இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம் .. ஏழாவது பகுதியில் ஆசிரியர் என்ன கூறுகிறார் என பார்போம்...வாங்க!
இந்த பகுதி ஒரு பெரிய பகுதியாக கருதுகிறேன்...
ஒருவருக்கு மன்னிக்கும் தன்மை வந்துவிட்டால் அனைத்து அவர் வாழ்வில் வெற்றி என்பது போல் தான்...
ஏதோ தவறு நடந்து முடிந்து விட்டது...இனி ஒன்றும் மாற்ற இயலாது..சில நிர்பந்தங்களாலும்,
சந்தர்பங்களினாலும் மன்னித்து விடுவேன்.
ஆனால் அவர்கள் செய்ததை மறக்க இயலாது என்று பலர் சொல்லி இருக்கின்றனர்...பல ஆசிரியருக்கு நான் Training வகுப்பு எடுக்கும் போது உளவியல் ரீதியாக அவருடைய மனோபாவம் முக்கியம் என்ற ரீதியில் கேட்கும் முக்கிய கேள்வி...இது தான்...
ஒரு மாணவன் தவறு செய்தால் அவனை ஒவ்வொரு முறையும் corner செய்து மனதை நோகடிப்பது ,
அவனை திருத்துவதாக எண்ணி அவனை பலவீனமாக்கும் அதனால் மாணவர்கள் செய்யும் தவறு எப்படி கையாள வேண்டும் என புரிந்து கொள்ள கேட்பேன்....
ஆம் என்றால் வலது பக்கம் நில்லுங்கள் ..
இல்லை என்றால் இடது பக்கம் என்பேன்..
பலர் வலது பக்கம் தான் நின்றனர்...
சரி செய்த தவறை மன்னிப்பீர்களா...
வலது... இடது...
அதற்கும் வலது பக்கம்
சரி செய்த தவறை மறந்து விடுவீர்களா...
வலது ...இடது...
இடது பக்கம் நின்றனர்....
உண்மையில் பல திருக்குறள் மேற்க்கோள் காட்டி வாதாடினர்....
அவரவர் ஞாயம் அந்நியாயம் என தங்களுக்குள் வகுத்து உள்ளனர்...
மனதளவில் பண்பட்டவரின் பதிலில் அவர்கள அறிய பெரிய சந்தர்பமாக அந்த நிகழ்வு அமைந்தது...
போனால் போது மன்னிக்க தான் என்னால் முடியும் ஆனால் மறக்க முடியாது...
ஆண்டவன் கொடுத்த அழகான ஓர் உணர்வே
மனிதனுக்கு மறப்பது..
மறப்போம்
மன்னிப்போம் என்பதெல்லாம் பற்றி எடுத்துக்கூறி...
emotionally they will share...
So அப்படி பட்ட இந்த பகுதியை பற்றி அதாவது மன்னிக்கும் தன்மை பற்றி உங்கள் எல்லோரிடமும் நான் கேட்டு கொள்வது...
தங்களின் பதிவு மிக முக்கியமானது...
பகிர்ந்து கொள்ளுங்கள்...
என்னுடைய
அனுபவத்தில் பல நான் கண்டது இதனின்
(மன்னிக்கும்) தன்மை...மனம் கொந்தளிக்கும்...
காலம் தான் இதற்கு பதில் சொல்லும் என்பது தான்
என்னுடைய புரிதல்...
சிலரின் வலிகள் சில நாட்களில்...பல மாதங்களில்..பல வருடங்கள் என மன்னிக்காததால் பல நேரங்களில் வாழ்வின் உன்னதம் இழக்கிறோம் என்பதே மறுக்கப்படாத உண்மை..😊🙏👍
ஒருவன் ஐந்து முக்கிய சந்தர்பங்களில் தான் மன்னிக்க மறுக்கிறான்... அதாவது அன்பு, நல்லுறவு, குழப்பமான மனநிலை, ஆணவம் மற்றும் மற்றவர்கள் கொடுக்கும் தண்டனைகள்
என இப்படி முக்கியமாக கருதப்படுகிறது...
இவைகள் அனைத்திலும் ஒரு வித பேரருளை பெற நாம் மன்னித்தால் அதனை உணர முடியும்...
😊அன்பு இன்னும் ஆழமாகலாம்.
🤝 நல்லுறவு பலமாகும்.
👍தெளிவான மனநிலையில் நிம்மதி பெறலாம்...
🙏 ஆணவம் அழிந்து மதிப்பு கூடலாம்...
💐 மற்றவர் கொடுக்கும் துன்பங்கள் பெரிது படுத்தாத
உன்னத மனநிலை தொடர்வதால் பேரருள்
பெற்று பெருவாழ்வு வாழ இயலும்...
பழிவாங்கும் உணர்ச்சிகளை வைத்து கொள்வது..
அழகான படம் கிடைத்தாகவே எண்ணுகிறேன்...
பாம்பு தன்னை சீண்டியவரை ஒரு போதும் மன்னிக்காது என்றாவது வந்து தன் வீரியத்தை சில ஜென்மங்கள் கூட தொடர்வதாக கூறுவர்...
தூங்க முடியாமல்...தவிப்பது...
எப்போது என காத்து கொண்டிருப்பது...
தகாத வார்த்தைகளை நம்மை அறியாமல் பேசுவது
என மன்னிக்காமல் இருப்பதால்
இவ்வளவு கேடும் விளைவிக்கும் தன்மை உள்ளது...😱
உண்மையில் பிறரை மன்னித்தல் என்பது நாம் முதலில் நமக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்குகிறோம் என்பதே சரியாக இருக்கும்...
ஆசிரியர் ஓரிடத்தில் கூறுகிறார்....
அருமையாக.....கோபம் பொறாமை,பேராசை, இரக்கமின்மை,வெறுப்பு எல்லாம் இறந்து போகட்டும் என ..
ஆம் நாம் அதற்கு உயிர்ப்பு தன்மை தருவதை விடுவோம்...
பணமாக அனைத்தையும் பார்த்து பார்த்து ஒரு கட்டத்தில் உணரும் போது ஆறுதலாக பேச மனிதத்தை தேடும் மனம்!
ஆகையால் சந்தோஷத்தை தேர்வு செய்வோம்!
பரிபூரண நிம்மதியை பெறுவோம்!
மிக்க நன்றி 😊🙏👍
- தொடர்ந்து வாசிப்போம்....
No comments:
Post a Comment