இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருந்தோம்...ஒரு வாரமாக படிக்காமல்...ஏதோ போல இருக்கிறது..புத்தகம் ஓர் உற்ற தோழன் என்பது சரி தானோ! உன்னை சந்திக்காமல் இருந்ததில் வருத்தம்....எனினும் வந்தாச்சு..பேசுவோம்!..:)
திரும்ப படிக்க ஆரம்பிப்போம்...வாங்க!
ஆம்..உண்மை தான் ...சுண்டல் சாப்பிட்டு வரலாம்...இந்த சாதம் தருவாங்க என்று முன்னரே தெரிந்து நிறைய பேர் பிரசாதம் வாங்க என்று கூட வருவதுண்டு...என்று சொல்வர் நகைசுவையாக...பகிர்ந்து உண்ணுதல் என்பது சரியே...
அந்த காலத்திலே பாரதியார் வாழ்ந்த வாழ்வியலை அறிய முடிகிறது...👇
63 நாயன்மார்களும் வாழ்ந்த விதமும் அதில் குறிப்பாக இளையான்குடி மாறநாயனார் என்பவரின் கதை அறியும் போது ..எவ்வளவு விருந்தோம்பலில் கவனம் செலுத்தியுள்ளனர் என்பது அறிய முடிகிறது..(மேலும் பக்திக்கு நாயன்மார்கள் போல கடவுள் மீது அன்பு செலுத்த இயலுமா என நான் பல முறை 63 நாயன்மார்கள் சன்னதி அடையும் போது கேட்டு கொள்வதுண்டு...அதுவேணும்... இது வேணும்...கேட்கிறோம்..கொடுத்து இருக்கிறோமா என யோசிக்க வைக்கிறது..கடவுளுக்கு செய்யவில்லை என்றாலும் கடவுள் உருவில் உள்ள சக மனிதரை சரியான மதிப்பு அளிக்கிறோமா...)
https://shaivam.org/to-practise/ilayankudi-mara-nayanar-puranam
அதிக தகவல் அறிய இங்கே பகிர்ந்துள்ளேன்👆
ரமண மகரிஷி வாழ்க்கை பற்றியும்,
பசியோடு இருப்பவர் கையேந்தி கேட்கும் போது
நம்மால் இயன்றதை கொடுப்போம்...
அவர்களை இழிவாய் பேசுவது தவறு...
(பிச்சை காரன் படம் பார்த்தவுடன்
இப்படியும் சிலர் வேண்டுதலால்
பிச்சை எடுப்பர் என்பது புரிந்தது,
மடிபிச்சை,தாலிபிச்சை என்பதை
அன்றாட வாழ்வில் பார்த்திருப்போம்...)
மேலும் பசியில் இருப்பவருக்கு தீங்கு செய்தால்
அவர்கள் சாபம் நம்மை தாக்கும்...என்பதையும் அறிய முடிந்தது....
இப்படிப் பார்த்தால் மனம் பதறும் ஆனால் இது நிறைய இடங்களில் சர்வ சாதாரணமாக நடக்கிறது...உணவை வீணாக்காதீர்கள்...உணவே ....இறைவன்.
FOOD IS GOD...DON'T WASTE THE FOOD
என சாப்பிடும் இடத்தில் எழுதி வைத்திருப்பர்...
சிறுவயதில் சொல்லிக் கொடுத்தால் பசங்க வீணாக்க மாட்டாங்க!
மேலும் இந்த உணவு எப்படி கிடைக்கிறது சோமாலியாவில் பசங்க எப்படி வாழ்கிறார்கள்...உணவின் முக்கியத்துவம் பற்றி அறிந்தால் நிச்சயம் அதனை சேமிக்க தோன்றும்...
அவர்களாலும் யதார்த்தத்தை உணர முடியும்...
ஒவ்வொரு நாளும் ஒன்றை நம்மை சுற்றி இருக்கும் பொருட்களை வைத்து சொல்லி தருவாங்க எழுத்தாளர்..இன்று இந்த ஐந்தாம் பகுதியில் உணவை வீணாக்காதீர்கள்! தினமும் அல்லது ஒரு விழா வைத்தாலும் இவ்வளவு உணவும் வீணாய் தட்டில் செல்லவோ குப்பைத்தோட்டியில் போடவோ
நாம் காரணமாக இருக்க கூடாது... சரி தானே!😊👍
- தொடர்ந்து யதார்ததமாய் படிக்கலாம்
No comments:
Post a Comment