இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்..
ஓன்பதாவது பகுதியில் ஆசிரியர் என்ன சொல்லி
இருக்கிறார் என பார்ப்போம் வாங்க!😊📕
இப்படி ஒன்று யாருக்குமே இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றலாம்...நிலையானதாக மாற்ற இயலுமா என்றால் நிச்சயம் இயலும் என்றே ஆசிரியர் மிக தெளிவாக சின்ன சின்ன உதாரணங்களை கூறி புரிய வைத்துள்ளார்...எங்கு பாவங்கள் இல்லையோ அங்கு நிலையான மகிழ்ச்சி இருக்கும் என்கிறார்..
ஆசையினால்...
எதிர்ப்பார்பதினால்..
சுயநலத்தால்....
ஆணவத்தால்...
அப்பப்பா..நமக்கே தெரியாமல் நாம் செய்யும் சின்ன சின்ன விசயங்கள் தான் துன்பமென்னும் இருளில் சுழல்கிறோம்...பேரருளை பெற வெளிச்சத்தை நோக்கி நகர்ந்தும் நிழல் என்னும் துன்பம் அழியக்கூடியது என உணராமல் இருக்கலாமா? 🤔📖
துன்பத்தை கடந்து சுயநலத்தை சிதறியடித்து "நான்" என்கிற அகம்பாவத்தை உதறிவிட்டு மகிழ்ச்சி என்கிற தேவதை அன்பு என்கிற உணர்வையே கரம்பிடிக்கிறாள் அத்தனை அருமையான வரிகளின் ஆழத்தை உணரும் போது அத்தகைய ஆனந்தம் நம் மனதில் புகுவதை உணர முடியும்..தூய்மையான அன்பே எல்லையில்லா இன்பத்தை தரவல்லது..😀👍
அதே போல வாழ்வில் எப்பொழுது துன்பம் நின்றுவிடும் என்பதற்கு அழகாக் கூறுகிறார்...நான் என்கிற அகம்பாவம் ஆட்டிவைத்து துன்பத்தில் துவல்கிறோம்...அரசியிலிருந்து உமி நீக்கியவுடன் கதிர் அடிக்கும் இயந்திரம் தன் வேலையை நிறுத்திவிடும்....அது போல நம் மனதில் உள்ள மனமாசுகள் நீங்கியவுடன்...துன்பமும் நீங்கிவிடும்... அழுக்கு (துன்பம்)துர்நாற்றமே பரிசுத்தம் (இன்பம்)என்னும் நறுமணமே எப்போதும் வீச நாம் நம் வாழ்வியலில் நன்மையை செய்து மேன்மை பெறுவோம்!😊👍
We thought that Attaining the goals gives utmost happiness...
But the Real Happiness is where consoling the mind
which is in sad mood or suffers in pain...
நமக்கான இலக்கில் கவனம் செலுத்தும் நாம் இனியாவது ஆறுதலான வார்த்தைகளிலும் கவனம் செலுத்தி நிலையான மகிழ்ச்சியை பெறுவோம்...மிக்க நன்றி🙏😊👍
- தொடர்ந்து வாசிப்போம்
No comments:
Post a Comment