இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருந்தோம்...புத்தகம் ஒரு உற்ற தோழன் என்பது சரிதானோ...எனினும் விடாமல் ... ..திரும்ப படிக்க ஆரம்பிப்போம்...வாங்க!
ஆம் பெண் யாதுமானவள்..அருமையாக அனைத்து வடிவிலும் சக்தியாக பெண் திகழ்கிறாள்...சிறுமியாக பெண் சிரிக்கிறாள்...பருவமங்கையாக,பசியாற்றும்அன்னபூரணி...போராடுவதில் காளியாக...தன் பங்கினை செவ்வனே செய்யும் சக்தி! அவளே எல்லாம்.....அருமையாக தன் பெயருக்கு ஏற்றார் போல எழுத்தாள்ரின் வரிகள் நமக்கு உணர்த்துகினறது...
பெண்களுக்கு 33%கிடைக்க இன்னும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது...ஆனால் எல்லாம் வல்ல சிவபெருமானோ 50% அப்பவே கொடுத்துள்ளார்...இந்த காட்சியானது அற்புதமானது...மார்கண்டேயர் கதையில் இடது காலால் யமனை எட்டி உதைத்தது தாயானவள் தன் குழந்தையை காக்க முதலில் ஓடி வருவாள் என்பதாலோ? என்பதை சொல்லி இருந்தாங்க...அருமை...
அப்படி சிவன் ஒரு முறை காளியாகிய சக்தியின் அடியில் படுத்த போது தன் கால்கள் ஐயன் மேல் பட்ட நிமிடத்தில் நாக்கை 👅 நீட்டிய நிலையில் இருப்பது தான் காளி வடிவமாம்....உக்கிரமான காளியை சமாளிக்க சிவன் அடியில் படுத்ததை இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்..👍
குமரகுருபரர் பற்றி அதிக தகவல் அறிய...👆
இராணுவ பெண்களின் பாதுகாப்புகாக போராடியவர் அதுவும் 12 ஆண்டுகளாக என குறிப்பிட்டு இருக்கிறார்.... உணவு கூட எடுத்துக்கொள்ளாமல் திரவ உணவாக ஊசியின் மூலம் எடுத்துக்கொண்டு போராடி தன் இனத்து மக்களுக்காக போராடி வரும் இந்த காலத்து காளியாக மணிப்பூரில் நடக்கிறதை அறிய முடிந்தது...இன்னும் எத்தனை எத்தனை காளிகள் பெண் உருவில் உள்ளனரோ! என்ற வரி நிச்சயம் மனதை தாக்குகிறது...ஆம் வெளியில் தெரியாமல் அவளை ( பெண்ணை )பாதுகாக்க அவள் தன்னை எப்படியெல்லாம் வாழ்வியலை மாற்றி கொள்ள வேண்டியுள்ளது.☹️🤔
இந்த நாள் மகளிர் தினமாக கொண்டாட படுகிறது ஆனால் ஏன் மார்ச் 8 என்பதை இந்த புத்தகத்தில் தான் அறிந்தேன்...அமேரிக்காவில் பஞ்சாலையில் திடீரென்று வேலை நேரம் குறைக்க படவேண்டும் என போராடிய நாள் March 8 ஆம் நாளாம்!மகளீர் தினம் கொண்டாடுவது இருக்கட்டும் மகளீரை கொண்டாடுவோம்!....எவ்வளவு ஆழமான வரிகள்.
அங்கிகரிக்க பட வேண்டிய ஒன்று...சக மனுசியாக நிச்சயம் நடத்தலாம்! எந்த விதத்திலும் குறைவில்லை எனினும் Memes என்ற பெயரில் வருவதை பார்த்தால் பெண் மிகவும் பாவம்...சில பெண்களால் பலரின் நிலையாக போடுவது தான் வேதனை அளிக்கும்! மிக்க நன்றி 👍🙏
- தொடர்ந்து யதார்த்தமாக படிக்கலாம்
No comments:
Post a Comment