Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Monday, August 24, 2020

பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 2 சிறிய கடமைகளும் செயல்களும்..

 


இந்த புத்தகம் தான் இப்பொழுது படித்து கொண்டிருக்கிறோம்...😊👍வாங்க இரண்டாவது பகுதியில் என்ன 
சொல்லி இருக்காங்க பார்ப்போம்!



சின்ன சின்ன விசயங்களிலும் நாம் கவனம் செலுத்துவதால் 
நாம் இன்னும் மென்மேலும் வளர்ந்து நன்மதிப்பு பெற உதவும்... ஊருக்கெல்லாம் உதவி செய்வோம் நாம் நமக்கு செய்ய அப்பறம் என்போம்...சில சின்ன விசயம் என்று நாம் நினைப்பதும் பலருக்கு அதுவே பெரிய விஷயமாக தோன்றலாம்...நாம் செய்யும் செயலை செவ்வனே செய்வது சாலச் சிறந்தது எனலாம்...

கொஞ்சம் சிரிப்பது( சிரித்தால் சிரிப்போமே),              
புதிய நபரிடம் அறிமுகம் செய்து கொள்வது 
(முதலில் நாம் ஏன் பேச வேண்டும்),        
 ஒவ்வொரு நாளும் முனைப்போடு கவனிப்பது 
(நான் ஏன் செய்ய வேண்டும்...வேறு யாராவது செய்யட்டும்),    மற்றவர்கள் பேசும் போது கவனிப்பது
(அலட்சியாமாக phone பார்ப்பது).. 
இது எல்லாமே சின்ன சின்ன செயல் ஆனால் அது எல்லாம் தொடர்ந்து செய்கிறோமா... 
இல்லை என்றே சொல்லலாம்... ஏனென்றால் நமக்கு இரண்டாவதாக சட்டென்று எண்ணம் வந்து நம்மை ஆட்படுத்தும் போது 
நாம் அதற்க்கான சரியான பக்குவமாக பதில் அளிக்க 
தயாராக இருந்து  செயல் பட முனைவோம்...

எல்லாவற்றிலும் இப்படி Smart ஆக இருக்க தான் முற்ப்படுவோம்...சிலரிடம் நாம் நடந்து கொள்ளும் விதம் நாம் நம்மை இன்னும் சரி செய்ய வேண்டும் என்பதை உணரும் போது மாற்றிக் கொள்ள வேண்டும்..😊👍

ஒரு முனைப்போடு செயலில் கவனம் செலுத்தினால் நாம் நிச்சயம் வெற்றி அடைந்தே தீர்வோம்...சும்மா பேசுவது, பிளாண் பண்ணுவது போன்ற செயல்களை துரிதப் படுத்தி அடுத்து அடுத்தற்கு நகர்ந்து நாம் வெற்றியில் கவனம் செலுத்த இது மாதிரி ஒவ்வொரு சிறிய செயலலிலும் நாம் கவனமாக கையாள வேண்டும்...😊👍

நம்முடைய business க்கு முன்னேற்றத்திற்கு என நாம் செய்வது போல நாம் நடந்து கொள்ளும் விதத்திலும் செய்யலாம்..
இந்த பகுதியில் நான் சரியாக செய்ய முடியவில்லை அதில் 
நான் சரி செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும்..
இதனை எப்படி சரி செய்வது என தன் முனைப்போடு 
நம்மில் நிறைய நல்ல விசயங்களை வளர்த்து கொள்ளவும் 
focus பண்ணலாம்.
முதலில் சின்ன சின்ன விசயத்திற்கு இந்த TENSION வந்து நம்மை ஆட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளலாம்..மிக்க நன்றி🙏 👍
                 
                                                                 - தொடர்ந்து வாசிப்போம்...








1 comment:

  1. செல்வி சரன்யா அவர்களுக்கு


    அருள்பொழியும் நிழல் பாதைகள் புத்தகத்தின் ஆங்கில மூலத்துடனான எனது ஒரு அனுபவத்தை உங்களிடம் பகிர்கிறேன்
    .

    20 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு அலுவலகத்தில் பணியில் இருந்த போது எனக்கு வழங்கப்படும் வேலைகள் மீது மிக கோபமாக, எப்போது அந்த வேலையை விட்டு போவோம் என்ற துடிப்பில் இருந்தேன். அப்போது இந்த புத்தகத்தின் மூலநூல்( Byways of Blessedness) என் கையில் இருந்தது. என்ன தான் சொல்லியிருக்கிறது, முயற்சி செய்து பார்ப்போம் என்று புரட்டினேன் அதில் வந்த வாசகம்

    Wrapped in our nearest duty
    Is the key which shall unlock for us the heavenly gate
    என்று இருந்தது.
    அதை செயல்படுத்த முடிவெடுத்து நான் செய்வதற்கு எனக்கு அருகிலேயே இருந்த ஆனால் இவ்வளவு நாளும் புறக்கணித்துக் கொண்டிருந்த சிறிய சிறிய வேலைகளை செய்யத் தொடங்கினேன். அடுத்தடுத்த செய்ய வேண்டிய வேலைகளுக்கு அதுவே வழிகாட்டியது.

    மதியம் 2 மணி அளவில் மிக மோசமான மனநிலையில் இருந்தேன். ஆனால், அன்று பணி முடிந்து திரும்பும் போது மகிழ்ச்சியான மனநிலையில் திரும்பினேன்.

    எனது மொழிப்பெயர்ப்பு நூலை குழு வாசிப்பில் தேர்வு செய்ததற்கு நன்றி.
    வாழ்த்துக்கள்; சே.அருணாசலம்

    ReplyDelete