏற்படாது காத்துக்கொள்ளலாம்.மேலும் குப்பை போல எல்லாவற்றையும் நம் மனதில் நிறுத்தி வைக்காமல் வீட்டை சுத்தம் செய்வது போல மனதை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்..
வீட்டில் ஓர் அறையை உபயோகப்படுத்தாமல் வைத்திருக்கிறோம் என்றால் அங்கு ஒரு 10 நாள் சென்று பார்த்தால் எப்படி இருக்கும்…சிந்தித்து பாருங்கள்..
ஒரே தூசியும்…ஒட்டடையும் நிறைந்திருக்கும்…மனதை தெளிவாக வைக்காமல்
நம் மனதில் நாம் தேவையில்லாத விஷயங்களை போட்டு திணிப்பதால் நாம் மறதியில் தவிக்கிறோம்..
பயன்படுத்தாத பாதை என்றால் முட்செடிகளில் புல்லும் விளைந்து பாதையை மறைத்துவிடும் அதுபோல நம் நினைவை மறைப்பது சிதைவு…
இதனை சரி செய்ய நாம் அடிக்கடி நினைவில் வைத்திருப்பது..மேலும் மனிதன் நடமாடும் போது தான் வழிகளில் பாதை சரியாகும்..அது போல தேவையில்லாததை விட்டுவிட்டு தேவையுள்ளதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்வோம்.மனம் ஒரு குப்பைத்தொட்டி அல்ல என்பதை நினைவில் கொள்வோம்.சிதைவு ஏற்படுவதை தவிர்ப்போம்.
                     
நன்றி…சுபதினம்..நல்வாழ்த்துக்கள்…
சின்னவர் அப்ப அப்ப காணாமல் போய்விடுகிறார் அவரைதேடும் வேலையால் கொஞ்சம் தாமதம்…வரவில்லை..