Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Monday, August 24, 2020

பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 3 ப்ரச்சனைகளையும்,குழப்பங்களையும் சந்தித்து மீள்வது

 

இந்த அருமையான புத்தகம் தான் படித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.. வாங்க மூன்றாவது பகுதியை பார்போம்...

தலைப்பே புரிந்து கொண்டிருப்போம்...
ஆம் நாம் சொல்லக்கூடாததை சொல்லி மாட்டிப்போம்,
சொல்ல வேண்டியதை சொல்ல மறந்திருப்போம்.. 
மற்றவர்களின் செயலில் குற்றம் சொல்வது,
தீர்ப்பு கூறுவது,இப்படி ப்ரச்சனைக்கு 
மூலக் காரணம் வேறு யாருமில்லை ...
நாம் தான் காரணம் என புரிய வரும்...
வருவதை ஏற்றுக்கொண்டு பக்குவ நிலையில் கையாள்வது..
அதை எதிர்கொள்வது தீர்ப்பது என  இப்படி நாம்  மீள்வது பற்றி குறிப்பிட பட்டிருக்கிறது....

இது தான் தோன்றியது..நாம் மீண்டு வந்தால் அனுபவம்...மீள முடியாவிட்டால் முயற்சி செய்ய வேண்டும்..ப்ரச்சனையிலிருந்து தப்பிக்க அல்ல..அதனின் தீர்வை காண்பதற்கு முயல்வது நம் கடமை..ப்ரசனையை பார்க்கும் விதத்தில் attitude வளர்த்து கொண்டால் சரி ஆகி விடும்...😊👍

புலம்புதை நிறுத்தி கொள்வது உத்தமம்..நீ வைத்து இருக்கிற ப்ர்ச்சனையை விட என்னுடையது பெரியது....நான் எவ்வளவு கஷ்ட படுகிறேன் என்பது எனக்கு தான் தெரியும் என்பது போல கூறி மனதை காயப்படுத்துவது தவறு...அவரவர் ப்ரச்சனை அவரவர்களுக்கு ஆனால் அதனை சமாளிக்கும் விதம் மாறுபடும்...
அம்மா அனைவர் வீட்டிலும் சுமுகமாக தீர்க்கக்கூடியவர்... 
இருப்பதை வைத்து அடுப்படியில் சமாளிக்கும் ஆற்றல்  
அம்மாவால் மட்டுமே முடியும்...👏👏👍

 நம் பயணத்தில் நாம் சாதரணமாக இருக்க நினைப்பது அல்ல....அப்படி தானே..அப்பொழுது நாம் வளர்த்து கொள்ள வேண்டிய விசயமாக கடவுள் நமக்கு அளிக்கும் சவாலாகவே நினைப்போம்...இன்னும் அசாதரண வளர்ச்சி அடைவோம்...
மிக்க நன்றி...அன்பு நல்வாழ்த்துக்கள்... சுபதினம்🙏😊👍.


                                                - தொடர்ந்து வாசிப்போம்






No comments:

Post a Comment