Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Monday, August 24, 2020

யதார்த்தமாக படிக்கலாம் வாங்க!சிறகை விரி!பற...என்ற புத்தகம் ( பகுதி 10)

இந்த புத்தகமும் படித்து கொண்டிருக்கிறோம்...அருமையான தலைப்பு இன்று வாங்க! பார்க்கலாம்...

தாய் என்றால் தூய்மையான, உன்னதமான, அருமையான, பாசமான,தன்னலமற்ற என இன்னும் எவ்வளவோ சொல்லலாம்....1 ஆசிரியரின் அறிவே அலாதியானது....இங்கே எழுத்தாளர் அவர்கள் மிகவும் மேன்மையாக 100 ஆசிரியர்களுக்கு சமமானவர் ஒரு ஞானாசிரியர்... 100 ஞானாசிரியருக்கு சமமானவர் ஒரு தகப்பனார் ஆனால் நூறு நூறு தகப்பானார் என்றாலும் ஒரு தாய்க்கு ஈடாகாது என ரொம்ப அருமையாக சொல்லியுள்ளார்..ஆம் உண்மை தானே!அம்மா நிகர் எவருமில்லை....😊👍


இந்த தாய் பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி....இரண்டு குழந்தைகள் நன்றாக பிறப்பதற்காக  ஒரு நாள் இரண்டு நாள் அல்ல...75 நாட்கள் தலைக்கீழ் இருந்தார்களாம்..உன்னத தாய்மைக்கு எதுவுமே ஈடில்லாதவை...தேடலில் கிடைத்த படம்...😊👍

http://heritagetamilnadu.com/temples-of-five-elements/thiruvanaika-jambhukeswarar-temple/

http://heritagetamilnadu.com/temples-of-five-elements/thiruvanaika-jambhukeswarar-temple/


இந்த கோவிலை கட்டிய கோச்செங்கணான் பிறக்க அவருடைய அம்மாவும் நேரம் தள்ளி பிறந்தால் குழந்தை கோவில் கட்டுவான் என்று சொன்னதும் தள்ளி போட கால்களை மேலே கட்ட சொன்னார்களாம்...உயிரையும் துறந்து குழந்தை நல்லா இருக்க வேண்டும் என மாண்டாளாம் அந்த அரசி....அந்த காலத்திலும் சரி...இந்த காலத்திலும் சரி தாய்மையின் உன்னதம் வார்த்தைகளில் அடக்க இயலாது!

அவ்வளவு சிறப்பிலும் மீனாட்சியம்மை கல்லாங்காய் விளையாடுவதை ஒரு தாய் போல மகளை கண்டு பூரித்து நிற்கிறாராம் குமரகுருபரர் அதுபோல பெரியாழ்வாரின் பிள்ளைதமிழில் ஆழ்வார் கண்ணனை மகனாக தாய் குளிக்க அழைப்பது போல பாடலை பாடி இருப்பார்....இதனையே பக்தரானவர்கள் தாயாக ஆசைப்படுவதாக தெரிகிறது... அவ்வாழ்வியலை நம் கண் முன்னே காட்டியதும் அருமை....👌😊🙏

யதார்த்தமாக நிறைய சொல்லியுள்ளார்கள்....இதில் பலூன் காரன் வந்தால் அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும்! இப்பொழுது செய்யும் online shoppingயை விட அப்போது வந்த பலூன்காரர் சிறப்பு தான்! உள்ளே கடுகு போட்டு குலுக்கி அதன் சத்தத்தில் டமார் என வெடித்து விட்டால் அடுத்து எப்போ வருவார் பலூன்காரர் என காத்திருப்பது என அது ஒரு காலம்!...😊👍


ஜவ்வுமிட்டாய் காரர் காசு எடுத்து வருவதற்குள் தெரு முனைக்கு போய்விடுவார்! குரல் கொடுத்து ஓடி போய் கையில் வாங்கிய மகிழ்ச்சி அலாதியானது! Fridge ல நிறைய மிட்டாய்கள் இருந்தாலும் இந்த ஜவ்வு மிட்டாய் ஜவ்வு மிட்டாய் தானே!


இந்த வாட்சு⌚ தான் முதல் கை கடிகாரம் , மோதிரம் ...என பல வடிவங்களில் அவர் செய்வது அதனை பார்ப்பது நண்பர்கள் என்ன வடிவம் என பார்த்து பார்த்து மகிழ்ச்சியடந்த நாட்களும் உண்டு... அடுத்த முறை நானும் வாங்குவேன் என மகிழ்ச்சியாய் சொல்லுவதும்...இக்காலக் குழந்தைகளுக்கு கிடைக்க பெறாத அரியதாகிவிட்டது!⌚


விடுமுறை நாட்களில் மதியம்  12 மணி ஆனால் பல வண்ணங்களில் வரும் ஐஸ் வண்டி....சொல்லவே வேண்டியதில்லை...ஆயிரம் கலப்படங்கள்...குண்டாகிவிடுவோம் அல்லது உடம்பிற்கு கெடுதி என பயப்படாமல் நிம்மதியாக அம்மாவிடம் கேட்டு கேட்டு வாங்கிய ஞாபகம்...ஐஸ் வண்டி வரவில்லை என்றால் பின் தெருவில் சென்று ஐஸ் தயாரிக்கும் இடத்தில் வாங்கிய ஞாபகம்....😊😀🤪


சேமிப்பு அவசியம் என்ற விதமாக இந்த பாத்திரகாரரிடம்...பழைய துணிமணியும் பேப்பரும் போட்டு வாங்குவர்! 

சிறு சிறு வியாபாரிகள் வாழ்வு இப்பொழுது எல்லாம் இல்லை என்றே கூறும் அளவிற்கு சென்றது...நம்மால் முடிந்த வரை வீட்டின் முகப்பில் வரும் கீரைக்காரம்மா...காய்கறி என இவர்களின் வாழ்வியலுக்கு உதவுவோம்!நன்றி🙏👍

No comments:

Post a Comment