ஆம் பரம்பொருள் ஒன்றே....என்பதில் ஐயமில்லை வேறு வேறு வழிகளில் நாம் அடைய நினைக்கும் பரம்பொருள் ஒன்று தான்!
இவர்கள் மூவரோடு கடவுள் இருப்பதாக உண்ர்நதனர் அதனால் நாம் மூவரல்ல நால்வர் என்ற வைணவ மரபில் சொல்லப் படுகிறது அதே போல நபிகள் நாயகம் தன் உறவினரோடு பகைவர் துரத்தும் போது....ஒரு குகைக்குள் உணர்ந்ததாக சொல்லப்படுவது நாம் இருவரல்ல மூவர் என்பதாம்...ஆக கடவுள் அந்த பரம்பொருள் நம்மோடு பயணிக்கிறார்!😊👍
விருந்திற்கு 🐜 எறும்புகள் கூறியதாக விருந்து என்பது பசியை ஆற்றக்கூடியதாக இருக்க வேண்டுமேயன்றி அது வெறும் ஆடம்பரத்திற்காக இருக்க கூடாது என்பதாம்....சீனாவில் நடந்தவை அறிய முடிந்தது..அதுப்போல உன் மதம் பெரியதா? என் மதம் பெரியாதா? என்பதை எல்லாம் தாண்டி எந்த மதத்தை சார்ந்தவராயினும் கடவுள் ஒன்றே!🙏
நடைமுறை விளக்கமாக எல்லா மதங்களும்,
நம்பிக்கைகளும் ,கலாச்சாரமும் சொல்லும் அடிப்படை உண்மைகள் மிக எளிமையானவை,அடிப்படையானவையும் கூட, அது என்னவெனில் ஒரு சிறு ஊற்றிலிருந்து கிளம்பும் வேறு வேறு பேரருவிகள்!ஒன்று பரம்பொருள்! நாம் அதன் மக்கள். எந்த வீட்டில் இருந்தாலும் தாய் ஒன்று தான் என்கிறார் எழுத்தாளர் தன் அருமையான வரிகளில் விளக்கம் கொடுத்துள்ளார்.😊👍
-தொடர்ந்து யதார்த்தமாக படிப்போம்
No comments:
Post a Comment