கண்ணீரும் மழைநீரும்
பாரபட்சத்தை முதல்
முறையாக உணர்ந்தவள்
பாரினில் இப்படியும்
நடப்பதை அறியாதவள்
மனவலிமை இன்றி
அழுது கொண்டிருந்தாள்
அன்னாந்து இறைவனை
கேட்டு கொண்டிருந்தாள்
மனம் மாறும் மனிதர்களை
படைத்தது நீயே தானா
கண்ணீரால் கண்கள்
நனைந்து கொண்டிருந்தன
மழைத்துளி அவள்
கண்ணீர்துளி மேல்
விழுந்தது ஆறுதலாக
இறைவன் அவளை
தேற்றுவதாக உணர்ந்தாள்
கண்ணீரின் நீருற்று
அந்த மழையின்
நீருடன் கலந்து
மண்ணில் சேர்ந்தது
தெளிவடைந்தது போல
யதார்த்தமாக எல்லாவற்றையும்
ஏற்று தானே ஆகவேண்டும்....
என மனதிலே நினைத்து
கொண்டே சென்றாள்......
கண்ணீரும் மழை நீரும்
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு... நான் கூட உங்க எழுத்து மழையில் நனைந்தேன் சரண்யா...
அதுவும் இந்த வரிகள் என்னை ஓஹோ சொல்ல வைத்தது :
"கண்ணீரால் கண்கள்
நனைந்து கொண்டிருந்தன
மழைத்துளி அவள்
கண்ணீர்துளி மேல்
விழுந்தது ஆறுதலாக
இறைவன் அவளை
தேற்றுவதாக உணர்ந்தாள்"
வாழ்த்துக்கள் சரண்யா....
நன்றிகள்...திரு கோபி அவர்களே..
ReplyDelete