Wake up! Within.
Monday, August 24, 2020
பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 4- மனச்சுமையை இறக்கி வைப்பது...
பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 3 ப்ரச்சனைகளையும்,குழப்பங்களையும் சந்தித்து மீள்வது
பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 2 சிறிய கடமைகளும் செயல்களும்..
பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 1 சரியான தொடங்கங்கள்
புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 21)
புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 20)
இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்...வாங்க 20 ஆவது தலைப்பில் என்ன கொடுத்திருக்காங்க பார்ப்போம்😊👍
யோசிக்க வைக்கிற கேள்வி...பதில் ஆம் என்று வந்தாலும் சில நேரங்களில் தயக்கத்தோடு தான் வரலாம்..ஏன் என்றால் முழுமையாக நமக்கு பிடிப்பதை செய்வதற்கு
வாய்ப்பு அமைந்தால் சந்தர்ப்பம் சூழ்நிலை சரியாக அமையாது..
சூழ்நிலை சரியாகும் போது பொருளாதாரம் இருக்காது...
பொருளாதாரம் ,சூழ்நிலை சரியாக இருந்தால் மனம் வராது..
இப்படி இருப்பதாக இருந்தாலும் நாம் நமக்காக சிலவற்றை செய்ய முனைப்பு இருந்தால் நிச்சயம் நாம் முயற்சி செய்வோம்...😊👍
சரியான படம் கிடைத்துள்ளது...பிடித்ததை செய்வதில் வரும் மகிழ்ச்சி தனி தான்...சிறு சிறு செயல்கள் செய்ய ஆரம்பிக்கலாம்... மெதுவாக நாம் மகிழ்ச்சியோடு பயணிக்க ஏதுவாக இருக்கலாம்...மிக்க நன்றி...🙏😊👍
புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 19)
புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 18)
யதார்த்தமாக படிக்கலாம் வாங்க!சிறகை விரி!பற...என்ற புத்தகம் ( பகுதி 10)
இந்த தாய் பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி....இரண்டு குழந்தைகள் நன்றாக பிறப்பதற்காக ஒரு நாள் இரண்டு நாள் அல்ல...75 நாட்கள் தலைக்கீழ் இருந்தார்களாம்..உன்னத தாய்மைக்கு எதுவுமே ஈடில்லாதவை...தேடலில் கிடைத்த படம்...😊👍
http://heritagetamilnadu.com/temples-of-five-elements/thiruvanaika-jambhukeswarar-temple/
http://heritagetamilnadu.com/temples-of-five-elements/thiruvanaika-jambhukeswarar-temple/
இந்த கோவிலை கட்டிய கோச்செங்கணான் பிறக்க அவருடைய அம்மாவும் நேரம் தள்ளி பிறந்தால் குழந்தை கோவில் கட்டுவான் என்று சொன்னதும் தள்ளி போட கால்களை மேலே கட்ட சொன்னார்களாம்...உயிரையும் துறந்து குழந்தை நல்லா இருக்க வேண்டும் என மாண்டாளாம் அந்த அரசி....அந்த காலத்திலும் சரி...இந்த காலத்திலும் சரி தாய்மையின் உன்னதம் வார்த்தைகளில் அடக்க இயலாது!
அவ்வளவு சிறப்பிலும் மீனாட்சியம்மை கல்லாங்காய் விளையாடுவதை ஒரு தாய் போல மகளை கண்டு பூரித்து நிற்கிறாராம் குமரகுருபரர் அதுபோல பெரியாழ்வாரின் பிள்ளைதமிழில் ஆழ்வார் கண்ணனை மகனாக தாய் குளிக்க அழைப்பது போல பாடலை பாடி இருப்பார்....இதனையே பக்தரானவர்கள் தாயாக ஆசைப்படுவதாக தெரிகிறது... அவ்வாழ்வியலை நம் கண் முன்னே காட்டியதும் அருமை....👌😊🙏
யதார்த்தமாக நிறைய சொல்லியுள்ளார்கள்....இதில் பலூன் காரன் வந்தால் அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும்! இப்பொழுது செய்யும் online shoppingயை விட அப்போது வந்த பலூன்காரர் சிறப்பு தான்! உள்ளே கடுகு போட்டு குலுக்கி அதன் சத்தத்தில் டமார் என வெடித்து விட்டால் அடுத்து எப்போ வருவார் பலூன்காரர் என காத்திருப்பது என அது ஒரு காலம்!...😊👍
இந்த வாட்சு⌚ தான் முதல் கை கடிகாரம் , மோதிரம் ...என பல வடிவங்களில் அவர் செய்வது அதனை பார்ப்பது நண்பர்கள் என்ன வடிவம் என பார்த்து பார்த்து மகிழ்ச்சியடந்த நாட்களும் உண்டு... அடுத்த முறை நானும் வாங்குவேன் என மகிழ்ச்சியாய் சொல்லுவதும்...இக்காலக் குழந்தைகளுக்கு கிடைக்க பெறாத அரியதாகிவிட்டது!⌚
விடுமுறை நாட்களில் மதியம் 12 மணி ஆனால் பல வண்ணங்களில் வரும் ஐஸ் வண்டி....சொல்லவே வேண்டியதில்லை...ஆயிரம் கலப்படங்கள்...குண்டாகிவிடுவோம் அல்லது உடம்பிற்கு கெடுதி என பயப்படாமல் நிம்மதியாக அம்மாவிடம் கேட்டு கேட்டு வாங்கிய ஞாபகம்...ஐஸ் வண்டி வரவில்லை என்றால் பின் தெருவில் சென்று ஐஸ் தயாரிக்கும் இடத்தில் வாங்கிய ஞாபகம்....😊😀🤪
சேமிப்பு அவசியம் என்ற விதமாக இந்த பாத்திரகாரரிடம்...பழைய துணிமணியும் பேப்பரும் போட்டு வாங்குவர்!
சிறு சிறு வியாபாரிகள் வாழ்வு இப்பொழுது எல்லாம் இல்லை என்றே கூறும் அளவிற்கு சென்றது...நம்மால் முடிந்த வரை வீட்டின் முகப்பில் வரும் கீரைக்காரம்மா...காய்கறி என இவர்களின் வாழ்வியலுக்கு உதவுவோம்!நன்றி🙏👍
யதார்த்தமாக படிக்கலாம் வாங்க!சிறகை விரி!பற...என்ற புத்தகம் ( பகுதி 9)
இறைவனிடம் பூர்ண சரணாகதி அடைந்தவன் மனதில் தைரியம் வரும் என புரிய வைக்க சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவிலில் திருமழிசை ஆழ்வாருக்காக பெருமாள் வெளியேறியதும் அனைத்து தேவதைகளும் வெளியேறியதும்,பின்பு அரசன் மன்னிப்பு கேட்டவுடன் பெருமாள் திரும்ப வந்ததை பற்றியும்....காஷ்மீரில் வசித்து வந்த மக்களை மதம் மாற சொல்லி துன்புறுத்திய போது சீக்கியர்களின் ஒன்பதாவது குரு தேஜ் பகதூர் "அவரவர் நம்பிக்கை அவரவர் களுக்கு" என இந்துக்களுக்காக ஒரு சீக்கிய குரு கொடுமை அனுபவித்ததும்,சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறிய திருநாவுக்கரசரின் வாழ்வியலும்,மேலும் மகாத்மா காந்திஜி யின் உண்ணாவிரத போராட்டத்தால் நடந்த மனமாற்றம் பற்றி அறியும் போது மகிழ்ச்சி!இத்துணையும் இந்த ஒரு பகுதியில் அறிய முடிந்தது....எழுத்தாளரின் பெயருக்கு உரித்தாகும் தலைப்பு....எதற்கு அச்சம் கொள்ள வேண்டும் என பாரதி பாடிய அச்சமில்லை …
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில்
பெரியாரை வியத்தலும் இலமே! சிறியோரை யிகழ்தனினு மிலமே!
மேலும் அதிகம் தகவல் அறிய👆
யதார்த்த எடுத்துக்காட்டாக எதற்கெடுத்தாலும் பயமே நம் ஆசாரமாகிறது...தெனாலி ஸ்டைலில் எதற்கெடுத்தாலும் பயம் என்பது நம்முள் ஊடுருவி உள்ளது.தேடலில் பார்த்த போது திருக்குறளில்.... குறள் 1075:
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள் மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.
இவ்வளவும் நோயின் அறிகுறிகள்....எல்லாம் பயத்தால் மட்டுமே....
இறைவனிடம் சரணாகதி அடைந்தால் அந்த பயம் என்பதே இருக்காது...நமக்கு மேல் ஓர் சக்தி இருக்கிறது அது நம்மை காக்கும் என்ற அடிப்படை எண்ணம் இருந்தாலே போதுமானது பயத்தை வென்று மனதில் தைரியம் வரும்...மிக்க நன்றி 🙏👍😊