இந்த புத்தகம் தான் படித்து கொண்டு இருக்கிறோம்...வாங்க!எட்டாவது பகுதியில் மிக அற்புதமான வாழ்வியல் தேவையானதை சொல்லியுள்ளார் என்பதை உணர முடிகிறது...😊👍
அதுவும் இக்காலகட்டத்தில் தீங்கு இல்லாத உலகமா?
ஒருவர் மீது நமக்கு கோபம் ஏற்படுகின்றது...
அக்கோபத்தை வெளிக்காட்டாத போது
அது கடுங்கோபமாக உருவெடுக்கிறது...
அப்படி அது எடுத்த பிறகு அந்த நிலையில் வெறுப்பு உண்டாகிறது..
அந்த வெறுப்பை அவர் மீது காட்டியோ
காட்டாமல் இருக்கும் போது ...
அப்பிரச்சனை முடிவடைந்து மன்னித்துவிட்டால் பின் அதனை மறந்த்தால் காழ்புணர்ச்சி ஏற்படாமல்
தடுக்க இயலும்...
தூய்மையான,சாந்தமான மனநிலையில்
நாம் இருந்தால் பேரன்பின் அருளினால் நாம்
தீங்கில்லாத உலகை காணமுடியுமே!
கோபத்தை காட்டமுடியாத என்றால் வெறுப்பாக மாற இயலும் என்பதை நினைவில் கொண்டால் அதாவது கோபப்படாமல் இருப்பது மற்றும் பிறர் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பது நன்று ...
அதுவே சிறந்த வழியில் சுமுகமாக செல்லும் நம் வாழ்க்கை!
முதலில் நல்லதும் கெட்டதும் சந்திக்கும் போது தடுமாற்றம் அடைகிறோம்...எது வந்தாலும் அடுத்து என்ன ? என்றே தோன்றும்...நன்மை வந்தால் தீமை வந்திடும் என்றும் தீமை வந்தால் நன்மை வரும் என்ற நம்பிக்கையில் சுழல்கிறோம்...😊😞
அதுவே ஒரு கட்டத்தில் நமக்கு பக்குவமான அறிவு அடையும் போது...அதாவது அறியாமை என்பது விலகி நாம் தெளிவு அடையும் போது தடுமாற்றம் இருக்காது....ஆனால் நன்மை தீமை புரிந்து இருக்கும்... சமநிலை நோக்கோடு கையாளத் தெரியும்...இருந்தாலும் ஒரு வித உணர்வே வெளிக்காட்டுவோம்! நன்மை என்றால் சிரிப்பு தீமை என்றால் வருத்தம் என்பதை வெளிக்காட்டுகிறோம்..💯✅💯❎
பேரறிவை ,பேரருள் பெற்று தீங்கு என்பதனை நாம்
அனுதாபம், பாசப்பிணப்பு ,அன்பு என்பதன்
மூலம் நன்மையாக மாற்றி
ஒரு புன்னகையோடு நன்மையோ தீமையோ
கையாளும் வீதம் மாற்றி
நாம் மற்றவர்களின் செயலால் நம்மை இழக்காமல் விழிப்புணர்வோடு பொறுமை
காத்து சகித்து பேரருள் பெறுவோம்!
புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக எல்லாம் நன்மைக்கே!
என்று அன்புடன் புன்னகையுடன்
வாழ்வோம் வளமாக!
மிக்க நன்றி🙏அன்பு நல்வாழ்த்துக்கள்😊👍
- தொடர்ந்து வாசிப்போம்
No comments:
Post a Comment