இந்த புத்தகம் தான் படிக்க ஆரம்புக்கிறோம்...இந்த தலைப்பு தான் இந்த புத்தகத்தை படிக்க தூண்டியது என சொல்லலாம்...Byways of Blessedness என்கிற ஆங்கில புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு என்பதை அறிய முடிகிறது...யதார்த்த வாழ்வில் சில மாற்றம் ஏற்பட உதவலாம்...வாங்க பார்ப்போம்!
இது தான் அந்த முதல் தலைப்பு....ஒரு இனிய நாளாக ஒரு தொடங்கவும்,அந்த நாளை இனியதாக மாற்றவும் உதவுவது எது?
ஆம் வேறு வேறு என நகர்ந்து கொண்டே செல்லும் அந்த எண்ணங்கள்....அதனை நல்வழி படுத்துவது யார்..
நாம் தான்....எல்லாவற்றிருக்கும் காரணமாவது யார்?
அதுவும் நாம் தான்..நம் எண்ணம் தான்...
அதற்கு தான் சிறுவயதில் இருந்தே இந்த விதைப்பை நம்மில் புகுத்த முற்ப்படுகிறார்கள் நம் பெற்றோர்கள்..நாமும் அவ்வழியில் நல்ல எண்ணங்களை விதைப்போம்...
சரியாக தொடங்கினாலே பாதி செய்த மாதிரி என்பார்கள்...
தொடங்கியது சரியில்லை என்றால் "முதலும் கோணல் முற்றிலும் கோணல்" என்பர்...
சரியாக தொடங்கி இன்னும் பல நல்ல விஷயங்களை நாம் செய்ய காலைப்பொழுது அவ்வளவு சரியான பொழுது...
ஆகையால் தூக்கத்திற்கு இடம் கொடுக்காமல் இன்னும் அதிகாலை எழுந்து நாம் ஒரு சரியான தொடக்கத்தை தொடங்கி வாழ்வில் முன்னேற பெரும் பங்கு உள்ளது என்பதனை தெரிந்து கொள்ள முடிந்தது... சினிமாவில் வடி வேல் Sir சொல்வதை போல எதை செய்தாலும் ப்ளான் பண்ணி பண்ணனும்...மிக்க நன்றி...🙏😊👍
-தொடர்ந்து வாசிப்போம்
No comments:
Post a Comment