Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Saturday, December 19, 2009

பதில் கிடைத்த சில கேள்விகள்...(3)

3]உனக்கு வந்தால் தெரியும் என்று சொல்லுவது கோபத்திலா?
இல்லையென்றால் தன்னைப்போல் கஷ்ட படட்டும் என்பதாலா?
உனக்கு வரட்டும் நான் அப்போ பார்க்கிறேன் என்று சொல்லுவது நடக்க நடைமுறையில் சாத்தியமா

நம் உணர்ச்சிகளை இன்னொருவருக்கு சொல்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. இலக்கியங்களில் இதற்காகத்தான், உவமை, உருவகம் எனப் பல முறைகள் உள்ளன. நம் உணர்வுகளை மற்றவர் புரிந்து கொள்ளவில்லை என்னும் பொழுது அதை அனுபவித்தால்தான் உனக்குப் புரியும் என்று சொல்கிறோம். அது கோபம், விரக்தி, சோகம் மற்றுமல்ல காதல், மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளின் போதும் கூடத்தான் இதையெல்லாம் அனுபவிச்சுப் பார்த்தால்தான் புரியும் என்று சொல்கிறோம். ஆக என் உணர்வைப் புரிந்து கொள் என்பதன் மறுவடிவமே உனக்கு வந்தால்தான் தெரியும் என்பதும். அதன் பொருள் வார்த்தைகளால் உனக்கு இதைப் புரிய வைக்க என்னால் முடியாது என்பதாகும்.

அது நடக்கவும் வாய்ப்புகள் உண்டு.. நாம் கோபத்தில் மட்டுமே இதை நினைவில் பதித்துக் கொண்டு சொல்கிறோம். மற்றபடி சொன்னதை மறந்துவிடுகிறோம்.

உனக்கும் இதே போல் சூழ்நிலை வரும் என்று சொல்வது நடக்கவும் செய்யலாம். நடக்காமலும் போகலாம். அது நடக்க வேண்டும் என எண்ணுவது கோபத்தில் மட்டுமே! அதனால்தான் இந்தக் கேள்வி உங்களுக்கு முளை விட்டிருக்கிறது.
4]அன்பளிப்பகள் வாங்கி கொண்டால் கொடுத்தவர் நம்மை மறக்க வாய்ப்புள்ளதா....
வாங்கி கொண்டவருக்கு ஞாபகம் அந்த அன்பளிப்பை பார்க்கும் போது இருக்கும் தானே...
ஆனால் கொடுத்தவர்.....
அன்பளிப்பகள் சமாதானம் செய்வதற்கும் ஒரு யுக்தியா?
உண்மையான அன்பினால் தருவதா?பின்பு திரும்பி ஒரு நாள் வேற
வழியில் வரும் அதனாலா?கடமைக்கு தருவதா? எப்படி புரிந்து கொள்வது.....

அன்பளிப்புகள்.. அன்பு பழிப்புகள், அன்பழிப்புகள்.. இப்படி நிறைய வகை இருக்கே சரண்யா!!!

எல்லோரையும் அளக்க ஒரே அளவுகோல் இல்லை.. அன்பளிப்புகள் என்பவை ஒரு அடையாளம் அவ்வளவே! கொடுக்கிறவரை நினைவு வச்சுக்கணும் என்பதும், வாங்கினவர் கடன்பட்டவர் என்பதும், மரியாதை நிமித்தம் என்பதும், சமாதானத் தூது என்பதும், சும்மா கடமைக்கு என்பதுவும் அவரவர் கண்ணோட்டம் அவ்வளவுதான்.

ஏன் கோடுத்தோம் என்ற உண்மையான காரணத்தை ஒரு சிலர் தவிர யாரும் அவர்களாக சொல்லப் போவதில்லை.
அன்பளிப்புகள் நினைவுச் சின்னங்கள் என்ற மட்டில் இருந்து விட்டுப் போகட்டும்.

கொடுத்தவர் மறந்த அன்பளிப்பே சிறந்த அன்பளிப்பு ஆகும்.
அன்பளிப்புகளை புரிந்து கொள்ளாமல் இருப்பதே மிகவும் நல்லது. பல சிக்கல்களில் சிக்காமல் இருக்க அது உதவும்.

No comments:

Post a Comment