Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Sunday, September 13, 2009

தன்னை தானே சுற்றியும் ஆனந்தமா?

எப்பொழுது? என்று
யோசித்ததில்.......

ஆம்!
ஆனந்தம்
அது
பேரானந்தம் தான்

சுற்றும் போது சில நொடிகள்
மனதில் ஒரு நிசப்தம்
அது தான்
பேரானந்தமோ?

சுற்றிய பின்பு சில நொடிகள்
சுற்றம் தன்னை
சுற்றுவது போல...

மழலையின் முகத்தில்
சிரிப்பை காணுவதும்
பேரானந்தம் தானோ?

இல்லையென்றால் தியானம்
செய்து தான்
கிடைக்குமோ அந்த
பேரானந்தம்!

ஏனென்றால் மழலையில்
வீற்றிருப்பது அந்த
இறைமை தானே!

படிக்கும் போதே மழலையின் ஆசிரியையாக பணியாற்றினேன்
மிஸ் என்னை தூக்குங்க....மிஸ் என்னை...என அவர்கள் கேட்டது
என் நினைவில் வரும்போது.....
அவர்களோடு இருந்து கிடைத்த அந்த ஆனந்ததை எண்ணி
எழுதியதை பகிர்ந்துள்ளேன்.

4 comments:

  1. //சுற்றும் போது சில நொடிகள்
    மனதில் ஒரு நிசப்தம்
    அது தான்
    பேரானந்தமோ?//

    இருக்க‌லாமோ??

    //சுற்றிய பின்பு சில நொடிகள்
    சுற்றம் தன்னை
    சுற்றுவது போல...//

    வாவ்... ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌ ச‌ர‌ண்யா...

    //மழலையின் முகத்தில்
    சிரிப்பை காணுவதும்
    பேரானந்தம் தானோ?//

    நிஜ‌ம்... இதைவிட‌ ஆனந்த‌ம் வாழ்வினில் ஏது?

    //ஏனென்றால் மழலையில்
    வீற்றிருப்பது அந்த
    இறைமை தானே!//

    ம‌ழ‌லையே இறைதானே

    //படிக்கும் போதே மழலையின் ஆசிரியையாக பணியாற்றினேன்//

    ஓ..ஹோ..அப்ப‌டியா...அத‌னால‌தான் உணர்ந்து எழுதி இருக்கீங்க‌ ச‌ர‌ண்யா...

    //அவர்களோடு இருந்து கிடைத்த அந்த ஆனந்ததை எண்ணி
    எழுதியதை பகிர்ந்துள்ளேன். //

    ப‌டித்த‌போது நானும் மண்ணோடு பேசிக்கொண்டு போனேன்..ம‌ழலையும் ஆனேன்...

    ReplyDelete
  2. நன்றி
    R.Gopi
    அவர்களே

    ReplyDelete
  3. வசன கவிதையாகவே அமைந்து இருப்பினும் ஆனந்தம் மட்டுமின்றி பேரானந்தம் கொண்டேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  4. Nalla irukku teacher...
    Intha kavithaiyai muthamilmantathil lum padichirukken...

    ReplyDelete