இறைவனிடம் பூர்ண சரணாகதி அடைந்தவன் மனதில் தைரியம் வரும் என புரிய வைக்க சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவிலில் திருமழிசை ஆழ்வாருக்காக பெருமாள் வெளியேறியதும் அனைத்து தேவதைகளும் வெளியேறியதும்,பின்பு அரசன் மன்னிப்பு கேட்டவுடன் பெருமாள் திரும்ப வந்ததை பற்றியும்....காஷ்மீரில் வசித்து வந்த மக்களை மதம் மாற சொல்லி துன்புறுத்திய போது சீக்கியர்களின் ஒன்பதாவது குரு தேஜ் பகதூர் "அவரவர் நம்பிக்கை அவரவர் களுக்கு" என இந்துக்களுக்காக ஒரு சீக்கிய குரு கொடுமை அனுபவித்ததும்,சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறிய திருநாவுக்கரசரின் வாழ்வியலும்,மேலும் மகாத்மா காந்திஜி யின் உண்ணாவிரத போராட்டத்தால் நடந்த மனமாற்றம் பற்றி அறியும் போது மகிழ்ச்சி!இத்துணையும் இந்த ஒரு பகுதியில் அறிய முடிந்தது....எழுத்தாளரின் பெயருக்கு உரித்தாகும் தலைப்பு....எதற்கு அச்சம் கொள்ள வேண்டும் என பாரதி பாடிய அச்சமில்லை …
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில்
பெரியாரை வியத்தலும் இலமே! சிறியோரை யிகழ்தனினு மிலமே!
மேலும் அதிகம் தகவல் அறிய👆
யதார்த்த எடுத்துக்காட்டாக எதற்கெடுத்தாலும் பயமே நம் ஆசாரமாகிறது...தெனாலி ஸ்டைலில் எதற்கெடுத்தாலும் பயம் என்பது நம்முள் ஊடுருவி உள்ளது.தேடலில் பார்த்த போது திருக்குறளில்.... குறள் 1075:
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள் மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.
இவ்வளவும் நோயின் அறிகுறிகள்....எல்லாம் பயத்தால் மட்டுமே....
இறைவனிடம் சரணாகதி அடைந்தால் அந்த பயம் என்பதே இருக்காது...நமக்கு மேல் ஓர் சக்தி இருக்கிறது அது நம்மை காக்கும் என்ற அடிப்படை எண்ணம் இருந்தாலே போதுமானது பயத்தை வென்று மனதில் தைரியம் வரும்...மிக்க நன்றி 🙏👍😊
No comments:
Post a Comment