Wake up! Within.
Saturday, November 7, 2009
குட்டீஸ்(2)
ஒன்றுமே தெரியாதவர் போல ....அங்கே....அப்பா...என் மகளுக்கு 2 1/2 வயது தான் ஆகிறது.....சேர்க்கலாமா...என்றார்....
அம்மா....ஒரமாக ஒரு பார்வை பார்த்து விட்டு.....இல்ல... அவள்..நல்ல படிப்பாளா..தெரியுல...அதான்..இப்படி கேட்கிறாங்க...தயங்கி தயங்கி...சொல்லுகிறாள்... அம்மா..
ஒ..தாராளமாக..இப்ப எல்லாம் எவ்வளவோ முன்னேறிக் கொண்டு இருக்காங்க பசங்க....
2 1/2 வயதிலேயே ...படிக்கிற பசங்க எங்க பள்ளிக்கூடத்தில இரண்டு பிரிவு இருக்காங்க...
பொன்னு நல்ல பேச ஆரம்பித்துவிட்டாளா...பிறப்பு சான்றிதழ் நகலைக் (birth certificate -xexox copy)
கொண்டு வாங்க...
தலைமையாசிரியரை நாளை வந்து சந்தித்து அட்மிஷன் போட்டு கொள்ளலாம்...
இன்று நீங்கள் பார்க்க இயலாது....சார் மீட்டீங் ல இருக்காங்க...அதனால நாளை வாங்க...
நிச்சயம் அட்மிஷன் உண்டா...சந்தேகத்துடன் அப்பா கேட்கிறார்...
ம்... தலைமை ஆசிரியர் உங்களிடம் பேசுவார்...வரும் போது மகளையும் கூட்டிட்டு வாங்க...
கட்டணம் எவ்வளவு மேடம்...
அம்மா..தனக்கே உரிய பாணியில் எவ்வளவு இருந்தா என்ன ங்க..சேர்க்க தான போறோம் என்று
முணுமுனுக்கிறாள்...கணவனிடம்....வாங்க நாளை வருவோம் என்கிறாள்...
கிளர்க்...இந்தாங்க சார் உங்க மகளை சேர்க்க நீங்கள் எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை எழுதியிருக்கேன்....நன்றி மேடம்..நாளைக்கு வந்து பார்க்கிறோம்...என்றார்...
வெளியே வருகிறார்கள்...அங்கே மைதானத்தில் சின்ன சிறார்கள் விளையாடுவதை பார்க்கிறார்கள்...
மீனியல் அங்கு ஒரு சின்ன குட்டீஸுக்கு பால் ஆத்தி கொடுத்து கொண்டிருந்தாள்.
கேட்டுகிட்டிங்களா...
நாளை வர சொல்லி இருக்காங்க...தலைமை ஆசிரியர் சந்திக்க....
என்ன ..பால ஆத்திகொண்டிருக்கீங்க போல...ஆமாம் மா...இந்த குழந்தை காலையில சாப்பிடல அவுங்க அம்மா கொடுக்க சொல்லியிருந்தாங்க...பாவம்.மா..பிள்ளைக்கு பசி...துவண்டு போயிடுச்சு...அதான்....
சந்தோஷினியின் அம்மாவின் கண்களில் ஒரு மலர்ச்சி....ம்..இந்த மீனியல் தன் குழந்தையும் பார்த்து கொள்வாள் என்ற நம்பிக்கையில் மிளிர்ந்த பார்வை....
அங்கேயிருந்த குழந்தைகள் அழகாக வரிசையில் செல்வதை பார்த்தார்கள்...இது தான் இந்த பள்ளியின்
சீருடை போல...அழ்காக தான் இருக்கிறது...
நகர்ந்தார்கள்...ஏன் ங்க...நம்ம குட்டிமா..க்கு..இந்த ஸ்கூல் பிடிக்கும் ல...
ம்..ம்.வா..நல்லாத்தான் இருக்கிறது...இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் சொன்னா கேட்க மாட்ட...
அப்பறம் ..என்னையே கேளு...பிடிக்காததை போல அலுத்து கொள்கிறார் அப்பா..
ரொம்ப கனவுகளுடன் அப்பாவும் அம்மாவும் மெல்ல மெல்ல நகர்ந்து செல்கிறார்கள்..
ஸ்கூல் போனோம் குட்டிமா....பெரிசா...சூப்பரா..குட்டிமா..விளையாட நிறைய இருக்கு அங்க...
நாளைக்கு போவோம்....சரி குட்டிமா..அங்க உன்னோட பேரு கேட்பாங்கலே...
என்ன சொல்லுவிங்க....சந்தோசின்னி....இல்ல குட்டிமா...சின்னி இல்ல ஷினி மா...
சொல்லுங்க...சந்தோ....சினி...
இல்ல குட்டிமா... இங்க பாருமா...சந்தோஷினி.....
அம்மா ஆவலுடன் அவள் முகத்தை பார்த்து கொண்டிருக்க...அப்பா அவளை ஏன் இப்பவே படுத்தி எடுக்கிற...வரலன்னா விடு...அவளே பெரிசானா சொல்லிப்பா...
நீங்க வாங்க செல்லம்...குட்டிமா....அம்மு....
இருங்க ங்க சொல்லுவா...நாளைக்கு அட்மிஷன் கிடைக்க வேண்டுமே...
சந்தோ..ஷினி...சொல்லிவிடும் அந்த குட்டீஸ்....
அம்மாவின் முகம் மலரும்....அப்பா அங்கே எங்கையோ பார்த்து கொண்டு...சொல்லிவிட்டாள் என மனதிலே நினைக்கிறார்....பள்ளி செல்ல தயார் படுத்துகிறாள் தாய்.
மறுநாள் காலை.....
தொடரும்.....
Subscribe to:
Post Comments (Atom)
இரண்டாவது பார்ட் சூடு பிடிக்கிறது...
ReplyDeleteஅழகாக சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது... குறிப்பாக :
//குட்டிமா....பெரிசா...சூப்பரா..குட்டிமா..விளையாட நிறைய இருக்கு அங்க...
நாளைக்கு போவோம்....சரி குட்டிமா..அங்க உன்னோட பேரு கேட்பாங்கலே...
என்ன சொல்லுவிங்க....சந்தோசின்னி....இல்ல குட்டிமா...சின்னி இல்ல ஷினி மா...
சொல்லுங்க...சந்தோ....சினி...
இல்ல குட்டிமா... இங்க பாருமா...சந்தோஷினி.....
அம்மா ஆவலுடன் அவள் முகத்தை பார்த்து கொண்டிருக்க...அப்பா அவளை ஏன் இப்பவே படுத்தி எடுக்கிற...வரலன்னா விடு...அவளே பெரிசானா சொல்லிப்பா..//
குழந்தைக்கு டீச்சிங் எடுக்கும் தாய் மற்றும் தந்தையர்...
நல்லா எழுதி இருக்கீங்க சரண்யா...
மூன்றாவது பகுதிக்கு வெயிட்டிங்....
ஒ..நன்றிகள்...அது சின்ன கற்பனை...
ReplyDelete