Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Sunday, November 15, 2009

சும்மா...



சும்மா...
இந்த சும்மா என்ற வார்த்தை நம்மிடம் பழகும் பல நபர்களும் நாமும் உபயோகிக்கப்படும் வார்த்தை தான்..
சும்மா ஒரு முறைப் பார்ப்போம் எங்கெல்லாம் இந்த சும்மா வருகிறது என்று...

இல்ல இந்த வழியா வந்தேன்... அப்படியே சும்மா உன்னை பார்த்திட்டு போலாம் என்று தான்...
ஆமா..இப்போ நீ என்ன பண்ணுற...சும்மா தான் இருக்கேன்...
எல்லாம் தெரிந்தும் தெரியாததைப்போல கேட்க்கும் சிலர்...

காலையில அப்படியே சும்மா வாக்கீங் போவேன்...
அங்க நடந்து செல்லும் சிலரிடம் சும்மா பேசிட்டு வருவேன்..

திடீரென்று விருந்தாளி வந்து என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க...தொல்லை பண்ணிட்டேனோ...கேட்கிறார்...
இல்ல சும்மா...பேப்பர் படிச்சுட்டு இருந்தேன்..
சும்மா தொலைக்காட்சி தான் பார்த்திட்டு இருந்தேன்...

சரி வாங்க போவோம் சும்மா...என்ற இவைகள் ஒன்றும் பாதிக்காதவைகளாக இருக்கலாம்...
நம்மை பொறுத்த வரையில்....

சில கேள்விகளை திரும்ப திரும்ப கேட்கப்பட்டால்....வருத்தமே...

சும்மா தான் வந்தேன் என்றவரிடம்...ஏன்....எதற்கு.....என்ற கேள்விகள்...

ஏன் சும்மா இருகிறாய்... வேலைக்கு எங்கயும் போலயா...
காரணம் அறிந்தும் கேட்கப்படும் இந்த கேள்வி....

சும்மா தானே இருக்கிறாய்... செய்தால் என்ன...என்ற கேள்வி...

ஏதோ ஒன்று கேட்க வந்துவிட்டு சும்மா வந்தேன்.... நீ எப்படி இருக்கிறாய்....என்ற கேள்வியுடன் ஆரம்பித்து நீ சும்மா தான் இருக்கிறதா...கேள்விப்பட்டேன்..ஏன் என்னாச்சு...என்று பதில் அறிந்தும் கேட்கப்படும் கேள்வி...

எல்லோரும் ஏதோ ஒரு காரணமில்லாமல் இருக்க போவதில்லை..
நம்முடைய ஒவ்வொரு செயல்களிலும் ஏதோ ஒரு காரணம்....
சுயநலம்...பொதுநலம்...நிறைய....நம்மை அறியாமல் நாம் கேட்கப்படும் இவை மனதை பாதிக்கும் என்று அறியாமல் சொல்வதே...ஆகையால் தவிர்ப்போம்....இவைகளை...

சும்மா இருக்கிறாயா...என்று கேட்பது சுலபம்...ஆம் சும்மா தான் இருக்கிறேன் என்று சொல்வது வலி.
உணர்ந்து செயல்படுவோம்...உயர்விற்கு வழிக்காட்டுவோம்..
நன்றிகள்...

2 comments:

  1. அப்படியே வலையை மேய்ந்து கொண்டிருந்தேன்... "சும்மா" இதையும் பார்க்கலாமே என்று "சும்மா" அப்படியே உள்ளே வந்தேன்...

    //ஏன் சும்மா இருகிறாய்... வேலைக்கு எங்கயும் போலயா...
    காரணம் அறிந்தும் கேட்கப்படும் இந்த கேள்வி....

    சும்மா தானே இருக்கிறாய்... செய்தால் என்ன...என்ற கேள்வி...//

    இவை மன வருத்தம் அளிககும் கேள்விகள்... வ‌ருத்த‌ம் வேண்டாம் தோழியே...

    ஆனாலும், "சும்மா" இருப்ப‌து எவ்வ‌ள‌வு க‌டின‌ம்??

    சரண்யா... இந்த "சும்மா"க்களை ஜஸ்ட் லைக் நீங்கள் உதறி முன்னேறும் நாள் வெகுவிரைவில் உள்ளது...

    ReplyDelete
  2. நன்றிகள்..திரு கோபி அவர்களே...சும்மா வந்து சும்மா படித்தற்கு....

    ReplyDelete