இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்!வாங்க 24 ஆவது பகுதியில் என்ன சொல்லியுள்ளார் என்பதை பார்ப்போம்!😊👍
பேசும் விதம் ரொம்ப முக்கியமாக கருதபடுகிறது...
கோபமாக பேசுவதோ அல்லது சாந்தமாக பேசுவதோ....
என்பதில் இல்லை
ஆனால் அதற்கு அப்பாற்பட்டது அந்த பேச்சு....வீண் பேச்சாக,
பயனற்ற பேச்சாக இருக்க கூடாது என்பதில் கவனம் வேண்டும்.
இதற்கு தான் வள்ளுவர் கூறியதை ஆசிரியர் மேற்க்கோள் காட்டியிருந்தார்..இதோ
நம்மை எப்படி நினைப்பர் என்பதை அருமையாக
எடுத்துக் கூறியுள்ளார்...
அடிப்படை விசயமே அறம் தானே!
தேவையில்லாத விசயங்கள்,அத்தியாவசியம் இல்லாதவற்றை தவிர்த்து நாம் நம் நேரத்தை பொக்கிஷமாக கருதினால் நிச்சயம் அது பயனுள்ளதாக செலவு செய்வோம் என்பதில் ஐயமில்லை! ⏰⏱️👍
நல்வழியில் யோசிப்போம்!
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை கொள்வோம்!
- தொடர்ந்து வாசித்த விசயத்தை யோசிப்போம்
No comments:
Post a Comment