கவிதை எழுத ஆரம்பித்து இரு நாட்களில் தமிழ் மன்றத்தில்
கவிதை விளையாட்டில் கொடுத்த தலைப்பில்
சில நிமிடத்தில் உதித்ததை
இங்கே படத்துடன் பகிர்ந்துள்ளேன்.
இருக்கும்வரை.....
எல்லாம்இருக்கும்வரை தான்
எது இருக்கும்வரை....
பந்தமா..
பாசமா..
பணமா....
புகழா...
ஜிவனுள் வாழும்
ஆனால் சப்தமின்றி உலவும்
மூச்சு இருக்கும்வரை தானே!
காணக்கிடைக்காது காற்று
தன்னை உணர மட்டுமே
செய்யும்...
ஆனால் சில நேரத்தில்
நம்மையும் தள்ளிவிடும்
சக்தி இருந்தால் எதிர்த்து
நின்று கூட பார்க்கலாம்
அதுவோ பீறிட்டு எழுந்து
புயலாய் மாறுவதேனோ?
தொலைக்காட்சியில்
நிகழ்ச்சியை உற்று மட்டுமே
பார்தத சிறுமி
கண்களில் பார்வை மங்கியதோடு
கண்ணாடி போட்டு கொண்டு
தவிப்பதை பார்த்து
மனம் வாடுகிறதே...
பள்ளியில் நீ புதிதாய்
தோன்றியவள் போல
தோழிகள் உன்னை
பார்தத விதம்.
நினைவுகளின் ரகசியங்கள்
நம்மை வேறொரு உலகத்தில்
தள்ளிச் செல்லும் கனாக்கள்....
கனவை நினைவில் கொண்டு
சில நேரங்களில் இன்னல்கள்...
அவலநிலை
ஆம் வறுமை ஒழிய
ஒர் வழி இல்லாமல்
தவிக்கும் மக்கள்....
கண்டும் காணாமல்
ஒர் பக்கம்...
கண்டும் உதவாததால்
ஒர் தாக்கம்..
அழகான் மணி மணியான் சிறு கவிதைகள் பாராடுக்களும் வாழ்த்துக்களும். "தொலைக்காட்சியில் "கவிதை .........மனதை ...........ஊடுருவுகிறது .தொடருங்கள். நட்புடன்.நிலாமதி
ReplyDeleteநன்றி
ReplyDeleteநிலாமதி அவர்களே....
//இருக்கும்வரை.....
ReplyDeleteஎல்லாம்இருக்கும்வரை தான்
எது இருக்கும்வரை....
பந்தமா..
பாசமா..
பணமா....
புகழா...
ஜிவனுள் வாழும்
ஆனால் சப்தமின்றி உளவும்
மூச்சு இருக்கும்வரை தானே!//
நல்லா எழுதி இருக்கீங்க கவிதாயினி சரண்யா அவர்களே...
சப்தமின்றி உளவும் என்பதை "சப்தமின்றி உலவும்" என்று மாற்றலாமே
//காணக்கிடைக்காது காற்று
தன்னை உணர மட்டுமே
செய்யும்...
ஆனால் சில நேரத்தில்
நம்மையும் தள்ளிவிடும்
சக்தி இருந்தால் எதிர்த்து
நின்று கூட பார்க்கலாம்
அதுவோ பீறிட்டு எழுந்து
புயலாய் மாறுவதேனோ?//
காற்றின் இயல்பான தன்மையை மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள்..
//நினைவுகளின் ரகசியங்கள்
நம்மை வேறொரு உலகத்தில்
தள்ளிச் செல்லும் கனாக்கள்....
கனவை நினைவில் கொண்டு
சில நேரங்களில் இன்னல்கள்...//
இது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு சரண்யா...
//அவலநிலை
ஆம் வறுமை ஒழிய
ஒர் வழி இல்லாமல்
தவிக்கும் மக்கள்....
கண்டும் காணாமல்
ஒர் பக்கம்...
கண்டும் உதவாததால்
ஒர் தாக்கம்.. //
ரொம்ப யதார்த்தமா யோசிச்சு இருக்கீங்க... நான் கடைசியில் இப்படி மெருகூட்டுகிறேன்..
அவலநிலை
ஆம் வறுமை ஒழிய
ஒர் வழி இல்லாமல்
தவிக்கும் மக்கள்....
கண்டும் காணாமல்
ஒரு பக்கம்...
கண்டும் உதவாததால்
ஒரு தாக்கம்..
இறையே நீ உதவிடுவாயா
என்று மனதில் ஒரு ஏக்கம்
ஓகேவா சரண்யா...
நிறைய எழுதுங்க... வாழ்த்துக்கள்...
கவிதாயினி சரண்யா ....
ReplyDeleteஅந்த அளவுக்கு எழுதுகிறேனா தெரியல
நன்றி கோபி அவர்களே...
பிழைகளை திருத்தி விட்டேன்...
நன்றி
அவலநிலை நீங்கள் சேர்த்த வரிகளில் முழுமை அடைந்துள்ளது...
nice saranya!!!!!!!!
ReplyDelete