Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Tuesday, July 21, 2020

புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 15)

இந்த புத்தகத்தில் 15 ஆவது தலைப்பை பற்றி பார்க்கலாம் வாங்க!


ஆம் எவ்வளவு முக்கியமான ஒன்று....நாவால் பாராட்டி பேச முடியும்...ஒரு சில நொடிகளில் இழிவாய் திட்டவும் இயலும். என்னை பொறுத்த வரையில் மிக முக்கியமாக ..இதனை எப்பொழுது அடக்கிறோமோ இல்லையோ...கோபத்தில் அடக்க முயற்சி செய்வோம்!...

நிச்சயம் மௌனம் காப்பது சுலபம் தானே...எட்ட போயிடலாம் பேசாம...எவ்வளவு வலியது... 32 பற்களை தாண்டி வர முயற்சி செய்யும் போதே விழிப்புணர்வாய் அடக்கி ஆள்வோம்!....👅😛😝🤪😜



மறக்க முடியாத குறள் தான்! எனினும் மௌனம் பேசும் மொழி அறியாமல்...👅 நாவை அடக்க தவறி விடக்கூடாது😜🤪😛👍🙏

இதன் கீழ் இருப்பது நான் சின்ன வயதில் கேட்ட கதையை இந்த தலைப்பிற்கு பொறுத்தமாக உள்ளதால் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்....

நாக்கு 👅 எப்படி கையாள வேண்டும் என்பதற்கு ஒரு கதை சொல்வாங்க...

ஒரு அரசர் உலகிலே எது சிறந்த மகிழ்ச்சியை தர வல்லது என கேட்டாராம்....அதற்கு அமைச்சர் சொன்ன பதில் எதுவும் அரசருக்கு த்ருப்தியாக இல்லையாம்...அப்போது அவர் தண்டோரா போட்டு ஆயிரம் பொற்காசுகள் யார் இதற்கு சரியான விளக்கம் அளிக்கிறார்களோ அவர்களுக்கு என அறிவிப்பு கொடுத்தாங்க!

இதனை ஊர்மக்கள் ரொம்ப விழா போல கூடி இருந்து தனக்கு எதிலெல்லாம் மகிழ்ச்சி இருக்குமோ அதெல்லாம் வந்து வைத்து வரிசையாக காத்திருந்தனர்....

அப்போது அந்த வரிசை வழி அரசர் வந்து பார்த்து கொண்டே வந்தார்....அழகான பூக்கள்... அருமையான உணவு வகைகள்....சிலர் ஆடைகளில் விலை உயர்ந்தவை ...வைரம்...தங்கம்...இடம் வாங்கினால்  மகிழ்ச்சி ஏற்படும் என ஒவ்வொன்றாக பார்த்த அரசர்  ஒரு நபர் மட்டும் நாக்கை 👅 வரைந்து வைத்திருந்தான்....அரசர் விளக்கம் கேட்டார்..

ஆம் அரசே புகழ்ந்து பாடும் 👅 நாக்கு ....நற்சொற்களை கூறி நம்மை மகிழ்விக்கும்...எந்த ஒரு இடம் மாறி போக தேவையில்லை நாம் நம்மிடம் உள்ளதை கொண்டு மகிழ்ச்சியாய் இருக்கலாம் என்றான்!....அரசனுக்கு ஒரே மகிழ்ச்சி....தனக்கு விடை கிடைத்தது என்று எண்ணி ஆயிரம் பொற்காசுகளை அள்ளி கொடுத்தான் அவனும் அதனை மகிழ்ச்சியோடு பெற்றான்.....

பின் அரசருக்கு எது உலகிலே நம்மை துன்ப படுத்தும் என்ற சந்தேகம் வந்தது....மீண்டும் மக்கள் ஆவலோடு காத்திருந்தனர்....அரிவாள்....பெரிய பெரிய அறுக்க கூடிய பொருட்கள்....தீ 🔥 ...அழுக்கு ஆடைகள்..அருவருப்பான விசயங்களை வைத்திருந்தனர்...பின் நாக்கும் 👅 அதில் இடம் பெற்றது....ஏய் நீ முன்பே இது சிறந்தது என பரிசு பெற்றாய் இப்பொழுது இதனையே துன்பத்திற்கு சொல் கிறாய் என விளக்கம் கேட்டாராம்!

ஆம் அரசே நாக்கு 👅 சில சமயங்களில் இழிவாய் பேசி உறவுகளை, நண்பர்களை இழக்க செய்யும்...இதனை சரியாக கையாளவில்லை என்றால் ப்ரச்சனை தான்!
யோசித்து பார்த்த அரசன் பாராட்டி 🎁 பரிசு கொடுத்ததாக கூறுவர்....


ஆக நன்மையும்,தீமையும் நம்மால் என்பது நாம் நம்மில் உள்ள நாவை அடக்குவதில் தான் உள்ளது!

Help Ever!Hurt Never!

                                               - தொடர்ந்து படித்து யோசிப்போம்



No comments:

Post a Comment