அழுது கொண்டே பிறந்த நீ
அழாமல் இருந்தது அரவணைப்பில்..
அழுது கொண்டே பசியில் நீ
அழாமல் இருந்தது பாசத்தில்....
அழுது கொண்டே பள்ளி சென்ற நீ
அழாமல் இருந்தது (புத்தகப்பையை
கீழே வைத்த போது)விளையாட்டில்....
தோல்வி அடைந்து அழுது கொண்டே நீ
அழாமல் இருந்தது வெற்றியில்....
அழுது கொண்டே வளர்ந்தபோது நீ
அழாமல் இருந்தது தனித்திறமையில்....
அழுது கொண்டே படித்த நீ அழாமல் இருந்தது (அதிக மதிப்பெண் பெற்றதில்) பாராட்டியதில்......
அழுது கொண்டே மேற்படிப்பு தொடர பிரிந்த நீ
அழாமல் இருந்தது சந்தித்து கொள்வதில்...
அழுது கொண்டே வேலையில் சேர்ந்த நீ
அழாமல் இருந்தது ஊதியத்தை பெற்ற போது....
அழுது கொண்டே நீ அழாமல் இருந்தது
வளர்ந்தும் உன்னை தங்கள் மனதில்
இன்றும் என்றென்றும்
மாறாத மனதோடு
மழலையாய் நீ....குடியிருக்கின்றாய்
பெற்றொர் மனதிலும்,வீட்டிலும்.......
இதை உணர்ந்த நீ மழலையாய் மாறி
அன்பாக அழாமல் பார்த்து கொள்வாயா?.......
[இன்றும் என்றென்றும்
மாறாத மனதோடு
மழலையாய் நீ....குடியிருப்பாய்
பெற்றோரின் மனதிலும்,முதியோர் இல்லத்திலா?......]
விளையாட்டாய் படிக்க ஆரம்பித்தேன் சரண்யா... எல்லா வரிசையும் ரசிக்க வைத்தது..
ReplyDeleteஆனால், அந்த கடைசி வார்த்தை என் நெஞ்சை கனக்க வைத்தது...
நல்லா எழுதி இருக்கீங்க சரண்யா.... வாழ்த்துக்கள்...
நன்றி
ReplyDeleteR.Gopi அவர்களே....
தொடர்ந்து தங்களின் கருத்தை பதிவு செய்யும் உங்களுக்கு நன்றிகள்