இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்...
வாங்க பார்ப்போம்! ஆறாவது பகுதியில் அருமையான விசயத்தை தெரிந்து கொள்ளலாம்...😊👍
சாதாரணமாக நாம் இரக்கம் என்பது பரிதாபத்தில் வருவதாக தான் நாம் நினைப்போம்!ஆனால் இந்த பகுதியில் அருமையாக ஒருவரிடமும் இரக்கமற்ற விதத்தில் அதாவது கோபத்திலோ ஆத்திரத்திலோ வார்த்தைகளை கொட்டக் கூடாது....வலியை கேட்டு உணர்வதிலில்லை இரக்கம் என்பது தானாக அந்த வலியை உணர்வதில் உள்ளது....மேலும் கேள்விகளை கேட்டு கேட்டு ஒருவரின் மனதை நோகடிப்பதும் இரக்கமற்ற பாவச்செயலாக கருதப்படும் என்பது அறிய முடிந்தது.❌⁉️❓❗❎😷🤐
இந்த படத்தில் காண்பது போல ஒருவருக்கு உண்மையில் தவறாகவோ, எதிரியாகவோ நாம் இரக்கமற்ற நிலையில் உதரி தள்ளுவதும் தவறு... ஏனென்றால் மிகுந்த துன்பத்திற்கு ஆளாவோம் என் எச்சரிக்கை பதிவாக மனதில் பதிய வைக்கிறார் ஆசிரியர்...இரக்கமற்ற கடுஞ்சொல் பேசுவதோ, கடுமையாக நடத்துவதோ நாமே நம்மை படுங்குழியில் விழுவது போல் ஆகுமாம்...கடவுள்... நாம்.... நம்மை பண்படுத்த பல சந்தர்பங்களை ஏற்படுத்தி தருகிறார் அதனை நாம் அதில் கற்று கொள்வது ஒவ்வொரு குணமும் தான்!யோசித்து பார்த்தால் நிச்சயம் புரியும்!
தவறை விடுத்து போனால் போகட்டும் விடு என்போம்... அதனையே முழுமனதோடு எவர் ஒருவர் செய்தாலும் செய்த பாவங்களில் இருந்து விடுபட்டு பேரருளை பெற வழிவகை செய்யும்...துன்ப நிலையிலும் காத்து நிற்குமாம் இரக்ககுணம்..அருமை...தவறு செய்து விட்டாலும் எதார்த்தமாக சகஜமாக நடந்து கொள்ளும் மன பக்குவம் வேண்டும்...ஆணவம் அழிந்து இரக்ககுணத்தோடு இன்னும் நம்மை மேம்படுத்தி கொள்ள உதவும்...மொத்தத்தில் நாம் நம்மையே பண்படுத்துகிறோம் என்ற அற்புதம் இரக்ககுணம்...😊👍
பசிக்கும் என உணவளிப்பது மட்டும் இரக்க குணம் அல்ல... சாதரணமாக பழகுபவரின் வாழ்வியலின் தரத்தை அல்ல அதாவது நாம் யாரை எதிரி என நினைக்கிறொமோ அவரின் வாழ்வியலையின் தரத்தை உயர்த்திவிடுவதும் இரக்ககுணம்..அதற்கு பெரிய மனது வேண்டுமல்லவா... தயாராகுவோம் அதனை பெற வேண்டும் என முயற்சி செய்து நம்மால் முடியும் என காட்டுவோம்!
இரக்கம் கொள்வோம்!
இனிமையாக பழகி திருத்த முயற்சிப்போம்...
தன்னம்பிக்கை தருவோம்!
தாராள மனதோடு நடந்து நாமும் முன்னேறுவோம்!
மிக்க நன்றி...😊👍🙏
No comments:
Post a Comment