Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Wednesday, September 30, 2009

சில நிமிடங்களில் உதித்த கவிதைகள்(2)......

கவிதை எழுத ஆரம்பித்து சில நாட்களில் தமிழ் மன்றத்தில்
கவிதை விளையாட்டில் கொடுத்த தலைப்பில்
சில நிமிடத்தில் உதித்ததை
இங்கே படத்துடன் பகிர்ந்துள்ளேன்.

பிரவத்தில்......
அவளோ குழந்தையை ஈன்ற
தருணத்தில்.......
தன் தாயின் வலிகள் உணர்ந்தவளாய்....
வலிகள் இல்லா பிரசவம் இருந்தால்
தாய்மையில் தாய்க்கும் கூட
ஓர் சுமை இல்லாத காலம்
அன்னையின் அன்னைக்கும் கூட
ஓர் சஞ்சலம் இல்லாத காலம்

துன்பங்கள் மறைத்தவளாய்
துவளாமல் என்றென்றும்
தன்னுள்ளே ரகசியமாய்
தன்னம்பிக்கையான தாயாம்

கனவுகள் மங்கவில்லை
தோல்வி அடைந்தாலும்
உழைப்பு குறையவில்லை
வெற்றி கிடைக்காதபோதும்
ஆர்வம் தளரவில்லை
குறிக்கோளை எண்ணியே....

நம்பிக்கையை கைவிடவில்லை
போட்டியில் பங்கு கொண்ட போது
தன்னம்பிக்கையை கைவிடவில்லை
கலந்து கொண்டு வெற்றி அடைந்த போது...



விதையாய் மண்ணுள் புகுந்து
செடியாய் வளர்ந்து
மரமாய் எழுந்து
காற்றாய் புகுந்தாய்
இதமாய் இருந்தது
ஆனால் புயலாய்
மாறியது ஏனோ!

2 comments:

  1. //வலிகள் இல்லா பிரசவம் இருந்தால்
    தாய்மையில் தாய்க்கும் கூட
    ஓர் சுமை இல்லாத காலம்//

    அட‌... ரொம்ப‌ ந‌ல்லா இருக்கே ச‌ர‌ண்யா...

    //துன்பங்கள் மறைத்தவளாய்
    துவளாமல் என்றென்றும்
    தன்னுள்ளே ரகசியமாய்
    தன்னம்பிக்கையான தாயாம்//

    இதுவும் அன்னை தெர‌சா ஃபோட்டோவோட‌ போட்ட‌து ந‌ல்லா இருக்கு...

    //கனவுகள் மங்கவில்லை
    தோல்வி அடைந்தாலும்
    உழைப்பு குறையவில்லை
    வெற்றி கிடைக்காதபோதும்
    ஆர்வம் தளரவில்லை
    குறிக்கோளை எண்ணியே....//

    உழைப்பின் பெருமையை அழ‌காக‌ சொல்லி இருக்கிறீர்க‌ள் ச‌ர‌ண்யா...

    //நம்பிக்கையை கைவிடவில்லை
    போட்டியில் பங்கு கொண்ட போது
    தன்னம்பிக்கையை கைவிடவில்லை
    கலந்து கொண்டு வெற்றி அடைந்த போது...//

    இது உங்க‌ளுக்காக‌வே எழுதி கொண்ட‌து போல‌ இருக்கு...

    //விதையாய் மண்ணுள் புகுந்து
    செடியாய் வளர்ந்து
    மரமாய் எழுந்து
    காற்றாய் புகுந்தாய்
    இதமாய் இருந்தது
    ஆனால் புயலாய்
    மாறியது ஏனோ! //

    அதானே... ந‌ல்ல‌ கேள்வி... ஆமாம், என்ன‌ ப‌தில்??

    சில‌ நிமிட‌த்தில் உதித்த‌து என்ப‌தை ப‌டித்த‌வுட‌ன் கூட‌ என்னால் ந‌ம்ப‌ முடிய‌வில்லை ச‌ர‌ண்யா..

    ரொம்ப‌ ந‌ல்லா எழுத‌றீங்க‌... நிறைய‌ எழுதுங்க‌... வாழ்த்துக்க‌ள்...

    ReplyDelete
  2. நன்றி கோபி அவர்களே

    ReplyDelete