அம்மாவினுள் ஆசிரியரை
ஆசிரியரிடம் விளக்கத்தை
இளையவரிடம் அறிவுக்கூர்மையை
ஈதல் செய்பவரிடம் ஈடுபாட்டை
உயரியச் செயலை உயர்ந்தவரிடம்
ஊக்கத்தை விளையாட்டுவீரரிடம்
எண்ணங்களை தியானிப்பவரிடம்
ஏற்றத்தை ஏறிச்சென்றவரிடம்
ஐயத்தை ஆர்வமிக்கவரின் கேள்வியில்
ஒன்றாய் ஒற்றுமையான வாழ்வில்
ஓவியத்தை வரைந்தவர் நுணுக்கத்தில்
ஔதாரியத்தை வாழும் முன்னோரிடத்தில்
அஃதே நாம் கண்டு கொண்டது......வாழ்வில்
நல்லா இருக்கு சரண்யா...
ReplyDeleteவாழ்வின் கண்டு கொள்ளலை வரிசைப்படுத்தியது மிக மிக நன்று...
நிறைய எழுதுங்கள்.... எங்கள் ஆதரவு தங்களுக்கு எப்போதும் உண்டு...
வாழ்த்துக்கள் சரண்யா...