Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Tuesday, July 21, 2020

யதார்த்தமாக படிக்கலாம் வாங்க!சிறகை விரி!பற...என்ற புத்தகம் ( பகுதி 8)

இந்த புத்தகத்தில் நிறைய ஆன்மீக விஷயங்களை யதார்த்தமாக கற்றுக் கொள்ள ஆர்வமாக படிக்க தோன்றுகிறது...பல இடங்களில் நடப்பது..நிறைய மேற்கோள்கள் என அருமையாக உள்ளது ...வாங்க ! படிப்போம்...

https://temple.dinamalar.com/news_detail.php?id=25270
https://temple.dinamalar.com/news_detail.php?id=25270

 மேலும் அதிக தகவல் சிவனின் ஐந்து லிங்கங்கள் பற்றி தெரிந்து கொள்ள....👆

ஆம் தலைப்பின் வழி நம் வாழ்வின் பொருள் என்ன? எதற்காக இந்த பிறவி என்ற தேடலில் உதவும் மகத்தான ஆன்மீக பயணம்...😊👍🙏

வியாசர் கேட்ட கேள்வியும்,கண்ணன் அளித்த பதிலில் ஆன்மாவின் தன்மையை உணர முடிகிறது...மேலும் அற்புதமான ஹிலாரியின் சாதனையும் அதற்கு வழிவகுத்த டென்சிங் நார்கேவை இமய மலை உச்சியில் சென்று படமெடுத்த ஹிலாரி தன்னை எடுத்து கொள்ளவில்லை என்பது தான் மிகவும் ஆச்சர்யமானது...அதனை அப்படியே ஆனால் கண் முன்னால் ஓடவிட்டது எழுத்தாளரின் எழுத்தால் தான்..அருமை..

இவரோட வாழ்க்கை மிகவும் விசித்திரமாக உள்ளது ...இங்கிலாந்தில் பிறந்தவர் இந்தியாவில் இருந்து இங்கு நெய்யூரில் சென்று 20 வருடங்கள் சேவை புரிந்துள்ளார்....👏👏👍🙏

பனியருவி கட்டிகளுக்கு நடுவே சிக்கி தன் நண்பர்களெல்லாம் இறந்தும் தான் மட்டும் ஏன் காப்பாற்ற பெற்றோம் என கேள்வி கேட்டு அழுதுள்ளார்...🤔 அதற்கான பதிலாக அவர் ஆற்றிய பணியும்,செய்த சேவையும் சொல்ல இயலாதவை அல்லவா...
 

பழமையான மருத்தவமனையில் 500 பேர் ஒரே ஒரு மருத்துவர் இருந்ததை கண்டு...புதிய மருத்துமனை தன் சொந்த செலவில் கட்டி கொடுத்துள்ளார்.... அருமை ...மேலும் காலரா நோயாளிகளுக்கு சிகிச்சை செய்துள்ளார்...தன் கடைசி காலத்தில் நாடு திரும்பியுள்ளார்...எழுத்தாளரின் மேற்கோளில் இதனை அறிய முடிந்தது மிக்க நன்றி🙏

 எல்லாம் வல்ல சிவபெருமானும் தன் 49 ( ஆனந்த லஹரி) சக்திக்காக பாடிய பாடலை ஆதிசங்கரருக்கு கொடுத்து அவர் 51 பாடல்கள் (சௌந்தர்ய லஹரி) இயற்றப்பட்டது...அது போல ஹிலாரியும் தன் வாழ்வில் இமயமலை ஏற உதவிய அந்த சமூகத்திற்கு நிறைய உதவிகள் செய்துள்ளார்...தன் வாழ்நாளை அற்ப்பணித்த மருத்துவர்....யதார்த்தமாக நாம் கற்றது முடிந்த வரை கொடுத்து உதவுவோம் ...பணம் ..பொருளா இல்லை என்றால் மன ஆறுதல்...அறிவின் வழி தெரிந்தவை சொல்லிக் கொடுக்கலாம் அல்லவா...நன்றி...🙏😊👍
          - யதார்த்தமாக நம்முள் புகுத்தும் புத்தகம் ..தொடர்ந்து படிப்போம்

No comments:

Post a Comment