Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Tuesday, July 21, 2020

Books படிப்பீங்களா?ப்ளீஸ் இந்த புத்தகம் வாங்காதீங்க! Chapter 14 நீங்கள் திறமைசாலி தான்!


இந்த புத்தகம் நிச்சயம் நம்மை மாற்றும்...படிக்க படிக்க ஒரு புரிதல் ஏற்படும்...வாங்க 14 ஆவது தலைப்பில் என்ன சொல்லி இருக்காங்க பார்ப்போம்....



 நம்ம புதுசா புதுசா கற்றுக்கொள்கிற மாதிரி புதுசு புதுசா உருவாக்கவும் ஆர்வம் கொள்ள வேண்டும்..... அது மட்டும் இல்லாமல் எதையோ சாதிக்க தான் நாம் பிறந்திருக்கிறோம் என நாம் நம்மை முழுமையாக நம்ப வேண்டும்... சந்தோஷமாக சாதிப்போம்!😊👍

ஒருவர் மட்டும் அல்ல....அனைவரும் ஒன்று கூடி செய்யும் போது சில சிக்கல்கள் வரலாம்...ஆனால் அனைவரும் அவரவர் வழியில் மிகவும் சிறப்பாக புதுமையை படைப்பதில் தவறில்லையே...🤝👍 
                                   
முனைப்போடு செய்ய துவங்குவோம்...👍

 புதுமையை உருவாக்கம் என்பது புத்திகூர்மையுடன் கூடிய சந்தோஷம்😊😀👍


இது தான் ரொம்ப முக்கியம்....மூளையில் இரண்டு பெரும் பகுதிகளாக பிரிந்துள்ளது...மேலே உள்ள படம் அருமையாக நமக்கு உணர்த்துவது என்னவென்றால் சிலர் இப்படி தான் இருக்க வேண்டும் ..இதனை இங்கு தான் வைக்க வேண்டும் ..இது தான் என்னுடைய கொள்கை என ஒரு அலுவலகம் போல அமைப்பின் வழி தான் செல்லுவர்....அவுங்க இடது மூளை காரவங்க...இன்னும் சிலர் ரொம்ப ஜாலியா தனக்கு தோன்றுவதை செய்யுவாங்க...படத்தில பார்த்தாலே தெரியும் வண்ணமயமான வாழ்வு இவர்கள் வலது மூளை காரவங்க...இதை நாம் கண்டுபிடித்திட்டா போதும்...வாழ்க்கை சுமுகமாக போகும்...😊👍

 Simple ஆக சொல்லணும் என்றால்...இடது மூளை கணக்கு பண்ணி வாழறது...வலது மூளை எது வந்தாலும் சமாளிச்சுடலாம் என்று வாழறது...வலது ...இடதாகவும்...இடதை வலதாகவும் மாற்றும் திறமை நம்ம மனசுக்கு இருக்கிறது... இரண்டையும் சேர்த்தும் சமாளித்தும் சாமார்தியமாகவும் வாழ கற்று கொள்ளலாம்...👍😊🤝🙏😀

                                    - தொடர்ந்து வந்து படிப்போம்!






No comments:

Post a Comment