சிறுவயது முதல் படித்து
வளர்ந்து
பட்டம் வாங்கி...
வேலை கிடைத்து
உழைத்து
சம்பளம் வாங்கி...
மேலும் மேலும் முன்னெறி
உயர்ந்து
"மேல் அதிகாரியாக"
ஆனவுடன்...
தன்னை போல ஒருவனை ....
தனக்கு கீழ் வேலைக்கு
அமர்த்தும் போது மட்டும்....
தன்னிடம் வேலை தேடி வரும்
இளைஞனி்டம் திறமைகள் இருந்தும்.....
ஏனோ.....எது ..எது.....
உன் கண்களை
மறைத்தது எது?
பணமா.....
பதவியா.....
இல்லையென்றால்
நீ "மேல் அதிகாரியாக"
உயர உதவிய....
ஊடுருவியாய் இருந்த
அந்த சிபாரிசு தானோ.....அது...
ஏனோ...
மறந்து விடுகிறாய்.....
(தானும் இப்படி
வேலைதேடி அலைந்ததை...
வாய்ப்பு கிடைக்காமல் தவித்ததை...)
அவன் கண்களில்
தெரியும் அந்த ஆவலும்....
வாய்ப்புக்காக தான் என்பதை மட்டும்....
//சிறுவயது முதல் படித்து
ReplyDeleteவளர்ந்து
பட்டம் வாங்கி...//
அத நெனச்சாலே இப்போ கதி கலங்குது ரேஷ்மா...
//வேலை கிடைத்து
உழைத்து
சம்பளம் வாங்கி...//
இதுக்குள்ள நாக்கு தள்ளிடும்... இப்போ வேலை கெடைக்கறது அவ்ளோ கஷ்டம்...
//மேலும் மேலும் முன்னெறி
உயர்ந்து
"மேல் அதிகாரியாக"
ஆனவுடன்...//
இதுதான் ஒருத்தர் வாழ்வில் சந்தோஷம் தரக்கூடிய முதல் விஷயம்...
//தன்னை போல ஒருவனை ....
தனக்கு கீழ் வேலைக்கு
அமர்த்தும் போது மட்டும்....
தன்னிடம் வேலை தேடி வரும்
இளைஞனி்டம் திறமைகள் இருந்தும்.....
ஏனோ.....எது ..எது.....
உன் கண்களை
மறைத்தது எது?
பணமா.....
பதவியா.....
இல்லையென்றால்
நீ "மேல் அதிகாரியாக"
உயர உதவிய....
ஊடுருவியாய் இருந்த
அந்த சிபாரிசு தானோ...//
சே... இதனால எவ்ளோ பேரு திறமை, படிப்பு இருந்தும் அந்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காம சுத்திகிட்டு இருக்காங்க... இது எனக்கு கூட நடந்து இருக்கு...
//ஏனோ...
மறந்து விடுகிறாய்.....
(தானும் இப்படி
வேலைதேடி அலைந்ததை...
வாய்ப்பு கிடைக்காமல் தவித்ததை...)
அவன் கண்களில்
தெரியும் அந்த ஆவலும்....
வாய்ப்புக்காக தான் என்பதை மட்டும்....//
இது ஒவ்வொருத்தர் வாழ்க்கையையும் அப்படியே கண்ணாடி மாதிரி படம் பிடிக்கிறது..
ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க ரேஷ்மா... வாழ்த்துக்கள்...
நன்றி
ReplyDeleteகோபி அவர்களே
முதல் முறை முயற்சி செய்து பார்த்தேன்..
மேல் நிலையில் இருப்பவர்களுக்கு தாங்கள் கடந்து வந்த பாதை நினைவில் இருப்பதில்லை...வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும். நல்ல கருத்துள்ள பதிவு. நன்றி நட்புடன் நிலாமதி.
ReplyDelete