Wake up! Within.
Friday, November 6, 2009
ஆகாயம்
ஆகாயமே உன்னை
அன்னார்ந்து பார்க்காதவர்
இலர் என்றே எண்ணுகிறேன்
ஆகாயம் நீ
வானம் என்றும்
வெட்டவெளி என்றும்
அழைக்கப் படுகிறாய்
எங்களை பார்க்கத்தூண்டும்
சூரியனும் சந்திரனும்
நட்சத்திரங்களும்
உன்னில் அருமை
உன்னை காணும்போது
எட்டாத தூரத்தில்
இருந்தாலும் பறவைகள்
எட்டித் தொட வரும் காட்சி
அருமையே என்பேன்.
மேகம் உன்னை
மறைத்தே சில
ஓவியமாய் திகழ்வதும்
உன்னில் அருமை
பரந்த வானில்
உன்னை ரசித்தது
ஏராளம்...
என்றாலும் மழையாய்
எங்களை வந்தடைவாய்
இடியும் மின்னலாய்
சப்தம் எழுப்பினாய்
என்றால் உன்னை
பார்க்க மனம்
ஒப்பவில்லையே...
அன்பினை உன்னை
போல் பரந்து விரிந்து
விடியும்போது எல்லாம்
நல்லதே நினைத்து
முற்பகல் பிற்பகல்
மாலை இரவு என
காலம் காட்டும்
உன்னால் தானே
எதற்க்கும் ஒரு
"காலமும் நேரமும்
உண்டு" என்பதே
சொன்னார்களோ...
Subscribe to:
Post Comments (Atom)
//மேகம் உன்னை
ReplyDeleteமறைத்தே சில
ஓவியமாய் திகழ்வதும்
உன்னில் அருமை//
மிக மிக அருமை...
//என்றாளும் மழையாய்
எங்களை வந்தடைவாய்
இடியும் மின்னலாய்
சப்தம் எழுப்பினாய்
என்றால் உன்னை
பார்க்க மனம்
ஒப்பவில்லையே...//
என்றாலும் என்று இருக்க வேண்டும் சரண்யா...
//முற்பகல் பிற்பகல்
மாலை இரவு என
காலம் காட்டும்
உன்னால் தானே
எதற்க்கும் ஒரு
"காலமும் நேரமும்
உண்டு" என்பதே
சொன்னார்களோ... //
ஓஹோ...இப்படியும் இருக்கலாமோ என்று சிந்திக்க வைத்து விட்டது உங்கள் கவிதை சரண்யா.... அருமை... வாழ்த்துக்கள்.........
நன்றிகள்...தொடர்ந்து ஊக்கம் அளிக்கிறீர்கள்...
ReplyDelete