இந்த போட்டியில் உதித்த சில எண்ணங்களின் யதார்த்தம்....இங்கு பகிர்ந்து கொள்கிறேன்....
நானிலத்தில் போற்றி கொண்டு
வாழ்ந்தாலும் உன்னை வந்து
அடைவதே சொர்க்கம் என்றும்
பேரானந்தம் என்றும் முழுமை
பெறுகிறது இந்த ஜீவனா...
நீ இருப்பதால் தானே
நான் உயிருடன் உள்ளேன்
நீ சென்று விட்டால் நானோ
ஓன்றுமில்லை மூச்சே!
என்னுள் இருந்து திணற
வைக்காதே என்னையே...
ஈசனே நீ இங்கு பிறவி
எடுத்தாலும் இன்பமும்
துன்பமும் மாறி மாறி
வருமா உமக்கும் அந்த
சுழற்சியில் வேதனை
தெரியுமா என்றுமே
சுயநலத்தோடு வாழும்
வாழ்வு என்ன வாழ்வோ...
என்று முடியும் இந்த
வினை விதி தலையெழுத்து....
அவர் வருவார்
நல்வரம் தருவார்
மனதை மாற்றுவார்
நம்பிக்கைத் தருவார்
ஏற்றத்தில் புகழாரம்
பாடுவோர் பெறுவார்
என்றே எண்ணுகிறேன்
கால்களைப் பற்றிட
மன்னிப்பு கிடைத்திட
நன்மை நடந்திட
ஒழுக்கமாய் மாறிட
வியப்பை அளித்திட
மனம் மாறும் மனிதம்
உயிர் வாழ மட்டுமே
இத்தனை செய்கை
சரியா?தவறா?
என்ற எந்த சலனம்
இல்லையே....
பணம் வந்தால்
மாறிடும் மனம்
இந்த குணத்தை
சேர்த்து இழுத்து
சென்று விடுகிறது
பூமி என்ன செய்தது
மனிதனால்...
உருவாக்க முடியாத
இயற்கையை..
ஏன் ?அழிய வேண்டும்
நல்லது அல்லாதது
அழியட்டுமே...
No comments:
Post a Comment