காண்..!காட்சிகள் யாவும்
எங்கோ ஒளிந்திருக்கும்
சுயநலமாகவே தெரிகிறது
பார்க்கும் விதத்தில்
குற்றமோ...இல்லை
என்றால் அதுவே இயல்பாய்
மாறியதோ...
உயிரே...என்று சொல்லி
பின்பு தங்கம்,வெள்ளி,
வைடூரியம் எனக் கொஞ்சும்
தாய் பிள்ளை பிரிந்தாலும்
சேய் என அவள் பாசம்
ஏய் என்றும் அழைக்காதவள்
தம்பி என்றும் சின்னவரை தம்
பாதி உயிர் கொடுத்து வளர்த்தாள்
தாயை விட உயர்ந்தவள் யார்?
என்று அறியவில்லை இதுவரை
ஆனால் தாய் காட்டிய தந்தை
தந்தை காட்டிய குருவும்
குரு காட்டிய கடவுளும்
அந்த கடவுளின் உருவமே
தாயாக நடமாடுகிறாள்
கண்முன்னே!
அனைத்தும் அறிவார்
ஆவலோடு தெரிவார்
இயல்பாக நடப்பார்
ஈகை தனை வளர்ப்பார்
உங்களையும் சேர்ப்பார்
ஊருக்கும் உழைப்பார்
என்னவென்று கேட்பார்
ஏகாந்தமாய் இருப்பார்
ஐயமதை நீக்குவார்
ஒன்றே என்று உரைப்பார்
ஓவியம் தீட்டுவார்
ஔவை மொழியில்
அஃதே தமிழில் பாடுவார்
v.good
ReplyDelete