Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Friday, November 13, 2009

குட்டீஸ்(4)...

அங்கே இவர்கள் செல்லுவதற்கு முன்பே மூன்று பெற்றோர்கள் தலைமை ஆசிரியரை சந்திக்க காத்திருந்தனர்..
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ரொம்ப கண்டிப்பானவர் எனக் கேள்விப் பட்டிருப்பதை நேரில் பார்த்தனர்....அவரின் நடவடிக்கையில்....பள்ளி ஆசிரியர்கள் அவரிடம் பேசும் விதம்...அனைத்தையும் பார்த்துக் கொண்டு காத்திருந்தனர்.

இவையெல்லாம் பார்க்கும்படி செய்வதே அந்த பள்ளிக்கு பேரு கிடைக்கத் தான் என்பதை அறியாமல் காத்திருந்தனர்...

பின்பு தலைமை ஆசிரியர் பள்ளியின் வழிபாடு முடிந்தவுடன் வந்தார்....
சந்தோஷினியின் அப்பா கைக்கடிகாரத்தை பார்த்தார்....
அம்மா சொல்லி கொண்டிருந்தார்...குட்டிமா...உன்னோட பெயர் கேட்டா...அழகாக சொல்லணும் என்று......பேசி கொண்டிருந்தாள்...சந்தோஷினியிடம்....

சந்தோஷினியோ முதல் முறை என்பதால் சுற்றி பார்த்து கொண்டிருந்தாள்....தலையை ஆட்டிக்கொண்டே...
மற்ற குட்டீஸ் வந்ததையும் பார்க்கிறாள்...

முதலில் வந்த இருவரை உள்ளே அழைத்தனர்....
பின்பு இவர்களுக்கு முன்பு வந்த பெற்றோரையும் அருண் தம்பதியினரையும் உள்ளே அழைத்தனர்...

உள்ளே..இவர்களுக்கு முன் இருந்தவரிடம் பேசுவதை பார்த்து கொண்டிருந்தார்..
சந்தோஷினியின் அப்பா...அம்மா குட்டிமாவை பேசாமல் அமைதியாக பார்த்து கொண்டிருந்தாள்...
சந்தோஷினிக்கு இடம் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில்....காத்திருந்தனர்....

தலைமை ஆசிரியரிடம் குழந்தையின் சான்றிதழ் கொடுத்தவர் மேஜையின் மேலே கையை வைத்துவிட்டார்....அந்த அப்பா....தலைமை ஆசிரியர் அதை பார்த்தார் சான்றிதழை படித்து கொண்டே...அப்பா அந்த மகளை பார்த்து கொண்டிருந்தார் தலைமை ஆசிரியரை கவனிக்காமல்....

இதை சந்தோஷினியின் அப்பா கவனித்து விட்டார்....ஒன்றும் சொல்லமுடியவில்லை....மேஜை மேல் கை வைப்பது இங்கிதமில்லை என்று அவர் அறிந்திருந்தார்....

ஏதோ ஒரு காரணத்தை சொல்லி சற்று காத்திருக்க சொன்னார் அவர்களை....
பின் அருண் அவர்கள்... சந்தோஷினியை அறிமுக படுத்திவிட்டு தான் இந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும் தன் மகளை பள்ளியில் சேர்த்து கொள்ளுமாறு ரொம்ப தெளிவாக பேசினார் அப்பா அருண்....
கணவர் இப்படி சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதை முதல் முறையாக பார்த்து கொண்டுருக்கிறாள் அம்மா லதா...
தலைமை ஆசிரியர் சற்றும் தயங்காமல் சான்றிதழை பார்த்துவிட்டு...
ஹலோ....வாட் ஸ் யுவர் நேம் என்கிறார்....சந்தோஷினியை பார்த்து...
சந்தோஷினி தனக்கே உரிய பாணியில் மழலையோடு...சந்..தோ.ஷி..னி..என்றாள்..

குட்.....என்று சொல்லிக்கொண்டே....கைகொடுத்தார்...சாக்லேட் வழங்கினார்...
பின் அட்மிஷன் போட்டு கொள்ளலாம் என்று அப்பா அருணுக்கும் கைகொடுத்தார்...
"தஃங்கியு"..என்றார் அப்பா..."வெல்கம்" என்றார் தலைமை ஆசிரியர்...
பின் அப்பா அருணுக்கு அம்மா லதாவிற்கும் ரொம்ப சந்தோஷம்....நேற்று சென்ற அந்த கிளர்கிடம் அட்மிஷன் படிவத்தில் எல்லாவற்றையும் எழுதி கொடுத்துவிட்டு சேர்த்துவிட்டனர்...சந்தோஷினியை....

அந்த பள்ளியில்...சேர்ந்தவுடன்...சிலர்...

(தொடரும்...)

4 comments:

  1. குட்டீஸ் தொட‌ர் ந‌ல்லா அனுப‌விச்சு எழுத‌றீங்க‌...

    ரொம்ப‌ ரொம்ப‌ இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு... அடுத்த‌ ப‌குதிக்காக‌ வெயிட்டிங்...

    ReplyDelete
  2. இந்த குட்டீஸ் தொடர் வெற்றி அடைய வாழ்த்துகள், முத்தமிழ் மன்றத்திலே தொடர்ந்து படித்து வருகிறேன். நல்லா எழுதுறீங்க.

    ReplyDelete
  3. நன்றிகள்...திரு கோபி அவர்களே...
    குழந்தை சேர்க்கும் போது பார்த்திருக்கிறேன்....கொஞ்சம் க்ற்பனை..கொஞ்சம் தெரிந்தது...தொடருகிறேன்...

    ReplyDelete
  4. நன்றிகள்...மணி அவர்களே...முதல் முறை வருகை புரிந்து பின்னூட்டம் அளித்தற்கும்..தங்களின் வாழ்த்துக்கும்...முதல் கதை எழுதினா எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் உதித்தவை.... நன்றிகள்...

    ReplyDelete