Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Wednesday, July 6, 2016

வகுப்பு-2 நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?

வகுப்பு-2
நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
“நினைவாற்றல் என்பது ஒரு திறமை.சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை.தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்.”
நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன.
அவை:-
 தன்னம்பிக்கை
 ஆர்வம்
 செயல் ஊக்கம்
 விழிப்புணர்வு
 புரிந்துகொள்ளல்
 உடல் நலம்.
இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.
1. தன்னம்பிக்கை:-
”என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது.எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை முதலில் வேண்டும்.
“ நான் எப்படி தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ,எனக்கு ஞாபக சக்தியே சற்று
குறைவாகத்தான் இருக்கிறது.அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது” என்று தங்களைக் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.
“நினைவாற்றல்” என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த,பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும்.
இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு,நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!2-ஆர்வம்:-
ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால்,பதிய வைத்தால் நினைவில் நிற்கும்.
3-செயல் ஊக்கம்:-
இந்த செயதிகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.
உதாரணத்திற்கு “ஹோட்டல் ராயலுக்கு நாளை காலை 4 மணிக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு 5 லட்சம் தரப்படும்” என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் நீங்கள் மறந்து விடுவீர்களா?
தேவையை , அவசியத்தை நன்றாக உணர்ந்த விசயங்கள் நன்றாகப் பதிகின்றன.
4 – விழிப்புணர்வு:-
மனம் விழிப்பு நிலையில் இருக்கும்போது கவனமும், ஒருமைப்பாடும் மிகச் சிறந்து இருக்கும். விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைப்புரியும்.
என்னை பொறுத்த வரையில் முத்திரைகளை நன்றாக கற்றுக் கொண்டு நம் உடல்நிலைக்கு ஏற்றவாறு அதனை தொடர்ந்து செய்து வந்தால் மனம் குறுகிய காலத்தில் சொல்லப் போனால் ஒரு சில நிமிடங்களில் பயன் அடையலாம்.
ஆரொக்கியமாய் வாழ அறுசுவை உணவு சாப்பிடுவது மிக அவசியம்.அதனை பற்றி பின்பு பார்ப்போம்.
5 – புரிந்துகொள்ளல்:-
புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன்.புரியாவிட்டால் அல்லது தெரியாவிட்டால் கூச்சம்,அச்சம்,தயக்கம் இல்லாமல் 
ஏன்? எதற்கு?எப்படி? எவ்வாறு? எங்கே? யார்? போன்ற கேள்விகளை கேட்டு தெளிவு பெற்று புரிந்து கொள்ளல் வேண்டும். 
6 – உடல் ஆரோக்கியம்:-
உடல் ஆரொக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்து இருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும்.
ஆரொக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.
• தக்க உணவு
• சரியான உறக்கம்
• முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
சத்தான உணவுகளை கொடுப்பதன் மூலம்
அனைவருக்கும் ஞாபகத்திறனை அதிகரிக்கலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
அதனை பற்றி அடுத்த வகுப்பில் பார்க்கலாம்.
நன்றி….சுபதினம்.

No comments:

Post a Comment