Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Monday, November 30, 2009

குட்டீஸ்...(8)

குட்டீஸ்...(8)





குட்டிமா... அங்க..கட்டிலின் அடியில்....தன்னுடைய வண்ணமயமான பந்து உருண்டோடுயது..... அங்க லதாம்மா காலி அட்டைப் பெட்டிகளை வைத்திருந்தார்கள்...
அதில பந்து உள்ளே சிக்கி கொண்டது...குட்டிமா கட்டில் அடியில் செல்லும் போது வேற ஒரு பெட்டியில் குட்டிமாவோட கால் பட்டதில் பின் பக்கமாக அந்த பெட்டி குட்டிமாவை மறைத்ததால் அப்பா அருண் தேடும் போதும் அவள் அப்பாவின் கண்ணில் படவில்லை....அவள் இவர்களின் குரல்களை கேட்டும் பந்து எடுக்கும் ஆவலில் உள்ளே கையை நீட்டிக் கொண்டு எடுக்க முயற்சிக்கிறாள்...வண்ணங்களில் மனம் சென்றது குட்டிமாவிற்கு....

அப்பா...."எங்க போகி இருப்பா?"...என்ற யோசனையில் இருக்கிறார்...
அம்மா..."பெற்றவளாச்சே....அப்படியே காணாத சந்தோஷினியை நினைத்து அறையின் வெளிச்சுவரில் சாய்ந்து உட்கார்கிறாள்".
பந்தை முயற்சித்து எடுக்க முடியாத குட்டிமா..இப்போ உள்ளே சிக்கியவுடன் அம்மா....என்று குரல் கொடுக்கிறாள்....

அவ்வளவே...லதாவின் கண்கள் பளிச்சிட்டது...
ஓடோடிதேடுகிறாள்..என்னங்க...பாருங்க..எங்க.... "குட்டிமா.... எங்கடா இருக்க..."என்று ஆவலாய் கேட்கிறாள்.
என்ன பார்த்தாய்..நீ என கேட்கிறார் அருண்....
நீங்களும் தானே பார்த்தீங்க...என சொல்ல முடியுமா...அமைதியாய் இருந்தாள்..குட்டிமா என்பது மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது....
பின் அவளை அட்டை பெட்டிகளில் இருந்து விடுவித்த அப்பா அம்மா இருவரும் குட்டிமாவை அணைத்து கொஞ்சுகின்றனர்...தேடி அலைந்த சில நிமிடங்கள் எனினும் குட்டிமா...கிடைத்த சந்தோஷத்தில் பஞ்சாய் பறந்தது...

லதாம்மா....."உன்னை யாரு இங்கெல்லாம் போக சொன்னா.."எனக் கத்த தொடங்குகிறாள்..குட்டிமாவிடம்...
அதற்கு... "சரி விடு" என்று அப்பா சொல்கிறார்...

அப்பா..அப்ப அப்ப..இப்படி சந்தோஷினிக்கு சப்போர்ட் பண்ணுவதால் அவளின் மனதில் பெரிதும் இடம் பிடித்து விடுகிறார் அருண்.

இவளை தேடியதால் நேரம் சென்றது..என புலம்பிக்கொண்டே தன் வேலையை தொடங்குகிறாள்....எனினும் மனதில் எல்லா இறைவனுக்கும் நன்றி சொல்லுகிறாள்....

லதா தன் கண்வரிடம் என்னங்க....நாம இன்றைக்கு கோவில் சென்றுவிட்டு வந்திடலாம் என்கிறாள்...
ம் ..ம்...என்று சொல்லிக்கொண்டே குட்டிமாவை தூக்கி விளையாடுகிறார்...
சரி போங்க...கிளம்புங்க....மணி ஆயிடுச்சு...வா குட்டிமா....கிளம்புவோம் என்று
அழைக்கும் போது...அப்பாவின் கைப்பேசி அழைக்கிறது...

நடந்த இந்த அமளியில் கைப்பேசியை கவனிக்காத அப்பா...அதில் பார்த்தால் அத்தனை கால்கள் குவிந்துள்ளது.... இப்போ அழைத்தது......அப்பாவின்......

(தொடரும்)

Wednesday, November 25, 2009

சில நிமிடங்களில் உதித்த கவிதைகள்(6)......

எல்லாரும் உலக மக்கள்!
எல்லாரும் அன்பின் மக்களாய்
எம் பாரதத்தின் மக்களாய்
என்றுமே உயர்ந்து வாழ்க!



முயற்சி செய்! ழை!
சேமித்து வை!உதவு!
உயர்வு பெற!உன்னாலே!
வாழ்த்துகள்!சிறக்க..



உழைப்பும் ஈடுபாடும்
ருந்தும் வாய்ப்பும்
சிபா
ரிசும் அவசியம்
என்றே தோன்றுகிறது

திறமையால் வெற்றி
வருவ
து உறுதியே
ஆனால் வாய்ப்பு

கொடுப்பது எங்கே?



மின்னல் கீற்று
ஓவியத்தில் தீட்டு
மின்னி மின்னி
கண்களை கூச
வைக்கும் அது
கருப்பில் வெள்ளை

தோன்றுவதிலும் அழகு!



நினைவுக்கு வந்துவிட்டால்
பரிட்சையில் மதிப்பெண்
பார்த்தவருக்கு மதிப்பு

பழகியவரிடம் சிறப்பு

நன்றியில் உயர்ந்து
தவற்றை மறந்து

நினைவலைகளில்

புகைப்படமும் பேசுமோ?

Sunday, November 22, 2009

சில நிமிடங்களில் உதித்த கவிதைகள்(5)......

என்றும் அருகிருந்து
எதுவுமே பேசாமல்
அதுவும் வெளிச்சத்தில்
கூடவே வருகிறாய்
சில நேரம் பெரியதாய்
பல நேரம் சிறியதாய்
உன்னிடம் பிடித்தது
என்னிடம் மட்டுமல்ல
அனைவரிடமும் நீ
கருப்பாய் தெரிவது
நிறம் மாறாமல்
இருப்பது நிழலே...

என் மௌனத்தை
பல அர்த்தங்கள்
பொதிந்துள்ளதை
உண்ர்ந்து கொள்ள
மட்டுமே இயலும்..
வார்த்தையால் அல்ல..

உன் புன்னகையில்..
யதார்த்தம் இருந்தாலும்
என் புன்னகையை
வெளிக்காட்டியது
மழலையின் அன்பால்..

விலகி சென்றது
சூழ்நிலையால்
நட்பு என்றதும்
மாற வாய்ப்பு
இல்லையே...

நல்லாரைப் போற்ற
நல்ல மனசு வேண்டும்
நல்லெண்ணம் வேண்டும்
நல்ல நட்புவட்டம் வேண்டும்
நல்ல சுற்றமும் பெற வேண்டும்
நல்லது அல்லாதவை விலக வேண்டும்

Saturday, November 21, 2009

குட்டீஸ்...(7)






குட்டீஸ்...(7)
மறுநாள் காலை...
குட்டிமா ஸ்கூலில் ஒரு வாரத்திற்கு ஒரு 11:00 மணிக்கு வந்து அழைத்துக் கொள்ள சொல்லி இருந்தார்கள். அதனால் அங்கே இருந்து குட்டிமாவை அழைத்து வந்திடலாம் என்பதே லதாவின் எண்ணம்.ஆகையால் வீட்டு வேலைகளை அவசரமாக செய்து கொண்டிருந்தாள்.

அப்பா அருண் எப்பொழுதும் போல தூங்கும் குட்டிமாவை கொஞ்சிவிட்டு......நாளிதழ் படிக்க உட்கார்ந்திருந்தார்....
லதா காபியை கொடுத்துவிட்டு குட்டிமாவை எழுபினிங்களா...என்று கேட்டுக் கொண்டே.....சமையல் அறைக்கு சென்றாள்...

ம்..நல்லா தூங்கிறா..கொஞ்சம் நேரம் தூங்கட்டும்...குரல் கொடுத்தார்...
இல்லங்க எழுப்புங்க சரியா இருக்கும் என்று சொல்லிக்கொண்டே வேலையைப் பார்த்து கொண்டிருந்தாள்.
வேலையை பார்த்துக் கொண்டே...சற்று..குட்டிமாவிற்கு டிரஸ் எடுக்க உள்ளே சென்றாள்.அங்கு குட்டிமா இல்லை....அப்பாவிடம் உட்கார்ந்திருப்பாள் என எண்ணிக் கொண்டிருக்கும் போதே குக்கர் சத்தம் போட ..கிட்சன் சென்று அடுத்து செய்ய வேண்டியதை செய்தாள்.....
அப்பா அருண் பால்கனியில் கைப்பேசியில் பேசிவிட்டு....குட்டிமா அம்மாவிடம் இருப்பதாக நினைத்துக் கொண்டு அலுவலகத்திற்கு ரெடி ஆகிறார்...

குட்டிமா.... என்று அழைக்கிறாள் அம்மா லதா..
வா மா...குளிக்கலாம்...ஸ்கூல் போனும் ல....

சந்தோஷினி உள்ளே இல்லை..
அருணிடம் கேட்கிறாள்..எங்க குட்டிமா...
இல்ல அங்க தூங்கலயா....இல்லயே அப்பவே..இல்ல..நான் உங்களிடம் இருப்பதாக நினைத்தேன்.....முதல இந்த செல்போன பேசுவது நிறுத்துங்க...
பொன்னு எங்கன்னு தெரியாம அப்படி என்ன பண்ணிங்க...என்று கேட்கிறாள் லதா...

சரி சரி உடனே என்கிட்ட வந்திடு,,,,அவ எங்க அத பாரு...என்றார் அருண்...
இருவரும் தேடினர்..லதா....அங்க... இங்க சென்று பார்க்கிறாள்...
உள் அறையில்....வெளியில்...கிட்சனில்...என பரபரப்பாக இருந்தது நொடிகள் கூட அங்கே....
என்ன ஆச்சு ங்க எங்கே குட்டிமா...என்று லதா....அம்மாவிற்கே உரியதாய்..சற்று கலங்குகிறாள்....
அப்பா தேடிகிறார்..இன்னொரு முறை....குட்டிமா....என்றே.....
மாடிப்படியில் மேலே..கீழே என எல்லா இடமும் தேடினர்.....
ஆனால் குட்டிமா கிடைக்கல...

அப்பாவிற்கு ஒன்றுமே புரியுல....அம்மா லதாவோ....அழத்தொடங்குகிறாள்.....
ஓடி ஓடி தேடினாலும் யாரிடமும் சொல்லவில்லை....
குட்டிமா......அங்க...
(தொடரும்)

Tuesday, November 17, 2009

கவிச்சமர்....(2)

மூட நம்பிக்கைகள்..
சில நேரத்தில்
வேற்றுமை எண்ணத்தை
வலுவடைய செய்யும்
சில நேரத்தில்
அனுபவத்தால் மட்டுமே
உணர்ந்து கொள்ள
வாய்ப்பாக அமையும்
வலிமையோ
வாய்ப்போ
நம்பிக்கையை கைவிடாதே

கைவிடாதே.....

தன்னை நம்பி வேலைத்தேடி
வந்தவரை...
உதவி செய்யாவிட்டாலும்
அலட்சிய படுத்தாதே...
கைக்கொடுத்து தூக்கி விட
வழி செய்வாய்..
வாழ்வில் உன்னால் ஒரு
ஜீவன் வாழட்டும்...

அன்பு
என்பது
பணம் என்ற
மூன்று எழுத்தில்
சென்று விட்டது
அதனை மீட்க
மனம் என்ற
வாயில் திறக்கும்
என்ற நம்பிக்கை

குட்டீஸ்..(6)






குட்டீஸ்...(6)
அங்கே....பார்த்தால்...

சந்தோஷினியை நோக்கி ஒரு பார்பிஃ (barbie) பொம்மை பாட்டு பாடிக்கொண்டே நகர்ந்து வந்தது...
அங்கே... பொம்மைகள் பல விதத்தில் தொடர்வண்டியில் நகர்வதை பார்த்தாள்....



மிஸ் சந்தோஷினியின் கையில் ஒரு கயிறு இழுக்கும் பொம்மையை உள்ள கயிற்றை கொடுத்து இழு என்றாங்க...சந்தோஷினிக்கு அங்கு உள்ள அனைத்துமே புதுசாக இருந்தது...அம்மாவை பார்த்தாள்...லதாம்மா...இழு குட்டிமா..என்றாள்.

சட்டத்தில் மணிகள் வரிசையாக உள்ளதை வண்ணமயமாக இருக்கவும்..குட்டிமா..அதை தொட்டு பார்த்தாள்..பின்பு...லதாம்மா நாளைக்கு வருவோமா...என்று குட்டிமாட்ட கேட்டாள்..
ம்..ம்ம்... என்று மழலைக்கே உரித்தான அழகாக தலையை ஆட்டினாள்...
அவளுக்கு தெரியாது நாளை அம்மா வரமாட்டாங்க என்பது.

மிஸ்...இதுவெல்லாம் உள்ளே விளையாட வைப்பது(indoor games)...அங்க வெளியில விளையாட வைப்பாங்க (outdoor games) ground இருக்கு..பாருங்க...
.
அங்க பார்த்தால் ஊஞ்சல்;ராட்டினம்;சறுக்குமரம்(see-saw;slide; swing; merrygo round;) எல்லாம் இருந்தது...
அப்பா அங்கே இருந்தாங்க..அம்மாவும் அப்பாவுக்கும் ஒரு த்ருப்தி குட்டிமாவை ஸ்கூல் சேர்த்து விட்டதால்...
அவர்கள் அறியவில்லை இவையெல்லாம் சில நேரம் மட்டுமே உபயோகிக்கப்படும்...வரிசையாக வகுப்பறையில் உட்கார வைத்து மனப்பாடம் என்கிற பாடம் என்பதே இப்போது உள்ள கல்வி முறை ஆகிவிட்டது...

மிஸ்..வேற ஒரு மிஸ் சொல்லி தருவாங்க..உங்க பாப்பாவுக்கு..சாப்பிட snacks மற்றும் தண்ணீர் மட்டும் கொடுங்க...அப்பறம் சொல்லுவாங்க...என்று அந்த பள்ளியின் வழக்கத்தை கூறினாங்க...
சிரித்து கொண்டே..விடைபெற்றாள்..சந்தோஷினி....மிஸ்...பார்த்து கொண்டே அடுத்த பெற்றோரிடம் சென்று விட்டாங்க...
இப்போ சந்தோஷினி தன் வசமில்லை வேடிக்கை பார்த்து கொண்டே...அம்மாவின் சேலையை பிடித்து கொண்டு நடந்தாள்.

அருண் மற்றும் லதா அப்படியே விடைபெற்றுக்கொண்டு வெளியில் வந்தனர்.
அப்பாவிற்கு அலுவலகத்து போகும் நேரம் என்பதால்..அவசரமாக விடைபெற்று சென்றார்..
பின் சந்தோஷினியை தூக்கிக்கொண்டு லதாவும் பக்கத்தில் இருந்ததால் நடந்தே சென்றாள்.

வீட்டிற்கு வந்ததும் பாட்டி தாத்தாவிடம் தொலைப்பேசியில் பேசினாங்க...
ஸ்கூல் சேர்ந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டாள்..லதா..குடும்பத்தாரிடம்..
குட்டிமா... அப்பா வந்தவுடன் புது டிரஸ் பஃக் வாட்டர் பாட்டில் எல்லாம் வாங்க போலாமா...என்றே சந்தோஷினியிடம் பேசிக்கொண்டே வேலையை பார்த்தாள்.

அப்பா அருண் அங்கே ஸ்கூல் சென்றதால் தாமதம் ஆனதை மேல் அதிகாரியிடம் விளக்கி விட்டு தன் சீட்டில் நிம்மதி பெருமூச்சு விட்டு அமர்ந்தார்..

மறுநாள் காலை...
(தொடரும்...)

Monday, November 16, 2009

குட்டீஸ்...(5)

குட்டீஸ்...(5)

அந்த பள்ளியில்...சேர்ந்தவுடன்...சிலர்...
பழங்கால முறைப்படி....பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் தட்டில் பழங்களை வைத்துக் கொடுத்து...முறைப்படி சேர்ப்பவரும் உண்டு...

பள்ளியில் சேர்ந்தவுடன்...ஒரு சில இடங்களை அன்று மட்டும் பார்க்க அனுமதி அளிக்கும் பள்ளியின் நிர்வாகம்...

அப்படி உள்ளே செல்ல ஆவலுடன் காத்திருந்தனர்....சந்தோஷினியின் குடும்பம்..
அப்பா அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தவுடன்...கொஞ்சம் நேரம் அவகாசம் கேட்டார்...பின் லதா..நான் ஆபிஸ் போகிறேன் நீயும் குட்டிமாவும் ஆட்டோல வீட்டுக்கு போங்க..என்றார்...
சரிங்க...ஒரு ஐந்து நிமிடம் பார்த்துவிட்டு போங்க...என்றாள்...
காத்திருந்தனர்...மூன்று நிமிட இடைவேளைக்குள் உள்ளே அழைத்தனர்...

அங்கு அரிசியை ஒரு தட்டில் வைத்திருந்தனர்...கடவுளின் படம் அலங்கறிக்கப்பட்டு இருந்தது..முதன் முதலில் பள்ளி துவங்கிய இடம் என்று..அந்த இடத்தில் தான்.... உயர்வு பெற்றதால் ராசி என்றும் அங்கு தான் அழைத்து சென்றனர்...

சந்தோஷினிஅப்படியே பார்த்து கொண்டே இருந்தாள் ...இங்க வா மா...என்று ஒரு
மிஸ் அவளை அழைக்க....சந்தோஷினி மடியில் அமர்த்தி கொண்டு...எழுதுவோமா...என்று சொன்னாங்க...
சந்தோஷினி சிணுங்கி கொண்டே....
அம்மா... அப்பாவை பார்க்கிறாள்...
அப்பா..அங்க பாருமா..என்றாள்...
அம்மா..குட்டிமா..எழுதிருங்கிளா...ம்..ம்...

என்னவென்றே தெரியாமல் பார்த்து கொண்டிருக்க.... மிஸ்.. குட்டிமாவோட... விரலை பிடித்து...அ போடுவோமா.....என்று அரிசியில் போட்டாங்க...
அவளின் பெயரையும் எழுதுங்க...என்று லதாம்மா கேட்டு கொண்டதையும் எழுதினாங்க.....

அந்த காலத்தில பண்ணுவாங்க...அதுனால ஒரு சாஸ்திரத்துக்காக தான்....என்று சொன்னாங்க....சரி வாங்க.... அங்க.....என்று உள்ளே கைக்காட்டி....அங்க போயி விளையாடுலாமா...என்று கேட்டாங்க....
குட்டிமா சந்தோஷினிக்கிட்ட ....குட்டிமாவும் தலையாட்ட.....

உள்ளே சென்றார்கள் மிஸ்,குட்டிமா, லதா...எல்லாரும்...
அப்பாவிற்கு அழைப்பு வந்தது...கைப்பேசியில் பேசி கொண்டிருக்க...

அங்கே....பார்த்தால்...

(தொடரும்)

Sunday, November 15, 2009

சும்மா...



சும்மா...
இந்த சும்மா என்ற வார்த்தை நம்மிடம் பழகும் பல நபர்களும் நாமும் உபயோகிக்கப்படும் வார்த்தை தான்..
சும்மா ஒரு முறைப் பார்ப்போம் எங்கெல்லாம் இந்த சும்மா வருகிறது என்று...

இல்ல இந்த வழியா வந்தேன்... அப்படியே சும்மா உன்னை பார்த்திட்டு போலாம் என்று தான்...
ஆமா..இப்போ நீ என்ன பண்ணுற...சும்மா தான் இருக்கேன்...
எல்லாம் தெரிந்தும் தெரியாததைப்போல கேட்க்கும் சிலர்...

காலையில அப்படியே சும்மா வாக்கீங் போவேன்...
அங்க நடந்து செல்லும் சிலரிடம் சும்மா பேசிட்டு வருவேன்..

திடீரென்று விருந்தாளி வந்து என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க...தொல்லை பண்ணிட்டேனோ...கேட்கிறார்...
இல்ல சும்மா...பேப்பர் படிச்சுட்டு இருந்தேன்..
சும்மா தொலைக்காட்சி தான் பார்த்திட்டு இருந்தேன்...

சரி வாங்க போவோம் சும்மா...என்ற இவைகள் ஒன்றும் பாதிக்காதவைகளாக இருக்கலாம்...
நம்மை பொறுத்த வரையில்....

சில கேள்விகளை திரும்ப திரும்ப கேட்கப்பட்டால்....வருத்தமே...

சும்மா தான் வந்தேன் என்றவரிடம்...ஏன்....எதற்கு.....என்ற கேள்விகள்...

ஏன் சும்மா இருகிறாய்... வேலைக்கு எங்கயும் போலயா...
காரணம் அறிந்தும் கேட்கப்படும் இந்த கேள்வி....

சும்மா தானே இருக்கிறாய்... செய்தால் என்ன...என்ற கேள்வி...

ஏதோ ஒன்று கேட்க வந்துவிட்டு சும்மா வந்தேன்.... நீ எப்படி இருக்கிறாய்....என்ற கேள்வியுடன் ஆரம்பித்து நீ சும்மா தான் இருக்கிறதா...கேள்விப்பட்டேன்..ஏன் என்னாச்சு...என்று பதில் அறிந்தும் கேட்கப்படும் கேள்வி...

எல்லோரும் ஏதோ ஒரு காரணமில்லாமல் இருக்க போவதில்லை..
நம்முடைய ஒவ்வொரு செயல்களிலும் ஏதோ ஒரு காரணம்....
சுயநலம்...பொதுநலம்...நிறைய....நம்மை அறியாமல் நாம் கேட்கப்படும் இவை மனதை பாதிக்கும் என்று அறியாமல் சொல்வதே...ஆகையால் தவிர்ப்போம்....இவைகளை...

சும்மா இருக்கிறாயா...என்று கேட்பது சுலபம்...ஆம் சும்மா தான் இருக்கிறேன் என்று சொல்வது வலி.
உணர்ந்து செயல்படுவோம்...உயர்விற்கு வழிக்காட்டுவோம்..
நன்றிகள்...

Friday, November 13, 2009

குட்டீஸ்(4)...

அங்கே இவர்கள் செல்லுவதற்கு முன்பே மூன்று பெற்றோர்கள் தலைமை ஆசிரியரை சந்திக்க காத்திருந்தனர்..
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ரொம்ப கண்டிப்பானவர் எனக் கேள்விப் பட்டிருப்பதை நேரில் பார்த்தனர்....அவரின் நடவடிக்கையில்....பள்ளி ஆசிரியர்கள் அவரிடம் பேசும் விதம்...அனைத்தையும் பார்த்துக் கொண்டு காத்திருந்தனர்.

இவையெல்லாம் பார்க்கும்படி செய்வதே அந்த பள்ளிக்கு பேரு கிடைக்கத் தான் என்பதை அறியாமல் காத்திருந்தனர்...

பின்பு தலைமை ஆசிரியர் பள்ளியின் வழிபாடு முடிந்தவுடன் வந்தார்....
சந்தோஷினியின் அப்பா கைக்கடிகாரத்தை பார்த்தார்....
அம்மா சொல்லி கொண்டிருந்தார்...குட்டிமா...உன்னோட பெயர் கேட்டா...அழகாக சொல்லணும் என்று......பேசி கொண்டிருந்தாள்...சந்தோஷினியிடம்....

சந்தோஷினியோ முதல் முறை என்பதால் சுற்றி பார்த்து கொண்டிருந்தாள்....தலையை ஆட்டிக்கொண்டே...
மற்ற குட்டீஸ் வந்ததையும் பார்க்கிறாள்...

முதலில் வந்த இருவரை உள்ளே அழைத்தனர்....
பின்பு இவர்களுக்கு முன்பு வந்த பெற்றோரையும் அருண் தம்பதியினரையும் உள்ளே அழைத்தனர்...

உள்ளே..இவர்களுக்கு முன் இருந்தவரிடம் பேசுவதை பார்த்து கொண்டிருந்தார்..
சந்தோஷினியின் அப்பா...அம்மா குட்டிமாவை பேசாமல் அமைதியாக பார்த்து கொண்டிருந்தாள்...
சந்தோஷினிக்கு இடம் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில்....காத்திருந்தனர்....

தலைமை ஆசிரியரிடம் குழந்தையின் சான்றிதழ் கொடுத்தவர் மேஜையின் மேலே கையை வைத்துவிட்டார்....அந்த அப்பா....தலைமை ஆசிரியர் அதை பார்த்தார் சான்றிதழை படித்து கொண்டே...அப்பா அந்த மகளை பார்த்து கொண்டிருந்தார் தலைமை ஆசிரியரை கவனிக்காமல்....

இதை சந்தோஷினியின் அப்பா கவனித்து விட்டார்....ஒன்றும் சொல்லமுடியவில்லை....மேஜை மேல் கை வைப்பது இங்கிதமில்லை என்று அவர் அறிந்திருந்தார்....

ஏதோ ஒரு காரணத்தை சொல்லி சற்று காத்திருக்க சொன்னார் அவர்களை....
பின் அருண் அவர்கள்... சந்தோஷினியை அறிமுக படுத்திவிட்டு தான் இந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும் தன் மகளை பள்ளியில் சேர்த்து கொள்ளுமாறு ரொம்ப தெளிவாக பேசினார் அப்பா அருண்....
கணவர் இப்படி சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதை முதல் முறையாக பார்த்து கொண்டுருக்கிறாள் அம்மா லதா...
தலைமை ஆசிரியர் சற்றும் தயங்காமல் சான்றிதழை பார்த்துவிட்டு...
ஹலோ....வாட் ஸ் யுவர் நேம் என்கிறார்....சந்தோஷினியை பார்த்து...
சந்தோஷினி தனக்கே உரிய பாணியில் மழலையோடு...சந்..தோ.ஷி..னி..என்றாள்..

குட்.....என்று சொல்லிக்கொண்டே....கைகொடுத்தார்...சாக்லேட் வழங்கினார்...
பின் அட்மிஷன் போட்டு கொள்ளலாம் என்று அப்பா அருணுக்கும் கைகொடுத்தார்...
"தஃங்கியு"..என்றார் அப்பா..."வெல்கம்" என்றார் தலைமை ஆசிரியர்...
பின் அப்பா அருணுக்கு அம்மா லதாவிற்கும் ரொம்ப சந்தோஷம்....நேற்று சென்ற அந்த கிளர்கிடம் அட்மிஷன் படிவத்தில் எல்லாவற்றையும் எழுதி கொடுத்துவிட்டு சேர்த்துவிட்டனர்...சந்தோஷினியை....

அந்த பள்ளியில்...சேர்ந்தவுடன்...சிலர்...

(தொடரும்...)

Tuesday, November 10, 2009

கவிச்சமர்....

உதித்த சில கவிதைகள்...
வெற்றியும் பெறுவோம்
வாழ்ந்து காட்டுவோம்
அகந்தை தவிர்ப்போம்
சாதனைகள் புரிவோம்
அமைதியுடன் இருப்போம்
என்றும் வெற்றி நமதே...
நமக்கு மட்டும் என்றானால்...
சுயநலம்
நம் அனைவருக்கும் என்றால்
பொதுநலம்
முதலில் இருப்பது மறைந்து
இரண்டாம் இருப்பது வளர்ந்தால்
நாடு முன்னேற்றம் அடையுமா?!
விலை?!
எல்லாவற்றிருக்கும்
விலையா?!
அன்பு
பாசம்
நட்பு
இவையெல்லாம்
விலைமதிப்பற்றவையே!
என் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள....!!!
அயராது பாடுப்பட
மேலும் உயர்ந்திட
முயற்சி செய்திட
முன்னேறி வாழ்ந்திட
இறைவன் இருந்திட
வெற்றியோடு தோல்வியும் சந்தித்திட
மனம் பக்குவமடைய
மீண்டும் நிரந்தரமாய் வெற்றியே....நிலைத்திட
கர்வம் அடையாமல் வாழ்வு இங்கு தொடரட்டும்.

Monday, November 9, 2009

குட்டீஸ்(3)...


மறுநாள் காலை...
அம்மா பரபரப்பாக தன் வேலையை செய்கிறாள்..தன் குழந்தை ஸ்கூல் செல்லுவது அம்மாவுக்கு பெரிய ஆவலாகவே உள்ளது....

அப்பா குட்டிமா தூங்குவதை பார்த்து மனசுக்குள்ளே.... இப்படி தூங்குபவளை பள்ளியில் சேர்க்க போகிறோமே..என்று எண்ணிக்கொண்டே வெளியில் வந்து எப்பொழுதும் போல நாளிதழ் படிக்க உட்காருகிறார்...
அப்பொழுது அவருடைய கைப்பேசி அழைக்கிறது...லதா எடுத்துட்டு வா மா.. என்றார்...
என்ன ங்க ஸ்கூல் போணும் உங்கள் அலுவலகத்திலையும் ஒரு மணி நேரம் அனுமதி வாங்குங்க...என்று கிட்சனில் இருந்து சொல்கிறாங்க அம்மா...

ம்..சரி ..சரி...என்று பிடிக்காத போல சொல்கிறார்..
என்றுமே வெகு நேரம் தூங்கும் சந்தோஷினியை பார்க்கிறாள் அம்மா...
கிட்ட சென்று....செல்..ல...ம்... செல்..லம்...இங்க பாருங்க.....என்றாள்...இன்னைக்கு ஸ்கூல் போகலாமா குட்டிமா.....
சந்தோஷினி ......ஒன்று அறியாமல்..மெதுவாக தன் வலது கைகளால் கண்களை துடைத்து கொண்டு...(அ)...ம்மா.....என்கிறாள்....
அதற்குள் அம்மா அலமாறியில் தீபாவளிக்கு எடுத்த சட்டைகளில் எந்த சட்டை போடலாம் என்று யோசிக்கிறாள்....ம்...குட்டிமா...புது சட்டை போட்டுகிட்டு போவோமா...என்கிறாள்...

அப்பொழுது கிட்சனிலிருந்து குக்கர் சத்தம் கேட்டு அம்மா...செல்கிறாள் அங்கே..குட்டிமா. அப்பாகிட்ட போங்க...என்று சொல்கிறாள் அம்மா...

மெதுவாக மெல்ல நடந்து அ...ப்...பா.. என்று சொல்லுகிட்டே வருகிறாள்...
வா....மா... என்று மடியில் அமர்த்தி கொண்டு...மெதுவாக நெற்றியில் உள்ள தலைமுடியை
விளக்கிவிட்டு...என்ன குட்டிமா..ஸ்கூல் போணுமா...தூக்கம் வருகிறதா..என்றார்..
அ.ப்..பா...
அவள் அதை கேட்காமல்... நாளிதழில் உள்ள படங்களை பார்க்கிறாள்....தட்டுகிறாள் அந்த படத்தின் மேலே....அதுவா...கம்பியூடர் குட்டிமா....என்றார்....சந்தோஷினி புரியவில்லை என்றாலும் தலை ஆட்டுகிறாள்....

பின்பு அம்மா கொடுக்கும் சத்ததில் அப்பா கிளம்புகிறார்...குட்டிமா...ஆசையாக அழைத்து கொண்டு...அம்மா ஒரு தேவதை போல அலங்காரம் செய்கிறாள்....

முடியே இல்லை தான் இருந்தும் டிரஸ் உள்ள கலரிலே அழகான பூக்கள் போல கிளிப் மாட்டி..கழுத்தில கைகளில்.. என சந்தோஷினி ரெடி ஆகிறாள்...

அம்மாவும் ஏதோ குழந்தை சேர்க்கும் ஆர்வத்தில் தானும் கிளம்பி.... செல்லுகிறார்கள்...ஸ்கூலுக்கு...

அங்கே....

தொடரும்...

Saturday, November 7, 2009

குட்டீஸ்(2)


ஒன்றுமே தெரியாதவர் போல ....அங்கே....அப்பா...என் மகளுக்கு 2 1/2 வயது தான் ஆகிறது.....சேர்க்கலாமா...என்றார்....

அம்மா....ஒரமாக ஒரு பார்வை பார்த்து விட்டு.....இல்ல... அவள்..நல்ல படிப்பாளா..தெரியுல...அதான்..இப்படி கேட்கிறாங்க...தயங்கி தயங்கி...சொல்லுகிறாள்... அம்மா..

ஒ..தாராளமாக..இப்ப எல்லாம் எவ்வளவோ முன்னேறிக் கொண்டு இருக்காங்க பசங்க....
2 1/2 வயதிலேயே ...படிக்கிற பசங்க எங்க பள்ளிக்கூடத்தில இரண்டு பிரிவு இருக்காங்க...

பொன்னு நல்ல பேச ஆரம்பித்துவிட்டாளா...பிறப்பு சான்றிதழ் நகலைக் (birth certificate -xexox copy)
கொண்டு வாங்க...
தலைமையாசிரியரை நாளை வந்து சந்தித்து அட்மிஷன் போட்டு கொள்ளலாம்...

இன்று நீங்கள் பார்க்க இயலாது....சார் மீட்டீங் ல இருக்காங்க...அதனால நாளை வாங்க...

நிச்சயம் அட்மிஷன் உண்டா...சந்தேகத்துடன் அப்பா கேட்கிறார்...

ம்... தலைமை ஆசிரியர் உங்களிடம் பேசுவார்...வரும் போது மகளையும் கூட்டிட்டு வாங்க...

கட்டணம் எவ்வளவு மேடம்...
அம்மா..தனக்கே உரிய பாணியில் எவ்வளவு இருந்தா என்ன ங்க..சேர்க்க தான போறோம் என்று
முணுமுனுக்கிறாள்...கணவனிடம்....வாங்க நாளை வருவோம் என்கிறாள்...

கிளர்க்...இந்தாங்க சார் உங்க மகளை சேர்க்க நீங்கள் எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை எழுதியிருக்கேன்....நன்றி மேடம்..நாளைக்கு வந்து பார்க்கிறோம்...என்றார்...

வெளியே வருகிறார்கள்...அங்கே மைதானத்தில் சின்ன சிறார்கள் விளையாடுவதை பார்க்கிறார்கள்...
மீனியல் அங்கு ஒரு சின்ன குட்டீஸுக்கு பால் ஆத்தி கொடுத்து கொண்டிருந்தாள்.
கேட்டுகிட்டிங்களா...
நாளை வர சொல்லி இருக்காங்க...தலைமை ஆசிரியர் சந்திக்க....
என்ன ..பால ஆத்திகொண்டிருக்கீங்க போல...ஆமாம் மா...இந்த குழந்தை காலையில சாப்பிடல அவுங்க அம்மா கொடுக்க சொல்லியிருந்தாங்க...பாவம்.மா..பிள்ளைக்கு பசி...துவண்டு போயிடுச்சு...அதான்....

சந்தோஷினியின் அம்மாவின் கண்களில் ஒரு மலர்ச்சி....ம்..இந்த மீனியல் தன் குழந்தையும் பார்த்து கொள்வாள் என்ற நம்பிக்கையில் மிளிர்ந்த பார்வை....

அங்கேயிருந்த குழந்தைகள் அழகாக வரிசையில் செல்வதை பார்த்தார்கள்...இது தான் இந்த பள்ளியின்
சீருடை போல...அழ்காக தான் இருக்கிறது...

நகர்ந்தார்கள்...ஏன் ங்க...நம்ம குட்டிமா..க்கு..இந்த ஸ்கூல் பிடிக்கும் ல...
ம்..ம்.வா..நல்லாத்தான் இருக்கிறது...இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் சொன்னா கேட்க மாட்ட...
அப்பறம் ..என்னையே கேளு...பிடிக்காததை போல அலுத்து கொள்கிறார் அப்பா..

ரொம்ப கனவுகளுடன் அப்பாவும் அம்மாவும் மெல்ல மெல்ல நகர்ந்து செல்கிறார்கள்..

ஸ்கூல் போனோம் குட்டிமா....பெரிசா...சூப்பரா..குட்டிமா..விளையாட நிறைய இருக்கு அங்க...
நாளைக்கு போவோம்....சரி குட்டிமா..அங்க உன்னோட பேரு கேட்பாங்கலே...
என்ன சொல்லுவிங்க....சந்தோசின்னி....இல்ல குட்டிமா...சின்னி இல்ல ஷினி மா...
சொல்லுங்க...சந்தோ....சினி...
இல்ல குட்டிமா... இங்க பாருமா...சந்தோஷினி.....
அம்மா ஆவலுடன் அவள் முகத்தை பார்த்து கொண்டிருக்க...அப்பா அவளை ஏன் இப்பவே படுத்தி எடுக்கிற...வரலன்னா விடு...அவளே பெரிசானா சொல்லிப்பா...
நீங்க வாங்க செல்லம்...குட்டிமா....அம்மு....
இருங்க ங்க சொல்லுவா...நாளைக்கு அட்மிஷன் கிடைக்க வேண்டுமே...
சந்தோ..ஷினி...சொல்லிவிடும் அந்த குட்டீஸ்....
அம்மாவின் முகம் மலரும்....அப்பா அங்கே எங்கையோ பார்த்து கொண்டு...சொல்லிவிட்டாள் என மனதிலே நினைக்கிறார்....பள்ளி செல்ல தயார் படுத்துகிறாள் தாய்.

மறுநாள் காலை.....

தொடரும்.....

Friday, November 6, 2009

குட்டீஸ்

தங்கள் திருமணத்திற்கு பின்பு பல நாட்கள் கழித்து.....தவமிருந்து பெற்ற குழந்தை தான் சந்தோஷினி..தங்களை மகிழ்விக்க பிறந்தவள்...தங்களுக்கு ஓர் அடையாளமாக..தங்களுக்கென உரிமை கொண்டாட...தாங்களும் பெற்றோர் ஆனதில் மகிழ்ச்சி அடைந்த தம்பதியனருக்கு தங்களை அங்கிகரிக்க
இந்த சுற்றத்தில்.....சந்தோஷினி அம்மா லதா வீட்டிலிருக்கிறார் தற்காலிகமாக ... அப்பா அருண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்...

சந்தோஷினி அம்மா....மகளுக்கு 2 1/2 வயது வரபோகிறது.பள்ளியில் சேர்க்க வேண்டுமே...என்ற எண்ணம் வந்தது.இத்தனை நாட்களாக வெளியில் என்ன நடக்கிறது எனத் தெரிந்திராத அம்மா.....

விசாரிக்க தொடங்குகிறார்....

எந்த பள்ளி நல்ல பள்ளி..
எதில் என் குழந்தை பாதுகாப்பாக இருப்பான்...
ஆங்கிலத்தில் சொல்லி கொடுப்பார்களா...
விளையாட விடுவார்களா...

இப்படி தெரிந்தவர் தெரியாதவர் எனக் காய்கறி விற்பவரில் தொடங்கி கணினி மையத்தை நடத்துபவர் வரை கேட்டு தெளிவு பெற்றாள்....

சரிங்க...நாம் இந்த பள்ளியிலே சேர்க்கலாம் என கணவரிடம் சொல்லுகிறாள்...

அப்பாவும் தன் பங்கிற்கு தன்னுடன் வேலைப் பார்ப்பவர் முதல் நட்பு வட்டம் வரை விசாரித்திருந்ததும் அதே பள்ளிக்கூடத்தின் பெயரைத் தான்.....

அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அப்பா....சிறது நேரம் கழித்து சரி என்றார்.
கட்டணத்திலும்...தரத்திலும்....சிறப்பாக சொல்லுவது இந்த பள்ளியைத் தாங்க...

குட்டிமா...அப்பாகிட்ட சொல்லுடா...ஸ்கூல் போறேன்னு....
புது டிரஸ் ......
புது ப்பஃக்.....
வேற என்ன வேணும்... செல்லத்துக்கு...போவோமா...என்று பிள்ளையின் மனதில் ஏற்றுகிறாள் தாய்.

இருவரும் சேர்ந்து முதல் முறையாக பள்ளிகூடத்தை நோக்கி...செல்லுகிறார்கள்...


மீனியல்(பள்ளிக்கூட ஆயா): என்ன வேணும் சார்
பிள்ளையை சேர்க்கனும்...
அப்படியா....வாங்க..உள்ள கிளர்க் இருப்பாங்க...வலது பக்கமாக இருக்கிற அறையில் சென்று பாருங்கள்..என்கிறாள் மீனியல்..


மெதுவாக உள்ளே சுற்றி சுற்றி பார்த்தவர்கள்...இந்த பள்ளிக்கூடத்தில தன் குழந்தை படிக்க போவதை தன் கண்களால் படம் பிடித்தார்கள்...மைதானம் உள்ளது தான் போல...அங்கே...சரி வா..என்று சொல்லி அப்பா உள்ளே செல்கிறார் முதலில்...பின் தொடருகிறாள் அம்மா...

ஒன்றுமே தெரியாதவர் போல ....அங்கே....அப்பா...

தொடரும்....

ஆகாயம்


ஆகாயமே உன்னை
அன்னார்ந்து பார்க்காதவர்
இலர் என்றே எண்ணுகிறேன்

ஆகாயம் நீ
வானம் என்றும்
வெட்டவெளி என்றும்
அழைக்கப் படுகிறாய்

எங்களை பார்க்கத்தூண்டும்
சூரியனும் சந்திரனும்
நட்சத்திரங்களும்
உன்னில் அருமை

உன்னை காணும்போது
எட்டாத தூரத்தில்
இருந்தாலும் பறவைகள்
எட்டித் தொட வரும் காட்சி
அருமையே என்பேன்.

மேகம் உன்னை
மறைத்தே சில
ஓவியமாய் திகழ்வதும்
உன்னில் அருமை

பரந்த வானில்
உன்னை ரசித்தது
ஏராளம்...
என்றாலும் மழையாய்
எங்களை வந்தடைவாய்
இடியும் மின்னலாய்
சப்தம் எழுப்பினாய்
என்றால் உன்னை
பார்க்க மனம்
ஒப்பவில்லையே...

அன்பினை உன்னை
போல் பரந்து விரிந்து
விடியும்போது எல்லாம்
நல்லதே நினைத்து
முற்பகல் பிற்பகல்
மாலை இரவு என
காலம் காட்டும்
உன்னால் தானே
எதற்க்கும் ஒரு
"காலமும் நேரமும்
உண்டு" என்பதே
சொன்னார்களோ...

Thursday, November 5, 2009

கண்ணீரும் மழைநீரும்


பாரபட்சத்தை முதல்
முறையாக உணர்ந்தவள்
பாரினில் இப்படியும்
நடப்பதை அறியாதவள்
மனவலிமை இன்றி
அழுது கொண்டிருந்தாள்
அன்னாந்து இறைவனை
கேட்டு கொண்டிருந்தாள்
மனம் மாறும் மனிதர்களை
படைத்தது நீயே தானா
கண்ணீரால் கண்கள்
நனைந்து கொண்டிருந்தன
மழைத்துளி அவள்
கண்ணீர்துளி மேல்
விழுந்தது ஆறுதலாக
இறைவன் அவளை
தேற்றுவதாக உணர்ந்தாள்
கண்ணீரின் நீருற்று
அந்த மழையின்
நீருடன் கலந்து
மண்ணில் சேர்ந்தது
தெளிவடைந்தது போல
யதார்த்தமாக எல்லாவற்றையும்
ஏற்று தானே ஆகவேண்டும்....
என மனதிலே நினைத்து
கொண்டே சென்றாள்......