நம் எல்லாருக்குமே ஒரு சில கேள்விகள் மனதில் தோன்றும் அதை நாம் கேட்டு தெளிவு பெற்றிருப்போம்...அப்படி நான் தமிழ்மன்றத்தில்
கேட்டதில் திரு தாமரை செல்வன் அண்ணா அவர்கள் சிறப்பாக ரொம்ப பொறுமையோட அதே சம்யம் தேவைப்படும் இடத்தில் விளக்கமாகவும் பதில் அளித்தார்கள்...அதை நான் இங்கு உங்களோட பகிர்ந்து கொள்கிறேன்...
தமிழ் மன்றம் நம்மை மேலும் வளர்க்க செய்கிறது...இங்கு நம் பதிவை நாம் எழுதியதாக இருப்பதால் நம்முடைய திறமை மேலும் வளர்க்க படுகிறது...இங்கு அனைத்தும் கதை,கவிதை,கணினி பற்றிய தகவல் எனக் கற்றுக் கொண்டவை ஏராளம்..மன்றத்தில் நானும் சேர்ந்ததில் ஒரு வாய்ப்பு எனக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி...
1]ஆத்திரம் அடையும் போது தவிர்க்க என்ன செய்வது?
ஏன் நம்மையே கட்டுபடுத்த முடியாமல் போகிறது.....
அதீத கோபத்தால் வருவது தான் ஆத்திரமா?
எடுத்தெரிந்து பேசுவது தான் ஆத்திரமா?
தனக்கு ஏதும் நடக்கவில்லை என்பதால் வருவது பொறாமையா? ஆத்திரமா?
அ) கோபத்தின் அடிப்படைக் காரணம் இயலாமை. இதை மனதிற்குள் அடிக்கடிச் சொல்லிப் பதிய வைத்துக் கொள்ளுங்கள். கோபம் வருவது குறையும்.
கோபம் வரும்பொழுது இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. பயம் அளவு மீறிப்போய் அட்ரினலும் எக்கச்சக்கமாய் சுரக்கிறது. இதனால் ஒரு போதை கூடிய நிலைக்குப் போய் விடுகிறோம். மூளைக்கு இரத்தம் செல்வது குறைந்து போகிறது. இதனால் சிந்தனை மழுங்கி விடுகிறது. நமது கட்டுப்பாட்டை இழந்து விடுகிறோம். அனிச்சை செயல்களே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
இதனால் உண்டாகும் பின்விளைவு தான் ஆத்திரம். திட்டுதல், அடித்தல் இன்னபிற கோபத்தின் வெளிப்பாடாகிய ஆத்திரம்.. எல்லாவற்றிற்கும் அடிப்படை இயலாமை என்ற தாழ்வு மனப்பான்மைதான்.
ஆளுமை மனப்பான்மை கொண்டவருக்கும் தாழ்வு மனப்பான்மை உண்டு.. அதைத்தான் அவர்களின் கோபமும் காட்டுகிறது. எப்போதெல்லாம் நான் என்ற அகந்தைக்குச் சவால் வருகிறதோ அதை எதிர்கொள்ள இயலாத போது அவர்களுக்குக் கோபம் வரும்.
ஆ)சில நேரங்களில் எதைப்பற்றியுமே சிந்திக்க முடியாமல், மூளை ஸ்தம்பித்துவிடுகிறதே....இந்த வெறுமையை எப்படி சமாளிப்பது....
சிந்திக்க முடியலையே என்பதே ஒரு சிந்தனைதான்.
உங்களுக்கு கொஞ்சமும் நம்பிக்கை ஏற்படுத்தாத, சிறிதும் ஆறுதலைத் தருவதான எந்தச் சிந்தனையும் வரவில்லை என்பதுதான் நிஜம்.
காரணம் படபடப்பு, கோபம், பயம் இதைப் போல பல உணர்வுகள்...
முதலில் வெளியே வாருங்கள்.. (ஓடும் டிரெய்னில் இருந்தால் என்ன செய்யறது.. சரி இருக்கும் இடத்தை விட்டு சற்று வசதியாக மாறிக் கொள்ளுங்கள்). கண்ணில் தென்படும் 5 விஷயங்களின் நல்லது என்ன கெட்டது என்ன என்று யோசியுங்கள்..
இப்படி ஒரு ஐந்து நிமிஷம் பத்து நிமிஷம் செலவிட்டு விட்டு அப்புறம் சிந்தியுங்கள் போதும்.
இ)கோபத்தை உடனடியாகக் குறைக்க என்ன செய்யலாம் ......
கோபத்தின் அடிப்படைக் காரணம் இயலாமை. இதை மனதிற்குள் அடிக்கடிச் சொல்லிப் பதிய வைத்துக் கொள்ளுங்கள். கோபம் வருவது குறையும்
நம்மைப் போன்ற மக்களுக்கு உடனடியாகக் கோபத்தைக் குறைக்க ஒரு வழி.. எதாவது ஒரு தாளை எடுத்துக் கொண்டு மனம் போனபடி கிறுக்கி விட்டு.. சிறிது நேரம் கழித்து சிறிது தண்ணீர் அருந்துவது.
முயற்சித்துப் பாருங்கள்.. கோபம் சடாரெனக் குறைவதைக் காண்பீர்கள்..கொஞ்சம் கோபம் தணிந்த உடன் ராஜாவின் ரவுசு பக்கம் ப்டித்தால் கோபம் சுத்தமாப் போயே போச்சு.
இங்கே கோபத்தை கட்டுப்படுத்த வழி சொல்லி இருக்கிறேன்..
தனக்கு எதுவுமே நடக்கவில்லை என்பதால் முதலில் எழுவது ஏமாற்றம். ஏமாற்றங்கள் அதிகரிக்கும் போது இயலாமை மேலோங்கி கோபமாகிறது.
No comments:
Post a Comment