Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Sunday, December 27, 2009

குட்டீஸ்...(10)


குட்டிமா உள்ளே சென்றவுடம் பள்ளியின் வளாகத்தை பார்க்கிறார் அருண்...
பின் விடை பெற்றுக் கொண்டு அலுவலகத்திற்கு செல்கிறார்...
அம்மா அங்கே இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து கொள்கிறாள்...குட்டிமா சென்ற பாதையை பார்த்து கொண்டே இருக்கிறாள் லதா.....

குட்டிமா உள்ளே சென்றவுடன் வண்ணமயமான இருக்கைகள் அழகாக வரிசையாக இருந்தது..ஒரு பக்கம் கரும்பலகையில் மிக்கி மவுஸ் படம்...
இன்னொரு பக்கம் உள்ள கரும்பலகையில் அழகான பூங்கொத்து ஏந்திய இரண்டு மாணவர்கள்...என வரைந்து வைத்திருந்தார்கள்...வண்ண மயமான தோரணங்கள்....ஆங்காங்கே ஒட்டி வைக்க பட்டிருந்த வண்ணத்தாள்கள்.....என வகுப்பு அறை அலங்கரிக்க பட்டிருந்தது...

இவை எல்லாவற்றையும் பார்த்த சந்தோஷினிக்கு மற்ற மாணவர்களின்
அழுகைக்குரலும் கேட்கிறது...அப்படியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.
பின் அங்கே உள்ளே செல்லும் வழியில் தோழியைப் பார்த்து செல்ல வந்த இன்னொரு ஆசிரியை நோட்டு புத்தகங்கள் ஏந்திக் கொண்டு வந்திருந்தார்கள்...

சந்தோஷினி தன் இருக்கையில் இருந்து ஓடி வந்து அந்த ஆசிரியையின் கால்களை பற்றி கொள்கிறாள்....சற்றும் எதிர்ப்பார்க்காத ஆசிரியை சந்தோஷினியிடம்
என்னம்மா.... என்ற குரல் கொடுக்கிறாங்க...கேட்டவுடன் குட்டிமா கொஞ்சம் கொஞ்சமாக தன் கையை எடுக்கிறாள்...ஆசிரியை அந்த நோட்டு புத்தகங்களை மேஜையில் வைத்துவிட்டு....சந்தோஷினியிடம்....பேசுறாங்க..அங்க உள்ள பொம்மைகளை காட்டி விளையாடலாமா..என்று கேட்கிறாங்க....
லதாம்மா கட்டி இருந்த அதே மாதிரி புடவையை அணிந்திருந்ததால் அவள் வேகமாக வந்தது....என்பதை தெரியாது அந்த ஆசிரியைக்கு....குட்டிமா அப்படியே ஒன்றும் பேசாமல் நிற்க்கிறாள்.

பின் மணி அடித்தவுடன்....அழுகின்றவர்களை ஒரு வகுப்பு அறையிலும் அழாதவர்களை அடுத்த ஒரு அறையில் உட்கார வைத்தனர்..
சந்தோஷினியிடம் லதாம்மா..அழாமல் இருக்கனும் அம்மா இங்கேயே உட்கார்ந்திருப்பேன் என்று சொன்னது புரிந்தது...

முதலில் ஆசிரியை மட்டும் கடவுள் வணக்கத்தை பாடுறாங்க....
எல்லா குழந்தைகளுக்கும் கைக்குப்பி வணங்க சொல்லுறாங்க...அப்போ வீட்டில அப்பா அம்மாவும் சாமி கும்பிடும் போது சொல்லி தந்தது போல சரியாக வைத்து கொள்கிறாள்...ஆசிரியை ஒவ்வொரு குழந்தையாக பார்க்கிறாங்க....
"வெரிகுட்" என்று சொல்லுறாங்க...சரியாக கைக்குப்பி வணங்குபவர்களை...
அப்போ சந்தோஷினியையும் "வெரிகுட்" என்று சொல்லுறாங்க...
கடவுள் வாழ்த்துப் பாடலை சொல்லுறாங்க...கண்களை மூடிக்கொண்டு...
பின்பு ஆசிரியை சொல்லுறாங்க.....
எல்லாரும் கைத்தட்டுங்க....இன்னிக்கு நம்ம கிளாஸ் பிரியாவிற்கு பிறந்தநாள்...எல்லாரும் கைத்தட்டுங்க....என்று சொல்லிக் கொண்டே ஆசிரியை
Happy birthday to you...
Happy birthday to you...
Happy birthday to you...... priyaa...என்று பாடிக்கொண்டே நகர்ந்து எல்லோரிடமும் போகிறாங்க..கையை தட்ட சொல்லி செய்கை காமிக்கிறாங்க.....
வெரிகுட்....என்று சொல்லிவிட்டு...
பின்பு எல்லாரையும் அமர சொல்லுறாங்க...
ஆசிரியை அந்த சட்டை பைக்கு மேல் குத்தி இருக்கும் ஐ.டி.கார்டை பார்த்து பார்த்து வருகை பதிவேடை குறிக்கிறாங்க...
அதற்க்குள் அங்கே நிவாஸ் எந்திருக்கிறான்...நிவாஸ் சிட் டவுண் என்று குரல் கொடுக்கிறாங்க...
அப்பறம் நீங்க எல்லாரும் அழகாக பாடினா....எல்லாருக்கும் பிரியாவோட சாக்லேட் தருவேன்...
பாடிருங்களா...என்று ஆசிரியை சொல்லுறாங்க...
நிலா நிலா ஓடி வா...
நில்லாமல் ஓடி வா...
மலை மேல ஏறி வா....
மல்லிகைப்பூக் கொண்டு வா...என்று செய்கை செய்து கொண்டே பாடுறாங்க...
எல்லாருமே சொல்வோமா....
சொல்லுங்க..நிலா.... நிலா...அங்க பாருங்க....மேல...இருட்டானதும் வீட்டல போய் பாருங்க...இது மாதிரி வானத்தில தெரியும்....என்று புத்தகத்தை காட்டுகிறாங்க...
மேல இருக்கும் நிலாவை கூப்படலாமா..கையை எல்லாரும் தூக்கி கோங்க..ம்...மேல பார்த்து சொல்லுங்க...நிலா....நிலா...
அப்போ...மெலிதான குரலில் நில் நில்தலையை ஆட்டிக்கொண்டு நிலா சொல்லி பார்க்கிறான் கௌதம்...
கார்த்திகா கத்துகிறாள்..நிலா..நிலா...என்று எல்லாரும் அவளையே வேடிக்கை பார்க்கிறாங்க....
சந்தோஷினி ஆசிரியை பார்க்கிறாள்....அவுங்க செய்வது புதிதாக இருப்பதை உணர்கிறாள்...தானும் அப்படி செய்து பார்க்கிறாள்...

அதற்குள் லதா அம்மா..குட்டிமா அழுகிறாளா...பாருங்க என்று மீனியலிடம் கேட்கிறாள்...இல்லங்க..நான் அங்கிருந்து தான் வரேன்... சமத்தா உட்கார்ந்திருக்கிறாள் என அந்த மீனியல் வழக்கம் போல எல்லா மாண்வர்களின் பெற்றோரிடம் சொல்லுவது போல சொல்கிறாள்....

உள்ளே அழகாக பாடி முடித்த சிறார்களுக்கு சொன்ன படியே..சாக்லேட் கொடுக்கிறாங்க ஆசிரியை...

பின் எல்லார் பைக்குள் இருக்கும் ஸ்னாக்ஸ் பாக்ஸை திறந்து சாப்பிட சொல்லுறாங்க...
தண்ணீர் குப்பியை திறந்து கொடுத்து கொண்டே..ஒவ்வொருவரிடமும் வருகிறாங்க...அப்போ அதற்குள்..அங்க.....
(தொடரும்)

No comments:

Post a Comment