2]பணத்திற்கும் மதிப்பிற்கும் சம்மதம் உண்டா
மதிப்பு யாருக்கு அளிக்கப்படுகிறது?
மதிப்பும் மரியாதையும் பிண்ணப்பட்டுள்ளதா?
பணம் உருவாக்கப்பட்டதே மதிப்பை அளவிடத்தானே சரண்யா!!!
ஒரு பொருள் எவ்வளவு எளிதில் கிடைக்கிறது? அது நமக்கு எவ்வளவு முக்கியமாய் தேவைப்படுகிறது? இவை இரண்டும் ஒரு பொருளின் மதிப்பிற்கான அளவுகோல்கள். இவை பணம் என்ற அலகினால் அளக்கப் படுகிறது.
பொருளின் மதிப்பை அளக்க உண்டாக்கப்பட்ட பணம், அதை வைத்திருப்பவனின் மதிப்பையும் அளக்க உபயோகப்பட ஆரம்பித்தது.. ஆனால் அதை எப்படி அளந்தார்கள் என்பதை புறநானூற்றில் அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். ஒருவரிடம் உள்ள பணம் மற்றவர்களுக்கு எந்த அளவு பயன்படுகிறதோ அந்த அளவிற்கு அவருக்கு மதிப்பு உண்டாகிறது.
மதிப்பு என்பது பணத்தைப் போல மனிதருக்கும் உபயோகம் உள்ள அளவிற்கே அளிக்கப்படுகிறது.
தெண்ணீர் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும்,
மதிப்பு என்பது உள்ளூர உள்ளது, மரியாதை என்பது அதைச் செயலில் வெளிப்படுத்தல் ஆகும். மதிப்பை கொண்டிருக்கிறோம். மரியாதை செய்கிறோம்..
பணத்திற்கும் மதிப்பு மரியாதைக்கும் சம்பந்தம் உண்டு, ஆனால் பணம் மட்டுமே மதிப்பு மரியாதைக்குக் காரணம் அல்ல. உபயோகமாக இருக்க இன்னும் பல வழிகள் இருக்கின்றன.
No comments:
Post a Comment