Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Tuesday, October 20, 2020

புத்தகம் படிக்க நேரமில்லையா?உங்களை முன்னேற்ற Five minutes( Topic 24)

 


இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்!வாங்க 24 ஆவது பகுதியில் என்ன சொல்லியுள்ளார் என்பதை பார்ப்போம்!😊👍

பேசும் விதம் ரொம்ப முக்கியமாக கருதபடுகிறது...
கோபமாக பேசுவதோ அல்லது சாந்தமாக பேசுவதோ....
என்பதில் இல்லை 
ஆனால் அதற்கு அப்பாற்பட்டது அந்த பேச்சு....வீண் பேச்சாக, 
பயனற்ற பேச்சாக இருக்க கூடாது என்பதில் கவனம் வேண்டும்.

இதற்கு தான் வள்ளுவர் கூறியதை ஆசிரியர் மேற்க்கோள் காட்டியிருந்தார்..இதோ
நம்மை எப்படி நினைப்பர் என்பதை அருமையாக 
எடுத்துக் கூறியுள்ளார்...
அடிப்படை விசயமே அறம் தானே!

தேவையில்லாத விசயங்கள்,அத்தியாவசியம் இல்லாதவற்றை தவிர்த்து நாம் நம் நேரத்தை பொக்கிஷமாக  கருதினால் நிச்சயம் அது பயனுள்ளதாக செலவு செய்வோம் என்பதில் ஐயமில்லை! ⏰⏱️👍


நல்வழியில் யோசிப்போம்! 
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை கொள்வோம்!

                                         - தொடர்ந்து  வாசித்த விசயத்தை யோசிப்போம்

















Wednesday, September 23, 2020

பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 9 நிலையான மகிழ்ச்சி

 

இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்.. 
ஓன்பதாவது பகுதியில் ஆசிரியர் என்ன சொல்லி 
இருக்கிறார் என பார்ப்போம் வாங்க!😊📕
தலைப்பை பார்த்தவுடன் ..
இப்படி ஒன்று யாருக்குமே இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றலாம்...நிலையானதாக மாற்ற இயலுமா என்றால் நிச்சயம் இயலும் என்றே ஆசிரியர் மிக தெளிவாக சின்ன சின்ன உதாரணங்களை கூறி புரிய வைத்துள்ளார்...எங்கு பாவங்கள் இல்லையோ அங்கு நிலையான மகிழ்ச்சி இருக்கும் என்கிறார்..  
ஆசையினால்... 
எதிர்ப்பார்பதினால்..      
  சுயநலத்தால்....
 ஆணவத்தால்... 
அப்பப்பா..நமக்கே தெரியாமல் நாம் செய்யும் சின்ன சின்ன விசயங்கள் தான் துன்பமென்னும்  இருளில்  சுழல்கிறோம்...பேரருளை பெற வெளிச்சத்தை நோக்கி நகர்ந்தும் நிழல் என்னும் துன்பம் அழியக்கூடியது என உணராமல் இருக்கலாமா? 🤔📖


துன்பத்தை கடந்து சுயநலத்தை சிதறியடித்து "நான்" என்கிற அகம்பாவத்தை உதறிவிட்டு மகிழ்ச்சி என்கிற தேவதை அன்பு என்கிற உணர்வையே கரம்பிடிக்கிறாள் அத்தனை அருமையான வரிகளின் ஆழத்தை உணரும் போது அத்தகைய ஆனந்தம் நம் மனதில் புகுவதை உணர முடியும்..தூய்மையான அன்பே எல்லையில்லா இன்பத்தை தரவல்லது..😀👍
அதே போல வாழ்வில் எப்பொழுது துன்பம் நின்றுவிடும் என்பதற்கு அழகாக் கூறுகிறார்...நான் என்கிற அகம்பாவம் ஆட்டிவைத்து துன்பத்தில் துவல்கிறோம்...அரசியிலிருந்து உமி நீக்கியவுடன் கதிர் அடிக்கும் இயந்திரம் தன் வேலையை நிறுத்திவிடும்....அது போல நம் மனதில் உள்ள மனமாசுகள் நீங்கியவுடன்...துன்பமும் நீங்கிவிடும்...           அழுக்கு (துன்பம்)துர்நாற்றமே பரிசுத்தம் (இன்பம்)என்னும் நறுமணமே  எப்போதும் வீச நாம் நம் வாழ்வியலில் நன்மையை செய்து மேன்மை பெறுவோம்!😊👍


We thought that Attaining the goals gives utmost happiness...
But the Real Happiness is where consoling the mind 
which is in sad mood or suffers in pain...                      
நமக்கான இலக்கில் கவனம் செலுத்தும் நாம் இனியாவது ஆறுதலான வார்த்தைகளிலும் கவனம் செலுத்தி நிலையான மகிழ்ச்சியை பெறுவோம்...மிக்க நன்றி🙏😊👍

                                                              - தொடர்ந்து வாசிப்போம்

புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 23)

 


 இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்!
பகுதி 23 பார்க்கலாம் வாங்க!

இது தான் நம் மனதில் அப்பப்போ வந்து செல்லும் ஒரு கேள்வி!
ப்ரச்சனை வந்தால் கலங்குவதாலும் புலம்புவதாலும் 
ஒன்றும் நடக்க போறதில்லை எனினும் தெரிந்தே 
நாம் அதனை செய்வது ஏதோ ஒரு கை ஆறுதலை 
 மனம் தேடிக்கொண்டிருப்பதால் 
நடக்கும் மனப்போராட்டம் எனவும் சொல்லலாம்...

நிச்சயம் அதனை(விதியை) வென்று( தடைகளை தகர்த்து) நாம் தீர்வை நோக்கி நகர்ந்தால் நாம் வெற்றியை சுலபாக அடைந்து வாழ்வு சிறக்கும் தானே...


ரொம்ப நாளாக யோசித்த ஒரு விசயம் விதியை மதியால் வெல்லலாம் என்பது எப்படி என்பதை இப்பகுதியில் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி....மிக்க நன்றி 👍 🙏
                
                                                                 - தொடர்ந்து வாசிப்போம்...











































புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 22)


 இந்த புத்த்கம் தான் படித்து கொண்டிருக்கிறோம்...
வாங்க! பகுதி 22 என்ன சொல்லுகிறது என பார்ப்போம்!😊👍
ஆம் ஆன்மிக பாதையில் எல்லாரும் சொல்லி கேள்வி பட்ட ஒரு வாக்கியம்...."எல்லாம் அவன் செயல்" என்கிறது தான்...
Total dedication and surrender to God...
Acceptance of everything that he gaves
 and he will definitely saves our Life.


 இதனால் நம் மனதில் நிச்சயம் ஒரு வித சந்தோஷமாக உணர்வதோடு நாம் மேற்க்கொண்டு செய்வதில் மனம் ஒரு வித நிறைவை பெற வைக்கும்!😊👍நன்றி🙏
                 
                                                                      - தொடர்ந்து வாசிப்போம்










Monday, September 21, 2020

பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 8 தீங்கில்லாத உலகை காண்பது

 

இந்த புத்தகம் தான் படித்து கொண்டு இருக்கிறோம்...வாங்க!எட்டாவது பகுதியில் மிக அற்புதமான வாழ்வியல் தேவையானதை சொல்லியுள்ளார் என்பதை உணர முடிகிறது...😊👍
தலைப்பை பார்த்தவுடன் ஓர் சந்தேகம் மனதில் எழும்புவதில் ஐயமில்லை....சரி தானே!
அதுவும் இக்காலகட்டத்தில் தீங்கு இல்லாத உலகமா? 
ஒருவர் மீது நமக்கு கோபம் ஏற்படுகின்றது...
அக்கோபத்தை வெளிக்காட்டாத போது 
அது கடுங்கோபமாக உருவெடுக்கிறது...
அப்படி அது எடுத்த பிறகு அந்த நிலையில் வெறுப்பு உண்டாகிறது..
அந்த வெறுப்பை அவர் மீது காட்டியோ 
காட்டாமல் இருக்கும் போது ...
அப்பிரச்சனை முடிவடைந்து மன்னித்துவிட்டால் பின் அதனை மறந்த்தால் காழ்புணர்ச்சி ஏற்படாமல் 
தடுக்க இயலும்...
தூய்மையான,சாந்தமான மனநிலையில் 
நாம் இருந்தால் பேரன்பின் அருளினால் நாம் 
தீங்கில்லாத உலகை காணமுடியுமே! 
கோபத்தை காட்டமுடியாத என்றால் வெறுப்பாக மாற இயலும் என்பதை நினைவில் கொண்டால் அதாவது கோபப்படாமல் இருப்பது மற்றும் பிறர் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பது நன்று ...
அதுவே சிறந்த வழியில் சுமுகமாக செல்லும் நம் வாழ்க்கை!
முதலில்  நல்லதும் கெட்டதும் சந்திக்கும் போது தடுமாற்றம் அடைகிறோம்...எது வந்தாலும் அடுத்து என்ன ? என்றே தோன்றும்...நன்மை வந்தால் தீமை வந்திடும் என்றும் தீமை வந்தால் நன்மை வரும் என்ற நம்பிக்கையில் சுழல்கிறோம்...😊😞


அதுவே ஒரு கட்டத்தில் நமக்கு பக்குவமான அறிவு அடையும் போது...அதாவது அறியாமை என்பது விலகி நாம் தெளிவு அடையும் போது தடுமாற்றம் இருக்காது....ஆனால் நன்மை தீமை புரிந்து இருக்கும்... சமநிலை நோக்கோடு கையாளத் தெரியும்...இருந்தாலும் ஒரு வித உணர்வே வெளிக்காட்டுவோம்! நன்மை என்றால் சிரிப்பு தீமை என்றால் வருத்தம் என்பதை வெளிக்காட்டுகிறோம்..💯✅💯❎
இதற்க்கு இடையில் ஒன்று அது தான் Discrimination power
பேரறிவை ,பேரருள் பெற்று தீங்கு என்பதனை நாம் 
அனுதாபம், பாசப்பிணப்பு ,அன்பு என்பதன் 
மூலம் நன்மையாக மாற்றி 
ஒரு புன்னகையோடு நன்மையோ தீமையோ 
கையாளும் வீதம் மாற்றி 
நாம் மற்றவர்களின் செயலால் நம்மை இழக்காமல் விழிப்புணர்வோடு பொறுமை 
காத்து சகித்து பேரருள் பெறுவோம்! 
புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக எல்லாம் நன்மைக்கே! 
என்று அன்புடன் புன்னகையுடன் 
வாழ்வோம் வளமாக!
மிக்க நன்றி🙏அன்பு நல்வாழ்த்துக்கள்😊👍
                                           
                                                           - தொடர்ந்து வாசிப்போம்



பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 7 மன்னிக்கும் தன்மை

 


இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம் .. ஏழாவது பகுதியில் ஆசிரியர் என்ன கூறுகிறார் என பார்போம்...வாங்க!

இந்த பகுதி ஒரு பெரிய பகுதியாக கருதுகிறேன்...
ஒருவருக்கு மன்னிக்கும் தன்மை வந்துவிட்டால் அனைத்து அவர் வாழ்வில் வெற்றி என்பது போல் தான்...
ஏதோ தவறு நடந்து முடிந்து விட்டது...இனி ஒன்றும் மாற்ற இயலாது..சில நிர்பந்தங்களாலும்,
சந்தர்பங்களினாலும் மன்னித்து விடுவேன்.
ஆனால் அவர்கள் செய்ததை மறக்க இயலாது என்று பலர் சொல்லி இருக்கின்றனர்...பல ஆசிரியருக்கு நான் Training வகுப்பு எடுக்கும் போது உளவியல் ரீதியாக அவருடைய மனோபாவம் முக்கியம் என்ற ரீதியில் கேட்கும் முக்கிய கேள்வி...இது தான்...
ஒரு மாணவன் தவறு செய்தால் அவனை ஒவ்வொரு முறையும் corner செய்து  மனதை நோகடிப்பது ,
அவனை திருத்துவதாக எண்ணி அவனை பலவீனமாக்கும் அதனால் மாணவர்கள் செய்யும் தவறு எப்படி கையாள வேண்டும் என புரிந்து கொள்ள கேட்பேன்....
ஆம் என்றால் வலது பக்கம் நில்லுங்கள் ..
இல்லை என்றால் இடது பக்கம் என்பேன்.. 
பலர் வலது பக்கம் தான் நின்றனர்...

சரி செய்த தவறை மன்னிப்பீர்களா...
வலது... இடது...
அதற்கும் வலது பக்கம் 
சரி செய்த தவறை மறந்து விடுவீர்களா...
வலது ...இடது...
இடது பக்கம் நின்றனர்....

உண்மையில் பல திருக்குறள் மேற்க்கோள் காட்டி வாதாடினர்....
அவரவர் ஞாயம் அந்நியாயம் என தங்களுக்குள் வகுத்து உள்ளனர்...
மனதளவில் பண்பட்டவரின் பதிலில் அவர்கள அறிய பெரிய சந்தர்பமாக அந்த நிகழ்வு அமைந்தது...

போனால் போது மன்னிக்க தான் என்னால் முடியும் ஆனால் மறக்க முடியாது...

ஆண்டவன் கொடுத்த அழகான ஓர் உணர்வே 
மனிதனுக்கு மறப்பது..
மறப்போம்
மன்னிப்போம் என்பதெல்லாம்  பற்றி எடுத்துக்கூறி...
emotionally they will share...

So அப்படி பட்ட இந்த பகுதியை பற்றி அதாவது மன்னிக்கும் தன்மை பற்றி உங்கள் எல்லோரிடமும் நான் கேட்டு கொள்வது...
தங்களின் பதிவு மிக முக்கியமானது...
பகிர்ந்து கொள்ளுங்கள்...

என்னுடைய
அனுபவத்தில் பல நான் கண்டது இதனின்
(மன்னிக்கும்) தன்மை...மனம் கொந்தளிக்கும்...
காலம் தான் இதற்கு பதில் சொல்லும் என்பது தான் 
என்னுடைய புரிதல்...
சிலரின் வலிகள் சில நாட்களில்...பல மாதங்களில்..பல வருடங்கள் என மன்னிக்காததால் பல நேரங்களில் வாழ்வின் உன்னதம் இழக்கிறோம் என்பதே மறுக்கப்படாத உண்மை..😊🙏👍




ஒருவன் ஐந்து முக்கிய சந்தர்பங்களில் தான் மன்னிக்க மறுக்கிறான்... அதாவது  அன்பு,    நல்லுறவு, குழப்பமான மனநிலை,  ஆணவம் மற்றும் மற்றவர்கள் கொடுக்கும் தண்டனைகள் 
என இப்படி முக்கியமாக கருதப்படுகிறது... 
இவைகள் அனைத்திலும் ஒரு வித பேரருளை பெற நாம் மன்னித்தால் அதனை உணர முடியும்... 
😊அன்பு இன்னும் ஆழமாகலாம்.                  
  🤝 நல்லுறவு பலமாகும். 
👍தெளிவான மனநிலையில் நிம்மதி பெறலாம்...                        
 🙏  ஆணவம் அழிந்து மதிப்பு கூடலாம்...                           
💐 மற்றவர் கொடுக்கும் துன்பங்கள் பெரிது படுத்தாத 
உன்னத மனநிலை தொடர்வதால் பேரருள் 
பெற்று பெருவாழ்வு வாழ இயலும்...
இப்படி வெளியில் சிரிப்பது போல் நடித்து உள்ளே...
பழிவாங்கும் உணர்ச்சிகளை வைத்து கொள்வது..
அழகான படம் கிடைத்தாகவே எண்ணுகிறேன்...
பாம்பு தன்னை சீண்டியவரை ஒரு போதும் மன்னிக்காது என்றாவது வந்து தன் வீரியத்தை சில ஜென்மங்கள் கூட தொடர்வதாக கூறுவர்...
தூங்க முடியாமல்...தவிப்பது...
எப்போது என காத்து கொண்டிருப்பது...
தகாத வார்த்தைகளை நம்மை அறியாமல் பேசுவது
 என மன்னிக்காமல் இருப்பதால் 
இவ்வளவு கேடும் விளைவிக்கும் தன்மை உள்ளது...😱
உண்மையில் பிறரை மன்னித்தல் என்பது நாம் முதலில் நமக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்குகிறோம் என்பதே சரியாக இருக்கும்... 

ஆசிரியர் ஓரிடத்தில் கூறுகிறார்.... 
 அருமையாக.....கோபம் பொறாமை,பேராசை, இரக்கமின்மை,வெறுப்பு எல்லாம் இறந்து போகட்டும் என .. 
ஆம் நாம் அதற்கு உயிர்ப்பு தன்மை தருவதை விடுவோம்...

பணமாக அனைத்தையும் பார்த்து பார்த்து ஒரு கட்டத்தில் உணரும் போது ஆறுதலாக பேச மனிதத்தை தேடும் மனம்!
ஆகையால் சந்தோஷத்தை தேர்வு செய்வோம்! 
பரிபூரண நிம்மதியை பெறுவோம்!
மிக்க நன்றி 😊🙏👍
                                                                     - தொடர்ந்து வாசிப்போம்....



பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 6 இரக்க குணம்

 

இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்... 
வாங்க பார்ப்போம்! ஆறாவது பகுதியில் அருமையான விசயத்தை தெரிந்து கொள்ளலாம்...😊👍
சாதாரணமாக நாம் இரக்கம் என்பது பரிதாபத்தில் வருவதாக  தான் நாம் நினைப்போம்!ஆனால் இந்த பகுதியில் அருமையாக ஒருவரிடமும்  இரக்கமற்ற விதத்தில் அதாவது கோபத்திலோ ஆத்திரத்திலோ வார்த்தைகளை கொட்டக் கூடாது....வலியை கேட்டு உணர்வதிலில்லை இரக்கம் என்பது தானாக அந்த வலியை உணர்வதில் உள்ளது....மேலும் கேள்விகளை கேட்டு கேட்டு ஒருவரின் மனதை நோகடிப்பதும் இரக்கமற்ற பாவச்செயலாக கருதப்படும் என்பது அறிய முடிந்தது.❌⁉️❓❗❎😷🤐
இந்த படத்தில் காண்பது போல ஒருவருக்கு உண்மையில் தவறாகவோ, எதிரியாகவோ நாம் இரக்கமற்ற நிலையில் உதரி தள்ளுவதும் தவறு... ஏனென்றால் மிகுந்த துன்பத்திற்கு ஆளாவோம் என் எச்சரிக்கை பதிவாக மனதில் பதிய வைக்கிறார் ஆசிரியர்...இரக்கமற்ற கடுஞ்சொல் பேசுவதோ, கடுமையாக நடத்துவதோ நாமே நம்மை படுங்குழியில் விழுவது போல் ஆகுமாம்...கடவுள்... நாம்.... நம்மை பண்படுத்த பல சந்தர்பங்களை ஏற்படுத்தி தருகிறார் அதனை நாம் அதில் கற்று கொள்வது ஒவ்வொரு குணமும் தான்!யோசித்து பார்த்தால் நிச்சயம் புரியும்!
தவறை விடுத்து போனால் போகட்டும் விடு என்போம்... அதனையே முழுமனதோடு எவர் ஒருவர் செய்தாலும் செய்த பாவங்களில் இருந்து விடுபட்டு பேரருளை பெற வழிவகை செய்யும்...துன்ப நிலையிலும் காத்து நிற்குமாம் இரக்ககுணம்..அருமை...தவறு செய்து விட்டாலும் எதார்த்தமாக சகஜமாக நடந்து கொள்ளும் மன பக்குவம் வேண்டும்...ஆணவம் அழிந்து இரக்ககுணத்தோடு இன்னும் நம்மை மேம்படுத்தி கொள்ள உதவும்...மொத்தத்தில் நாம் நம்மையே பண்படுத்துகிறோம் என்ற அற்புதம் இரக்ககுணம்...😊👍
பசிக்கும் என உணவளிப்பது மட்டும் இரக்க குணம் அல்ல... சாதரணமாக பழகுபவரின் வாழ்வியலின் தரத்தை அல்ல அதாவது நாம் யாரை எதிரி என நினைக்கிறொமோ அவரின்  வாழ்வியலையின் தரத்தை உயர்த்திவிடுவதும் இரக்ககுணம்..அதற்கு பெரிய மனது வேண்டுமல்லவா... தயாராகுவோம் அதனை பெற வேண்டும் என முயற்சி செய்து நம்மால் முடியும் என காட்டுவோம்!
கவலை கொள்ளாமல் Comfortable மனநிலையை தருவதும் முழுமையான இரக்ககுணம் என்பது  புரிய முடிந்தது...   
 இரக்கம் கொள்வோம்! 
       இனிமையாக பழகி திருத்த முயற்சிப்போம்...               
தன்னம்பிக்கை தருவோம்! 
                    தாராள மனதோடு நடந்து நாமும் முன்னேறுவோம்!                    

மிக்க நன்றி...😊👍🙏
                                                                               -தொடர்ந்து வாசிப்போம்!



பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 5 உள்ளத்தின் தியாகங்கள்

 

இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்...வாங்க!இந்த ஐந்தாவது பகுதியில் ஆசிரியர் என்ன சொல்லியுள்ளார் பார்க்கலாம்...
இந்த தலைப்பே நமக்கு புரிந்திருக்கும்....
விட்டுக்கொடுப்பதால் கெட்டுபோவதில்லை என்பர்...
ஆனால் அதில் யார் விட்டுக்கொடுப்பது என்ற கேள்வியே மேல் எழும்பும்...
அருமையாக என்னோட  அண்ணி சொல்வாங்க... 
பக்குவம் நிறைந்தவர்கள் விட்டு கொடுப்பார்கள்...
பத்தாவது மாடியில் இருந்து கத்தினால் ஏழாவது மாடியில் கேட்கலாம்... இரண்டாவது மாடிக்கு சென்றவருக்கு கேட்க வாய்ப்பில்லை ..
ஒன்று கீழ் இறங்கி வந்து சொல்ல் வேண்டும்...
இல்லை என்றால் நேரில் அப்பறம் பேசி கொள்ளலாம் 
என விட்டு விட வேண்டும் ..
அவசியம் ..அவசரம் என்றால் அலைப்பேசியில் அழைத்து வர சொல்லலாம் ...வர மறுத்தாலும் கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும்..பொறுமை ,நிதானம் கடைப்பிடிக்க வேண்டும். 
மெனகட்டு கத்தினாலும் பலருக்கும் தொந்தரவு தானே...
யோசித்து பக்குவமாய் நடந்து கொள்ள இந்த புரிதல் உதவும்...😊👍
அளவுக்கு அதிகமாக சாக்லேட் சாப்பிடுதல் உடம்பிற்கு கெடுதி என்றால் தொடர்ந்து சாப்பிட்டால் 
அதனால் வரும் விளைவு பற்களில்  பாதிக்கும்...
உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு என்பதை கூறுவோம்..
இதனால் அவர்கள் நன்மை தானே அடைவார்கள்..ஒரு தீய வழியில் இருந்து நன்மை பக்கம் சாய்வதற்கு தயங்க வேண்டாமே..
ஒவ்வொரு முறை சாக்லேட் சாப்பிட்ட பின்பு  வாய் கொப்பளிக்க வேண்டும் என்பதனை சொல்லிக் கொடுக்கலாம்...
மேலும் 14% கரப்பான் பூச்சிகளும் அந்த கலவையில் 
இருக்க வாய்ப்பு இருக்குமாம்...
நிச்சயம் கொமட்டிட்டு வரும் ..
நிறைய சான்றுகளாக காணொளிகளை காட்டலாம்...
சிப்ஸ் அதிகம் சாப்பிடுவதும் அப்படி தான் முதலில்
 கிட்னி பாதிக்குமாம்...
அதில் உப்பு அதிகம் இருக்கிறதாம் அது கெடுதல் என்பதை 
சொல்லி புரிய வைப்பது என எல்லாம் நன்மைக்கே....அதற்காக கோபப்பட்டாலும் ... கத்தினாலும் ...ஒன்றும் சரிவராது...
கிட்னி பாதித்தால் எவ்வளவு கஷ்டம் என பொறுமையாக   
எடுத்துக் கூறி புரிய வைப்பதே சிறந்த வழி..!👍

காசிக்கு போனால் நமக்கு பிடித்த ஒரு விஷயத்தை சாப்பிடுவதில் விடுவராம் ..அம்மா சொல்வாங்க...
பற்றற்ற  நிலை உருவாக இது ஒரு வழி..
இறை நிலையை உணர்ந்து நாம் விட்டுக்கொடுப்பது... 
என்பதை புரிய முடிகிறது.
தான் என்கிற எண்ணம் நிச்சயம் குறுகிய வட்டத்தில்
 நம்மை பாழ்படுத்தும்... 
அகங்காரம்  அழையா விருந்தாளியாக கூட நம் வீட்டில் நுழைய விடக்கூடாது என்பர்.
அருமையாக  நல்லறத்தோட வாழ்பவரின் 
மதிப்பை குறைத்து விடும் என்பதை மனதில் கொள்வோம்...
EGo may Go outside...when E is cancelled 😊👍
Once Ego went this excellent Friendliness comes inside...
you may enjoy this...friendship never ever see 
 status or who has to do ...nothing..
only caring and giving Confidence. 
We learn many things in this Chapter which will enhance ourselves.. 
Thank you so much 🙏😊👍

                                                                                -தொடர்ந்து வாசிப்போம்



Monday, August 24, 2020

பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 4- மனச்சுமையை இறக்கி வைப்பது...


நான்காவது பகுதியில் என்ன  கொடுத்திருக்காங்க பார்ப்போம்!🙂😊

அருமையாக உணர முடிகிறது... எல்லாராலும் அவ்வளவு சீக்கரமாக மனச்சுமையை இறக்கி வைக்க இயலாது  ... அப்பறம் எப்படி என்பதை தான் இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம்...

மனமும் புத்தியும் சரியாக Balance செய்தால்  நாம் எதற்காகவும் கலங்க வேண்டாம்...ஆகையால் மனம் கலங்கும் போது,சமாளித்து விடலாம் என புத்திக்கூர்மையை பயன்படுத்தி வெல்ல்லாம்.அதுவே புத்தி தடுமாறும் நிலை வந்தால் அனுபவத்தை வைத்து விழிப்புநிலையில் நாம் சரியாக கையாள உதவும்.

எல்லாவற்றையும் ஒரு குப்பை போல ஒழுங்கின்மை இல்லாமல் இருந்தால் எப்படி நம்மால் சகிக்க இயலாதோ.அதேப்போல் நாம் ஒவ்வொன்றையும் தனித்தனியே Maintenance like creating folders for file...சரியான நேரத்தை வகுத்து அதனை  நாம் ஏன் செய்யக்கூடாது...எல்லாவற்றையும் செய்ய தெரிந்தாலும்  தெரியாதது போல இருக்கும் போது மனச்சுமை தான்... Time Management அதாவது பிரித்து நேரம் ஒதுக்கி செய்ய பழகி கொண்டால் நிச்சயம் நமக்கு மனச்சுமை குறையலாம்...well planning and preparation leads to scheduled and give success to us...


Best Example in Life ..One of my friend informed to swallow the words Because which should not to come out in stress or in anger...
நாம் கையாள்வது தான் முக்கியம்...மற்றவரிடம் அதனை இறக்கி வைத்து பின் அதனை சரி செய்ய முடியாமல் தவிப்பதை விட  முழுங்குவது (இப்படி பழகிவிட்டால் )கூட மிக சுலபம்...ஆனால் அதனையும் சரியாக செய்ய வேண்டும் இல்லையென்றால் மனச்சுமை அதிகமாகும்...

 ஆக இந்த chapter ல் நாம் கற்று கொள்வது...                                                                👑முள் கிரிடம் அணிய  தயாராக இருக்க வேண்டும்...
          🙂மனதில் ஆயிரம் வருத்தம் இருந்தாலும் முகத்தில் 
                    புன்னகை என்பதை மறைக்காமல் இருப்போம்!                                      👍தேவையின் மிகுதி அதிகமாகும் போது மனம் 
                     அதனை செய்து முடிக்கும்...

ஆக நம் மனமே அனைத்திற்கும் காரணம் அதனை 
சரியாக tune📻 பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.🤝

மனநிறைவும் சுயநலமின்மையும் எப்போதும் இணைப்பிரியா நண்பர்கள்...

அன்பிற்கு கடினமான செயல் என்று எதுவும் கிடையாது. 

அன்பால் வெல்வோம்!..மிக்க நன்றி🙏😊👍



                              - தொடர்ந்து படிப்போம்....உணர்ந்து செய்லபடுவோம்!





 

பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 3 ப்ரச்சனைகளையும்,குழப்பங்களையும் சந்தித்து மீள்வது

 

இந்த அருமையான புத்தகம் தான் படித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.. வாங்க மூன்றாவது பகுதியை பார்போம்...

தலைப்பே புரிந்து கொண்டிருப்போம்...
ஆம் நாம் சொல்லக்கூடாததை சொல்லி மாட்டிப்போம்,
சொல்ல வேண்டியதை சொல்ல மறந்திருப்போம்.. 
மற்றவர்களின் செயலில் குற்றம் சொல்வது,
தீர்ப்பு கூறுவது,இப்படி ப்ரச்சனைக்கு 
மூலக் காரணம் வேறு யாருமில்லை ...
நாம் தான் காரணம் என புரிய வரும்...
வருவதை ஏற்றுக்கொண்டு பக்குவ நிலையில் கையாள்வது..
அதை எதிர்கொள்வது தீர்ப்பது என  இப்படி நாம்  மீள்வது பற்றி குறிப்பிட பட்டிருக்கிறது....

இது தான் தோன்றியது..நாம் மீண்டு வந்தால் அனுபவம்...மீள முடியாவிட்டால் முயற்சி செய்ய வேண்டும்..ப்ரச்சனையிலிருந்து தப்பிக்க அல்ல..அதனின் தீர்வை காண்பதற்கு முயல்வது நம் கடமை..ப்ரசனையை பார்க்கும் விதத்தில் attitude வளர்த்து கொண்டால் சரி ஆகி விடும்...😊👍

புலம்புதை நிறுத்தி கொள்வது உத்தமம்..நீ வைத்து இருக்கிற ப்ர்ச்சனையை விட என்னுடையது பெரியது....நான் எவ்வளவு கஷ்ட படுகிறேன் என்பது எனக்கு தான் தெரியும் என்பது போல கூறி மனதை காயப்படுத்துவது தவறு...அவரவர் ப்ரச்சனை அவரவர்களுக்கு ஆனால் அதனை சமாளிக்கும் விதம் மாறுபடும்...
அம்மா அனைவர் வீட்டிலும் சுமுகமாக தீர்க்கக்கூடியவர்... 
இருப்பதை வைத்து அடுப்படியில் சமாளிக்கும் ஆற்றல்  
அம்மாவால் மட்டுமே முடியும்...👏👏👍

 நம் பயணத்தில் நாம் சாதரணமாக இருக்க நினைப்பது அல்ல....அப்படி தானே..அப்பொழுது நாம் வளர்த்து கொள்ள வேண்டிய விசயமாக கடவுள் நமக்கு அளிக்கும் சவாலாகவே நினைப்போம்...இன்னும் அசாதரண வளர்ச்சி அடைவோம்...
மிக்க நன்றி...அன்பு நல்வாழ்த்துக்கள்... சுபதினம்🙏😊👍.


                                                - தொடர்ந்து வாசிப்போம்






பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 2 சிறிய கடமைகளும் செயல்களும்..

 


இந்த புத்தகம் தான் இப்பொழுது படித்து கொண்டிருக்கிறோம்...😊👍வாங்க இரண்டாவது பகுதியில் என்ன 
சொல்லி இருக்காங்க பார்ப்போம்!



சின்ன சின்ன விசயங்களிலும் நாம் கவனம் செலுத்துவதால் 
நாம் இன்னும் மென்மேலும் வளர்ந்து நன்மதிப்பு பெற உதவும்... ஊருக்கெல்லாம் உதவி செய்வோம் நாம் நமக்கு செய்ய அப்பறம் என்போம்...சில சின்ன விசயம் என்று நாம் நினைப்பதும் பலருக்கு அதுவே பெரிய விஷயமாக தோன்றலாம்...நாம் செய்யும் செயலை செவ்வனே செய்வது சாலச் சிறந்தது எனலாம்...

கொஞ்சம் சிரிப்பது( சிரித்தால் சிரிப்போமே),              
புதிய நபரிடம் அறிமுகம் செய்து கொள்வது 
(முதலில் நாம் ஏன் பேச வேண்டும்),        
 ஒவ்வொரு நாளும் முனைப்போடு கவனிப்பது 
(நான் ஏன் செய்ய வேண்டும்...வேறு யாராவது செய்யட்டும்),    மற்றவர்கள் பேசும் போது கவனிப்பது
(அலட்சியாமாக phone பார்ப்பது).. 
இது எல்லாமே சின்ன சின்ன செயல் ஆனால் அது எல்லாம் தொடர்ந்து செய்கிறோமா... 
இல்லை என்றே சொல்லலாம்... ஏனென்றால் நமக்கு இரண்டாவதாக சட்டென்று எண்ணம் வந்து நம்மை ஆட்படுத்தும் போது 
நாம் அதற்க்கான சரியான பக்குவமாக பதில் அளிக்க 
தயாராக இருந்து  செயல் பட முனைவோம்...

எல்லாவற்றிலும் இப்படி Smart ஆக இருக்க தான் முற்ப்படுவோம்...சிலரிடம் நாம் நடந்து கொள்ளும் விதம் நாம் நம்மை இன்னும் சரி செய்ய வேண்டும் என்பதை உணரும் போது மாற்றிக் கொள்ள வேண்டும்..😊👍

ஒரு முனைப்போடு செயலில் கவனம் செலுத்தினால் நாம் நிச்சயம் வெற்றி அடைந்தே தீர்வோம்...சும்மா பேசுவது, பிளாண் பண்ணுவது போன்ற செயல்களை துரிதப் படுத்தி அடுத்து அடுத்தற்கு நகர்ந்து நாம் வெற்றியில் கவனம் செலுத்த இது மாதிரி ஒவ்வொரு சிறிய செயலலிலும் நாம் கவனமாக கையாள வேண்டும்...😊👍

நம்முடைய business க்கு முன்னேற்றத்திற்கு என நாம் செய்வது போல நாம் நடந்து கொள்ளும் விதத்திலும் செய்யலாம்..
இந்த பகுதியில் நான் சரியாக செய்ய முடியவில்லை அதில் 
நான் சரி செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும்..
இதனை எப்படி சரி செய்வது என தன் முனைப்போடு 
நம்மில் நிறைய நல்ல விசயங்களை வளர்த்து கொள்ளவும் 
focus பண்ணலாம்.
முதலில் சின்ன சின்ன விசயத்திற்கு இந்த TENSION வந்து நம்மை ஆட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளலாம்..மிக்க நன்றி🙏 👍
                 
                                                                 - தொடர்ந்து வாசிப்போம்...