Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Friday, November 6, 2009

குட்டீஸ்

தங்கள் திருமணத்திற்கு பின்பு பல நாட்கள் கழித்து.....தவமிருந்து பெற்ற குழந்தை தான் சந்தோஷினி..தங்களை மகிழ்விக்க பிறந்தவள்...தங்களுக்கு ஓர் அடையாளமாக..தங்களுக்கென உரிமை கொண்டாட...தாங்களும் பெற்றோர் ஆனதில் மகிழ்ச்சி அடைந்த தம்பதியனருக்கு தங்களை அங்கிகரிக்க
இந்த சுற்றத்தில்.....சந்தோஷினி அம்மா லதா வீட்டிலிருக்கிறார் தற்காலிகமாக ... அப்பா அருண் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்...

சந்தோஷினி அம்மா....மகளுக்கு 2 1/2 வயது வரபோகிறது.பள்ளியில் சேர்க்க வேண்டுமே...என்ற எண்ணம் வந்தது.இத்தனை நாட்களாக வெளியில் என்ன நடக்கிறது எனத் தெரிந்திராத அம்மா.....

விசாரிக்க தொடங்குகிறார்....

எந்த பள்ளி நல்ல பள்ளி..
எதில் என் குழந்தை பாதுகாப்பாக இருப்பான்...
ஆங்கிலத்தில் சொல்லி கொடுப்பார்களா...
விளையாட விடுவார்களா...

இப்படி தெரிந்தவர் தெரியாதவர் எனக் காய்கறி விற்பவரில் தொடங்கி கணினி மையத்தை நடத்துபவர் வரை கேட்டு தெளிவு பெற்றாள்....

சரிங்க...நாம் இந்த பள்ளியிலே சேர்க்கலாம் என கணவரிடம் சொல்லுகிறாள்...

அப்பாவும் தன் பங்கிற்கு தன்னுடன் வேலைப் பார்ப்பவர் முதல் நட்பு வட்டம் வரை விசாரித்திருந்ததும் அதே பள்ளிக்கூடத்தின் பெயரைத் தான்.....

அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அப்பா....சிறது நேரம் கழித்து சரி என்றார்.
கட்டணத்திலும்...தரத்திலும்....சிறப்பாக சொல்லுவது இந்த பள்ளியைத் தாங்க...

குட்டிமா...அப்பாகிட்ட சொல்லுடா...ஸ்கூல் போறேன்னு....
புது டிரஸ் ......
புது ப்பஃக்.....
வேற என்ன வேணும்... செல்லத்துக்கு...போவோமா...என்று பிள்ளையின் மனதில் ஏற்றுகிறாள் தாய்.

இருவரும் சேர்ந்து முதல் முறையாக பள்ளிகூடத்தை நோக்கி...செல்லுகிறார்கள்...


மீனியல்(பள்ளிக்கூட ஆயா): என்ன வேணும் சார்
பிள்ளையை சேர்க்கனும்...
அப்படியா....வாங்க..உள்ள கிளர்க் இருப்பாங்க...வலது பக்கமாக இருக்கிற அறையில் சென்று பாருங்கள்..என்கிறாள் மீனியல்..


மெதுவாக உள்ளே சுற்றி சுற்றி பார்த்தவர்கள்...இந்த பள்ளிக்கூடத்தில தன் குழந்தை படிக்க போவதை தன் கண்களால் படம் பிடித்தார்கள்...மைதானம் உள்ளது தான் போல...அங்கே...சரி வா..என்று சொல்லி அப்பா உள்ளே செல்கிறார் முதலில்...பின் தொடருகிறாள் அம்மா...

ஒன்றுமே தெரியாதவர் போல ....அங்கே....அப்பா...

தொடரும்....

2 comments:

  1. //எந்த பள்ளி நல்ல பள்ளி..
    எதில் என் குழந்தை பாதுகாப்பாக இருப்பான்...
    ஆங்கிலத்தில் சொல்லி கொடுப்பார்களா...
    விளையாட விடுவார்களா...

    இப்படி தெரிந்தவர் தெரியாதவர் எனக் காய்கறி விற்பவரில் தொடங்கி கணினி மையத்தை நடத்துபவர் வரை கேட்டு தெளிவு பெற்றாள்....//

    ம்ம்... அதுதானே தாய் ம‌ன‌சு... பெற்ற‌வ‌ளுக்கு தான் த‌ன் குழந்தை மேல் என்ன‌ அக்க‌றை...

    //அப்பா உள்ளே செல்கிறார் முதலில்...பின் தொடருகிறாள் அம்மா...

    ஒன்றுமே தெரியாதவர் போல ....அங்கே....அப்பா...

    தொடரும்.... //

    சூப்ப‌ரான‌ இட‌த்தில் தொட‌ரும்னு இருக்கு... அடுத்த‌ ப‌குதிக்கு வெயிட் ப‌ண்றேன்...

    ReplyDelete
  2. நன்றிகள் திரு கோபி அவர்களே...முதல் முறையாக எழுதும் கதை....

    ReplyDelete